Thursday, 9 February 2017

வீட்டில் வளர்க்கும் பசுவையும். காளையையும் ஏன் கொல்லக்கூடாது?



கேள்வி...வீட்டில் வளர்க்கும் பசுவையும். காளையையும் ஏன் கொல்லக்கூடாது? இதற்கும் இந்து மதத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
-
சுவாமி வித்யானந்தர்...
--
ஒரு கற்பனை கதை மூலம் இதை விளக்க முயல்கிறேன்.
-
மூன்று பேர் காட்டில் சென்று, காட்டிலே இயற்கையாக வாழ்ந்துவரும் பசுவையும்,காளைகளையும் பிடிக்க சென்றார்கள். அவர்கள் நினைத்த படி அவைகளை பிடித்தார்கள். 
-
அதில் ஒரு பசு கேட்டது. என்னை என் பிடித்தாய்? காட்டிலே சுதந்திரமாக உலவிவந்தேன். சிங்கம், புலி இவைகளால் உயிர் போய்விடுமோ என்று மட்டுமே அவ்வப்போது பயப்படுவேன் என்றது. அதற்கு பசுவை பிடித்தவன் சொன்னான், உனது உயிரை நான் காப்பாற்றுகிறேன்.உன் வாழ்நாள் முழுவதும் உனக்கு உயிர் பயம் ஏற்படாதவாறு பாதுகாப்பேன், உனக்கு தேவையான உணவளிப்பேன்.அதற்கு பதிலாக நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். எனக்கும் எனது குடும்பத்திற்கும் தேவையான பால் தரவேண்டும் என்றால். 
-
அந்த பசுவும் நல்லது, நீ எனக்கு ஒரு உதவி செய்கிறாய்,அதே போல் நானும் உனக்கு உதவி செய்கிறேன். ஆனால் இந்த விதியை மீறி, நான் பால் கொடுக்க முடியாத நிலை வரும்போது என்னை இறைச்சிக்காக கொன்றாலோ, வேறு யாருக்காவது விற்றாலோ, உனது குடும்பத்தில் உள்ள ஒருவரை, நீயே கொன்றதாக அர்த்தம். அதற்கான பாவத்தை நீயும், உனது குடும்பமும் அடையும். அந்த பசுவை பிடித்தவனும் உன்னை எனது குடும்பத்தில் உள்ள ஒருவரைபோல பாதுகாப்பேன் என வாக்களித்தான்.
-
இன்னொருவன் ஒரு காளையை பிடித்தான். காளை இதேபோல என்னை ஏன் பிடித்தாய் என்று கேட்டது. அவன், உன்னை எனது உழவு தொழிலுக்கு பயன்படுத்துவேன், விவசாயத்திற்கு பயன்படுத்துவேன். அதன் மூலம் எனது வருமானத்தை பெருக்கிக்கொள்வேன் .அதற்கு பதிலாக உனக்கு பாதுகாப்பு தருவேன், உணவளிப்பேன் என வாக்குறுதியளித்தான். அந்த காளையும், என்னால் வேலை செய்ய முடியாத நிலைவரும்போது, என்னை இறைச்சிக்காக கொன்றாலோ, வேறு யாருக்காவது விற்றாலோ, உனது குடும்பத்தில் உள்ள ஒருவரை நீயே கொன்றதற்கான பாவத்தை அடைவாய் என்றது. அவனும் ஒத்துக்கொண்டான்.
-
மூன்றாவது உள்ளவன் ஒரு காளையை பிடித்தான் அந்த காளை ஏன் பிடித்தாய் என்று கேட்டது. உனக்கு உணவளித்து, நீ கொழுகொழுவென்று வளர்ந்தபின், இறைச்சிக்காக உன்னை கொன்றுவிடுவேன் என்றான். காளை அவனிடம் ஒரு காளையை கொல்வதால் வரும் பாவத்தை நீ அடைவாய் என்றது.
-
இந்த கதையில், முதல் இரண்டு பேரும் அவர்கள் வளர்க்கும் பிராணியை கொல்வதால் வரும் பாவம் கொடூரமானது. 
-
மாமிச உணவு சாப்பிடுவது நல்லதா? இந்துமதம் அதை அனுமதிக்கிறதா? என்று ஒருவர் கேட்டிருந்தார்
-
பல நூற்றாண்டுகளுக்கு முன் வெளிநாட்டிலிருந்து சில காட்டுமிராண்டிகள் இந்தியாவிற்குள் பலமுறை படையெடுத்து வந்தார்கள். இங்குள்ளவர்கள் மாமிசம் சாப்பிடாத உணவு பழக்கமுள்ளவர்கள். காட்டுமிராண்டிகளோ மாமிச உணவு உண்பவர்கள். குறைந்த எண்ணிக்யை உள்ள இவர்கள் லட்சக்கணக்கான இந்தியர்களை கொன்று, அவர்களின் வீட்டுபெண்களை அடிமைகளாக பிடித்து வெளிநாட்டிக்கு கொண்டு சென்று அங்கு வீதியில் வைத்து ஏலம்விட்டார்கள்.
-
மாமிசம் உண்பதால் வரும் பாவத்தைவிட, தனது வீட்டில் உள்ளவர்களை இந்த காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பாற்ற திராணியில்லாமல் இருப்பதால் வரும் பாவம் அதிகமானது.
-
ஆகவே இங்கே நாம் சொல்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காட்டுமிராண்டிகளிடமிருந்தும், கொள்ளையர்களிடமிருந்தும் காப்பாற்றிக்கொள்ள, உடல்வலிமைக்காக மாமிச உணவு உண்பதால் வரும் பாவம் குறைவு. காய்கறிகளை உண்டு பலமில்லாமல் வாழ்ந்து, காட்டுமிராண்டிகளின் கால்களில் மதிபட்டு வாழ்வதும்,சாவதும் மிகப்பெரிய பாவம். 
-
நீங்கள் உண்ணும் உணவு, உங்கள் சுவைக்காகவா? அல்லது மற்றவர்களின் நலனுக்காகவா? என்பதை பொறுத்தே அது பாவமா?பாவம் இல்லையா என்பதை முடிவுசெய்ய வேண்டும்.
-
ஆகவே இந்துமதம் உங்கள் உணவு விசயத்தில் தலையிடுவதில்லை. ஒவ்வொரு உணவும் அதற்குரிய பாவத்தை கொண்டுவருகிறது. காய்கறிகளை உண்பதாலும் பாவம் வருகிறது.பாவமே வராமல் இருக்க வேண்டுமானால் எந்த உணவும் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். உணவினால் உங்களிடம் வரும் பாவத்தை ஏற்றுக்கொண்டு, அதை விட அதிக புண்ணிய செயல்களை செய்பவன் சிறந்தவன்.அவனை பாவம் பற்றுவதில்லை.
-
இறைவனை மட்டுமே நம்பி வாழ்பவன், படிப்படியாக உணவை குறைத்துக்கொண்டு, கடைசியில் எந்த உணவும் உண்ணாமல் வாழும் நிலையை அடைகிறான் . எப்போது முற்றிலும் உணவை உட்கொள்வதை நிறுத்துகிறானோ, அப்போது முக்தி கிடைக்கிறது.
-

No comments:

Post a Comment