விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 28
---
---
மைசூர் மாகாண திவானான சேஷாத்ரி ஐயரின் விருந்தினராக மூன்று நான்கு வாரங்கள் தங்கினார் சுவாமிஜி. மைசூர் அரசவையின் முக்கியப் பிரமுகர்கள் பலரை அங்கே அவரால் சந்திக்க முடிந்தது.
சுவாமிஜியின் ஆழ்ந்த அறிவையும் உன்னதமான லட்சியங்களையும் கண்ட திவான் அவரை மைசூர் மன்னரான சாமராஜேந்திர உடையாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதன்பிறகு சுவாமிஜி மைசூர் மன்னரின் விருந்தினராக அரண்மனையில் தங்கினார். சுவாமிஜியுடன் இயன்ற அளவு நேரத்தைச் செலவிட்டார் மன்னர்.
-
ஒருநாள் அரசவைப் பிரமுகர்கள் பலரது முன்னிலையில் மன்னரும் சுவாமிஜியும் பேசிக் கொண்டிருந்தனர்.
-
சுவாமிஜி: 'மன்னா! நீங்கள் பரந்த இதயம் படைத்தவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உங்களைச் சூழ்ந்துள்ளவர்கள் மற்ற அரசவையினரைப் போன்றவர்கள் தான். அதாவது, அவர்களைப்பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.'
-
மன்னர்..மற்றவர்களை ஏற்றுக்கொள்ளவிட்டால் திவானையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்.
-
சுவாமிஜி: 'ஆனால் மகாராஜா, திவான் என்றாலே மன்னனை வஞ்சித்து ஆங்கிலேயனுக்குப் பொருள் சேர்ப்பவர்தானே!(திவான் என்பவர் ஆங்கிலேயர் நியமித்த அதிகாரி. மன்னரிடமிருந்து வரியை பெற்று ஆங்கிலேயரிடம் கொடுப்பவர்.மற்றும் மன்னர், திவானின் ஆலோசனையில்லாமல் எந்த சட்டமும் இயற்றமுடியாது. சுருக்கமாக சொன்னால் மன்னரே திவானுக்கு அடிமைதான்)
-
இதன்பிறகும் இந்த உரையாடலை நீட்டிக் கொண்டு போக விரும்பாத மன்னர் வேறு விஷயம்பற்றி பேசத் தொடங்கினார். பின்னர் சுவாமிஜியிடம் தனிமையில் இதுபற்றி கூறினார்.
-
மன்னர்: 'என் அன்பிற்குரிய சுவாமிஜி! வெளிப்படையாகப் பேசுவது சிலவேனைகளில் பிரச்சினையாகிவிடும். அரசவைப் பிரமுகர்களின் முன்னிலையிலேயே அவர்களைப்பற்றி இப்படிப் பேசினால் அவர்களில் யாராவது உங்களை விஷம் வைத்துக் கொல்லக்கூட துணிந்துவிடுவார்கள்.'
-
சுவாமிஜி: 'செய்யட்டும்! உயிர் போய்விடும் என்று பயந்து ஓர் உண்மையான சன்னியாசி சத்தியத்தைக் கைவிடுவானா? மகாராஜா! ஒரு வேளை உங்கள் மகனே நாளை என்னிடம் வந்து,"எ்ன அ்பபாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம். உங்களிடம் இல்லாத குணங்களையெல்லாம் இருப்பதாகக்கூறி உங்களை ", "இந்திரன், சந்திரன்" என்று புகழ்வேனா என்ன! நான் பொய் சொல்வதா! அது ஒருபோதும் நடக்காது.'
-
உண்மை என்பதில் தீவிர உறுதிப்பாடு கொண்டவராக இருந்தார் சுவாமிஜி. இதற்காக, உண்மை என்ற பெயரில் பிறரது மனத்தைப் புண்படுத்துவதை அறவே வெறுத்தார் அவர். ஒருவரின் பலவீனத்தை அவர் முன்னிலையில் கூறுவதும், அவரது நற்பண்புகளை அவர் இல்லாதபோது புகழ்வதும் பெரியோர் இயல்பாகும். சுவாமிஜியிடம் அந்தப் பண்பு ஊறியிருந்தது. பின்னாளில் தமது சீடர்களிடம்கூட சுவாமிஜி இப்படியே நடந்து கொண்டார்.
-
பலவீனங்களை எடுத்துக் கூறுவதால் அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். நற்பண்புகள் நேராகப் புகழ்ந்தால் ஆணவம் தலைதூக்க நேரும். எனவே அதனைத் தவிர்த்தார் சுவாமிஜி.
--
மைசூர் திவான் சுவாமிஜிக்குப் பரிசுகள் தர விரும்பினார். ஒருநாள் அவர் தமது உதவியாளர் ஒருவரை சுவாமிஜியுடன் கடைவீதிக்கு அனுப்பி, அவர் என்ன விரும்பினாலும் வாங்கித் தருமாறு கூறினார். கடைக்குச் சென்ற சுவாமிஜி ஒரு சிறுவனின் குதூகலத்துடன் ஒவ்வொரு பொருளையும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார். பிறகு அந்த உதவியாளரிடம், 'உங்கள் திவான் கட்டாயமாக எனக்கு ஏதாவது தர விரும்பினால் இந்த ஊரில் உள்ள மிகச் சிறந்த சுருட்டு ஒன்றை வாங்கிக் கொடுங்கள். அதுபோதும்' என்று கூறிவிட்டார். அவ்வாறே கொடுத்த போது அதை ஆர்வத்துடன் புகைத்தார். அதன் விலை ஒரு ரூபாய்.
--
ஒருநாள் சுவாமிஜியும் பிரதம மந்திரியும் மன்னரைக் காணச் சென்றனர். அப்போது மன்னர் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி, உங்களுக்காக நான் என்ன செய்யட்டும்?' என்று கேட்டார். சுவாமிஜி அதற்கு நேரடியான பதில் எதையும் சொல்லவில்லை. ஆனால் அவர் கூறியதில் அவரது எதிர்காலத் திட்டத்தின் ஒரு சுருக்கமே இருந்தது
-
. முதலில் இந்தியாவின் பெருமை, அதன் ஆன்மீக மகிமை போன்றவற்றை சுமார் ஒரு மணி நேரம் கூறினார். பிறகு மேலை விஞ்ஞானக் கருத்துக்களும், இயக்கரீதியாகப் பணி செய்வதுமே இந்தியாவின் அப்போதைய தேவை என்பதை எடுத்துக் கூறினார். இந்தியாவின் ஆன்மீகப் பொக்கிஷம் மேலை நாடுகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார். தாம் மேலை நாடு சென்று பிரச்சாரம் செய்ய இருப்பதை இவ்வாறு மறைமுகமாகத் தெரிவித்தார் அவர்.
-
இறுதியாக, 'மன்னா, எனக்கு என்ன வேண்டும் என்றுதானே கேட்டீர்கள்! எனது தேவை இதுதான். மேலை நாடு நமக்கு உதவ வேண்டும். எப்படித் தெரியுமா? நமது பொருளாதார நிலைமையை உயர்த்துவதன் மூலம் நமக்கு உதவி செய்ய வேண்டும். நமது மக்களுக்கு நவீன விவசாயம், நவீன தொழில்நுட்பங்கள், நவீன விஞ்ஞானம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்' என்று கூறினார்.
-
சுவாமிஜியின் உணர்ச்சி பூர்வமான கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்த மன்னர், சுவாமிஜி மேலை நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் அதற்கான செலவைத் தாமே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். ஏனோ அந்த உதவியை சுவாமிஜி உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.
-
ஒருநாள் மன்மதரின் சமையல்காரர் சுவாமிஜிக்கு மைசூர் மன்னர் அளித்திருந்தத ஹுக்காவை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்த சுவாமிஜி, 'உனக்கு அது வேண்டுமா?' என்று கேட்டார். 'ஆம்' என்று சொல்வதற்குத் தயங்கி நின்றார் அந்தச் சமையல்காரர்.
அவரது மனநிலையைப் புரிந்து கொண்ட சுவாமிஜி அந்த ஹுக்காவை எடுத்து அவருக்குக் கொடுத்துவிட்டார். 'நீ பார்த்து ஆச்சரியப்படும் பொருள் உனக்கே உரியது' என்பார் சுவாமிஜி. தம்மிடமிருக்கின்ற எந்தப் பொருளையும் யார் பார்த்து வியந்தாலும் அதை அவருக்கே கொடுத்துவிடுவது சுவாமிஜியின் பண்பாக இருந்தது.
--
தொடரும்...

No comments:
Post a Comment