Friday, 21 October 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -34

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -34
--
சிகாகோ ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய சுவாமி விவேகானந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் முற்றிலும் புதியது.எங்கே போவதென்றே தெரியவில்லை.வேட்டி தலைப்பாகை என்ற இந்திய உடை பார்ப்போரை வேடிக்கை மனிதராக காட்டியது.சிறுவர்கள் ஏதோ வினோதமான மனிதனைப்பார்ப்பது போல பார்த்தார்கள்.அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லை.அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினார்.மறுநாள் சிகாகோ கண்காட்சியை காணச்சென்றார். தொடர்ந்து 12 நாட்கள் கலை,அறிவியல்,ராட்டினங்கள் போன்றகண்காட்சியின் பல பகுதிகளை சென்று பார்வையிட்டார்.
--
ஒரு நாள் ஒருவன் திடீரென்று சுவாமிஜியின் தலைப்பாகையை பிடித்து இழுத்தான்.ஏன் இழுத்தாய் என்று ஆங்கிலத்தில் கேட்டதும்,அவன் வெட்கப்பட்டு ஓடிவிட்டான்.மற்றொரு நாள் இன்னொருவன் சுவாமிஜியை பின்னாலிருந்து கீழே தள்ளிவிட்டான்.ஏன் இவ்வாறு தள்ளிவிட்டாய் என்று சுவாமிஜி கேட்டார். நீ ஏன் இவ்வாறு உடையணிந்துள்ளாய்?அதனால்தான் தள்ளிவிட்டேன் என்றான் அவன்.அமெரிக்காவில் அழகாக உடையணிபவர்கள் தான் நாகரீகமானவர்களாக கருதப்படுவார்கள் என்பது சுவாமிஜிக்கு புரிந்தது.
--
இதே போல் இன்னொரு நாள் ஆண்களும் சிறுவர்களும் சுவாமிஜியை தாக்குவதற்காக துரத்திவந்தார்கள்,அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சுவாமிஜியும் ஓடவேண்டியிருந்தது,கடைசியாகதெருவின் இருண்ட பகுதிகளில் சென்று ஒளிந்துகொண்டார்.இவ்வாறு பல இன்னல்களை சந்தித்தார்.அடுத்து வந்தது பணப்பிரச்சினை அவர் கொண்டுவந்த பணம் வேகமாக செலவாகியது.இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் சிகாகோ மாநாடு ஒருமாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி தான்
-
.இந்தியாவில் அவர் வாழ்ந்த காலத்தில் பணம் வைத்துக்கொள்ளவில்லை.இந்தியாவில் பிச்சையெடுப்பது குற்றம் இல்லை.இந்தியர்கள் பணம் இல்லாதவர்களை குற்றவாளியாக பார்ப்பதும் இல்லை.ஆனால் அமெரிக்காவில் நிலமை தலைகீழ்.கெட்டவர்கள்,சோம்பேரிகள் தான் பணம் இல்லாமல் பிறரிடம் கையேந்தி நிற்பார்கள்,அவர்களுக்கு மக்கள் பணம் கொடுக்க மாட்டார்கள்,மீறி பிச்சை எடுத்தார் ஜெயில்தண்டனை கிடைக்கும்.ஆகவே பணம் இல்லாமல் இருப்பது அமெரிக்காவை பொறுத்தவரை குற்றமாக கருதப்பட்டது.
-
போஸ்டன் நகருக்கு சென்றால் மிகக்குறைந்த செலவில் வாழ்க்கையை நடத்தலாம் என்று சிலர் யோசனை சொன்னார்கள்.அதன் படி ஒரு மாதம் போஸ்டனில் தங்கிவிட்டு மீண்டும் சிகாகோ வரலாம் என சுவாமிஜி கருதினார்.சிகாகோவிலிருந்துபோஸ்டன்நோக்கி ரயிலில் பயணமானார்.
-
சுவாமிஜி பயணம் செய்த ரயிலில் மிஸ் கேதரின் ஆபட்சேன்பால் என்ற 54 வயது பெண்மணி பயணம் செய்தாள்.சுவாமிஜியை கண்டதும் அவரது நடவடிக்கையால் கவரப்பட்டார்.சுவாமிஜியின் நிலைமையை கேட்டறிந்தார்.தமது வீட்டில் விருந்தினராக தங்கி இருக்கும் படி அழைத்தாள்.இறைவனின் அழைப்பாகவே நினைத்து சுவாமிஜி அந்த பெண்ணின் வீட்டில் தங்கினார்.
கேதரின் சமூகத்தில் மிகவும் நல்லஅந்தஸ்தில் உள்ள ஒரு பெண்மணியாக இருந்தார்.போஸ்டனில் சுவாமிஜி சிலருக்கு அறிமுகம் ஆனார்.அவர்களில் மிக முக்கியமானவர் பேராசிரியர் ஹென்றி ரைட்.ஆகஸ்ட் 26,27 தேதிகளில் பேராசிரியருடன் சுவாமிஜி கழித்தார்.இருவரும் பல்வேறு விஷயங்களை பற்றி நீண்டநேரம் உரையாடினார்கள்.சிறிது நேர உரையாடலிலேயே சுவாமிஜியின் ஆழத்தை பேராசிரியர் புரிந்துகொண்டார்.
-
இந்து மதத்தின் பிரதிநிதியாக வந்திருப்பதாகவும்,ஆனால் தன்னிடம் அறிமுகக்கடிதம் எதுவும் இல்லை என்றும் சுவாமிஜி கூறினார்.இதைக்கேட்ட பேராசிரியர்.”சுவாமிஜி உங்களுக்கு ஒரு சான்றிதழா?சூரியன் பிரகாசிப்பதற்கு சான்றிதழ் கேட்பதுபோல் அல்லவா இருக்கிறது”நீங்கள் கண்டிப்பாக இந்து மதத்தின் சார்பாக கலந்துகொள்ள வேண்டும்.உங்களின் அறிவாற்றலை அமெரிக்கா அறியவேண்டும் என்றார்.
ஒரு கடிதம் எழுதினார். அதில்”சர்வமதமகா சபையில் கலந்துகொள்வதற்காக ஒருவரை அனுப்புகிறேன்,மெத்த படித்த நமதுநாட்டு பேராசியர்கள் அனைவரின் அறிவையும் ஒன்று சேர்த்தாலும் இவரது அறிவுக்கு ஈடாகாது என்று எழுதினார். அது மட்டுமல்ல சுவாமிஜியிடம் இருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது.
அந்த பேராசிரியர் அவருக்கு பயணத்திற்கான பணமும் செலவுக்கான பணமும் கொடுத்து அனுப்பினார். சுவாமிஜி இந்த உதவியை ஒருநாளும் மறக்கவில்லை
-
செப்டம்பர் 2. 1893 ல் சுவாமிஜி சர்வமதமகா சபையில் கலந்துகொள்வதற்கான அறிமுகக்கடிதம் கிடைத்தது.புத்துணர்வுடன் சிகாகோவை நோக்கி பயணத்தை மேற்கொண்டார்.
ரயிலில் சென்று கொண்டிருந்தபோது சுவாமிஜி ஒரு வணிகரை சந்தித்தார்.அவர் சுவாமிஜி போக வேண்டிய இடத்திற்கு வழிகாட்டி உதவுவதாக வாக்களித்திருந்தார்.ஆனால் சிகாகோ வந்தவுடன் அவர் அவசரமாக இறங்கி சென்றுவிட்டார். சுவாமிஜிக்கு சிகாகோவில் எங்கு செல்வதென்று தெரியவில்லை. டாக்டர் பரோசின் முகவரியை தேடினார் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ரயில் நிலையத்தைசுற்றிலும் ஜெர்மனியர்களே அதிகம் வசித்து வந்தார்கள். மொழிப்பிரச்சினை காரணமாக அவரால் யாரிடமும் உதவிகேட்க முடியவில்லை(ஜெர்மனியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது) அதற்கு மேலாக அவர் கறுப்பர் என்ற காரணத்தினால் அவரை வெறுத்து ஒதுக்கினார்கள்.ஏதாவது ஹோட்டலில் சென்று தங்கலாம் என்று நினைத்தால்,அதற்கான வழியைக்கூட காட்ட யாரும் தயாராக இல்லை.
இரவு வந்தது ஆதரவற்ற நிலையில் சரக்கு பெட்டிகள் வைக்கும் இடத்தில் இரவை கழித்தார்.
---
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment