விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -42
--
அமெரிக்காவில் லெக்சர் பீரோ என்ற அமைப்புடன் சுவாமிஜி ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்,அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு இந்தியாவில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணியிருந்தார்.ஒரு சொற்பொழிவுக்கு,2700 ரூபாய்வரை லெக்சர் பீரோ அமைப்புக்கு கிடைத்தது.ஆனால் அவர்கள் பொய் கணக்கு காட்டி சுவாமிக்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே கொடுத்து வந்தார்கள்.ஆரம்பத்தில் சுவாமிஜிக்கு இது பற்றி எதுவும் தெரியவில்லை.பல மாதங்களுக்கு பிறகே தான் ஏமாற்றப்பட்டதை புரிந்துகொண்டார்.பிறகு அந்த அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டார். ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அவருக்கு போதிய அளவு பணம் கிடைக்கவில்லை.பிறகு பணத்திற்காக சொற்பொழிவாற்றுவதை நிறுத்திக்கொண்டார்.இலசமாக வகுப்பு சொற்பொழிவுகள் எடுக்க ஆரம்பித்தார்.
--
அமெரிக்காவில் சுவாமிஜி இருந்தபோது அவரை நேசித்த மக்கள் எந்த அளவுக்கு இருந்தார்களோ அதேபோல் அவரை வெறுத்து ஒதுக்கியவர்களும் பலர் இருந்தார்கள்,பெரும்பாலும் கிறிஸ்தவ பாதிரிகள்,அவர்களை சார்ந்த மக்கள்,தியோசபிக்கல் சொசைட்டி,பிரம்மசமாஜம்,ரமாப ாய் வட்டம்,பழமைவாத கிறிஸ்தவர்கள் போன்ற பலர் சுவாமிஜியை எதிர்த்தார்கள்.இத்தனை எதிர்ப்புகள் இருந்தபோதும் சுவாமிஜி யாரையும் வெறுக்கவில்லை,இது எவ்வாறு சாத்தியமாயிற்று?இந்த பாடத்தை அவர் யாரிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பார்?
ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து தான் அந்த பாடத்தை சுவாமிஜி கற்றுக்கொண்டார். ஸ்ரீராமகிருஷ்ணரை காண இளம் வயதில் அவரிடம் சென்றார்.ஸ்ரீராமகிருஷ்ணர் நரேனிடம் கூறினார் சில நேரங்களில் உலகியல் மக்கள் குறைகூறுவார்கள்,கேலி பேசுவார்கள்.யானை கம்பீரமாக நடந்து செல்லும்.பின்னால் தெரு நாய்கள் குரைத்தபடியே ஓடும்.யானை அவற்றைச் சிறிதாவது பொருட்படுத்துமா?என் மகனே,உன்னைப் பலர் பின்னாலிருந்து அவதூறு பேசுவதாக வைத்துக்கொள்.அவர்களை நீ என்ன செய்வாய்? என்று கேட்டார்.அதற்கு நரேன்(சுவாமிஜி) வெறுப்பு குரலில்,தெருநாய்கள் என் பின்னால் குரைக்கின்றன என்று நினைத்து அவைகளை வெறுத்து ஒதுக்குவேன் என்றார்.ஸ்ரீராமகிருஷ்ணர்,ச ிரித்துவிட்டு,”வேண்டாமப்பா .அந்த அளவிற்குப்போகாதே! எல்லோரிலும் கடவுள் அல்லவா இருக்கிறார்! அசையும் பொருள் அசையாப்பொருள் அனைத்திலும் அவரே இருக்கிறார்.எனவே அனைத்திற்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கற்றுக்கொண்ட பாடத்தையே சுவாமிஜி இங்கு செயல்முறைப்படுத்தினார்.
”என்னைப் புரிந்து கொள்ளாததற்காக பாதிரிகளையோ மற்றவர்களையோ நான் குறை கூறமாட்டேன்.ஏனெனில் பெண்ணையோ,பணத்தையோ சிறிதும் போருட்படுத்தாத ஒரு மனிதனை அவர்கள் கண்டதே இல்லை.அவ்வாறு ஒருவனால் வாழமுடியும் என்றே அவர்கள் நம்பவில்லை.எப்படி நம்புவார்கள்? பிரம்மச்சர்யம் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை.தூய்மையான மனிதர்களை அவர்கள் இதுவரை பார்த்ததே இல்லை. என்றார்.
தர்மத்தை காப்பவனை தர்மம் காக்கும் என்று வேதம் சொல்கிறது.அது போல தர்மத்தை நிலை நாட்ட அவதரித்த சுவாமிஜியை தர்மம் காத்து நின்றது.
--
-
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
--
அமெரிக்காவில் லெக்சர் பீரோ என்ற அமைப்புடன் சுவாமிஜி ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்,அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு இந்தியாவில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணியிருந்தார்.ஒரு சொற்பொழிவுக்கு,2700 ரூபாய்வரை லெக்சர் பீரோ அமைப்புக்கு கிடைத்தது.ஆனால் அவர்கள் பொய் கணக்கு காட்டி சுவாமிக்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே கொடுத்து வந்தார்கள்.ஆரம்பத்தில் சுவாமிஜிக்கு இது பற்றி எதுவும் தெரியவில்லை.பல மாதங்களுக்கு பிறகே தான் ஏமாற்றப்பட்டதை புரிந்துகொண்டார்.பிறகு அந்த அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டார். ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அவருக்கு போதிய அளவு பணம் கிடைக்கவில்லை.பிறகு பணத்திற்காக சொற்பொழிவாற்றுவதை நிறுத்திக்கொண்டார்.இலசமாக வகுப்பு சொற்பொழிவுகள் எடுக்க ஆரம்பித்தார்.
--
அமெரிக்காவில் சுவாமிஜி இருந்தபோது அவரை நேசித்த மக்கள் எந்த அளவுக்கு இருந்தார்களோ அதேபோல் அவரை வெறுத்து ஒதுக்கியவர்களும் பலர் இருந்தார்கள்,பெரும்பாலும் கிறிஸ்தவ பாதிரிகள்,அவர்களை சார்ந்த மக்கள்,தியோசபிக்கல் சொசைட்டி,பிரம்மசமாஜம்,ரமாப
ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து தான் அந்த பாடத்தை சுவாமிஜி கற்றுக்கொண்டார். ஸ்ரீராமகிருஷ்ணரை காண இளம் வயதில் அவரிடம் சென்றார்.ஸ்ரீராமகிருஷ்ணர் நரேனிடம் கூறினார் சில நேரங்களில் உலகியல் மக்கள் குறைகூறுவார்கள்,கேலி பேசுவார்கள்.யானை கம்பீரமாக நடந்து செல்லும்.பின்னால் தெரு நாய்கள் குரைத்தபடியே ஓடும்.யானை அவற்றைச் சிறிதாவது பொருட்படுத்துமா?என் மகனே,உன்னைப் பலர் பின்னாலிருந்து அவதூறு பேசுவதாக வைத்துக்கொள்.அவர்களை நீ என்ன செய்வாய்? என்று கேட்டார்.அதற்கு நரேன்(சுவாமிஜி) வெறுப்பு குரலில்,தெருநாய்கள் என் பின்னால் குரைக்கின்றன என்று நினைத்து அவைகளை வெறுத்து ஒதுக்குவேன் என்றார்.ஸ்ரீராமகிருஷ்ணர்,ச
ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கற்றுக்கொண்ட பாடத்தையே சுவாமிஜி இங்கு செயல்முறைப்படுத்தினார்.
”என்னைப் புரிந்து கொள்ளாததற்காக பாதிரிகளையோ மற்றவர்களையோ நான் குறை கூறமாட்டேன்.ஏனெனில் பெண்ணையோ,பணத்தையோ சிறிதும் போருட்படுத்தாத ஒரு மனிதனை அவர்கள் கண்டதே இல்லை.அவ்வாறு ஒருவனால் வாழமுடியும் என்றே அவர்கள் நம்பவில்லை.எப்படி நம்புவார்கள்? பிரம்மச்சர்யம் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை.தூய்மையான மனிதர்களை அவர்கள் இதுவரை பார்த்ததே இல்லை. என்றார்.
தர்மத்தை காப்பவனை தர்மம் காக்கும் என்று வேதம் சொல்கிறது.அது போல தர்மத்தை நிலை நாட்ட அவதரித்த சுவாமிஜியை தர்மம் காத்து நின்றது.
--
-
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment