Friday, 21 October 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -32

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -32
---
சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெறும் சர்வமதமகா சபைக்கு சென்று சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்று சென்னையை சேர்ந்த நண்பர்களும் பலரும் விரும்பினார்கள்.ஆனால் சுவாமிஜியிடம் தயக்கம் இருந்தது. வெளிநாடு செல்ல வேண்டியது இறைவனது சித்தமா?அல்லது தனது மனஇச்சையா என்று தெரியாமல் குளம்பியநிலையில் இருந்தார். 
ஒரு நாள் இரவு.சுவாமிஜி அரை தூக்கத்தில் படுத்திருந்தார்.அவரின் முன்பு அலைபொங்கும் கடல் தெரிந்தது.கரையில் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் நின்றிருந்தார். திடீரென நீர்மீது நடந்துசெல்ல ஆரம்பித்தார்,தன்னுடன் வருமாறு சுவாமிஜியையும் அழைத்தார்.இந்த காட்சி ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, பல நாள் தொடர்ந்தது.
...
இது பற்றி சுவாமிஜி விளக்குகிறார்..
...
சிகாகோ சர்வமதமகா சபைக்கு செல்லவேண்டாம் என நான் எண்ணியிருந்தேன்.ஆனால் பல இரவுகளாக குருதேவர் தோன்றுகிறார், நீ எனக்காக அங்கே செல்ல வேண்டும்.அந்த சபை உனக்காகவே கூட்டப்படுகிறது.தயங்காதே உன் பேச்சை மக்கள் நிச்சயம் கேட்பார்கள் என்று கூறினார்.
....
இருந்தாலும் அன்னை சாரதாதேவியிடம் இதுபற்றி தெரிவித்து,அவர்களின் ஆலோசனையை பெறலாம் என சுவாமிஜி நினைக்து கடிதம் எழுதினார்.
...
அந்த கடிதம் கிடைத்தபின்பு அன்னை சாரதாதேவி அது குறித்து யோசித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் பௌர்ணமி இரவு. கங்கை கரையில் அன்னை உட்கார்ந்திருந்தார்.அப்போது திடீரென குருதேவர் அவர்முன் தோன்றி கங்கை நீரில் நடந்துசென்றார் ,பிறகு அந்த நீரில் கரைந்துபோனார்,அப்போது சுவாமிஜி அங்கே தோன்றினார்.அவர் அந்த நீரை கைகளில் அள்ளி. ஜெய்ஸ்ரீராமகிருஷ்ணா என்று கூறிய படி மக்கள்மீது தெளித்தார்.
இந்த காட்சியை கண்டபின் அன்னைக்கு அனைத்தும் புரிந்தது.குருதேவரின் உபதேசங்களை சுவாமிஜி பரப்பபோவதை தெரிந்துகொண்டார்,எனவே இது குறித்து சுவாமிஜிக்கு கடிதம் எழுதினார்.
.....
கடிதத்தை படித்ததும் சுவாமிஜியின் சந்தேகங்கள் அனைத்தும் விலகின.சிகாகோ சர்வமதமகா சபைக்கு செல்ல ஆயத்தம் ஆனார்....
--
ராமநாதபுரம் மன்னர் கடைசியில் உதவ மறுத்தது
-
சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும்போது ஏழைகளின் குடிசையிலும் தங்குவார்,மன்னரின் மாளிகையிலும் தங்குவார்.மரத்தடியிலும் தங்கியிருப்பர் சில வேளைகளில் குகைகளிலும் வசிப்பார்.இந்தியா முழுவதும் உள்ள மன்னர்களை சந்தித்துக்கொண்டே வந்த சுவாமிஜி தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மன்னரையும் சந்தித்தார்.சுவாமிஜியின் அறிவாற்றலால் மன்னர் பெரிதும் கவரப்பட்டார்.
-
அப்போது வெளிநாட்டில் நடக்கும் சர்வமதமகாசபை சார்பாக கலந்துகொள்ள விரும்புவதாகவும்,யாராவது அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும் என்றும் சுவாமிஜி தனது ஆசையை வெளிப்படுத்தினார்.மன்னரும் உடனே நீங்கள் புறப்படும்போது தகவல் தாருங்கள் 10,000ரூபாய் தருகிறேன் என்றார்.அந்த காலத்தில் 10,000 ரூபாய் என்றால் இற்றைய மதிப்புக்கு கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் இருக்கும்.அமெரிக்கா சென்று மாநாட்டில் கலந்துகொள்ளவும்,அதன் பின்னர் அங்கே தங்கி சமய பிரச்சாரம் செய்யவும் இது போதும் என சுவாமிஜி நினைத்தார்.கடவுளின் கருணையை எண்ணி மகிழ்ந்தார்.
-
அதன்பின் சுவாமிஜி சென்னையில் தங்கியிருந்தார்.
-
சிகாகோ சர்வமத மகாசபையின் அமைப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பரோஸ் என்பவர் இந்தியாவிலிருந்து இந்துமதம் சார்பாக பேச ஒருவரை அனுப்பும்படி சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பேராசிரியராக இருந்த டாக்டர்.வில்லியம் மில்லர் என்பவருக்கு தெரிவித்தார்.
-
அந்த காலத்தில் வெளிநாடு சென்று மதப்பிரச்சாரம் செய்தால் ஜாதியைவிட்டு விலக்கிவிடுவார்கள் என்பதால் பிராமணர்கள் யாரும் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.முடிவில் சுவாமி விவேகானந்தரின் திறமையை பற்றி கேள்விப்பட்டு அவரை அனுப்பலாம் என முடிவெடுத்தார்கள்.சுவாமிஜி துறவி என்பதால் அவரை ஜாதியைவிட்டு விலக்க முடியாது என்பதும் ஒருகாரணம்.சுவாமிஜியும் முதலில் இதற்கு சம்மதித்தார்.ஏனென்றால் செலவுக்கான பணத்தை தர ராமநாதபுரம் மன்னர் ஒத்துக்கொண்டிருந்தார்.
-
சுவாமிஜி சென்னை அன்பர்கள் சிலரை பணம் வாங்கிவர ராமநாதபுரம் அனுப்பிவைத்தார்.ஆனால் மன்னர் பணம் தர மறுத்துவிட்டார்.அது மட்டுமல்ல சுவாமிஜி ஒரு வங்காளி எனவும்,அவர் அரசியலில்(இந்திய விடுதலை போரட்டத்தில்) உள்ளவர் எனவும்,அவரை நான் வெளிநாடு அனுப்பினால் வெள்ளைக்காரர்கள் தனது ஆட்சியை கவிழ்த்துவிடுவார்கள் எனவும் கூறினார்.
-
இதைக் கேள்விப்பட்ட சுவாமிஜியின் மனம் மிகவும் வேதனைப்பட்டது.இதைக்குறித்து அளசிங்கருக்கு கடிதம் எழுதினார்.எனது திட்டங்கள் யாவும் தவிடுபொடியாகிவிட்டன.தென்னாட்டு மன்னர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்கள் அல்ல என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.(புத்தகம் 9-பக்கம்176)
-
ஆனால் அளசிங்கர் பெரிய செயல்வீரர்.சுவாமிஜி அமெரிக்க செல்லவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.எனவே அளசிங்கர் தலைமையில் இளைஞர்கள் சிலர் ஒரு குழுவாக ஒன்று சேர்ந்தார்கள்.வீடுவீடாக சென்று சாதாரண மகக்ளிடம் சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்லவேண்டிய அவசியத்தை எடுத்துகூறினார்கள்.சிலர் பணம் கொடுக்க முன்வந்தார்கள் பலர் மறுத்துவிட்டார்கள்.இரவு பகலாக வீடுவீடக சென்று பிச்சையேற்று பணத்தை சேகரித்தார்கள்.அந்த காலத்தில் மக்கள் பட்டினியால் இறந்துகொண்டிருந்தார்கள்.பணம் பெறுவது எவ்வளவு கடினம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
-
கடைசியில் 3500 ரூபாய்வரை சேர்த்துவிட்டார்கள்.சுவாமிஜி செல்வது உறுதி என்பதை ராமநாதபுரம் மன்னர் கேள்விப்பட்டார்.தனக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக 500 ரூபாய் கொடுத்து அனுப்பினார்.
-
சுவாமி விவேகானந்தரை வெளிநாட்டிற்கு அனுப்பியது சென்னை இளைஞர்கள் .அத்துடன் சாதாரண மக்களும்தான்.
-
ராமநாதபுரம் மன்னர் சுவாமிஜியை அனுப்ப முடியாமல் போனதற்கு சில காரணங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்
-
1.சுவாமிஜி அத்வைத வேதாந்தத்தை பிரச்சாரம் செய்தார்.ராமநாதபுரம் மன்னர் சைவமரபை சேர்ந்தவர்.மன்னரின் அமைச்சர்கள் சிலர்.சுவாமிஜி சைமதத்தை சேர்ந்தவர் அல்ல,அவரால் சைவமதத்திற்கு எந்த நன்மையும் இல்லை என்று கூறியிருக்கலாம்
-
2. ஒருவேளை சுவாமிஜியை,அவர் அனுப்பி வைத்திருந்தால்,சுவாமிஜியின் புகழ் அனைத்திற்கும் நானேதான் காரணம்.நான் இல்லாவிட்டால் சுவாமிஜியால் என்ன செய்ய முடிந்திருக்கும்? என்ற எண்ணம் மன்னருக்கு வந்திருக்கலாம்.அதுமட்டுமல்ல எதிர்காலத்தில் மன்னர் கூறியபடியே சுவாமிஜி நடக்கவேண்டியிருக்கலாம். மன்னர்தான் இந்துமதத்தை காக்கபிறந்தவர் என்றும்,சுவாமிஜி அவரது கருவி என்றும் பிற்காலத்தில் செய்தி பரப்பியிருப்பார்கள்.இதை தடுக்கவே கடைசி நேரத்தில் மன்னரின் மனத்தை இறைவன் மாற்றியிருக்கலாம்
-
3.சுவாமிஜி ஒரு தேசபக்தர்.வெள்ளையர்களின் கருத்துக்களுக்கு எதிரானவர்.சுவாமிஜி வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார்.அதனால் அந்த காலத்திலேயே சுவாமிஜியை வெள்ளையர்கள் கண்காணித்து வந்தார்கள்.ராமநாதபுரம் மன்னர் வெள்ளையர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்தார்.ராமநாதபுரம் மன்னர் சுவாமிஜிக்கு உதவுவது வெள்ளையர்களுக்கு தெரிந்தால் மன்னருக்கு ஆபத்து என்பதாலும் அவர் மறுத்திருக்கலாம்
-
அதன்பின் சுவாமிஜி அமெரிக்காவில் புகழ்பெற்றபிறகு மன்னர் தனது தவறை குறித்து வருந்தினார்.அதனால்தான் சுவாமிஜி மீண்டும் இந்தியா வந்தபோது அவரது பாதத்தை தனது தலையில் தாங்கிக்கொண்டார். குதிரைகளை அவிழ்த்துவிட்டு தானே சுவாமிஜியை தேரில் அமர்த்தி இழுத்துச்சென்றார்
-
சுவாமி விவேகானந்தர் மகாராஜா,அதாவது மன்னருக்கெல்லாம் மன்னர்.மன்னாதி மன்னர்.அவர் எந்த அரசரின் கீழும் இருக்கமாட்டார்.அரசர்கள்தான் அவருக்கு கீழ் இருக்கவேண்டும்.என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாக புரிகிறது
-
சுவாமிஜி சென்னையில் தங்கியிருந்தபோது,ஒரு நாள் இளைஞர்கள் சிலர் சற்று வேடிக்கையாக ஆங்கிலம் பேசும் சன்னியாசியைக்காண வந்தனர்.ஒருவர்,சுவாமிஜி,கடவுள் என்றால் என்ன?என்று கேட்டார்.சுவாமிஜிஆற்றல் என்றால் என்ன?சற்று விளக்கு என்றார்.வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்,அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.என்னப்பா,ஆற்றல் இன்றி தினசரி வாழ்க்கையே இல்லை,அத்தகைய ஒன்றை உங்களால் விளக்க முடியவில்லை,கடவுளை பற்றி எந்த விளக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.வந்தவர்கள் பதில் எதுவும் சொல்லாமல் திரும்பி விட்டனர்.
--
சென்னையில் சுவாமிஜிக்கு வினோதமான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. சில ஆவிகள் அவரைத் தொந்தரவு செய்தன. அவரது மனம் கலங்கும் விதமாக ‘இது நடக்கப் போகிறது’, ‘அது நடக்கப் போகிறது’ என்றெல்லாம் அவரிடம் கூறின. அவை பொய் என்பது பின்னால் தெரிய வரும். ஆரம்பத்தில் சுவாமிஜி அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் இவ்வாறு சில நாட்கள் தொடர்ந்து நடந்தபோது சுவாமிஜியின் பொறுமை எல்லை மீறியது. அவரது கோபத்தைக் கண்ட அந்த ஆவிகள் அவரிடம் வந்து, தங்கள் பரிதாபகரமான நிலைமையை எடுத்துக்கூறி, தங்களுக்கு நற்கதி அளிக்குமாறு வேண்டின. அவற்றின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட சுவாமிஜி ஒருநாள் மெரினா கடற்கரைக்குச் சென்றார். கையில் ஒரு பிடி மணலை எடுத்துக் கொண்டு, அதையே தர்ப்பணப் பொருட்களாகப் பாவித்து, அந்த ஆவிகளுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று இதய பூர்வமாகப் பிரார்த்தித்தார். அதன்பிறகு இந்த ஆவிகள் வரவில்லை
--

தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
-

No comments:

Post a Comment