Friday, 21 October 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -33

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -33
---
சென்னை அன்பர்கள் பலர் ஒன்றிணைந்து சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.மே31 ஆம் நாள் சுவாமிஜிக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட் ஒன்றும் செலவுக்கு ரூ2685 ம்(179 பவுண்ட்) கொடுக்கப்பட்டது.சுவாமிஜி பயணத்திற்கு முழு ஆயத்தம் ஆனார்
ஆனால் எதிர்பாராதவிதமாக கேத்ரி மன்னரின் அழைப்பை ஏற்று அவரை சந்தித்த பின் வெளிநாடு செல்வது என்று முடிவானது.1893 மே 31 ல் பம்பாயிலிருந்து கப்பலில் புறப்பட்டார்.பம்பாயிலிருந்து கொழுப்பு சென்று சேர்ந்தது.கொழும்புவில் சில இடங்களை சுற்றிப்பார்த்தார். பிறகு கப்பல் மலேசியா வழியாக சிங்கப்பூர் சென்றது.சிங்கப்பூரை சுற்றிப்பார்த்தார்.அடுத்து ஹாங்காங் அங்குள்ள சில இடங்களையும் சுவாமிஜி சுற்றிப்பார்த்தார்.பிறகு ஜப்பானில் உள்ள நாகசாகி சென்றார்.
-
அங்கு தொழிலதிபர் டாட்டாவை சந்தித்தார்.அவரால் தொழில்துறையில் மாற்றங்கள் கொண்டுவர முடியும் என சுவாமிஜி உணர்ந்திருந்தார்.தீக்குச்சியை ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்காக டாட்டா ஜப்பான் வந்திருந்தார்.நீங்கள் ஏன் ஜப்பானிலிருந்து தீக்குச்சியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்கிறீர்கள்?இதனால் உங்களுக்கு லாபம் மிகக்குறைவாகவே கிடைக்கும்,இந்தியாவிலேயே ஏன் அதை தயாரிக்கக்கூடாது?இந்தியாவில் ஏன் தீப்பெட்டிதொழிற்சாலை ஆரம்பிக்க கூடாது?இந்தியாவில் தொழிற்சாலைகள் ஆரம்பித்தால் பல இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமே?
-
ஜப்பானிலிருந்து சிகாகோ வரை டாட்டா சுவாமிஜியுடன் கப்பலில் பயணம் செய்தார்.தொழில் தொடர்பான பல ஆலோசனைகளை டாட்டாவிற்கு சுவாமிஜி தெரிவித்தார்.
-
இறுதியாக அமெரிக்காவில் கால்பதித்தார்.ஜுலை 25 1893ல் சிகாகோவிலிருந்து 2000மைல் தொலைவில் உள்ள வான்கூவர் துறைமுகத்தை வந்தடைந்தார் சுவாமிஜி.
-
அப்போது அமெரிக்காவில் பல புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் ஆர்வமாக இருந்தார்கள்.1892ல் தொலைபேசி கண்டுபிடித்தார்கள்.அதேஆண்டு மின்சாரம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.1893ல் பெட்ரோலில் இயங்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார்கள்.இந்த கண்டுபிடிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதே வேளையில் மதநம்பிக்கையுள்ளவர்கள் மத்தியில் ஒரு அச்சத்தை உருவாக்கியது.பலர் மதநம்பிக்கை இல்லாதவர்களாக மாறினார்கள்.
அந்த காலத்தில் அமெரிக்காவில் மட்டும் கிறிஸ்தவமதம் 200பிரிவுகளாக பிரிந்திருந்தது.ஒவ்வொரு பிரிவிலும் பல கருத்துவேறுபாடுகள் இருந்தன.அதனால் படித்த மக்கள் மதநம்பிக்கையில்லாதவர்களாக விஞ்ஞானத்தை ஆதரித்து பேசுபவர்களாக இருந்தார்கள்.விஞ்ஞானம் மதத்தை எதிர்த்தே வளர்ந்தது. விஞ்ஞானத்தின் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் கிறிஸ்தவ மதத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம்காண வைத்தது.இதை சரிசெய்து கிறிஸ்தவ மதத்தின் மேன்மைகளை உலகம் அறியும் படி செய்ய வேண்டும் என நினைத்தார்கள்
-
.கிறிஸ்தவ மதத்தின் மேன்மைகளை உலகம் அறியச்செய்ய வேண்டும் என்பதற்காக சிகாகோ சர்வமத மகாசபை கூட்டப்பட்டது.இதில் மற்ற மதங்களை மட்டம்தட்டி கிறிஸ்தவமே உலகில் சிறந்தது என பறைசாற்ற வேண்டும் என்பது இந்த சபையை கூட்டியவர்களின் நோக்கம்.
சர்வமத மகாசபையில் பல்வேறு கிறிஸ்தவ மதபிரிவுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். த்தம்,சமணம்,கன்பியூசியம்,பிரம்ம சமாஜம் போன்ற பல மதபிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் சார்ந்த அமைப்பின் அறிமுகக்கடிதம் இருந்தது.

ஆனால் சுவாமி விவேகானந்தர் எந்த மதத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்டார்? -சுவாமிஜி ஓர் இந்து.ஆனால் அவரை எந்த இந்து அமைப்புகளும் அனுப்பவில்லை. அவரிடம் எந்த மதத்தின் பிரதிநிதி என்பதற்கான அறிமுக கடிதம் இல்லை.அந்த காலத்தில் இந்தியாவை விட்டு வெளியே சென்றால் ஜாதியைவிட்டு,சமுதாயத்தைவிட்டு ஒதுக்கிவைத்துவிடுவார்கள்.ஆகவே வெளிநாடுகளுக்கு செல்ல அனைவரும் பயந்தார்கள். இந்து மதத்தின் பிரதிநிதியாக கடல்கடந்து சென்ற முதல் மனிதன் சுவாமி விவேகானந்தர் தான் .அவர் சமுதாய சட்டதிட்டங்களுக்கு பயப்படவில்லை.இந்து மதத்தின் பிரதிநிதியாக மனிதன் யாரையும் அனுப்பாதபோது,இறைவனின் பிரதிநிதியாக அங்கே அனுப்பப்பட்டவர் தான் சுவாமி விவேகானந்தர்.எத்தனையோ நெருக்கடியான காலகட்டங்களிலும் இந்து மதத்தை கடவுள் காப்பாற்றிவைத்துள்ளார்.இப்போதும் அது தான் நடந்தது.
--
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment