விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 18
------------------
1891 பிப்ரவரியில் ஆல்வார் ரயில் நிலையத்தில் இறங்கினார் சுவாமிஜி. அங்கிருந்து கால்போன திசையில் மெதுவாக நடக்கலானார். இரு பக்கங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்ச் சோலைகள், பரந்து விரிந்த வயல்வெளிகள், வரிசை வரிசையாக வீடுகள் என்று மாறிமாறி வந்த அழகிய காட்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்தவாறு நடந்து அரசு மருத்துவமனையை அடைந்தார். அங்குள்ள டாக்டரான குரு சரண்லஸ்கர் வெளியே நின்றிருந்தார். சுவாமிஜியின் தோற்றம் அவரை மிகவும் கவர்ந்தது. சுவாமிஜி நேராக அவரிடம் சென்று, 'துறவிகள் தங்குவதற்கு இங்கு ஏதாவது இடம் இருக்கிறதா?' என்று கேட்டார். குரு சரண் அங்குள்ள கடைத்தெரு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். ஒரு கடையின் மாடியில் துறவிகள் தங்குவதற்கென்று ஓர் அறை இருந்தது. அதனை சுவாமிஜிக்குக் காட்டி, அங்கே அவரைத் தங்கச் செய்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.
சுவாமிஜியிடம் அறிமுகக் கடிதங்கள் எதுவும் இல்லை. எனவே உணவிற்கோ தங்கவோ வேறு ஏற்பாடுகள் இல்லை. அப்போது அந்தக் கடைக்கு அருகில் வாழ்ந்த முதிய பெண்மணி ஒருத்தி சுவாமிஜியிடம் ஈடுபாடு கொண்டாள். அவள் அவரை 'லாலா' (குழந்தாய்!)என்று அன்புடன் அழைப்பாள். தன் கையாலேயே சப்பாத்தி செய்து தினமும் கொண்டுவந்து சுவாமிஜிக்கு ஊட்டுவாள். சிலவேளைகளில் ராமஸ்னேஹி என்ற வைணவத் துறவியும் சுவாமிஜியுமாகப் பிச்சைக்குச் செல்வார்கள். கோதுமை மாவு பெற்று வருவார்கள். ராமஸ்னேஹி சப்பாத்தி செய்வார். இருவருமாகச் சாப்பிடுவார்கள். இவ்வாறு சுவாமிஜியின் நாட்கள் கழிந்தன.
சுவாமிஜியை ஆரம்பத்தில் அங்கே பெரிதாக மக்கள் அறியவில்லை. பின்னர் படிப்படியாகக் கூட்டம் வரத் தொடங்கியது. காலை மாலை வேளைகளில் சுவாமிஜி பாடுவார். அதைக் கேட்கவே கூட்டம் திரளும். ஒருநாள் அவர்களில் ஒருவர் 'சுவாமிஜி, நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்?' என்று கேட்டார். 'காயஸ்தர்' என்றார் சுவாமிஜி. மற்றொருவர், 'நீங்கள் ஏன் காவி அணிந்துள்ளீர்கள்?' என்று கேட்டார். 'ஏனெனில் அது பிச்சைக்காரர்களின் உடை' என்றார் சுவாமிஜி.
ஒரு நாள் சீடர் ஒருவர் சுவாமிஜியைத் தமது வீட்டில் விருந்திற்காக அழைத்தார். சுவாமிஜி சென்றபோது அவர் குளிப்பதற்காக உடம்பில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார். சுவாமிஜி சென்றதும் அவரை வரவேற்று, 'சுவாமிஜி, குளிப்பதற்கு முன் எண்ணெய் தேய்த்துக் கொள்வதால் ஏதாவது நன்மை உண்டா?' என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, 'ஆம். 50 கிராம் எண்ணெயை உடம்பில் தேய்த்தால் அது 250 கிராம் நெய்யை உண்பதற்குச் சமம்' என்று பதிலளித்தார்.
ஒருமுறை சுவாமிஜி தமது சீடர் ஒருவர் அழைத்ததன் பேரில் அவரது வீட்டிற்குச் சென்றார். உணவிற்குப் பிறகு ஓய்வாக அமர்ந்திருந்தபோது அந்தச் சீடர் சுவாமிஜியிடம், 'சுவாமி
உண்மை, தூய்மை, தன்னலமற்ற தொண்டு, நேர்மை, நாணயம் என்றெல்லாம் நீங்கள் போதிக்கிறீர்கள். வேலை செய்து பிழைக்கின்ற ஒருவன் இவற்றைப் பின்பற்ற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதிலும் சுய தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பது என்பது அந்த நாட்களில் சாத்தியமே இல்லை. உண்மையாக, நேர்மையாக தொழில் செய்து இந்த உலகில் வாழ முடியுமா?'
சுவாமிஜி கூறினார்: 'இதைப்பற்றி நான் மிகவும் ஆழ்ந்து சிந்தித்துள்ளேன். எனக்குக் கிடைத்த பதில் என்னவென்றால் நேர்மையாகச் சம்பாதிக்க ஒருவனும் விரும்பவில்லை என்பதுதான். அதுதான் உண்மை. இதையெல்லாம் யார் சிந்திக்கிறார்கள்? இப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே யாரும் உணரவில்லை. இப்போதைய கல்வி முறையே இந்தச்சீர்கேட்டிற்குக் காரணம்.
'விவசாயத்தைத் தொழிலாகத் தேர்ந்தெடுப்பது நல்லது என்று நான் கருதுகிறேன். ஆனால் யாரிடமாவது இதைச் சொன்னலாம். 'நான் படித்தவன், நான் விவசாயம் செய்வதா? நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் விவசாயி ஆவதா? ஏற்கனவே நாடு முழுவதும் விவசாயிகள் நிறைந்துள்ளனர். அதனால்தான் நாடே இவ்வளவு தூரம் சீர்கெட்டுள்ளது' என்கிறான். ஆனால் இது ஒருபோதும் உண்மையல்ல. மகாபாரதத்தைப் படியுங்கள். ஜனகர் ஒரு கையால் ஏர் உழுதுகொண்டு மறு கையால் வேதங்களைப் படிப்பதுபற்றி அதில் வருகிறது. பண்டைய நமது முனிவர்கள் விவசாயிகளாகவே இருந்தார்கள் என்றார் சுவாமிஜி.
குருசரண் மூலமாக சுவாமிஜியைப்பற்றி கேள்விப்பட்ட மெளல்வி (இஸ்லாமிய அறிஞர்) ஒருவர் சுவாமிஜியிடம் மிகவும் கவரப்பட்டார். அவர் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் உருதும் பாரசீகமும் கற்பிக்கின்ற ஆசிரியர். அடிக்கடி இருவரும் சுவாமிஜியைச் சென்று கண்டு அவருடன் பேசினர். குரானில் சுவாமிஜிக்கு இருந்த ஆழ்ந்த புலமை அப்போது வெளிப்பட்டது.
சுவாமிஜியைப் பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டனர். ஜாதி மத வேற்றுமையின்றி இந்துக்களில் பல பிரிவினரும் முஸ்லிம்களில் பல பிரிவினரும் வந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே ஆல்வார் அரசின் ஓய்வுபெற்ற எஞ்ஜினியரான பண்டிட் சம்புநாத் என்பவரின் வீட்டில் சுவாமிஜி தங்குவதற்கு ஏற்பாடு ஆகியது.
ஒருநாளாவது சுவாமிஜியை அழைத்துச் சென்று தமது வீட்டில் விருந்தளிக்க வேண்டும் என்ற ஆசை மௌல்வியின் மனத்தில் எழுந்தது. சம்புநாத் ஆசாரமிக்க பிராமணர். அவரது வீட்டில் சுவாமிஜி தங்கியிருப்பதால் அவரது அனுமதி தேவை என்று எண்ணிய மௌல்வி சம்புநாத்தை அணுகி, 'நீங்கள் இதற்கு அனுமதிக்க வேண்டும். ஆசாரமிக்க பிராமணர்களைக் கொண்டு சமையல் செய்கிறேன். நாற்காலி போன்றவற்றை பிராமணர்களைக் கொண்டே சுத்தம் செய்கிறேன். பிராமணர்களின் வீடுகளிலிருந்து பாத்திரங்களைக் கொண்டுவரச் செய்து பரிமாறுகிறேன். எந்த ஆசாரத்திற்கும் இடையூறு நேராதபடி பார்த்துக் கொள்கிறேன்' என்றெல்லாம் உணர்ச்சியுடன் கூறினார். மௌல்வியின் பக்தியைக் கண்டு நெகிழ்ந்துபோன சம்புநாத், 'நீங்கள் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் செய்ய வேண்டாம். உங்கள் பக்தி ஒன்றே போதும். உங்கள் வீட்டில் உணவருந்த நானே தயாராக இருக்கிறேன். சுவாமிஜி ஒரு முக்த புருஷர். அவரைப்பற்றி என்ன சொல்ல இருக்கிறது! அவர் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம்' என்று கூறினார்.
-----
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:
Post a Comment