விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -41
--
அமெரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடியது.கருப்பின மக்களை வெள்ளையர்கள் அடிமைகளாக நடத்தினார்கள்.அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன.பொது இடத்தில் அங்கீகாரம் மறுக்கப்ட்டது.ஹோட்டல்களில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டார்கள்.பல இடங்களில் சுவாமிஜியை அமெரிக்கர்கள் அவமதித்தார்கள்.சுவாமிஜிக்க ு விடுதிகள் புக்செய்திருப்பார்கள்,ஆனால ் சுவாமிஜி விடுதிக்கு செல்லும்போது அவர் கறுப்பர் இனம் என கருதி விடுதியினுள் அவரை அனுமதிக்கமாட்டார்கள்.
ஒரு நாள் லண்டனில் ஒரு தெருவழியாக சுவாமிஜி நடந்துசென்று கொண்டிருந்தார்.அந்த வழியாக ஒரு நிலக்கரி வண்டி வந்தது.சுவாமிஜியை கண்ட அந்த வண்டி ஊழியன் ஒரு பெரிய நிலக்கரி கட்டியை எடுத்து சுவாமிஜியை நோக்கி வீசினான்,நல்லவேளையாக சுவாமிஜியின் மேல் அது படவில்லை.
தம்மை கருப்பர் இனத்தினர் என்று பலர் அவமதிக்கும் போது.தன்னை கருப்பர் இனத்தை சார்ந்தவன் அல்ல,தான் ஒரு இந்தியர் என்று சுவாமிஜி கூறிக்கொள்ளவில்லை.பின்னாளி ல் ஒரு முறை சீடர் இது பற்றி கேட்டபோது,ஒருவனை தாழ்த்தி,என்னை உயர்த்தி பேசுவதா?என்று கேட்டார். சுவாமிஜி பல இடங்களில் சொற்பொழிவாற்றி வெற்றி பெற்ற பின்,அவரது வெற்றி தங்கள் வெற்றியாக கருப்பு இனத்தவர் கொண்டாடினார்கள்.ஒரு ஊரில் கருப்பு இனத்தவர்கள் பலர் ஒன்று சேர்த்து சுவாமிஜியை மிகவும் விமரிசையாக வரவேற்றார்கள்.அவ்போது ஒருவர் எங்கள் இனத்தவர் ஒருவர் இவ்வளவு வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது என்று சொன்னார்.சுவாமிஜியுடன் அவர்கள் கைகுலுக்கிக்கொண்டார்கள்.சு வாமிஜியும் நன்றி சகோதரா,நன்றி என்று கூறினார்.
--
ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர் ஒருவர்,உங்களால் எப்படி இவ்வளவு விஷயங்களை பேச முடிகிறது? என்று வியப்புடன் கேட்டார்.அதற்கு அவர் நானா பேசுகிறேன்!இறைவன் அல்லவா என்னை பேசவைக்கிறான்.அன்னை காளி எனக்கு பின்னால் இருந்து ஞானத்தை அள்ளி தந்துகொண்டே இருப்பாள்,அதை தான் நான் பேசிக்கொண்டே இருப்பேன் என்றார்.சுவாமிஜி ஒருமுறை பேசுவதை அடுத்த சொற்பொழிவில் பேசுவதில்லை.ஒவ்வொருமுறையும ் புதிது புதிதாக பேசுவார்.ஒரு வாரத்தில் 12 முதல் 14 வரை சொற்பொழிவுகள் வரை சுவாமிஜி செய்வதுண்டு. சொற்பொழிவு முடிந்த பிறகு களைத்துபோய்,”அப்படா” என்று படுக்கையில் விழுவார்,நாளை சொற்பொழிவுக்கு என்ன செய்வேன்?எதை பேசுவேன் என்று தமக்கு தாமே கேட்டுக்கொள்வார்.அப்போது ஒரு அற்புதம் நிகழும்.திடீதென்று எங்கிருந்தோ ஒருவர் பேசுவார்,மறுநாள் தான் பேச வேண்டிய சிந்தனைகள் அதில் இருக்கும்.சில வேளைகளில் அந்த குரல் தூரத்திலிருந்து ஒருவர் பேசுவது போல் கேட்கும்,சில வேளைகளில் அவருக்கு அருகிலிருந்து ஒலிக்கும்,சில வேளைகளில் இரண்டு குரல்கள் விவாதம் செய்வது போல் பேசும்,சுவாமிஜி இது வரை பேசிராத கருத்துக்களாக,சிந்தித்திரா த கருத்க்களாக அவைகள் இருக்கும்.சில வேளைகளில் இந்த குரல்கள் பக்கத்து அறைகளில் உள்ளவர்களுக்கு கூட கேட்கும்.நேற்றிரவு யாருடன் சத்தமாக விவாதம் செய்துகொண்டிருந்தீர்கள் என்று கேட்பார்கள்.சுவாமிஜி மென்மையாக சிரித்து மழுப்பிவிடுவார்.
தூய்மையான மனம் குருவாக வந்து ஒருவனை வழிநடத்தும் என்று சுவாமிஜி கூறினார்.
இந்த நாட்களில் சுவாமிஜியிடம் யோக சக்திகள் மிகவும் வெளிப்பட்டு தோன்றின.ஒருமுறை தொடுவதால் சிலரது வாழ்க்கையின் போக்கை அவரால் மாற்ற முடிந்தது.தொலை தூரங்களில் நடப்பவற்றை அவரால் காணமுடிந்தது.சில வேளைகளில் அவரது சீடர்கள் இதனை சோத்தித்து அறிந்துகொண்டார்கள்.ஒரு பார்வையில் ஒருவனுடைய முற்பிறவிகளை அறியவும்,அவர்களது மனத்தை திறந்த புத்தகத்தை படிப்பதுபோல் படிக்க முடிந்தது.
இத்தகையை சித்துவேலைகளை சுவாமிஜி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இத்தக ைய அசாதாரணமான ஆற்றல்களை ஒருவன் பெற்றிருந்தால் அவற்றிற்கு அடிமையாக முடிவில்,ஆன்மீக வாழ்வில் தோல்வியை சந்தித்திருப்பான். ஆனால் சுவாமிஜி அவைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
சுவாமிஜியிடம் இருந்த தூயமனத்தின் காரணமாக அவரிடம் ஆன்மீகஆற்றல் நிரம்பி வழிந்தது,இதன் காரணமாக மக்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டார்கள்.நல்ல மனங்களை பெற்றவர்கள் அவரை நாடிவந்தார்கள்.
---
-
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
--
அமெரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடியது.கருப்பின மக்களை வெள்ளையர்கள் அடிமைகளாக நடத்தினார்கள்.அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன.பொது இடத்தில் அங்கீகாரம் மறுக்கப்ட்டது.ஹோட்டல்களில்
ஒரு நாள் லண்டனில் ஒரு தெருவழியாக சுவாமிஜி நடந்துசென்று கொண்டிருந்தார்.அந்த வழியாக ஒரு நிலக்கரி வண்டி வந்தது.சுவாமிஜியை கண்ட அந்த வண்டி ஊழியன் ஒரு பெரிய நிலக்கரி கட்டியை எடுத்து சுவாமிஜியை நோக்கி வீசினான்,நல்லவேளையாக சுவாமிஜியின் மேல் அது படவில்லை.
தம்மை கருப்பர் இனத்தினர் என்று பலர் அவமதிக்கும் போது.தன்னை கருப்பர் இனத்தை சார்ந்தவன் அல்ல,தான் ஒரு இந்தியர் என்று சுவாமிஜி கூறிக்கொள்ளவில்லை.பின்னாளி
--
ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர் ஒருவர்,உங்களால் எப்படி இவ்வளவு விஷயங்களை பேச முடிகிறது? என்று வியப்புடன் கேட்டார்.அதற்கு அவர் நானா பேசுகிறேன்!இறைவன் அல்லவா என்னை பேசவைக்கிறான்.அன்னை காளி எனக்கு பின்னால் இருந்து ஞானத்தை அள்ளி தந்துகொண்டே இருப்பாள்,அதை தான் நான் பேசிக்கொண்டே இருப்பேன் என்றார்.சுவாமிஜி ஒருமுறை பேசுவதை அடுத்த சொற்பொழிவில் பேசுவதில்லை.ஒவ்வொருமுறையும
தூய்மையான மனம் குருவாக வந்து ஒருவனை வழிநடத்தும் என்று சுவாமிஜி கூறினார்.
இந்த நாட்களில் சுவாமிஜியிடம் யோக சக்திகள் மிகவும் வெளிப்பட்டு தோன்றின.ஒருமுறை தொடுவதால் சிலரது வாழ்க்கையின் போக்கை அவரால் மாற்ற முடிந்தது.தொலை தூரங்களில் நடப்பவற்றை அவரால் காணமுடிந்தது.சில வேளைகளில் அவரது சீடர்கள் இதனை சோத்தித்து அறிந்துகொண்டார்கள்.ஒரு பார்வையில் ஒருவனுடைய முற்பிறவிகளை அறியவும்,அவர்களது மனத்தை திறந்த புத்தகத்தை படிப்பதுபோல் படிக்க முடிந்தது.
இத்தகையை சித்துவேலைகளை சுவாமிஜி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இத்தக
சுவாமிஜியிடம் இருந்த தூயமனத்தின் காரணமாக அவரிடம் ஆன்மீகஆற்றல் நிரம்பி வழிந்தது,இதன் காரணமாக மக்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டார்கள்.நல்ல மனங்களை பெற்றவர்கள் அவரை நாடிவந்தார்கள்.
---
-
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment