விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி 17
------------------
1890 ஆகஸ்ட் இறுதியில் சுவாமி விவேகானந்தரும்,சுவாமி அகண்டானந்தரும் இமயமலையில் உள்ள அல்மோராவை அடைந்தனர்.அங்கே அம்பாதத் என்பவரின் தோட்டவீட்டில் தங்கியிருந்தார்கள்.சில நாட்கள் கடந்தபின்னர் தனிமையை நாடி சுவாமிஜி மட்டும் சில மைல் தூரத்தில் இருந்த காஸார்தேவி குகையில் தீவிர தவ வாழ்வை மேற்கொண்டார்.அவருக்கென்று ஒரு பணியிருப்பதாக அவருக்கு தோன்றியது.சில நாட்கள் கழிந்தபின் மீண்டும் தோட்டவீட்டிற்கு வந்தார்.இப்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.தனது பாசம் மிகு சகோதரிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.சொந்ா வீட்டில் வறுமை,மணம்செய்துகொடுத்தவீட ்டிலோ கொடுமை.எல்லைமீறிய சோகம் காரணமாக அவரது தங்கை இறந்த செய்தி கேட்டு சுவாமிஜி மிகவும் மனம்வருந்தினார்.கல்கத்தாவி ல் சிலநாட்கள் கழித்பின் மீண்டும் தவவாழ்வை நோக்கி புறப்பட்டார்.
இமயமலையில் சுவாமிஜி உடம்பின் சுகதுக்கங்களைப்பற்றி கவலைப்படாமல் வாழ்ந்த பல மகான்களை சந்தித்தார்.அவர்களில் ஒருவர் பார்க்க பைத்தியம்போல இருந்தார்.ஆடை எதுவும் இன்றி சுற்றித்திரிந்த அவர்மீது சிறுவர்கள் கல்லெறிந்து விளையாடினார்கள்.அந்த மகானும் அதை தடுக்கவில்லை,அவர்களோடு சேர்ந்து அவரும் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டார்.அவரது உடல் முழுவதும் கல்லெறிந்ததில் காயம்பட்டு ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.தன்ம ீது கல்லெறிந்ததால் சிறுவர்கள் மகிழ்கிறார்களே என்பதால் அவர் அதை தடுக்கவில்லை.சுவாமிஜி அவரை அழைத்து அவரது புண்களுக்கு மருந்திட்டார்.அப்போதும் அந்த மகான் மகிழ்சியில் திளைத்துக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் சுவாமிஜிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.அத்துடன் தொண்டை அடப்பான்நோயும் சேர்ந்திருந்தது.அவருடன் இருந்த கிருபானந்தருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.சுவாமிஜியின் உடல்நிலைமிக மோசமானது.உடல் சூடுகுறைந்துவிட்டது.நாடித் துடிப்பும் குறைந்துவிட்டது.அப்போது திடீதென எங்கிருந்தோ வந்த சாது ஒருவர் தன் பையிலிருந்து சிறிதுதேன் மற்றும் வேறுசில பொருட்களைசேர்த்து சுவாமிஜியின் வாயில்வைத்து திணித்தார்.அந்த மருந்து வேலைசெய்ய ஆரம்பித்தது.சுவாமியின் உடல்நிலை படிப்படியாக சீரானது.புறத்தில் மரணநிலையை அடைந்திருந்தாலும் அகத்தில் ஓர் அற்புற செய்தியை சுவாமிஜி பெற்றிருந்தார்.தன்னிடம் அபரிவிதமான ஆன்மீக ஆற்றல் பெருகிக்கொண்டிருப்பதையும். மக்களின் நலனுக்காக அதை பயன்படுத்தபோவதையும் அவர் உணர்ந்தார்.
விவேகானந்தர் அப்போது மீரட்டில் தங்கியிருந்தார். ஜான் லுப்பக் என்பவர் எழுதிய நூல்களைப் படிக்க ஆர்வம் கொண்டிருந்தார். எனவே அவற்றை நூல் நிலையத்தில் இருந்து எடுத்து வருமாறு சக துறவியான அகண்டானந்தரிடம் கூறினார். உடனே அகண்டானந்தரும் அந்த நூல்களைத் தேடிக் கொணர்ந்து தந்தார். அவை பெரிய தலையணை அளவில் இருந்தன. மறுநாளே அந்தப் புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு கூறி, அகண்டானந்தரிடம் கொடுத்து விட்டார் நரேந்திரர். நூல் நிலையத்தைப் பராமரிப்பவருக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய் விட்டது. படிக்கவில்லையா, உடனே ஏன் திருப்பிக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார் அகண்டானந்தரிடம். அதற்கு அகண்டானந்தரோ, இல்லை சுவாமிகள் படித்து முடித்து விட்டார், அதனால் தான் திருப்பிக் கொண்டு வந்தேன் என்றார். ஆனால் அதனை நூலகப் பராமரிப்பாளர் ஏற்கவில்லை. அது சாத்தியமே இல்லை என்றும், இவ்வளவு பெரிய புத்தகங்களை ஒரே நாளில் யாராலும் படிக்கவே முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார். இந்த விஷயத்தை விவேகானந்தரிடம் தெரிவித்தார் அகண்டானந்தர். உடனே விவேகானந்தர், அகண்டானந்தருடன் புறப்பட்டு அந்த நூலகத்தை அடைந்தார். அதன் பராமரிப்பாளரிடம் பேசினார். தான் அந்தப் புத்தகத்தை படித்து முடித்து விட்டதாகவும், அது உண்மைதான் என்றும், வேண்டுமானால் தன்னிடம் அந்தப் புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்டு பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளும்படியும் கூறினார்.
அந்த நூலகரும் அதற்கு ஒப்புக் கொண்டு, அந்தப் பெரிய புத்தகங்களில் இருந்து பலவாறான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! சளைக்காமல் ஒவ்வொன்றிற்கும் தெள்ளத் தெளிவாக பதில் கூறினார் சுவாமி விவேகானந்தர். நூலகருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சுவாமிகள் ஒரு மிகப் பெரிய மேதை என்பதை ஒப்புக் கொண்டார். அதே சமயம் அது எப்படி சாத்தியம் என்ற கேள்வியையும் எழுப்பினார். அதற்கு நரேந்திரர், “”ஒருவன் பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்தால், அவனால் எதுவும் சாத்தியமாகும். பிரம்மச்சரிய வலிமைக்கு முன் இதெல்லாம் உண்மையில் வெகு சாதாரணம்“” என்று விளக்கினார். சுவாமிகளின் விளக்கத்தைக் கேட்ட நூலகர் வியப்படைந்ததுடன், சுவாமிகளின் பெருமையை அனைவரிடமும் கூறி மகிழ்ந்தார்.
----------
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
------------------
1890 ஆகஸ்ட் இறுதியில் சுவாமி விவேகானந்தரும்,சுவாமி அகண்டானந்தரும் இமயமலையில் உள்ள அல்மோராவை அடைந்தனர்.அங்கே அம்பாதத் என்பவரின் தோட்டவீட்டில் தங்கியிருந்தார்கள்.சில நாட்கள் கடந்தபின்னர் தனிமையை நாடி சுவாமிஜி மட்டும் சில மைல் தூரத்தில் இருந்த காஸார்தேவி குகையில் தீவிர தவ வாழ்வை மேற்கொண்டார்.அவருக்கென்று ஒரு பணியிருப்பதாக அவருக்கு தோன்றியது.சில நாட்கள் கழிந்தபின் மீண்டும் தோட்டவீட்டிற்கு வந்தார்.இப்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.தனது பாசம் மிகு சகோதரிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.சொந்ா வீட்டில் வறுமை,மணம்செய்துகொடுத்தவீட
இமயமலையில் சுவாமிஜி உடம்பின் சுகதுக்கங்களைப்பற்றி கவலைப்படாமல் வாழ்ந்த பல மகான்களை சந்தித்தார்.அவர்களில் ஒருவர் பார்க்க பைத்தியம்போல இருந்தார்.ஆடை எதுவும் இன்றி சுற்றித்திரிந்த அவர்மீது சிறுவர்கள் கல்லெறிந்து விளையாடினார்கள்.அந்த மகானும் அதை தடுக்கவில்லை,அவர்களோடு சேர்ந்து அவரும் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டார்.அவரது உடல் முழுவதும் கல்லெறிந்ததில் காயம்பட்டு ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.தன்ம
ஒரு நாள் சுவாமிஜிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.அத்துடன் தொண்டை அடப்பான்நோயும் சேர்ந்திருந்தது.அவருடன் இருந்த கிருபானந்தருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.சுவாமிஜியின் உடல்நிலைமிக மோசமானது.உடல் சூடுகுறைந்துவிட்டது.நாடித்
விவேகானந்தர் அப்போது மீரட்டில் தங்கியிருந்தார். ஜான் லுப்பக் என்பவர் எழுதிய நூல்களைப் படிக்க ஆர்வம் கொண்டிருந்தார். எனவே அவற்றை நூல் நிலையத்தில் இருந்து எடுத்து வருமாறு சக துறவியான அகண்டானந்தரிடம் கூறினார். உடனே அகண்டானந்தரும் அந்த நூல்களைத் தேடிக் கொணர்ந்து தந்தார். அவை பெரிய தலையணை அளவில் இருந்தன. மறுநாளே அந்தப் புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு கூறி, அகண்டானந்தரிடம் கொடுத்து விட்டார் நரேந்திரர். நூல் நிலையத்தைப் பராமரிப்பவருக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய் விட்டது. படிக்கவில்லையா, உடனே ஏன் திருப்பிக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார் அகண்டானந்தரிடம். அதற்கு அகண்டானந்தரோ, இல்லை சுவாமிகள் படித்து முடித்து விட்டார், அதனால் தான் திருப்பிக் கொண்டு வந்தேன் என்றார். ஆனால் அதனை நூலகப் பராமரிப்பாளர் ஏற்கவில்லை. அது சாத்தியமே இல்லை என்றும், இவ்வளவு பெரிய புத்தகங்களை ஒரே நாளில் யாராலும் படிக்கவே முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார். இந்த விஷயத்தை விவேகானந்தரிடம் தெரிவித்தார் அகண்டானந்தர். உடனே விவேகானந்தர், அகண்டானந்தருடன் புறப்பட்டு அந்த நூலகத்தை அடைந்தார். அதன் பராமரிப்பாளரிடம் பேசினார். தான் அந்தப் புத்தகத்தை படித்து முடித்து விட்டதாகவும், அது உண்மைதான் என்றும், வேண்டுமானால் தன்னிடம் அந்தப் புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்டு பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளும்படியும் கூறினார்.
அந்த நூலகரும் அதற்கு ஒப்புக் கொண்டு, அந்தப் பெரிய புத்தகங்களில் இருந்து பலவாறான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! சளைக்காமல் ஒவ்வொன்றிற்கும் தெள்ளத் தெளிவாக பதில் கூறினார் சுவாமி விவேகானந்தர். நூலகருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சுவாமிகள் ஒரு மிகப் பெரிய மேதை என்பதை ஒப்புக் கொண்டார். அதே சமயம் அது எப்படி சாத்தியம் என்ற கேள்வியையும் எழுப்பினார். அதற்கு நரேந்திரர், “”ஒருவன் பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்தால், அவனால் எதுவும் சாத்தியமாகும். பிரம்மச்சரிய வலிமைக்கு முன் இதெல்லாம் உண்மையில் வெகு சாதாரணம்“” என்று விளக்கினார். சுவாமிகளின் விளக்கத்தைக் கேட்ட நூலகர் வியப்படைந்ததுடன், சுவாமிகளின் பெருமையை அனைவரிடமும் கூறி மகிழ்ந்தார்.
----------
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment