விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -36
--
பிரபல பகுத்தறிவுவாதியும் சொற்பொழிவாளருமான இங்கர்சாலை சுவாமிஜி சிகாகோவில் சந்தித்தார்.அவரும் சுவாமிஜியால் கவரப்பெற்றார்.இருவரும் ஒளிவுமறைவு இல்லாமல் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
-
ஒருமுறை சுவாமிஜியிடம் இங்சர்சால் கூறினார்,”சுவாமிஜி புதிய கருத்துக்களையும்க் கூறும்போதும்,அமெரிக்க சமுதாயத்தின் பழக்கவழக்கங்களையும்,மக்களை யும் விமர்சிக்கும் போதும் சற்று கவனமாக இருங்கள்.நீங்கள் ஒருமத போதகராக 50 வருடங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு வந்திருந்தால் இவர்கள் உங்களை தூக்கில்போட்டிருப்பார்கள் அல்லது உயிரோடு எரித்திருப்பார்கள்,சில வருடங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்தால் கல்லெறிந்துகொன்றிருப்பார்க ள்,அத்தகைய குறுகிய மனப்பான்மை பெற்றவர்களாக மக்கள் இருந்தார்கள்.நல்லவேளையாக தற்போது அப்படிப்பட்டவர்கள் மிகக்குறைவாகவே உள்ளார்கள்.
-
இங்கர்சால் மதங்களை நம்பாதவர்,கடவுளை ஏற்றுக்கொள்ளாதவர்.ஆனால் சுவாமிஜி நேர் எதிரான கருத்துடையவர்.மதங்களை ஏற்றுக்கொண்டார்,கடவுளை ஏற்றுக்கொண்டார்.
ஒருநாள் இங்கர்சால் சுவாமிஜியிடம்,உலகை அனுபவிக்கவேண்டும்,உலகத்தில ிருந்து எவ்வளவு பெறமுடியுமோ அவ்வளவையும் பெற்றுவிட வேண்டும்.ஆரஞ்சுப்பழத்தை ஒட்டபிழிவதுபோல்,கடைசி சொட்டுவரை உலகை அனுபவிக்கவேண்டும்.ஏனெனில் இந்த வாழ்க்கை ஒன்று தான் நமக்கு தெரியும்.மீண்டும் ஒரு வாழ்க்கை கிடையாது.ஆகவே கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
-
சுவாமிஜி கூறினார். உங்கள் கருத்தையே எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.இந்த உலகத்தில் சாப்பிட்டு,குடித்து.கும்மா ளம் அடிப்பது,சிறிது விஞ்ஞானம் போன்ற கருத்துக்களை தெரிந்துகொள்வது இவைகள் தான் சிறந்தது என்று நினைத்தால் அது தவறு.இத்தகைய சாதாரண இன்பத்தை அனுபவிப்பதே வாழ்க்கையின் நோக்கம் என்று கருதுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் வாழ்க்கையின் மையத்திற்கு செல்ல விரும்புகிறேன்.எனக்கு மரணம் இல்லை என்பதை அறிவும் போது, எனக்கு மரணபயம் இல்லை,அவசரம் இல்லை,பயம் இல்லை,கடமைகள் இல்லை,பெற்றோ பாசமோ இல்லை.ஆகவே உங்களை விட அதிகமாக என்னால் சாறுபிழிய முடியும்.நீங்கள் ஒரு உடலாக உங்களை நினைத்து இந்த உலகத்தை அனுபவிக்க நினைக்கிறீர்கள்.இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நீங்கள் தான் என்ற உணர்வோரு வாழ்ந்து பாருங்கள்.அப்போது உங்களுக்கு கிடைக்கும் இன்பத்திற்கு எல்லையே இல்லை. என்றார் சுவாமிஜி.
-
புகழ்பெற்ற ஓபரா பாடகி எம்மா கால்வி வாழ்வில் நடந்தமாற்றம்.
----
பிரான்ஸ் நாட்டிலும் இங்கிலாந்திலும் புகழின் உச்சியில் இருந்தவர் எம்மா கால்வே.புகழில் உச்சியில் இருப்பவர்களின் வாழ்க்கை சோகம் நிறைந்ததாக இருப்பது பொதுவான உண்மை. கால்வேயும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. தனது ஒரே மகள் தீவிபத்தில் பலியானதும் வாழ்க்கையில் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
--
கடைசியாக ஒரு நாள் ஏரியில் மூழ்கி உயிரைவிடுவதற்கு முடிவுசெய்து வீட்டைவிட்டு கிளம்பினார்.ஆனால் ஏரியை நோக்கி செல்லாமல் அவரது கால்கள் வேறு பக்கமாக தன் தோழியின் வீட்டுபக்கமாக சென்றன.இவ்வாறு ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல பல நாட்கள் முயற்சிசெய்தும், ஒவ்வொரு முறையும் அவரால் ஏரியின் பக்கத்திற்கு செல்ல முடியாமல் ,அவரது கட்டுப்பாட்டை மீறி கால்கள் அவரது தோழியின் வீடு பக்கமாக அழைத்துச்சென்றன.
கடைசியில் ஒரு நாள் அவரது தோழியின் வீட்டிற்கு சென்றார்.
--
ஆச்சர்யம் என்னவென்றால் அந்த தோழியில் வீட்டில்தான் சுவாமி விவேகானந்தர் விருந்தாழியாக தங்கியிருந்தார்.
அப்போது சுவாமிஜி தியானத்தில் இருந்தார். சில நிமிடங்கள் காத்திருந்தபின் ,எம்மா கால்வேயை பார்க்காமலே சுவாமிஜி பேசினார்.
..மகளே அமைதியாக இரு..பிறகு அவரது வாழ்க்கையில் யாரும் அறியாத பல சம்பவங்களை எடுத்துக்கூறியார்.
கால்வே..இவை எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்.என் நெருங்கிய நண்பர்களுக்கு கூட தெரியாதே?
சுவாமிஜி..மகளே யாரும் என்னிடம் எதையும் சொல்லவேண்டியதில்லை.
--
இந்த சந்திப்பு நிகழ்ந்த பின் எம்மாகால்வே வாழ்வில் புதியதோர் மாற்றம் உருவானது. அவரது மனத்தில் இருந்த சந்தேகங்கள் எல்லாம் விலகின.
---
ஒரு நாள் சுவாமிஜி , கால்வேயுடன் பேசிக்கொண்டிருந்தார். தனது தனித்துவத்தை இழந்து பிரபஞ்ச உணர்வுடன் ஒன்றுபடுவது குறித்துவிளக்கினார்.
நான் சாதாரண நிலையில் இருக்கவே விரும்புகிறேன் பிரபஞ்ச உணர்வு வேண்டாம்,இவை பற்றி கேட்கவே பயமாக இருக்கிறது என்றார்.
---
சுவாமிஜி ஒரு குழந்தைக்கு புரியவைப்பது போல புரியவைத்தார். இதோ பாரம்மா, ஒரு நாள் ஒரு மழைத்துளி உன்னைப்போல பயந்துபோய் கடலில் விழமறுத்து அழுதது. கடல் அந்த மழைத்துளியிடம் கேட்டது, ஏன் அழுகிறாய்?
மழைத்துளி. கடலில் விழுந்ததும் நான் இல்லாமல்போய்விடுவேனோ என்று பயப்படுகிறேன்.
கடல்..பயப்படாதே நீ அழியமாட்டாய்.உன்னைப்போன்ற எண்ணற்ற துளிகளின் சேர்க்கையால்தான் நான் உருவாகியிருக்கிறேன். நீ துளி என்ற தனித்துவத்தை இழந்து கடல் என்ற பெரிய நிலையை அடையப்போகிறாய் என்றது.நீ நினைத்தால் சூரிய கிரணத்தை பற்றிக்கொண்டு மேலே சென்று மீண்டும் மழையாக பொழிந்து உலகின் தாகத்தை தீர்க்கலாம். மீண்டும் கடலில் கலந்து பெரியநிலையை அடையலாம். ஆகவே உன் தனித்துவத்தை இழக்க பயப்படாதே. நீ இல்லாத காலம் ஒன்று இல்லை, நீ எப்போதும் இருப்பாய் என்றது.
சுவாமிஜி இதை விளக்கியதும் எம்மா கால்வேயின் பயம் அகன்றது.
--
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
--
பிரபல பகுத்தறிவுவாதியும் சொற்பொழிவாளருமான இங்கர்சாலை சுவாமிஜி சிகாகோவில் சந்தித்தார்.அவரும் சுவாமிஜியால் கவரப்பெற்றார்.இருவரும் ஒளிவுமறைவு இல்லாமல் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
-
ஒருமுறை சுவாமிஜியிடம் இங்சர்சால் கூறினார்,”சுவாமிஜி புதிய கருத்துக்களையும்க் கூறும்போதும்,அமெரிக்க சமுதாயத்தின் பழக்கவழக்கங்களையும்,மக்களை
-
இங்கர்சால் மதங்களை நம்பாதவர்,கடவுளை ஏற்றுக்கொள்ளாதவர்.ஆனால் சுவாமிஜி நேர் எதிரான கருத்துடையவர்.மதங்களை ஏற்றுக்கொண்டார்,கடவுளை ஏற்றுக்கொண்டார்.
ஒருநாள் இங்கர்சால் சுவாமிஜியிடம்,உலகை அனுபவிக்கவேண்டும்,உலகத்தில
-
சுவாமிஜி கூறினார். உங்கள் கருத்தையே எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.இந்த உலகத்தில் சாப்பிட்டு,குடித்து.கும்மா
-
புகழ்பெற்ற ஓபரா பாடகி எம்மா கால்வி வாழ்வில் நடந்தமாற்றம்.
----
பிரான்ஸ் நாட்டிலும் இங்கிலாந்திலும் புகழின் உச்சியில் இருந்தவர் எம்மா கால்வே.புகழில் உச்சியில் இருப்பவர்களின் வாழ்க்கை சோகம் நிறைந்ததாக இருப்பது பொதுவான உண்மை. கால்வேயும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. தனது ஒரே மகள் தீவிபத்தில் பலியானதும் வாழ்க்கையில் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
--
கடைசியாக ஒரு நாள் ஏரியில் மூழ்கி உயிரைவிடுவதற்கு முடிவுசெய்து வீட்டைவிட்டு கிளம்பினார்.ஆனால் ஏரியை நோக்கி செல்லாமல் அவரது கால்கள் வேறு பக்கமாக தன் தோழியின் வீட்டுபக்கமாக சென்றன.இவ்வாறு ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல பல நாட்கள் முயற்சிசெய்தும், ஒவ்வொரு முறையும் அவரால் ஏரியின் பக்கத்திற்கு செல்ல முடியாமல் ,அவரது கட்டுப்பாட்டை மீறி கால்கள் அவரது தோழியின் வீடு பக்கமாக அழைத்துச்சென்றன.
கடைசியில் ஒரு நாள் அவரது தோழியின் வீட்டிற்கு சென்றார்.
--
ஆச்சர்யம் என்னவென்றால் அந்த தோழியில் வீட்டில்தான் சுவாமி விவேகானந்தர் விருந்தாழியாக தங்கியிருந்தார்.
அப்போது சுவாமிஜி தியானத்தில் இருந்தார். சில நிமிடங்கள் காத்திருந்தபின் ,எம்மா கால்வேயை பார்க்காமலே சுவாமிஜி பேசினார்.
..மகளே அமைதியாக இரு..பிறகு அவரது வாழ்க்கையில் யாரும் அறியாத பல சம்பவங்களை எடுத்துக்கூறியார்.
கால்வே..இவை எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்.என் நெருங்கிய நண்பர்களுக்கு கூட தெரியாதே?
சுவாமிஜி..மகளே யாரும் என்னிடம் எதையும் சொல்லவேண்டியதில்லை.
--
இந்த சந்திப்பு நிகழ்ந்த பின் எம்மாகால்வே வாழ்வில் புதியதோர் மாற்றம் உருவானது. அவரது மனத்தில் இருந்த சந்தேகங்கள் எல்லாம் விலகின.
---
ஒரு நாள் சுவாமிஜி , கால்வேயுடன் பேசிக்கொண்டிருந்தார். தனது தனித்துவத்தை இழந்து பிரபஞ்ச உணர்வுடன் ஒன்றுபடுவது குறித்துவிளக்கினார்.
நான் சாதாரண நிலையில் இருக்கவே விரும்புகிறேன் பிரபஞ்ச உணர்வு வேண்டாம்,இவை பற்றி கேட்கவே பயமாக இருக்கிறது என்றார்.
---
சுவாமிஜி ஒரு குழந்தைக்கு புரியவைப்பது போல புரியவைத்தார். இதோ பாரம்மா, ஒரு நாள் ஒரு மழைத்துளி உன்னைப்போல பயந்துபோய் கடலில் விழமறுத்து அழுதது. கடல் அந்த மழைத்துளியிடம் கேட்டது, ஏன் அழுகிறாய்?
மழைத்துளி. கடலில் விழுந்ததும் நான் இல்லாமல்போய்விடுவேனோ என்று பயப்படுகிறேன்.
கடல்..பயப்படாதே நீ அழியமாட்டாய்.உன்னைப்போன்ற எண்ணற்ற துளிகளின் சேர்க்கையால்தான் நான் உருவாகியிருக்கிறேன். நீ துளி என்ற தனித்துவத்தை இழந்து கடல் என்ற பெரிய நிலையை அடையப்போகிறாய் என்றது.நீ நினைத்தால் சூரிய கிரணத்தை பற்றிக்கொண்டு மேலே சென்று மீண்டும் மழையாக பொழிந்து உலகின் தாகத்தை தீர்க்கலாம். மீண்டும் கடலில் கலந்து பெரியநிலையை அடையலாம். ஆகவே உன் தனித்துவத்தை இழக்க பயப்படாதே. நீ இல்லாத காலம் ஒன்று இல்லை, நீ எப்போதும் இருப்பாய் என்றது.
சுவாமிஜி இதை விளக்கியதும் எம்மா கால்வேயின் பயம் அகன்றது.
--
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment