விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 16
------------------
1890ஜுலை இறுதியில் அன்னை சாரதாதேவியை சந்தித்து அரவது ஆசியை பெற்ற பின்,சுவாமிஜியும் அவரது சகோதர துறவியுமான அகண்டானந்தரும் இமயமலைநோக்கி பயணமானார்கள்.”நான் ஒருமுறை தொட்டதும் ஒருவனது வாழ்க்கை மாறவேண்டும்.அத்தகைய ஆற்றலைப்பெறாமல் நான் திரும்பமாட்டேன் என்று தமது மற்ற சகோதர துறவிகளிடம் தெரிவித்துவிட்டு நீண்ட பயணத்திற்கு புறப்பட்டார் சுவாமிஜி. கங்கை கரை வழியாக இருவரும் இமயமலை நோக்கி பயணத்தை தொடர்ந்தார்கள்.பட்டினியாலு ம் பயணக்களைப்பாலும் அவர்கள் உடல் வாடினாலும் முகம் வாடவில்லை.பாகல்பூர் என்ற இடத்தில் மன்மதநாத் சௌதுரி என்பவரின் வீட்டில் இருவரும் தங்கினார்கள்
--
.இரண்டு துறவிகளைப்பற்றியும் ஆரம்பத்தில் மன்மதநாத் பெரிதாக எண்ணவில்லை.எத்தனையோ சாதாரண துறவிகளை போலவே இவர்களும் இருப்பார்கள் என்றுதான் நினைத்தார் அவர்.
மன்மதநாத் அவர்களிடம் பேசவே விரும்பவில்லை,சற்று தள்ளி உடகார்ந்து புத்தமதம் பற்றிய ஆங்கில புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டிருந்தார்.சி றிது நேரம் கழித்தபின் அது என்ன புத்தகம் என்று சுவாமிஜி கேட்டார். அது ஒரு ஆங்கில புத்தகம் என்றார் மன்மதநாத். உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? என்று அலட்சியமாக கேட்டார் மன்மதநாத். ஏதோ சுவாராக தெரியும் என்று பதிலழித்தார் சுவாமிஜி.இருவரும் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தவுடன் சுவாமிஜியிடம் இருந்த ஆங்கிலப்புலமை மன்மதநாதை ஆச்சர்யப்படுத்தியது.அது மட்டுமல்ல,இலக்கியம் கலை,உபநிடதம் என்று அனைத்திலும் சுவாமிஜிக்கு இருந்த திறமையை பார்த்து வியந்துபோனார்.மற்ற துறவிகள் போல இல்லாமல் இவர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
அவரை அவ்வூர் செல்வந்தர்களிடம் அறிமுகப்படுத்த விரும்பினார் மன்மதநாத். ஆனால் சுவாமிஜி அதை மறுத்துவிட்டார். செல்வந்தர்களை நாடுவது துறவிக்கு அழகல்ல என்று கூறிவிட்டார். சுவாமிஜியின் துறவு மனப்பான்மை மன்மதநாத் மீது ஆழ்ந்த தாக்கத்தை உண்டாக்கியது.
-
சுவாமிஜி தன் இனிய குரலில் லேசாக பாடினார். சுவாமிஜிக்கு பாட தெரியும் என்பதை அறிந்த மன்மதநாத் மாலையில் சங்கீத மேதைகள் பலரை வீட்டிற்கு அழைத்திருந்தார்.பாடல் ஆரம்பமாயிற்று,இரவு 9,10,11மணி என்று நேரம் கடந்துசென்று கொண்டேயிருந்தது ஆனால் சுவாமிஜி பாடுவதை நிறுத்தவில்லை.யாருக்கும் பசி தாகம் இல்லாமல் மெய்மறந்து இருந்தார்கள்.கடைசியில் தபேலா வாசித்தவரின் கைகள் விறைத்துபோய் மேலும் சாசிக்க முடியாத நிலை வந்தபோது பாடுவது நின்றது.
மன்மதநாத் சுவாமிஜி மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.அதனால் இருவரையும் அவரைவிட்டு பிரிய அனுமதிக்கவில்லை. ஒருநாள் மன்மதநாத் இல்லாத சமயம் இருவரும் மற்றவர்களிடம் தெரிவித்துவிட்டு இமயமலை நோக்கி பயணத்தை துவங்கினார்கள்.இதை கேள்வியுற்ற மன்மதநாத் மிகவும் வேதனையடைந்தார்.மீண்டும் சுவாமிஜியை எப்போது பார்க்க முடியுமோ என்று நினைத்து வருந்தினார்.ஆகவே சுவாமிஜியை பின்தொடர்ந்து அவரை கண்டுபிடிக்க வேண்டி பயணப்பட்டார்,ஆனால் அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
--
அல்மோராவின் அருகில் முஸ்லீம்களுக்கான இடுகாடு ஒன்று இருந்தது.அந்த இடத்தை அடைந்தபோது பசி தாகத்தின் காரணமாக சுவாமிஜி மயங்கிவிழும் நிலைமைக்கு வந்துவிட்டார்.அவரை அங்கே அமரவைத்துவிட்டு பக்த்தில் தண்ணீர் கிடைக்கிறதா என்று பார்ப்பதற்காக அகண்டானந்தர் சென்றார். அப்போது அந்த இடு
காட்டை கண்காணித்துவரும் ஜுல்பிகர் அலி என்ற முஸ்லீம் பக்கீர்,இடுகாட்டின் அருகில் உள்ள குடிசையில் வாழ்ந்து வந்தார். சுவாமிஜியின் நிலைமையை கண்ட அவர் ஓடிசென்று சுவாமிஜிக்கு வெள்ளரிக்காயை கொடுத்தார். சுவாமிஜியால் அதை வாங்கீ சாப்பிடமுடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தார். சுவாமிஜி,அதை வாயில் தருமாறு கூறினார்.(அந்த காலத்தில் முஸ்லீம்கள் கையால் இந்துக்கள் உணவு சாப்பிடுவது குற்றமாக கருதப்பட்டது)பக்கீர்,நான் ஒரு முஸ்லீம் நான் உங்களுக்கு எப்படி உணவு ஊட்ட முடியும் என்றார். சுவாமிஜி,நாம் இருவரும் சகோதர்கள் தான் என்று புன்முறுவலோடு பதிலளித்தார். பக்கீர் வெள்ளரிக்காயை சுவாமிஜிக்கு ஊட்டினார். சுவாமிஜிக்கு களைப்பு நீங்கியது. பின்னாளில் சுவாமிஜி இது பற்றி கூறியுள்ளார். என் உயிரை காப்பாற்றியது அந்த பக்கீர்தான்.அதுபோல் என் வாழ்நாளில் எப்போதும் களைப்புற்றது இல்லை என்றார்.
--
பின்னர் விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மிகக் கருத்துகளை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரம் செய்து புகழ் பெற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒருமுறை அல்மோராவிற்குச் சென்றார். அப்போது அல்மோராவில் விவேகானந்தரை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மிகவும் சிறந்த முறையில் வரவேற்பு அளித்தார்கள். அந்த நிகழ்ச்சியின்போது, ஜுல்பிகர் அலி ஓர் ஓரமாக நின்று விவேகானந்தரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவேகானந்தரை இன்னார் என்று அடையாளம் தெரியவில்லை. ஆனால் விவேகானந்தர், ஜுல்பிகர் அலியைப் பார்த்தவுடன் அடையாளம் தெரிந்துகொண்டார். உடனே அவர் அங்கிருந்த மக்கள் கூட்டத்தையும் பரபரப்பையும் ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் நேராக ஜுல்பிகர் அலியிடம் சென்று, அவரைக் கட்டியணைத்துக் கொண்டார். மேலும் விவேகானந்தர் அருகில் இருந்தவர்களிடம் ஜுல்பிகர் அலியைப் பற்றி நன்றியுணர்வுடன் கூறி, அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் ஜுல்பிகருக்கு விவேகானந்தர் பணமும் கொடுத்தார்.
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
------------------
1890ஜுலை இறுதியில் அன்னை சாரதாதேவியை சந்தித்து அரவது ஆசியை பெற்ற பின்,சுவாமிஜியும் அவரது சகோதர துறவியுமான அகண்டானந்தரும் இமயமலைநோக்கி பயணமானார்கள்.”நான் ஒருமுறை தொட்டதும் ஒருவனது வாழ்க்கை மாறவேண்டும்.அத்தகைய ஆற்றலைப்பெறாமல் நான் திரும்பமாட்டேன் என்று தமது மற்ற சகோதர துறவிகளிடம் தெரிவித்துவிட்டு நீண்ட பயணத்திற்கு புறப்பட்டார் சுவாமிஜி. கங்கை கரை வழியாக இருவரும் இமயமலை நோக்கி பயணத்தை தொடர்ந்தார்கள்.பட்டினியாலு
--
.இரண்டு துறவிகளைப்பற்றியும் ஆரம்பத்தில் மன்மதநாத் பெரிதாக எண்ணவில்லை.எத்தனையோ சாதாரண துறவிகளை போலவே இவர்களும் இருப்பார்கள் என்றுதான் நினைத்தார் அவர்.
மன்மதநாத் அவர்களிடம் பேசவே விரும்பவில்லை,சற்று தள்ளி உடகார்ந்து புத்தமதம் பற்றிய ஆங்கில புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டிருந்தார்.சி
அவரை அவ்வூர் செல்வந்தர்களிடம் அறிமுகப்படுத்த விரும்பினார் மன்மதநாத். ஆனால் சுவாமிஜி அதை மறுத்துவிட்டார். செல்வந்தர்களை நாடுவது துறவிக்கு அழகல்ல என்று கூறிவிட்டார். சுவாமிஜியின் துறவு மனப்பான்மை மன்மதநாத் மீது ஆழ்ந்த தாக்கத்தை உண்டாக்கியது.
-
சுவாமிஜி தன் இனிய குரலில் லேசாக பாடினார். சுவாமிஜிக்கு பாட தெரியும் என்பதை அறிந்த மன்மதநாத் மாலையில் சங்கீத மேதைகள் பலரை வீட்டிற்கு அழைத்திருந்தார்.பாடல் ஆரம்பமாயிற்று,இரவு 9,10,11மணி என்று நேரம் கடந்துசென்று கொண்டேயிருந்தது ஆனால் சுவாமிஜி பாடுவதை நிறுத்தவில்லை.யாருக்கும் பசி தாகம் இல்லாமல் மெய்மறந்து இருந்தார்கள்.கடைசியில் தபேலா வாசித்தவரின் கைகள் விறைத்துபோய் மேலும் சாசிக்க முடியாத நிலை வந்தபோது பாடுவது நின்றது.
மன்மதநாத் சுவாமிஜி மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.அதனால் இருவரையும் அவரைவிட்டு பிரிய அனுமதிக்கவில்லை. ஒருநாள் மன்மதநாத் இல்லாத சமயம் இருவரும் மற்றவர்களிடம் தெரிவித்துவிட்டு இமயமலை நோக்கி பயணத்தை துவங்கினார்கள்.இதை கேள்வியுற்ற மன்மதநாத் மிகவும் வேதனையடைந்தார்.மீண்டும் சுவாமிஜியை எப்போது பார்க்க முடியுமோ என்று நினைத்து வருந்தினார்.ஆகவே சுவாமிஜியை பின்தொடர்ந்து அவரை கண்டுபிடிக்க வேண்டி பயணப்பட்டார்,ஆனால் அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
--
அல்மோராவின் அருகில் முஸ்லீம்களுக்கான இடுகாடு ஒன்று இருந்தது.அந்த இடத்தை அடைந்தபோது பசி தாகத்தின் காரணமாக சுவாமிஜி மயங்கிவிழும் நிலைமைக்கு வந்துவிட்டார்.அவரை அங்கே அமரவைத்துவிட்டு பக்த்தில் தண்ணீர் கிடைக்கிறதா என்று பார்ப்பதற்காக அகண்டானந்தர் சென்றார். அப்போது அந்த இடு
காட்டை கண்காணித்துவரும் ஜுல்பிகர் அலி என்ற முஸ்லீம் பக்கீர்,இடுகாட்டின் அருகில் உள்ள குடிசையில் வாழ்ந்து வந்தார். சுவாமிஜியின் நிலைமையை கண்ட அவர் ஓடிசென்று சுவாமிஜிக்கு வெள்ளரிக்காயை கொடுத்தார். சுவாமிஜியால் அதை வாங்கீ சாப்பிடமுடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தார். சுவாமிஜி,அதை வாயில் தருமாறு கூறினார்.(அந்த காலத்தில் முஸ்லீம்கள் கையால் இந்துக்கள் உணவு சாப்பிடுவது குற்றமாக கருதப்பட்டது)பக்கீர்,நான் ஒரு முஸ்லீம் நான் உங்களுக்கு எப்படி உணவு ஊட்ட முடியும் என்றார். சுவாமிஜி,நாம் இருவரும் சகோதர்கள் தான் என்று புன்முறுவலோடு பதிலளித்தார். பக்கீர் வெள்ளரிக்காயை சுவாமிஜிக்கு ஊட்டினார். சுவாமிஜிக்கு களைப்பு நீங்கியது. பின்னாளில் சுவாமிஜி இது பற்றி கூறியுள்ளார். என் உயிரை காப்பாற்றியது அந்த பக்கீர்தான்.அதுபோல் என் வாழ்நாளில் எப்போதும் களைப்புற்றது இல்லை என்றார்.
--
பின்னர் விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மிகக் கருத்துகளை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரம் செய்து புகழ் பெற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒருமுறை அல்மோராவிற்குச் சென்றார். அப்போது அல்மோராவில் விவேகானந்தரை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மிகவும் சிறந்த முறையில் வரவேற்பு அளித்தார்கள். அந்த நிகழ்ச்சியின்போது, ஜுல்பிகர் அலி ஓர் ஓரமாக நின்று விவேகானந்தரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவேகானந்தரை இன்னார் என்று அடையாளம் தெரியவில்லை. ஆனால் விவேகானந்தர், ஜுல்பிகர் அலியைப் பார்த்தவுடன் அடையாளம் தெரிந்துகொண்டார். உடனே அவர் அங்கிருந்த மக்கள் கூட்டத்தையும் பரபரப்பையும் ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் நேராக ஜுல்பிகர் அலியிடம் சென்று, அவரைக் கட்டியணைத்துக் கொண்டார். மேலும் விவேகானந்தர் அருகில் இருந்தவர்களிடம் ஜுல்பிகர் அலியைப் பற்றி நன்றியுணர்வுடன் கூறி, அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் ஜுல்பிகருக்கு விவேகானந்தர் பணமும் கொடுத்தார்.
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment