Friday, 21 October 2016

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -44

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -44
--
ஒருமுறை அமெரிக்காவில் ஹாலிஸ்டர் என்ற சிறுவனுடன் புல்வெளி ஒன்றின் வழியாக நடந்துகொண்டிருந்தார். அங்கே கோல்ஃப் மைதானம் இருந்தது. விவேகானந்தர் கோல்ஃப் பற்றி அறியாதவர். எனவே மைதானத்தில் ஒரு கொடி பறந்ததைக் கண்டதும் ஹாலிஸ்டரிடம் அதுபற்றி கேட்டார். கோல்ஃப் விளையாட்டைப்பற்றி விரிவாக விளக்கினான் ஹாலிஸ்டர். பிறகு, ‘ஆரம்பத்தில் விளையாடுபவர்கள் அந்தக் கொடிக்குக் கீழே உள்ள குழியில் பந்தைப் போடுவதற்கு 4,7 அல்லது 9 அவகாசங்கள் தரப்படுகின்றன’ என்று கூறினான். உடனே விவேகானந்தர், ‘நான் ஒரே தடவையில் குழியில் பந்தைப் போடுகிறேன். வேண்டுமானால் பந்தயம் கட்டலாம்’ என்றார்.
விவேகானந்தர் இதுவரை கோல்ஃப் விளையாடாதவர், எனவே அவரால் அது சாத்தியம் இல்லை என்று கருதினான் ஹாலிஸ்டர். எனவே, ‘பந்தயத்திற்கு நான் தயார். நீங்கள் ஒரே அடியில் பந்தைக் குழிக்குள் போட்டால் நான் உங்களுக்கு 50 சென்ட் தருகிறேன்’ என்றான். ‘போடாவிட்டால் நான் ஒரு டாலர் தருகிறேன்’ என்றார் விவேகானந்தர். அப்போது அங்கே வந்த லெக்கட் என்பவரும் பந்தயத்தில் கலந்துகொண்டார். ‘விவேகானந்தர் பந்தைப் போட்டுவிட்டால் நான் 10 டாலர் தருகிறேன்’ என்றார் அவர்.
விவேகானந்தர் மட்டையைக் கையில் எடுத்தார். சிறிதுநேரம் கூர்மையாகக் கொடியைப் பார்த்தார். பிறகு வேகமாகப் பந்தைத் தட்டினார். பந்து சரியாகச் சென்று குழியில் விழுந்தது!
எல்லோரும் திகைத்து நின்றனர். ‘ஆமாம் சுவாமிஜி, நீங்கள் இப்படி ஒரே அடியில் பந்தைக் குழிக்குள் போட்டது உங்கள் யோக சக்தியாலா?’ என்று கேட்டார் லெக்கட். அதற்கு விவேகானந்தர், ‘இதுபோன்ற அற்ப விஷயங்களுக்கெல்லாம் நான் யோக ஆற்றலைப் பயன்படுத்துவதில்லை’ என்றார்.
பிறகு விளக்கினார்: ‘நான் என்ன செய்தேன் என்பதை உங்களுக்கு இரண்டு வாக்கியங்களில் சொல்கிறேன். முதலில் தூரத்தை என் கண்களால் அளந்துகொண்டேன், அத்துடன் என் கை வலிமை எனக்குத் தெரியும். இரண்டாவதாக, இந்தப் பந்தயத்தில் ஜெயித்தால் எனக்குப் பத்தரை டாலர் பணம் கிடைக்கும் என்பதை மனத்திற்குக் கூறினேன். பிறகு பந்தை அடித்தேன்.’
--
-
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -43

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -43
--
மஜூம்தார் என்பவர் சுவாமி விவேகானந்தரின் பால்ய நண்பர். அவர் அமெரிக்காவில் இருந்தபோது அவருடன் சுவாமி விவேகானந்தர் சில காலம் தங்கினார். திடீரென மஜூம்தார் கிறிஸ்தவத்தின் மீது அதிக நாட்டம் காண்பித்தார். ஏசுநாதர் மீதுள்ள காதல் அல்ல அதற்குக் காரணம். கிறிஸ்தவர்களிடையே இந்து மதத்தைப் பற்றி ஏளனம் செய்தால் அதுவும் இந்துவாக இருந்துகொண்டு ஏராளமான பணம் கிடைக்கும் என்பதால்தான்.
இவ்வாறு நடப்பது இக்காலத்தின் நிலைமை மட்டுமல்ல, அன்றும் இதே அவலம் இருந்திருக்கிறது.
அமெரிக்காவில், இந்து மதத்தின் ஏற்றமிகு சிந்தனைகளை சுவாமிஜி மேடை மேடையாக முழங்கிக் கொண்டிருந்தபோது மஜூம்தார் அதற்கு நேர் எதிராகச் சோடை போய்க் கொண்டிருந்தார்.
முடிவில், அவர் சுவாமிஜியைப் பற்றி மிக மோசமான வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்தார். அவற்றுள் “சுவாமிஜி ஆடம்பர பிரியர்; பெண்களுடன் உல்லாசமாகச் சுற்றுபவர்’ என்பவையெல்லாம் சில.
இதனால் சுவாமிஜியின் சீடர்கள் வருத்தப்பட்டார்கள். முடிவில் அந்த வதந்திகளைப் பரப்புவது யார் என்பதைக் கண்டறிந்தார்கள். உடனே அவர்கள், “”சுவாமிஜி, உங்கள் மீது வதந்திகளைப் பரப்பும் மஜூம்தாருடன் நீங்கள் ஏன் இன்னும் தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
சுவாமிஜி அமைதியாக, “”என்னைப் பற்றி மோசமான செய்திகளைக் கூறுகிறார் மஜூம்தார். இந்த நேரத்தில்தான் நான் அவருடன் தங்கியிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நான் எப்படி சுயகட்டுப்பாட்டினை வளர்த்துக் கொள்ள முடியும்?” என்றார் சிரித்தவாறே.
சுயகட்டுப்பாட்டைக் கற்பதற்காகத் துரோகியின் குடிலில் குடியிருக்கவும் தயங்கவில்லை சுவாமிஜி.
--
சீடர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலைக்கு இறங்கிஅவர்களை முன்னேற்றுவதுதான் உத்தம குருவின் இயல்பு.
சுவாமி விவேகானந்தர் மேலை நாடுகளில் இருந்த போது, ஒருமுறை கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றார். பரந்த கடல். அதன் மீது ஒளிரும் நிலவொளி. கப்பல் கம்பீரமாகச் சென்று கொண்டிருந்தது.
அந்தச் சிறந்த சூழ்நிலையில் சுவாமிஜி சிந்தனை வயப்பட்டார். கைகட்டி அவர் இயற்கையை ரசிப்பதை அவரது சீடர் ஒருவர் கண்டார். உடனே அவர் சுவாமிஜியிடம் சென்று, “”சுவாமிஜி, இந்தச் சூழ்நிலை மிக அழகாக உள்ளது அல்லவா!” என்று கூறினார்.
படைத்தவனின் பெருமையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த சுவாமிஜி, தமது சீடரின் மனம் படைப்பின் அழகால் ஈர்க்கப்படுவதைக் கண்டார். சீடரின் மனதை மேம்படுத்தும் வகையில் அவரைத் தீர்க்கமாகப் பார்த்து சுவாமிஜி, “”மகனே, மாயையான இதுவே இவ்வளவு அழகாக இருக்கிறதென்றால் இதன் அப்பாலுள்ள சத்தியம் (கடவுள்) எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்!” என்றார்.
படைப்பே இவ்வளவு அழகென்றால், படைத்ததவன் எவ்வளவு சிறந்தவனாக இருப்பான் என்பதைச் சீடருக்கு விளக்கினார் குரு.
--
-
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -43

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -43
--
சுவாமிஜி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அவரைக் காண அமெரிக்காவிலிருந்து இரண்டு கிறிஸ்தவர்கள் வந்திருந்தார்கள். அவர்களது நோக்கம் தூய்மையானதல்ல. சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் இந்து மதத்திற்குப் புது ஊக்கத்தையும் வீரியத்தையும் வழங்கியுள்ளார். இந்தப் போக்கு இப்படியே நீடித்தால் இந்தியாவில் கிறிஸ்தவ மதம் தலையெடுக்க முடியாது. அதனால் அதைத் தடுத்து நிறுத்த அந்த மூவரும் அமெரிக்காவிலிருந்து கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்டிருந்தனர்.
சுவாமி விவேகானந்தர் ஏசுநாதர் மீது பக்தி கொண்டவர். அவர் ஏசுநாதரின் மகிமைகளைப் பற்றிக் கூறினால் அது இந்துக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; அது கிறிஸ்தவத்திற்குப் பெரிதும் துணை செய்யும் என்று அவர்கள் நம்பினார்கள். அதனால் ஏதோ ஒரு வகையில் விவேகானந்தரை “வளைத்துப் போட்டுவிட்டால்’ தங்கள் காரியம் சுலபமாகும் என்று சுவாமிஜிக்காகக் காத்திருந்தார்கள்.
சிறிது நேரத்தில் சுவாமிஜி தமது தியான நிலையிலிருந்து விடுபட்டுக் கண்களை லேசாகத் திறந்தார். அப்போதிருந்த அந்தச் சூழல் மிக அருமையானது. சுவாமிஜியின் தியான நிலையினால் தெய்வ சாந்நித்தியம் அங்கு நிரம்பியிருந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரின் உள்ளும் புறமும் ஓர் இனம் புரியாத பேரமைதி வந்தமைந்தது. கவலைகள் யாவும் தொலைந்தன. ஆனந்தம் அலைமோதியது.
அந்தப் பரவச அனுபவம் இந்துக்களுக்கு மட்டுமா சொந்தம்? இல்லை. அங்கு வந்திருந்த அந்த இரு கிறிஸ்தவர்களும் அதை உணர்ந்தார்கள்.
அந்தச் சமயத்தில் யாரோ ஒரு துறவி சுவாமிஜியிடம் அந்த கிறிஸ்தவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் இருவரின் அகத்திலும் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது. ஏதோ ஓர் உந்துதல் அவர்களது உள்ளத்திலிருந்த அற்ப நோக்கத்தை உதறித் தள்ளிவிட்டது.
பல காலமாக ஏசுநாதரின் மீது அவர்கள் செய்த பிரார்த்தனைகளும் தியானங்களும் சித்தியடைந்ததுபோல் ஓர் அனுபவத்தைப் பெற்றார்கள். ஆம், அவர்கள் வந்த நோக்கத்தை மறந்து, பிறந்த நோக்கத்தை உணர்ந்தார்கள்.
உடனே சுவாமிஜியிடம், “”சத்தியத்தை எங்கே தரிசிப்பது?” என்று வினயத்துடன் கேட்டார்கள்.
தியான சித்தரான சுவாமிஜி சத்தியமான ஆன்மிக அனுபவத்தை அவர்களது உள்ளத்தில் ஏற்படுத்தும் வகையில், “”சத்தியம் உங்களுடனேயே என்றும் உள்ளது” என்றார்.
சுவாமிஜி அவ்வாறு கூறியதும் அந்த இருவரும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்கள். பிறகு சுவாமிஜியின் சீடர்களாகவும் ஆனார்கள்.
வெல்ல வந்தவர்கள் வெல்லப்பட்டு விரைந்தார்கள். எங்கே? அமெரிக்காவிற்கா? இல்லை. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு அவர்கள் இந்தியாவிலேயே தங்கி இறைவனை அடைவதற்கான எல்லா முயற்சிகளிலும் முழுமையாக ஈடுபட்டார்கள்.
ஆம், அமெரிக்காவிற்கு அவர்கள் திரும்பவே இல்லை
--
-
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -42

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -42
--
அமெரிக்காவில் லெக்சர் பீரோ என்ற அமைப்புடன் சுவாமிஜி ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்,அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு இந்தியாவில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணியிருந்தார்.ஒரு சொற்பொழிவுக்கு,2700 ரூபாய்வரை லெக்சர் பீரோ அமைப்புக்கு கிடைத்தது.ஆனால் அவர்கள் பொய் கணக்கு காட்டி சுவாமிக்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே கொடுத்து வந்தார்கள்.ஆரம்பத்தில் சுவாமிஜிக்கு இது பற்றி எதுவும் தெரியவில்லை.பல மாதங்களுக்கு பிறகே தான் ஏமாற்றப்பட்டதை புரிந்துகொண்டார்.பிறகு அந்த அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டார். ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அவருக்கு போதிய அளவு பணம் கிடைக்கவில்லை.பிறகு பணத்திற்காக சொற்பொழிவாற்றுவதை நிறுத்திக்கொண்டார்.இலசமாக வகுப்பு சொற்பொழிவுகள் எடுக்க ஆரம்பித்தார்.
--
அமெரிக்காவில் சுவாமிஜி இருந்தபோது அவரை நேசித்த மக்கள் எந்த அளவுக்கு இருந்தார்களோ அதேபோல் அவரை வெறுத்து ஒதுக்கியவர்களும் பலர் இருந்தார்கள்,பெரும்பாலும் கிறிஸ்தவ பாதிரிகள்,அவர்களை சார்ந்த மக்கள்,தியோசபிக்கல் சொசைட்டி,பிரம்மசமாஜம்,ரமாபாய் வட்டம்,பழமைவாத கிறிஸ்தவர்கள் போன்ற பலர் சுவாமிஜியை எதிர்த்தார்கள்.இத்தனை எதிர்ப்புகள் இருந்தபோதும் சுவாமிஜி யாரையும் வெறுக்கவில்லை,இது எவ்வாறு சாத்தியமாயிற்று?இந்த பாடத்தை அவர் யாரிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பார்?
ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து தான் அந்த பாடத்தை சுவாமிஜி கற்றுக்கொண்டார். ஸ்ரீராமகிருஷ்ணரை காண இளம் வயதில் அவரிடம் சென்றார்.ஸ்ரீராமகிருஷ்ணர் நரேனிடம் கூறினார் சில நேரங்களில் உலகியல் மக்கள் குறைகூறுவார்கள்,கேலி பேசுவார்கள்.யானை கம்பீரமாக நடந்து செல்லும்.பின்னால் தெரு நாய்கள் குரைத்தபடியே ஓடும்.யானை அவற்றைச் சிறிதாவது பொருட்படுத்துமா?என் மகனே,உன்னைப் பலர் பின்னாலிருந்து அவதூறு பேசுவதாக வைத்துக்கொள்.அவர்களை நீ என்ன செய்வாய்? என்று கேட்டார்.அதற்கு நரேன்(சுவாமிஜி) வெறுப்பு குரலில்,தெருநாய்கள் என் பின்னால் குரைக்கின்றன என்று நினைத்து அவைகளை வெறுத்து ஒதுக்குவேன் என்றார்.ஸ்ரீராமகிருஷ்ணர்,சிரித்துவிட்டு,”வேண்டாமப்பா.அந்த அளவிற்குப்போகாதே! எல்லோரிலும் கடவுள் அல்லவா இருக்கிறார்! அசையும் பொருள் அசையாப்பொருள் அனைத்திலும் அவரே இருக்கிறார்.எனவே அனைத்திற்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்றார்.
ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கற்றுக்கொண்ட பாடத்தையே சுவாமிஜி இங்கு செயல்முறைப்படுத்தினார்.
”என்னைப் புரிந்து கொள்ளாததற்காக பாதிரிகளையோ மற்றவர்களையோ நான் குறை கூறமாட்டேன்.ஏனெனில் பெண்ணையோ,பணத்தையோ சிறிதும் போருட்படுத்தாத ஒரு மனிதனை அவர்கள் கண்டதே இல்லை.அவ்வாறு ஒருவனால் வாழமுடியும் என்றே அவர்கள் நம்பவில்லை.எப்படி நம்புவார்கள்? பிரம்மச்சர்யம் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை.தூய்மையான மனிதர்களை அவர்கள் இதுவரை பார்த்ததே இல்லை. என்றார்.
தர்மத்தை காப்பவனை தர்மம் காக்கும் என்று வேதம் சொல்கிறது.அது போல தர்மத்தை நிலை நாட்ட அவதரித்த சுவாமிஜியை தர்மம் காத்து நின்றது.
--
-
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -41

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -41
--
அமெரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடியது.கருப்பின மக்களை வெள்ளையர்கள் அடிமைகளாக நடத்தினார்கள்.அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன.பொது இடத்தில் அங்கீகாரம் மறுக்கப்ட்டது.ஹோட்டல்களில்தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டார்கள்.பல இடங்களில் சுவாமிஜியை அமெரிக்கர்கள் அவமதித்தார்கள்.சுவாமிஜிக்கு விடுதிகள் புக்செய்திருப்பார்கள்,ஆனால் சுவாமிஜி விடுதிக்கு செல்லும்போது அவர் கறுப்பர் இனம் என கருதி விடுதியினுள் அவரை அனுமதிக்கமாட்டார்கள்.
ஒரு நாள் லண்டனில் ஒரு தெருவழியாக சுவாமிஜி நடந்துசென்று கொண்டிருந்தார்.அந்த வழியாக ஒரு நிலக்கரி வண்டி வந்தது.சுவாமிஜியை கண்ட அந்த வண்டி ஊழியன் ஒரு பெரிய நிலக்கரி கட்டியை எடுத்து சுவாமிஜியை நோக்கி வீசினான்,நல்லவேளையாக சுவாமிஜியின் மேல் அது படவில்லை.
தம்மை கருப்பர் இனத்தினர் என்று பலர் அவமதிக்கும் போது.தன்னை கருப்பர் இனத்தை சார்ந்தவன் அல்ல,தான் ஒரு இந்தியர் என்று சுவாமிஜி கூறிக்கொள்ளவில்லை.பின்னாளில் ஒரு முறை சீடர் இது பற்றி கேட்டபோது,ஒருவனை தாழ்த்தி,என்னை உயர்த்தி பேசுவதா?என்று கேட்டார். சுவாமிஜி பல இடங்களில் சொற்பொழிவாற்றி வெற்றி பெற்ற பின்,அவரது வெற்றி தங்கள் வெற்றியாக கருப்பு இனத்தவர் கொண்டாடினார்கள்.ஒரு ஊரில் கருப்பு இனத்தவர்கள் பலர் ஒன்று சேர்த்து சுவாமிஜியை மிகவும் விமரிசையாக வரவேற்றார்கள்.அவ்போது ஒருவர் எங்கள் இனத்தவர் ஒருவர் இவ்வளவு வெற்றி பெற்றிருப்பது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது என்று சொன்னார்.சுவாமிஜியுடன் அவர்கள் கைகுலுக்கிக்கொண்டார்கள்.சுவாமிஜியும் நன்றி சகோதரா,நன்றி என்று கூறினார்.
--
ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர் ஒருவர்,உங்களால் எப்படி இவ்வளவு விஷயங்களை பேச முடிகிறது? என்று வியப்புடன் கேட்டார்.அதற்கு அவர் நானா பேசுகிறேன்!இறைவன் அல்லவா என்னை பேசவைக்கிறான்.அன்னை காளி எனக்கு பின்னால் இருந்து ஞானத்தை அள்ளி தந்துகொண்டே இருப்பாள்,அதை தான் நான் பேசிக்கொண்டே இருப்பேன் என்றார்.சுவாமிஜி ஒருமுறை பேசுவதை அடுத்த சொற்பொழிவில் பேசுவதில்லை.ஒவ்வொருமுறையும் புதிது புதிதாக பேசுவார்.ஒரு வாரத்தில் 12 முதல் 14 வரை சொற்பொழிவுகள் வரை சுவாமிஜி செய்வதுண்டு. சொற்பொழிவு முடிந்த பிறகு களைத்துபோய்,”அப்படா” என்று படுக்கையில் விழுவார்,நாளை சொற்பொழிவுக்கு என்ன செய்வேன்?எதை பேசுவேன் என்று தமக்கு தாமே கேட்டுக்கொள்வார்.அப்போது ஒரு அற்புதம் நிகழும்.திடீதென்று எங்கிருந்தோ ஒருவர் பேசுவார்,மறுநாள் தான் பேச வேண்டிய சிந்தனைகள் அதில் இருக்கும்.சில வேளைகளில் அந்த குரல் தூரத்திலிருந்து ஒருவர் பேசுவது போல் கேட்கும்,சில வேளைகளில் அவருக்கு அருகிலிருந்து ஒலிக்கும்,சில வேளைகளில் இரண்டு குரல்கள் விவாதம் செய்வது போல் பேசும்,சுவாமிஜி இது வரை பேசிராத கருத்துக்களாக,சிந்தித்திராத கருத்க்களாக அவைகள் இருக்கும்.சில வேளைகளில் இந்த குரல்கள் பக்கத்து அறைகளில் உள்ளவர்களுக்கு கூட கேட்கும்.நேற்றிரவு யாருடன் சத்தமாக விவாதம் செய்துகொண்டிருந்தீர்கள் என்று கேட்பார்கள்.சுவாமிஜி மென்மையாக சிரித்து மழுப்பிவிடுவார்.
தூய்மையான மனம் குருவாக வந்து ஒருவனை வழிநடத்தும் என்று சுவாமிஜி கூறினார்.
இந்த நாட்களில் சுவாமிஜியிடம் யோக சக்திகள் மிகவும் வெளிப்பட்டு தோன்றின.ஒருமுறை தொடுவதால் சிலரது வாழ்க்கையின் போக்கை அவரால் மாற்ற முடிந்தது.தொலை தூரங்களில் நடப்பவற்றை அவரால் காணமுடிந்தது.சில வேளைகளில் அவரது சீடர்கள் இதனை சோத்தித்து அறிந்துகொண்டார்கள்.ஒரு பார்வையில் ஒருவனுடைய முற்பிறவிகளை அறியவும்,அவர்களது மனத்தை திறந்த புத்தகத்தை படிப்பதுபோல் படிக்க முடிந்தது.
இத்தகையை சித்துவேலைகளை சுவாமிஜி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இத்தகைய அசாதாரணமான ஆற்றல்களை ஒருவன் பெற்றிருந்தால் அவற்றிற்கு அடிமையாக முடிவில்,ஆன்மீக வாழ்வில் தோல்வியை சந்தித்திருப்பான். ஆனால் சுவாமிஜி அவைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
சுவாமிஜியிடம் இருந்த தூயமனத்தின் காரணமாக அவரிடம் ஆன்மீகஆற்றல் நிரம்பி வழிந்தது,இதன் காரணமாக மக்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டார்கள்.நல்ல மனங்களை பெற்றவர்கள் அவரை நாடிவந்தார்கள்.
---
-
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -40

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -40
--
சுவாமி விவோகானந்தர் அமெரிக்க செல்வதற்கு முன்பு வரை.அமெரிக்காவில் இந்துக்கள் பற்றியும் இந்துமதம் பற்றியும் மிகக்கேவலமாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது.இந்துக்கள் காட்டுமிராண்டிகள்,அழித்து ஒழிக்கப்பட வேண்டியவர்கள்,இந்துமதம் பண்பாடற்ற காட்டுவாசிகளின் மதம் என்றே போதிக்கப்ட்டது.அது மட்டுமல்ல அமெரிக்க குழந்தைகளின் பாடத்திலும் இது சேர்க்கப்பட்டிருந்தது. சுவாமிஜியிடம் பலமுறை இது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.
--
கிறிஸ்தவ மதபோதகர்களால் இந்துக்கள் மிகவும் மோசமாக சித்தரிக்கப்படுவதைக் கண்டு சுவாமி விவேகானந்தர் மிகவும் வேதனையடைந்தார். தங்கள் மதப்பிரச்சார வேலைகளுக்கு அமெரிக்காவில் பணம் திரட்ட எப்படியெல்லாம் இந்தியாவைக் குறித்தும், இந்துக்கள் குறித்தும் மிக மோசமான சித்தரிப்புக்களை கிறிஸ்தவ மதபோதகர்கள் பரப்பினார்கள் என்பதை நேரடியாகக் கண்டறிந்த விவேகானந்தர் மனம் வெதும்பிக் கூறினார்:
--
கிறிஸ்துவின் சிஷ்யர்களான இவர்களுக்கு இந்துக்கள் என்ன செய்துவிட்டார்கள்? ஒவ்வொரு கிறிஸ்தவக் குழந்தைக்கும் இந்துக்களை கொடியவர்கள் தீயவர்கள் உலகிலுள்ள பயங்கரமான பிசாசுகள் என்று அழைக்க கற்றுக் கொடுக்கிறார்களே. ஏன்? கிறிஸ்தவரல்லாத அனைவரையும், குறிப்பாக இந்துக்களை வெறுப்பதற்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் ஞாயிற்றுக் கிழமை பாடத் திட்டங்களில் இப்படிக் கற்பிப்பது ஓர் அம்சமாகும். சத்தியத்துக்காக இல்லாமல் போனாலும் தமது சொந்தக் குழந்தைகளின் நீதி நெறி உணர்ச்சி பாழாகாமல் இருப்பதற்காகவாவது கிறிஸ்தவப் பாதிரிகள் இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது

அப்படிக் கற்பிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது ஈவிரக்கமற்ற கொடிய மனம் படைத்த ஆண்களாகவோ, பெண்களாவோ ஆனால் அதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? …. பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று இந்து மகாசமுத்திரத்துக்கு அடியில் உள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும் கூட நீங்கள் இன்று எங்கள் மீது வீசுகிற சேற்றின் அளவில் தினையளவு கூட பதிலுக்குப் பதில் செய்வதாக ஆகாது … இது போன்ற ஆக்கிரமிப்பான பொய்ப் பிரச்சாரங்களையெல்லாம் கிறிஸ்து ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.
-
அமெரிக்காவில்சொ ற்பொழிவாற்றிகொண்டிருந்த காலத்தில்,பிப்ரவரி 1894 ல் அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார்.
இந்தியர்களை வெள்ளையர்கள் கடுமையாக துன்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள் .உண்ண உணவின்றி பட்டினியால் பல லட்சம் மக்கள் சாகிறார்கள்,அதை கேட்ட திராணியில்லாத இவர்கள் அப்பாவி ஏழைகளை மதம்மாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள் .இந்தியார்களுக்கு தற்போது கிறிஸ்தவ மதம் தேவையில்லை என்று பேசினார்.
இது அமெரிக்க மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கிறிஸ்தவ பாதிரிகள் சுவாமிஜியை பழிவாங்க நினைத்தார்கள் .அமெரிக்க மக்கள் மத்தியில் சுவாமிஜியை குறித்து பொய்யான பல தகவல்களை பரப்பினார்கள்.அவரை பற்றி பொய்யான தகவல்களை பத்திரிக்கைகளில் வெளியிட்டார்கள் .பல சூழ்ச்சிகளை கையாண்டார்கள்
இந்த வதந்திகள் காரணமாக பல பிரச்சனைகளை சுவாமிஜி சந்திக்க நேர்ந்தது. சுவாமிஜி யாரையெல்லாம் பார்ப்பாரோ அவர்களிடம் இவரைபற்றி தவறாக சொல்லி சுவாமிஜியை முழுவதும் தனிமைப்படுத்த முயற்சித்தார்கள்.ஆனால் சுவாமிஜி கலங்கவில்லை,நிலைகுலையவில்லை எப்போதும் போல இறைவனை சார்ந்து வாழ்ந்தார்.
சுவாமிஜி ஒரு மகான் என்றால் அவர் அற்புதங்களை நிகழ்த்தட்டும்,சித்து வேலைகளை காண்பித்து, அவர் மகான் என்பதை தெரியப்படுத்தட்டும் என்று பத்திரிக்கைகளில் சிலர் எழுதினார்கள்.
சுவாமிஜி அதற்கு பதிலளித்தார்.
எனது மதத்தை நிரூபிப்பதற்கு சித்து வேலைகள் எதுவும் என்னால் செய்ய இயலாது.முதலாவது சித்து வேலைகளும் அற்புதங்களும் நிகழ்த்திக்கொண்டு திரிபவன் அல்ல நான்.இரண்டாவதாக,எந்த இந்து மதத்தின் சார்பாக நான் வந்துள்ளேனோ,அந்த உண்மையான இந்து மதம் சித்துவேலைகளையும் அற்புத நிகழ்ச்சிகளையும் சார்ந்து இருக்கவில்லை.ஐம்புலன்களுக்கு எட்டாத சில நிகழ்ச்சிகளை பலர் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள்,ஆனால் அவையும் சில நியதிகளுக்கு ஏற்பவே நிடைபெறும்.அவற்றிற்கும் இந்து மதத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.பணத்திற்காக வித்தை காட்டுபவர்கள் இவ்வாறு சித்துவேலைகளை காட்டட்டும்.சத்தியத்தை அறிய விரும்புபவர்களுக்கு இதனால் பயன் இல்லை.
சுவாமிஜியின் நண்பரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தருமாக மஜும்தார் என்பவரை வைத்து சுவாமிஜியை பழிவாங்க புதிதாக திட்டம் தீட்டினார்கள். மஜும்தார் தலைமையில் கல்கத்தாவில் இயங்கிவந்த இந்திய பத்திரிக்கையில் சுவாமிஜியை பற்றி பல கற்பனை கதைகளை எழுதினார்கள் .சுவாமிஜி வெளிநாடுகளில் பல தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருப்பதாகவும்,பெண்களுடன் தவறான பழக்கத்தின் இருப்பதாகவும்,அவர் இந்து மதத்தை போதிக்கவில்லை,வேறு எதையோ புதிதாக உருவாக்கி அதை போதிப்பதாகவும், வெளிநாட்டினர் உண்ணும் உணவை சாப்பிடுவதாகவும், எந்த விதமான ஆச்சாரங்களையும் கடைபிடிக்கவில்லை என்பதையும் எழுதினார்கள்.
சுவாமிஜியின் பிறந்த ஊராக கல்கத்தாவில் இப்படிப்பட்ட தகவல் பரவியதும் சுவாமிஜி மிகவும் கலக்கம் அடைந்தார்.தன் தாய் இந்த தகவல்களை கேட்டால் மிகவும் மனம் வருந்துவார் என்று வேதனை அடைந்தார்.
இவர்களுடன் இந்தியாவில் இருந்து பிழைப்புதேடி அமெரிக்கா வந்தது கிறிஸ்தவராக மதம் மாறிய ரமாபாய் என்ற பெண்ணும் சுவாமிஜியை பற்றி பல வதந்திகளை பரப்பி வந்தார்
தங்கள் இயக்கத்தில் சேர மறுத்ததால் தியோசபிக்கல் சொசைட்டியினரும் சுவாமிஜியை எதிர்த்தார்கள்.
இவர்களின் சூழி்ச்சியால் சுவாமிஜிக்கு பல இன்னல்கள் வந்தாலும் பொறுமையாக அவற்றை தாங்கிக்கொண்டார் பதிலுக்கு யார்மீதும் கோபம் கொள்ளவில்லை
சுவாமிஜி கிறிஸ்தவராக மதம்மாற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அச்சுறுத்தினார்கள்.
ஆனால் சுவாமிஜி அசைந்துகொடுக்கவில்லை. அடுத்த கட்டமாக விலைமாதுக்களை சுவாமிஜியிடம் அனுப்பி அவரை வீழ்த்த திட்டம் தீட்டினார்கள் .ஆனால் அவர்கள் சூழ்ச்சி தோல்வியடைந்தது.
அமெரிக்காவில் உள்ள டெ்டராய்ட் நகருக்கு விருந்திற்காக ஒருவர் சுவாமிஜியை அழைத்தார். (பெரும்பாலும் சுவாமிஜி விருந்தினர்கள் கொடுத்த உணவையே உண்டு வந்தார்.தமக்காக அவர் சமையல்காரர்களை நியமிக்கவில்லை.)அங்கு கொடுக்கப்பட்ட காப்பியை குடிப்பதற்காக சுவாமிஜி வாயருகே கொண்டு சென்றார். எப்போதும் உடன் நின்று காக்கும் ஸ்ரீராமகிருஷ்ணர் அப்போது தோன்றினார். ”அந்த காப்பியில் விஷம் கலந்துள்ளார்கள் அதை குடிக்காதே என்றார்“ சுவாமிஜி சுதாரித்துக்கொண்டார். பாதிரிகளின் திட்டம் தோல்வியடைந்தது.
ஆரம்பத்தில் சுவாமிஜி இந்த எதிர்ப்புகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அமைதிகாத்தார்.ஆனால் விஷம்வைத்து கொலைசெய்யும் அளவுக்கு சென்றபின் அவரால் பொறுமையாக இருக்க முடியவில்லை. சென்னையில் இருந்த அளசிங்கருக்கு இது குறித்து கடிதம் எழுதினார். ராநாதபுரம் மன்னரை சென்றுபார்த்து வெளிநாட்டில் தனது பணிகுறித்து மகிழ்சியடைவதாக தெரிவித்து ஒரு கூட்டம் கூட்ட ஏற்பாடு செய் அந்த கூட்டம் பற்றிய விபரங்கள் பத்திரிக்கைகளில் வரும்படி செய் என்றார்.
ஆனால் உடனடியாக எந்த நிகழ்வுகளும் இந்தியாவில் நடக்கவில்லை. சென்னை இளைஞர்களின் கடும்முயற்சிக்கு பின் சிறிதுசிறிதாக கும்பகோணம்,பெங்களுர் போன்ற இடங்களில் சுவாமிஜியை புகழ்ந்து கூட்டங்கள் நடந்தன. இவைகள் அமெரிக்க பத்திரிக்கைகளிலும் வெளிவர ஆரம்பித்தன.
அமெரிக்காவில் சுவாமிஜியை எதிர்த்த பாதிரிகளும் மற்ற வெறியர்களும் வாயடைத்துபோனார்கள்.கடைசியில் அவர்கள் சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இறைவனின் அருளை எண்ணி நான் ஒரு குழந்தை போல அழுகிறேன்.இறைவன் தன் அடியவரை ஒருபோதும் கைவிடுவதில்லை என்று தன் மகிழ்ச்சியை சுவாமிஜி வெளியிட்டார்
----
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -39

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -39
--
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன. இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே! என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.

அவன் விவேகானந்தரிடம், பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்! அப்போது உங்களுக்கே தெரியும்! என்று கூறினான். சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்துகொண்டிருந்தன. விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாகச் சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்துச் சிதறின! இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். அவர்கள் விவேகானந்தரிடம், நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள், இல்லையா? என்று வினவினார்கள். அதற்கு விவேகானந்தர், என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை.

அவர்கள், அப்படியானால் ஒரு குறி கூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது? என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று பதிலளித்தார். மேலும் சுவாமி விவேகானந்தர் மனஒருமைப்பாடு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார்: வெற்றியின் ரகசியம் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. உயர்ந்த மனிதனையும் தாழ்ந்த மனிதனையும் ஒப்பிட்டுப் பார். இருவருக்கும் உள்ள வேறுபாடு, தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கும். மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர, வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன், மனத்தை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான். மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம்.
--
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -38

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -38
--
ஒரு முறை அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர், இறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை என்பது பற்றிச் சொற்பொழிவு செய்தார். அந்தச் சொற்பொழிவில் அவர், இறைவனைப் பற்றிய உயர்ந்த அனுபவத்தை நேரடியாகப் பெற்ற ஒருவர், எந்தச் சூழ்நிலையிலும் கலங்குவதில்லை - பதற்றப்படுவதில்லை என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் இளைஞர்கள் சிலரும் இருந்தார்கள். இவர்கள் உயர்கல்வி கற்றவர்கள். ஆனால் இந்த இளைஞர்கள் மனம் போனபடி வாழ்ந்தனர். அவர்கள், விவேகானந்தர் கூறியதை நாம் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்! என்று முடிவு செய்தார்கள்.

எனவே அவர்கள் விவேகானந்தரை, ஒரு சொற்பொழிவுக்காக அழைத்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விவேகானந்தர், சொற்பொழிவு செய்ய வேண்டிய இடத்திற்குச் சென்றார். ஆரம்பத்திலிருந்தே அந்த இளைஞர்கள், விவேகானந்தரைச் சோதிப்பது போலவே நடந்துகொண்டார்கள். ஒரு மரத்தொட்டியைக் கவிழ்த்துப் போட்டு, இதுதான் சொற்பொழிவு மேடை - இதில் நின்றுதான் நீங்கள் பேச வேண்டும் என்று கூறினார்கள்.
விவேகானந்தர் எந்த மறுப்பும் கூறாமல் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டார். அவர் சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவர் சொல்லிக்கொண்டிருந்த கருத்தில் மனம் ஒன்றிய நிலையில், சூழ்நிலையை மறந்து பேசினார். திடீரென்று அவரைச் சுற்றிலும் துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தன! காதைப் பிளக்கும் துப்பாக்கிக் குண்டுகளின் ஓசை அங்கு பலமாக எழுந்தது! சில குண்டுகள் விவேகானந்தரின் காதின் அருகிலும் பாய்ந்து சென்றன! ஆதலால் சுற்றிலும் பதற்றமும் கூக்குரலும் எழுந்தன.

ஆனால் இவ்விதம் சூழ்நிலை மாறியது காரணமாக, விவேகானந்தரிடம் எந்தச் சலனமும் இல்லை. அவர் சூழ்நிலையால் ஒரு சிறிதும் பாதிக்கப்படவில்லை. அவர் தொடர்ந்து சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். இப்போது, விவேகானந்தரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்! என்று நினைத்த இளைஞர்கள் தோற்றார்கள். எதுவுமே அங்கு நடக்காததுபோல், விவேகானந்தர் உரிய நேரத்தில் தன் சொற்பொழிவை முடித்தார்.அந்த இளைஞர்கள் விவேகானந்தரிடம், உண்மைதான் சுவாமிஜி, நீங்கள் அப்பழுக்கற்றவர். நீங்கள் மற்றவர்களுக்கு என்ன போதிக்கிறீர்களோ, அப்படியே வாழ்கிறீர்கள் என்று கூறி, அழாத குறையாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.
--
அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகர வீதியில் சுவாமி விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார் கையிலே ஒரு தடியுடன் உடலின் மீது ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி சுவாமிஜி சென்றார். அப்போது எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி சுவாமிஜியின் தோற்றத்தைக் கண்டு மிகவும் சிரித்ததோடு மட்டுமின்றி கேலியாகவும் பேசினார். சிறிதாவது கோபம் வரட்டுமே சுவாமிஜிக்கு ஊஹும் புன்முறுவல் தவழும் முகத்துடன் அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது என்று அப்பெண்ணிடம் சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றார். தமது சொந்த மண்ணின் மீது சுவாமிஜிக்குத்தான் எத்துணை மதிப்பு!
--
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -37

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -37
--
தான் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் ஒன்று சேர்த்து, கச்சா எண்ணெய் சுத்திகரித்து விற்கும் வியாபாரத்தில் இறங்கினார் ராக்ஃபெல்லர். நீராவியில் ஓடிய ரயில் மட்டுமே அப்போது பெரிய போக்குவரத்துச் சக்தியாக விளங்கியது என்பதால், பெட்ரோலின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை.

ஏற்கனவே இந்தத் தொழில் இருந்தவர்களைவிட பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்; அதே நேரம், அதிக பணம் சம்பாதிப்பதிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார் ராக்ஃபெல்லர். உற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடங்களுக்கு அனுப்புவதற்கான ரயில் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, தினமும் குறிப்பிட்ட பேரல்கள் அனுப்புவதாகவம், அதற்காக கட்டணச் சலுகை தரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையவே விலையை குறைத்து விற்பனை செய்தார். வியாபாரம் சூடுபிடித்ததும் போட்டியில் இருந்த சில கம்பெனிகளை அதிகவிலை கொடுத்து வாங்கினார். விற்பனைக்கு மறுத்தவர்களைக் கூட்டாளியாக்கிக் கொண்டார்.

கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தொட்ட 1872ம் வருடம் அமெரிக்க முழுவதும் ஆயில் வியபாரம் செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது ராக்ஃபெல்லரின் '‘ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனிதான்”. போட்டி நிறுவனம் இல்லை என்பதால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட, உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகிவிட்டார்.
--
ராக்ஃபெல்லர் மாபெரும் பணக்காரர். ஆனால், மகா கஞ்சன்; எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணராமல், பணம்... பணம் என்று அலைந்த மனிதர். 1895-ல் பத்து லட்சம் டாலர்களுக்கு அதிபதி!

திடீரென, வியாபாரத்துக்காக அவர் செய்த முறைதவறிய சில விஷயங்கள் கசிந்து, பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகி, அமெரிக்க மக்களின் வெறுப்புக்கு ஆளானார். சமூகத்தின் எதிர்ப்பும், வெறுப்பும் அவரை மனநோயாளி ஆக்கியது.

பரிதாபத்துக்கு உரிய அந்த நிலையில்... அவரது நண்பர் ஒருவர், தனது இல்லத்துக்கு வந்திருக்கும் இந்து மதத் துறவியைக் காண வரும்படி அழைத்தார். இவரோ மறுத்துவிட்டார்.அந்தத் துறவி வேறு யாருமல்ல; நமது சுவாமிஜிதான்! அவரைப் பார்ப்பதென்றால், அது அவ்வளவு சுலபமா என்ன? ஆனால், ராக்ஃபெல்லருக்கு அதற்கான நேரம் வாய்த்தது என்றே சொல்ல வேண்டும். முதலில் மறுத்தவர், பிறகு என்ன நினைத்தாரோ... தன் நண்பருக்குக்கூடத் தகவல் சொல்லாமல், அவரது வீட்டுக்கு வந்தார். திடும் என்று சுவாமிஜி தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தார்.

உள்ளே சுவாமிஜி ஏதோ படித்துக்கொண்டிருந்தார். நம்மையெல்லாம் போல அவர் சட்டென்று தலையைத் தூக்கிப் பார்க்கவில்லை. தலையைக் கவிழ்த்தவண்ணம் அப்படியே படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர் நிச்சயம் வியந்திருப்பார்.
-
அதுமட்டுமல்ல... ராக்ஃபெல்லரைப் பற்றி அவருக்கு மட்டுமே தெரிந்த, மற்ற யாருக்குமே தெரியாத அவருடைய வாழ்க்கை ரகசியங்களை எல்லாம் கூறிய சுவாமிஜி, அவரிடம் இருக்கும் பணம் கடவுள் கொடுத்தது என்றும், அதை மக்களுக்கான சேவைகளுக்குச் செலவு செய்வதற்காகவே கடவுள் கொடுத்திருக்கிறார் என்றும் கூறி, ஆண்டவன் அளித்த இந்த அரிய சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

மற்றவர்கள் தன்னிடம் சொல்வதற்கு அஞ்சும் விஷயங்களை, சுவாமிஜி தன்னிடம் இப்படி வெளிப்படையாகப் பேசியதில் அதிர்ந்துபோன ராக்ஃபெல்லர், சட்டென அறையை விட்டுக் கிளம்பிப் போய்விட்டார்.ஒரு வாரத்துக்குப் பின், மீண்டும் பழைய மாதிரியே விருட்டென சுவாமிஜியின் அறைக்குள் நுழைந்த ராக்ஃபெல்லர், ஒரு காகிதத்தை சுவாமிஜி முன் வீசி எறிந்தார். அப்போதும் சுவாமிஜி அதைக் கண்டுகொள்ளாமல் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். ''அதை எடுத்துப் படியுங்கள். நீங்கள் எனக்கு நன்றி கூறுவீர்கள்'' என்றார் ராக்ஃபெல்லர்.அவர் அளித்த நன்கொடைகளின் விவரங்கள் அந்தக் காகிதத்தில் இருந்தன. அதைப் பார்த்த சுவாமிஜி, ''நல்லது! இப்போது நீங்கள் கொஞ்சம் திருப்தி அடைந்திருப்பீர்களே! இதற்கெல்லாம் நீங்கள்தான் எனக்கு நன்றி கூறவேண்டும்'' என்றார்.சுவாமிஜியுடனான இந்த இரண்டு சந்திப்புகளுக்குப் பின்னர், கஞ்சனான ராக்ஃபெல்லர் பெரும் கொடையாளியாகி, மனித குலத்துக்குப் பெரும் நன்மைகள் விளையக் காரணமானார். 'பென்ஸிலின்’ மருந்தைக் கண்டுபிடிக்கப் பணத்தை அள்ளி வழங்கியதும் அவர்தான்.

தனக்கென்று சேர்த்து வைத்தபோது அடையாத மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், திருப்தியையும் பிறருக்கெனக் கொடுத்தபோது அடைந்த ராக்ஃபெல்லர், புத்துயிர் பெற்று ஆரோக்கிய மனிதராகி, 93 வயது வரை வாழ்ந்தார்.நமது சுவாமிஜின் அன்பினாலும் கருணையினாலும் ஆட்கொள்ளப்பட்ட மனிதர், இன்று மனித குலம் நன்றியோடு நினைக்கும் மாமனிதராக மாறினார்
--
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -36

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -36
--
பிரபல பகுத்தறிவுவாதியும் சொற்பொழிவாளருமான இங்கர்சாலை சுவாமிஜி சிகாகோவில் சந்தித்தார்.அவரும் சுவாமிஜியால் கவரப்பெற்றார்.இருவரும் ஒளிவுமறைவு இல்லாமல் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
-
ஒருமுறை சுவாமிஜியிடம் இங்சர்சால் கூறினார்,”சுவாமிஜி புதிய கருத்துக்களையும்க் கூறும்போதும்,அமெரிக்க சமுதாயத்தின் பழக்கவழக்கங்களையும்,மக்களையும் விமர்சிக்கும் போதும் சற்று கவனமாக இருங்கள்.நீங்கள் ஒருமத போதகராக 50 வருடங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு வந்திருந்தால் இவர்கள் உங்களை தூக்கில்போட்டிருப்பார்கள் அல்லது உயிரோடு எரித்திருப்பார்கள்,சில வருடங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்தால் கல்லெறிந்துகொன்றிருப்பார்கள்,அத்தகைய குறுகிய மனப்பான்மை பெற்றவர்களாக மக்கள் இருந்தார்கள்.நல்லவேளையாக தற்போது அப்படிப்பட்டவர்கள் மிகக்குறைவாகவே உள்ளார்கள்.
-
இங்கர்சால் மதங்களை நம்பாதவர்,கடவுளை ஏற்றுக்கொள்ளாதவர்.ஆனால் சுவாமிஜி நேர் எதிரான கருத்துடையவர்.மதங்களை ஏற்றுக்கொண்டார்,கடவுளை ஏற்றுக்கொண்டார்.
ஒருநாள் இங்கர்சால் சுவாமிஜியிடம்,உலகை அனுபவிக்கவேண்டும்,உலகத்திலிருந்து எவ்வளவு பெறமுடியுமோ அவ்வளவையும் பெற்றுவிட வேண்டும்.ஆரஞ்சுப்பழத்தை ஒட்டபிழிவதுபோல்,கடைசி சொட்டுவரை உலகை அனுபவிக்கவேண்டும்.ஏனெனில் இந்த வாழ்க்கை ஒன்று தான் நமக்கு தெரியும்.மீண்டும் ஒரு வாழ்க்கை கிடையாது.ஆகவே கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
-
சுவாமிஜி கூறினார். உங்கள் கருத்தையே எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.இந்த உலகத்தில் சாப்பிட்டு,குடித்து.கும்மாளம் அடிப்பது,சிறிது விஞ்ஞானம் போன்ற கருத்துக்களை தெரிந்துகொள்வது இவைகள் தான் சிறந்தது என்று நினைத்தால் அது தவறு.இத்தகைய சாதாரண இன்பத்தை அனுபவிப்பதே வாழ்க்கையின் நோக்கம் என்று கருதுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் வாழ்க்கையின் மையத்திற்கு செல்ல விரும்புகிறேன்.எனக்கு மரணம் இல்லை என்பதை அறிவும் போது, எனக்கு மரணபயம் இல்லை,அவசரம் இல்லை,பயம் இல்லை,கடமைகள் இல்லை,பெற்றோ பாசமோ இல்லை.ஆகவே உங்களை விட அதிகமாக என்னால் சாறுபிழிய முடியும்.நீங்கள் ஒரு உடலாக உங்களை நினைத்து இந்த உலகத்தை அனுபவிக்க நினைக்கிறீர்கள்.இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நீங்கள் தான் என்ற உணர்வோரு வாழ்ந்து பாருங்கள்.அப்போது உங்களுக்கு கிடைக்கும் இன்பத்திற்கு எல்லையே இல்லை. என்றார் சுவாமிஜி.
-
புகழ்பெற்ற ஓபரா பாடகி எம்மா கால்வி வாழ்வில் நடந்தமாற்றம்.
----
பிரான்ஸ் நாட்டிலும் இங்கிலாந்திலும் புகழின் உச்சியில் இருந்தவர் எம்மா கால்வே.புகழில் உச்சியில் இருப்பவர்களின் வாழ்க்கை சோகம் நிறைந்ததாக இருப்பது பொதுவான உண்மை. கால்வேயும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. தனது ஒரே மகள் தீவிபத்தில் பலியானதும் வாழ்க்கையில் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
--
கடைசியாக ஒரு நாள் ஏரியில் மூழ்கி உயிரைவிடுவதற்கு முடிவுசெய்து வீட்டைவிட்டு கிளம்பினார்.ஆனால் ஏரியை நோக்கி செல்லாமல் அவரது கால்கள் வேறு பக்கமாக தன் தோழியின் வீட்டுபக்கமாக சென்றன.இவ்வாறு ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல பல நாட்கள் முயற்சிசெய்தும், ஒவ்வொரு முறையும் அவரால் ஏரியின் பக்கத்திற்கு செல்ல முடியாமல் ,அவரது கட்டுப்பாட்டை மீறி கால்கள் அவரது தோழியின் வீடு பக்கமாக அழைத்துச்சென்றன.
கடைசியில் ஒரு நாள் அவரது தோழியின் வீட்டிற்கு சென்றார்.
--
ஆச்சர்யம் என்னவென்றால் அந்த தோழியில் வீட்டில்தான் சுவாமி விவேகானந்தர் விருந்தாழியாக தங்கியிருந்தார்.
அப்போது சுவாமிஜி தியானத்தில் இருந்தார். சில நிமிடங்கள் காத்திருந்தபின் ,எம்மா கால்வேயை பார்க்காமலே சுவாமிஜி பேசினார்.
..மகளே அமைதியாக இரு..பிறகு அவரது வாழ்க்கையில் யாரும் அறியாத பல சம்பவங்களை எடுத்துக்கூறியார்.
கால்வே..இவை எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்.என் நெருங்கிய நண்பர்களுக்கு கூட தெரியாதே?
சுவாமிஜி..மகளே யாரும் என்னிடம் எதையும் சொல்லவேண்டியதில்லை.
--
இந்த சந்திப்பு நிகழ்ந்த பின் எம்மாகால்வே வாழ்வில் புதியதோர் மாற்றம் உருவானது. அவரது மனத்தில் இருந்த சந்தேகங்கள் எல்லாம் விலகின.
---
ஒரு நாள் சுவாமிஜி , கால்வேயுடன் பேசிக்கொண்டிருந்தார். தனது தனித்துவத்தை இழந்து பிரபஞ்ச உணர்வுடன் ஒன்றுபடுவது குறித்துவிளக்கினார்.
நான் சாதாரண நிலையில் இருக்கவே விரும்புகிறேன் பிரபஞ்ச உணர்வு வேண்டாம்,இவை பற்றி கேட்கவே பயமாக இருக்கிறது என்றார்.
---
சுவாமிஜி ஒரு குழந்தைக்கு புரியவைப்பது போல புரியவைத்தார். இதோ பாரம்மா, ஒரு நாள் ஒரு மழைத்துளி உன்னைப்போல பயந்துபோய் கடலில் விழமறுத்து அழுதது. கடல் அந்த மழைத்துளியிடம் கேட்டது, ஏன் அழுகிறாய்?
மழைத்துளி. கடலில் விழுந்ததும் நான் இல்லாமல்போய்விடுவேனோ என்று பயப்படுகிறேன்.
கடல்..பயப்படாதே நீ அழியமாட்டாய்.உன்னைப்போன்ற எண்ணற்ற துளிகளின் சேர்க்கையால்தான் நான் உருவாகியிருக்கிறேன். நீ துளி என்ற தனித்துவத்தை இழந்து கடல் என்ற பெரிய நிலையை அடையப்போகிறாய் என்றது.நீ நினைத்தால் சூரிய கிரணத்தை பற்றிக்கொண்டு மேலே சென்று மீண்டும் மழையாக பொழிந்து உலகின் தாகத்தை தீர்க்கலாம். மீண்டும் கடலில் கலந்து பெரியநிலையை அடையலாம். ஆகவே உன் தனித்துவத்தை இழக்க பயப்படாதே. நீ இல்லாத காலம் ஒன்று இல்லை, நீ எப்போதும் இருப்பாய் என்றது.
சுவாமிஜி இதை விளக்கியதும் எம்மா கால்வேயின் பயம் அகன்றது.
--
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -35

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -35
--
காலையில்,கால்போன போக்கில் நடந்தார் உதவிக்காக வீதிகளில் உள்ள கதவை தட்டினார்,கதவை திறந்தவர்கள் கூட வெறுப்புடன் கதவை சாத்தினர்.அப்போது சாலையோரம் சென்று அமர்ந்தார்.
சுவாமிஜி அமர்ந்திருந்த வீட்டில் எதிரிலிருந்து ஒரு பெண்மணி சுவாமிஜியை நோக்கி வந்தார்.அவர் பெயர் மிசஸ் மேரி ஹேல். மிக மென்மையான குரலில் நீங்கள் சர்வமதமகாசபையில் கலந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார். சுவாமிஜி குழந்தை உள்ளத்துடன் ஆம் என்றார். சுவாமிஜியின் நிலமையை புரிந்துகொண்ட அந்த பெண்மணி அவரை வீட்டிற்கு அழைத்துசென்று உணவு கொடுத்து,தங்க இடமும் கொடுத்தார்.அத்துடன் சர்வமத மகாசபையில் கலந்துகொள்ள உதவியும் செய்தார்.
------
செப்டர்பர் 11, 1893. காலையில் சுவாமி விவேகானந்தர் உட்பட சர்வமதமகாசபை பிரதிநிதிகள் அனைவரும் கொலம்பஸ் ஹாலில் ஒரு பகுதியில் கூடினர். கொலம்பஸ் ஹாலில் நாலாயிரத்திற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தனர். நூற்றுக்கணக்கானோர்க்கு இடம் கிடைக்காமல் கதவுகளுக்கு அருகிலும் வெளியிலும் கூடியிருந்தார்கள்.
--
இவ்வளவு பேர் அமர்ந்திருந்தாலும் அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது
--
.சர்வமதமகாசபையில் கந்துகொண்ட முக்கியமான 10 மதங்கள் யூதம்,இஸ்லாம்,இந்து,பௌத்தம்,தாவோ,கன்பியூசியம்,ஷின்டோ,ஜொராஷ்டிரியம்,கிறிஸ்தவம்(கிரோக்கசர்ச்,புரோட்டஸ்டன்ட்,.கத்தோலிக்கம்),பிரம்மசமாஜம்.இந்த 10 மதங்களையும் குறிக்கும் விதத்தில் 10முறை லிபர்ட்டி மணி 10 முறை அடித்தது.
---
ஹாலுக்கு அருகே பிரதிநிதிகள் அனைவரும் ஊர்வலமாக வந்தார்கள்.
அனைவரும் அவரவர் இருக்கையில் சென்று அமர்ந்தார்கள். திடீரென பியானோ இசைக்க துவங்கியது.அதில் 4000 பேரும் கடவுளை துதியுங்கள் என்று துவங்கும் கிறிஸ்தவ பாடலை பாடினார்கள்.
---
மேடையில் பேச வந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த குறிப்புகளுடன் வந்திருந்தனர்,அதையே வாசித்து காட்டினர்.
ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தார்கள், கிரேக்ககிறிஸ்தவம்,புத்தம்,கன்பியூசியம்,பிரம்மசமாஜம், இந்த மதத்தை சார்ந்தவர்கள் காலையில் பேசினார்கள். சுவாமிஜியை பலமுறை பேச அழைத்தார்கள் ஆனால் அவர் பிறகு பேசுவதாக தெரிவித்தார்.அவரிடம் ஒரு பயமும்,தயக்கமும் காணப்பட்டது.
---
நண்பகல் கடந்து மாலை நெருங்கிவிட்டது.இனிமேல் அவர் பேசமாட்டார் என்றே பலரும் நினைத்தார்கள்.
அப்போது சுவாமிஜி எழுந்தார்,ஒரு கணம் கலைமகளை மனதில் நினைத்தார்.
--
அமெரிக்க சகோதரிகளே,சகோதரர்களே என்று அழைத்தார்!. அவ்வளவு தான் அவரால் அடுத்த வார்த்தையை பேச முடியவில்லை.அங்கிருந்த அனைவரும் ஏதோவோர் ஆர்வப்பேரலை ஆட்கொண்டதுபோல் தோன்றியது. காதுகளை பிளப்பது போல் கைதட்ட ஆரம்பித்தார்கள்.நூற்றுக்கணக்கானோர் தங்கள் உற்சாகத்தை அடக்கமுடியாமல் எழுந்து நின்று கைதட்டினார்கள். சுவாமிஜி பேச முயற்சித்தார் ஆனால் முடியவில்லை, தொடந்து இரண்டு நிமிடங்கள் மக்கள் தொடர்ந்து கைதட்டி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.
--
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.
-
இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்’ என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன்.
-
எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
-
என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:
-
எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!
-
இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: ‘யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.’
-
பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!
-
அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
---
சுவாமிஜியின் இந்த உரைதான் மிகச்சிறப்பாக இருந்ததாக அனைத்து பத்திரிக்கைகளும் எழுதின .ஒரே நாளில் அமெரிக்க முழுவதும் பிரபலம் ஆனார் சுவாமிஜி.
--
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -34

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -34
--
சிகாகோ ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய சுவாமி விவேகானந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் முற்றிலும் புதியது.எங்கே போவதென்றே தெரியவில்லை.வேட்டி தலைப்பாகை என்ற இந்திய உடை பார்ப்போரை வேடிக்கை மனிதராக காட்டியது.சிறுவர்கள் ஏதோ வினோதமான மனிதனைப்பார்ப்பது போல பார்த்தார்கள்.அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லை.அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினார்.மறுநாள் சிகாகோ கண்காட்சியை காணச்சென்றார். தொடர்ந்து 12 நாட்கள் கலை,அறிவியல்,ராட்டினங்கள் போன்றகண்காட்சியின் பல பகுதிகளை சென்று பார்வையிட்டார்.
--
ஒரு நாள் ஒருவன் திடீரென்று சுவாமிஜியின் தலைப்பாகையை பிடித்து இழுத்தான்.ஏன் இழுத்தாய் என்று ஆங்கிலத்தில் கேட்டதும்,அவன் வெட்கப்பட்டு ஓடிவிட்டான்.மற்றொரு நாள் இன்னொருவன் சுவாமிஜியை பின்னாலிருந்து கீழே தள்ளிவிட்டான்.ஏன் இவ்வாறு தள்ளிவிட்டாய் என்று சுவாமிஜி கேட்டார். நீ ஏன் இவ்வாறு உடையணிந்துள்ளாய்?அதனால்தான் தள்ளிவிட்டேன் என்றான் அவன்.அமெரிக்காவில் அழகாக உடையணிபவர்கள் தான் நாகரீகமானவர்களாக கருதப்படுவார்கள் என்பது சுவாமிஜிக்கு புரிந்தது.
--
இதே போல் இன்னொரு நாள் ஆண்களும் சிறுவர்களும் சுவாமிஜியை தாக்குவதற்காக துரத்திவந்தார்கள்,அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சுவாமிஜியும் ஓடவேண்டியிருந்தது,கடைசியாகதெருவின் இருண்ட பகுதிகளில் சென்று ஒளிந்துகொண்டார்.இவ்வாறு பல இன்னல்களை சந்தித்தார்.அடுத்து வந்தது பணப்பிரச்சினை அவர் கொண்டுவந்த பணம் வேகமாக செலவாகியது.இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் சிகாகோ மாநாடு ஒருமாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி தான்
-
.இந்தியாவில் அவர் வாழ்ந்த காலத்தில் பணம் வைத்துக்கொள்ளவில்லை.இந்தியாவில் பிச்சையெடுப்பது குற்றம் இல்லை.இந்தியர்கள் பணம் இல்லாதவர்களை குற்றவாளியாக பார்ப்பதும் இல்லை.ஆனால் அமெரிக்காவில் நிலமை தலைகீழ்.கெட்டவர்கள்,சோம்பேரிகள் தான் பணம் இல்லாமல் பிறரிடம் கையேந்தி நிற்பார்கள்,அவர்களுக்கு மக்கள் பணம் கொடுக்க மாட்டார்கள்,மீறி பிச்சை எடுத்தார் ஜெயில்தண்டனை கிடைக்கும்.ஆகவே பணம் இல்லாமல் இருப்பது அமெரிக்காவை பொறுத்தவரை குற்றமாக கருதப்பட்டது.
-
போஸ்டன் நகருக்கு சென்றால் மிகக்குறைந்த செலவில் வாழ்க்கையை நடத்தலாம் என்று சிலர் யோசனை சொன்னார்கள்.அதன் படி ஒரு மாதம் போஸ்டனில் தங்கிவிட்டு மீண்டும் சிகாகோ வரலாம் என சுவாமிஜி கருதினார்.சிகாகோவிலிருந்துபோஸ்டன்நோக்கி ரயிலில் பயணமானார்.
-
சுவாமிஜி பயணம் செய்த ரயிலில் மிஸ் கேதரின் ஆபட்சேன்பால் என்ற 54 வயது பெண்மணி பயணம் செய்தாள்.சுவாமிஜியை கண்டதும் அவரது நடவடிக்கையால் கவரப்பட்டார்.சுவாமிஜியின் நிலைமையை கேட்டறிந்தார்.தமது வீட்டில் விருந்தினராக தங்கி இருக்கும் படி அழைத்தாள்.இறைவனின் அழைப்பாகவே நினைத்து சுவாமிஜி அந்த பெண்ணின் வீட்டில் தங்கினார்.
கேதரின் சமூகத்தில் மிகவும் நல்லஅந்தஸ்தில் உள்ள ஒரு பெண்மணியாக இருந்தார்.போஸ்டனில் சுவாமிஜி சிலருக்கு அறிமுகம் ஆனார்.அவர்களில் மிக முக்கியமானவர் பேராசிரியர் ஹென்றி ரைட்.ஆகஸ்ட் 26,27 தேதிகளில் பேராசிரியருடன் சுவாமிஜி கழித்தார்.இருவரும் பல்வேறு விஷயங்களை பற்றி நீண்டநேரம் உரையாடினார்கள்.சிறிது நேர உரையாடலிலேயே சுவாமிஜியின் ஆழத்தை பேராசிரியர் புரிந்துகொண்டார்.
-
இந்து மதத்தின் பிரதிநிதியாக வந்திருப்பதாகவும்,ஆனால் தன்னிடம் அறிமுகக்கடிதம் எதுவும் இல்லை என்றும் சுவாமிஜி கூறினார்.இதைக்கேட்ட பேராசிரியர்.”சுவாமிஜி உங்களுக்கு ஒரு சான்றிதழா?சூரியன் பிரகாசிப்பதற்கு சான்றிதழ் கேட்பதுபோல் அல்லவா இருக்கிறது”நீங்கள் கண்டிப்பாக இந்து மதத்தின் சார்பாக கலந்துகொள்ள வேண்டும்.உங்களின் அறிவாற்றலை அமெரிக்கா அறியவேண்டும் என்றார்.
ஒரு கடிதம் எழுதினார். அதில்”சர்வமதமகா சபையில் கலந்துகொள்வதற்காக ஒருவரை அனுப்புகிறேன்,மெத்த படித்த நமதுநாட்டு பேராசியர்கள் அனைவரின் அறிவையும் ஒன்று சேர்த்தாலும் இவரது அறிவுக்கு ஈடாகாது என்று எழுதினார். அது மட்டுமல்ல சுவாமிஜியிடம் இருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது.
அந்த பேராசிரியர் அவருக்கு பயணத்திற்கான பணமும் செலவுக்கான பணமும் கொடுத்து அனுப்பினார். சுவாமிஜி இந்த உதவியை ஒருநாளும் மறக்கவில்லை
-
செப்டம்பர் 2. 1893 ல் சுவாமிஜி சர்வமதமகா சபையில் கலந்துகொள்வதற்கான அறிமுகக்கடிதம் கிடைத்தது.புத்துணர்வுடன் சிகாகோவை நோக்கி பயணத்தை மேற்கொண்டார்.
ரயிலில் சென்று கொண்டிருந்தபோது சுவாமிஜி ஒரு வணிகரை சந்தித்தார்.அவர் சுவாமிஜி போக வேண்டிய இடத்திற்கு வழிகாட்டி உதவுவதாக வாக்களித்திருந்தார்.ஆனால் சிகாகோ வந்தவுடன் அவர் அவசரமாக இறங்கி சென்றுவிட்டார். சுவாமிஜிக்கு சிகாகோவில் எங்கு செல்வதென்று தெரியவில்லை. டாக்டர் பரோசின் முகவரியை தேடினார் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ரயில் நிலையத்தைசுற்றிலும் ஜெர்மனியர்களே அதிகம் வசித்து வந்தார்கள். மொழிப்பிரச்சினை காரணமாக அவரால் யாரிடமும் உதவிகேட்க முடியவில்லை(ஜெர்மனியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது) அதற்கு மேலாக அவர் கறுப்பர் என்ற காரணத்தினால் அவரை வெறுத்து ஒதுக்கினார்கள்.ஏதாவது ஹோட்டலில் சென்று தங்கலாம் என்று நினைத்தால்,அதற்கான வழியைக்கூட காட்ட யாரும் தயாராக இல்லை.
இரவு வந்தது ஆதரவற்ற நிலையில் சரக்கு பெட்டிகள் வைக்கும் இடத்தில் இரவை கழித்தார்.
---
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -33

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -33
---
சென்னை அன்பர்கள் பலர் ஒன்றிணைந்து சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.மே31 ஆம் நாள் சுவாமிஜிக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட் ஒன்றும் செலவுக்கு ரூ2685 ம்(179 பவுண்ட்) கொடுக்கப்பட்டது.சுவாமிஜி பயணத்திற்கு முழு ஆயத்தம் ஆனார்
ஆனால் எதிர்பாராதவிதமாக கேத்ரி மன்னரின் அழைப்பை ஏற்று அவரை சந்தித்த பின் வெளிநாடு செல்வது என்று முடிவானது.1893 மே 31 ல் பம்பாயிலிருந்து கப்பலில் புறப்பட்டார்.பம்பாயிலிருந்து கொழுப்பு சென்று சேர்ந்தது.கொழும்புவில் சில இடங்களை சுற்றிப்பார்த்தார். பிறகு கப்பல் மலேசியா வழியாக சிங்கப்பூர் சென்றது.சிங்கப்பூரை சுற்றிப்பார்த்தார்.அடுத்து ஹாங்காங் அங்குள்ள சில இடங்களையும் சுவாமிஜி சுற்றிப்பார்த்தார்.பிறகு ஜப்பானில் உள்ள நாகசாகி சென்றார்.
-
அங்கு தொழிலதிபர் டாட்டாவை சந்தித்தார்.அவரால் தொழில்துறையில் மாற்றங்கள் கொண்டுவர முடியும் என சுவாமிஜி உணர்ந்திருந்தார்.தீக்குச்சியை ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்காக டாட்டா ஜப்பான் வந்திருந்தார்.நீங்கள் ஏன் ஜப்பானிலிருந்து தீக்குச்சியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்கிறீர்கள்?இதனால் உங்களுக்கு லாபம் மிகக்குறைவாகவே கிடைக்கும்,இந்தியாவிலேயே ஏன் அதை தயாரிக்கக்கூடாது?இந்தியாவில் ஏன் தீப்பெட்டிதொழிற்சாலை ஆரம்பிக்க கூடாது?இந்தியாவில் தொழிற்சாலைகள் ஆரம்பித்தால் பல இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமே?
-
ஜப்பானிலிருந்து சிகாகோ வரை டாட்டா சுவாமிஜியுடன் கப்பலில் பயணம் செய்தார்.தொழில் தொடர்பான பல ஆலோசனைகளை டாட்டாவிற்கு சுவாமிஜி தெரிவித்தார்.
-
இறுதியாக அமெரிக்காவில் கால்பதித்தார்.ஜுலை 25 1893ல் சிகாகோவிலிருந்து 2000மைல் தொலைவில் உள்ள வான்கூவர் துறைமுகத்தை வந்தடைந்தார் சுவாமிஜி.
-
அப்போது அமெரிக்காவில் பல புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் ஆர்வமாக இருந்தார்கள்.1892ல் தொலைபேசி கண்டுபிடித்தார்கள்.அதேஆண்டு மின்சாரம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.1893ல் பெட்ரோலில் இயங்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார்கள்.இந்த கண்டுபிடிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதே வேளையில் மதநம்பிக்கையுள்ளவர்கள் மத்தியில் ஒரு அச்சத்தை உருவாக்கியது.பலர் மதநம்பிக்கை இல்லாதவர்களாக மாறினார்கள்.
அந்த காலத்தில் அமெரிக்காவில் மட்டும் கிறிஸ்தவமதம் 200பிரிவுகளாக பிரிந்திருந்தது.ஒவ்வொரு பிரிவிலும் பல கருத்துவேறுபாடுகள் இருந்தன.அதனால் படித்த மக்கள் மதநம்பிக்கையில்லாதவர்களாக விஞ்ஞானத்தை ஆதரித்து பேசுபவர்களாக இருந்தார்கள்.விஞ்ஞானம் மதத்தை எதிர்த்தே வளர்ந்தது. விஞ்ஞானத்தின் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் கிறிஸ்தவ மதத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம்காண வைத்தது.இதை சரிசெய்து கிறிஸ்தவ மதத்தின் மேன்மைகளை உலகம் அறியும் படி செய்ய வேண்டும் என நினைத்தார்கள்
-
.கிறிஸ்தவ மதத்தின் மேன்மைகளை உலகம் அறியச்செய்ய வேண்டும் என்பதற்காக சிகாகோ சர்வமத மகாசபை கூட்டப்பட்டது.இதில் மற்ற மதங்களை மட்டம்தட்டி கிறிஸ்தவமே உலகில் சிறந்தது என பறைசாற்ற வேண்டும் என்பது இந்த சபையை கூட்டியவர்களின் நோக்கம்.
சர்வமத மகாசபையில் பல்வேறு கிறிஸ்தவ மதபிரிவுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். த்தம்,சமணம்,கன்பியூசியம்,பிரம்ம சமாஜம் போன்ற பல மதபிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் சார்ந்த அமைப்பின் அறிமுகக்கடிதம் இருந்தது.

ஆனால் சுவாமி விவேகானந்தர் எந்த மதத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்டார்? -சுவாமிஜி ஓர் இந்து.ஆனால் அவரை எந்த இந்து அமைப்புகளும் அனுப்பவில்லை. அவரிடம் எந்த மதத்தின் பிரதிநிதி என்பதற்கான அறிமுக கடிதம் இல்லை.அந்த காலத்தில் இந்தியாவை விட்டு வெளியே சென்றால் ஜாதியைவிட்டு,சமுதாயத்தைவிட்டு ஒதுக்கிவைத்துவிடுவார்கள்.ஆகவே வெளிநாடுகளுக்கு செல்ல அனைவரும் பயந்தார்கள். இந்து மதத்தின் பிரதிநிதியாக கடல்கடந்து சென்ற முதல் மனிதன் சுவாமி விவேகானந்தர் தான் .அவர் சமுதாய சட்டதிட்டங்களுக்கு பயப்படவில்லை.இந்து மதத்தின் பிரதிநிதியாக மனிதன் யாரையும் அனுப்பாதபோது,இறைவனின் பிரதிநிதியாக அங்கே அனுப்பப்பட்டவர் தான் சுவாமி விவேகானந்தர்.எத்தனையோ நெருக்கடியான காலகட்டங்களிலும் இந்து மதத்தை கடவுள் காப்பாற்றிவைத்துள்ளார்.இப்போதும் அது தான் நடந்தது.
--
--
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -32

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -32
---
சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெறும் சர்வமதமகா சபைக்கு சென்று சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்று சென்னையை சேர்ந்த நண்பர்களும் பலரும் விரும்பினார்கள்.ஆனால் சுவாமிஜியிடம் தயக்கம் இருந்தது. வெளிநாடு செல்ல வேண்டியது இறைவனது சித்தமா?அல்லது தனது மனஇச்சையா என்று தெரியாமல் குளம்பியநிலையில் இருந்தார். 
ஒரு நாள் இரவு.சுவாமிஜி அரை தூக்கத்தில் படுத்திருந்தார்.அவரின் முன்பு அலைபொங்கும் கடல் தெரிந்தது.கரையில் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் நின்றிருந்தார். திடீரென நீர்மீது நடந்துசெல்ல ஆரம்பித்தார்,தன்னுடன் வருமாறு சுவாமிஜியையும் அழைத்தார்.இந்த காட்சி ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, பல நாள் தொடர்ந்தது.
...
இது பற்றி சுவாமிஜி விளக்குகிறார்..
...
சிகாகோ சர்வமதமகா சபைக்கு செல்லவேண்டாம் என நான் எண்ணியிருந்தேன்.ஆனால் பல இரவுகளாக குருதேவர் தோன்றுகிறார், நீ எனக்காக அங்கே செல்ல வேண்டும்.அந்த சபை உனக்காகவே கூட்டப்படுகிறது.தயங்காதே உன் பேச்சை மக்கள் நிச்சயம் கேட்பார்கள் என்று கூறினார்.
....
இருந்தாலும் அன்னை சாரதாதேவியிடம் இதுபற்றி தெரிவித்து,அவர்களின் ஆலோசனையை பெறலாம் என சுவாமிஜி நினைக்து கடிதம் எழுதினார்.
...
அந்த கடிதம் கிடைத்தபின்பு அன்னை சாரதாதேவி அது குறித்து யோசித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் பௌர்ணமி இரவு. கங்கை கரையில் அன்னை உட்கார்ந்திருந்தார்.அப்போது திடீரென குருதேவர் அவர்முன் தோன்றி கங்கை நீரில் நடந்துசென்றார் ,பிறகு அந்த நீரில் கரைந்துபோனார்,அப்போது சுவாமிஜி அங்கே தோன்றினார்.அவர் அந்த நீரை கைகளில் அள்ளி. ஜெய்ஸ்ரீராமகிருஷ்ணா என்று கூறிய படி மக்கள்மீது தெளித்தார்.
இந்த காட்சியை கண்டபின் அன்னைக்கு அனைத்தும் புரிந்தது.குருதேவரின் உபதேசங்களை சுவாமிஜி பரப்பபோவதை தெரிந்துகொண்டார்,எனவே இது குறித்து சுவாமிஜிக்கு கடிதம் எழுதினார்.
.....
கடிதத்தை படித்ததும் சுவாமிஜியின் சந்தேகங்கள் அனைத்தும் விலகின.சிகாகோ சர்வமதமகா சபைக்கு செல்ல ஆயத்தம் ஆனார்....
--
ராமநாதபுரம் மன்னர் கடைசியில் உதவ மறுத்தது
-
சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும்போது ஏழைகளின் குடிசையிலும் தங்குவார்,மன்னரின் மாளிகையிலும் தங்குவார்.மரத்தடியிலும் தங்கியிருப்பர் சில வேளைகளில் குகைகளிலும் வசிப்பார்.இந்தியா முழுவதும் உள்ள மன்னர்களை சந்தித்துக்கொண்டே வந்த சுவாமிஜி தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மன்னரையும் சந்தித்தார்.சுவாமிஜியின் அறிவாற்றலால் மன்னர் பெரிதும் கவரப்பட்டார்.
-
அப்போது வெளிநாட்டில் நடக்கும் சர்வமதமகாசபை சார்பாக கலந்துகொள்ள விரும்புவதாகவும்,யாராவது அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும் என்றும் சுவாமிஜி தனது ஆசையை வெளிப்படுத்தினார்.மன்னரும் உடனே நீங்கள் புறப்படும்போது தகவல் தாருங்கள் 10,000ரூபாய் தருகிறேன் என்றார்.அந்த காலத்தில் 10,000 ரூபாய் என்றால் இற்றைய மதிப்புக்கு கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் இருக்கும்.அமெரிக்கா சென்று மாநாட்டில் கலந்துகொள்ளவும்,அதன் பின்னர் அங்கே தங்கி சமய பிரச்சாரம் செய்யவும் இது போதும் என சுவாமிஜி நினைத்தார்.கடவுளின் கருணையை எண்ணி மகிழ்ந்தார்.
-
அதன்பின் சுவாமிஜி சென்னையில் தங்கியிருந்தார்.
-
சிகாகோ சர்வமத மகாசபையின் அமைப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பரோஸ் என்பவர் இந்தியாவிலிருந்து இந்துமதம் சார்பாக பேச ஒருவரை அனுப்பும்படி சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பேராசிரியராக இருந்த டாக்டர்.வில்லியம் மில்லர் என்பவருக்கு தெரிவித்தார்.
-
அந்த காலத்தில் வெளிநாடு சென்று மதப்பிரச்சாரம் செய்தால் ஜாதியைவிட்டு விலக்கிவிடுவார்கள் என்பதால் பிராமணர்கள் யாரும் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.முடிவில் சுவாமி விவேகானந்தரின் திறமையை பற்றி கேள்விப்பட்டு அவரை அனுப்பலாம் என முடிவெடுத்தார்கள்.சுவாமிஜி துறவி என்பதால் அவரை ஜாதியைவிட்டு விலக்க முடியாது என்பதும் ஒருகாரணம்.சுவாமிஜியும் முதலில் இதற்கு சம்மதித்தார்.ஏனென்றால் செலவுக்கான பணத்தை தர ராமநாதபுரம் மன்னர் ஒத்துக்கொண்டிருந்தார்.
-
சுவாமிஜி சென்னை அன்பர்கள் சிலரை பணம் வாங்கிவர ராமநாதபுரம் அனுப்பிவைத்தார்.ஆனால் மன்னர் பணம் தர மறுத்துவிட்டார்.அது மட்டுமல்ல சுவாமிஜி ஒரு வங்காளி எனவும்,அவர் அரசியலில்(இந்திய விடுதலை போரட்டத்தில்) உள்ளவர் எனவும்,அவரை நான் வெளிநாடு அனுப்பினால் வெள்ளைக்காரர்கள் தனது ஆட்சியை கவிழ்த்துவிடுவார்கள் எனவும் கூறினார்.
-
இதைக் கேள்விப்பட்ட சுவாமிஜியின் மனம் மிகவும் வேதனைப்பட்டது.இதைக்குறித்து அளசிங்கருக்கு கடிதம் எழுதினார்.எனது திட்டங்கள் யாவும் தவிடுபொடியாகிவிட்டன.தென்னாட்டு மன்னர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்கள் அல்ல என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.(புத்தகம் 9-பக்கம்176)
-
ஆனால் அளசிங்கர் பெரிய செயல்வீரர்.சுவாமிஜி அமெரிக்க செல்லவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.எனவே அளசிங்கர் தலைமையில் இளைஞர்கள் சிலர் ஒரு குழுவாக ஒன்று சேர்ந்தார்கள்.வீடுவீடாக சென்று சாதாரண மகக்ளிடம் சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்லவேண்டிய அவசியத்தை எடுத்துகூறினார்கள்.சிலர் பணம் கொடுக்க முன்வந்தார்கள் பலர் மறுத்துவிட்டார்கள்.இரவு பகலாக வீடுவீடக சென்று பிச்சையேற்று பணத்தை சேகரித்தார்கள்.அந்த காலத்தில் மக்கள் பட்டினியால் இறந்துகொண்டிருந்தார்கள்.பணம் பெறுவது எவ்வளவு கடினம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
-
கடைசியில் 3500 ரூபாய்வரை சேர்த்துவிட்டார்கள்.சுவாமிஜி செல்வது உறுதி என்பதை ராமநாதபுரம் மன்னர் கேள்விப்பட்டார்.தனக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக 500 ரூபாய் கொடுத்து அனுப்பினார்.
-
சுவாமி விவேகானந்தரை வெளிநாட்டிற்கு அனுப்பியது சென்னை இளைஞர்கள் .அத்துடன் சாதாரண மக்களும்தான்.
-
ராமநாதபுரம் மன்னர் சுவாமிஜியை அனுப்ப முடியாமல் போனதற்கு சில காரணங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்
-
1.சுவாமிஜி அத்வைத வேதாந்தத்தை பிரச்சாரம் செய்தார்.ராமநாதபுரம் மன்னர் சைவமரபை சேர்ந்தவர்.மன்னரின் அமைச்சர்கள் சிலர்.சுவாமிஜி சைமதத்தை சேர்ந்தவர் அல்ல,அவரால் சைவமதத்திற்கு எந்த நன்மையும் இல்லை என்று கூறியிருக்கலாம்
-
2. ஒருவேளை சுவாமிஜியை,அவர் அனுப்பி வைத்திருந்தால்,சுவாமிஜியின் புகழ் அனைத்திற்கும் நானேதான் காரணம்.நான் இல்லாவிட்டால் சுவாமிஜியால் என்ன செய்ய முடிந்திருக்கும்? என்ற எண்ணம் மன்னருக்கு வந்திருக்கலாம்.அதுமட்டுமல்ல எதிர்காலத்தில் மன்னர் கூறியபடியே சுவாமிஜி நடக்கவேண்டியிருக்கலாம். மன்னர்தான் இந்துமதத்தை காக்கபிறந்தவர் என்றும்,சுவாமிஜி அவரது கருவி என்றும் பிற்காலத்தில் செய்தி பரப்பியிருப்பார்கள்.இதை தடுக்கவே கடைசி நேரத்தில் மன்னரின் மனத்தை இறைவன் மாற்றியிருக்கலாம்
-
3.சுவாமிஜி ஒரு தேசபக்தர்.வெள்ளையர்களின் கருத்துக்களுக்கு எதிரானவர்.சுவாமிஜி வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார்.அதனால் அந்த காலத்திலேயே சுவாமிஜியை வெள்ளையர்கள் கண்காணித்து வந்தார்கள்.ராமநாதபுரம் மன்னர் வெள்ளையர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்தார்.ராமநாதபுரம் மன்னர் சுவாமிஜிக்கு உதவுவது வெள்ளையர்களுக்கு தெரிந்தால் மன்னருக்கு ஆபத்து என்பதாலும் அவர் மறுத்திருக்கலாம்
-
அதன்பின் சுவாமிஜி அமெரிக்காவில் புகழ்பெற்றபிறகு மன்னர் தனது தவறை குறித்து வருந்தினார்.அதனால்தான் சுவாமிஜி மீண்டும் இந்தியா வந்தபோது அவரது பாதத்தை தனது தலையில் தாங்கிக்கொண்டார். குதிரைகளை அவிழ்த்துவிட்டு தானே சுவாமிஜியை தேரில் அமர்த்தி இழுத்துச்சென்றார்
-
சுவாமி விவேகானந்தர் மகாராஜா,அதாவது மன்னருக்கெல்லாம் மன்னர்.மன்னாதி மன்னர்.அவர் எந்த அரசரின் கீழும் இருக்கமாட்டார்.அரசர்கள்தான் அவருக்கு கீழ் இருக்கவேண்டும்.என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாக புரிகிறது
-
சுவாமிஜி சென்னையில் தங்கியிருந்தபோது,ஒரு நாள் இளைஞர்கள் சிலர் சற்று வேடிக்கையாக ஆங்கிலம் பேசும் சன்னியாசியைக்காண வந்தனர்.ஒருவர்,சுவாமிஜி,கடவுள் என்றால் என்ன?என்று கேட்டார்.சுவாமிஜிஆற்றல் என்றால் என்ன?சற்று விளக்கு என்றார்.வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்,அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.என்னப்பா,ஆற்றல் இன்றி தினசரி வாழ்க்கையே இல்லை,அத்தகைய ஒன்றை உங்களால் விளக்க முடியவில்லை,கடவுளை பற்றி எந்த விளக்கத்தை எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.வந்தவர்கள் பதில் எதுவும் சொல்லாமல் திரும்பி விட்டனர்.
--
சென்னையில் சுவாமிஜிக்கு வினோதமான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. சில ஆவிகள் அவரைத் தொந்தரவு செய்தன. அவரது மனம் கலங்கும் விதமாக ‘இது நடக்கப் போகிறது’, ‘அது நடக்கப் போகிறது’ என்றெல்லாம் அவரிடம் கூறின. அவை பொய் என்பது பின்னால் தெரிய வரும். ஆரம்பத்தில் சுவாமிஜி அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் இவ்வாறு சில நாட்கள் தொடர்ந்து நடந்தபோது சுவாமிஜியின் பொறுமை எல்லை மீறியது. அவரது கோபத்தைக் கண்ட அந்த ஆவிகள் அவரிடம் வந்து, தங்கள் பரிதாபகரமான நிலைமையை எடுத்துக்கூறி, தங்களுக்கு நற்கதி அளிக்குமாறு வேண்டின. அவற்றின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட சுவாமிஜி ஒருநாள் மெரினா கடற்கரைக்குச் சென்றார். கையில் ஒரு பிடி மணலை எடுத்துக் கொண்டு, அதையே தர்ப்பணப் பொருட்களாகப் பாவித்து, அந்த ஆவிகளுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று இதய பூர்வமாகப் பிரார்த்தித்தார். அதன்பிறகு இந்த ஆவிகள் வரவில்லை
--

தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்
-

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -31

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -31

---
1886 ல் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் மறைவுக்கு பிறகு சுவாமி விவேகானந்தர் இந்தியாமுழுவதும் பிச்சையேற்று வாழும் துறவியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மக்களை சந்தித்தார்.கடைசியாக கன்னியாகுமரி வந்தடைந்தார்.இந்த நாட்களில் அவர் கற்றுக்கொண்டது என்ன?
---
1.பொதுவாக துறவிகள் தங்கள் சொந்த முக்திக்காக உலகத்தை துறந்து செல்கிறார்கள்,ஆனால் பிறருக்கு முக்தியை தருவதற்காக உன்னுடைய முக்தியை தியாகம் செய்ய வேண்டும் என்பதே குருதேவர் இட்ட கட்டளை.2.நான்கரை ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுற்றி வந்தார்,மன்னர்களின் அரண்மனையில் வாழ்ந்தார்,ஏழைகளின் குடிசையில் வாழ்ந்தார்,காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்தார்,படித்த பண்டிதர்களுடன் பழகினார்.கடிப்பறிவில்லாத ஏழைகளிடம் பழகினார்.அனைத்து மக்களின் இதயத்துடிப்பை அறிந்துகொண்டார்.3.பல்வேறு சாஸ்திரங்களை கற்றார்,அறிவியியல்,இலக்கியம்,கலை என்று பல துறைகளில் அறிவை கற்றார்,கற்பித்தார்,விவாதம் செய்தார்,பல கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்.4.மக்களின்ஏற்றத்தாழ்வு,ஜாதி கொடுமை,பெண்களுக்கு எதிரான அடக்குமுறை,ஜமீன்தார்களின் அடக்கு முறை என்று பல கொடுமைகளை நேரில் கண்டார்.5.பிரிட்டிஷ்காரர்களின் அடக்குமுறையால் நாட்டுமக்கள் பட்ட இன்னல்கள் குறித்து மனம்வருந்தினார்,உலகின் செல்ல வளம்மிக்க நாடாக இருந்த இந்தியா,உலகிற்கு கலை,இலக்கியம்,அறிவியல்,ஆன்மீகம் என்று அனைத்தையும் கற்றுக்கொடுத்த இந்தியா இன்று பிறரின் காலடியில் பட்டு சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பதை கண்டு வேதனையுற்றார்.
---
1892 டிசம்பர் இறுதியில் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வந்தடைந்தார்.அங்குள்ள கடற்கரைக்கு சென்றார்.அவரது மனம் தவிப்புடன் காணப்பட்டது.இந்தியாவின் பரிதாப நிலைதான் அவரது தவிப்பிற்கு காரணம்.நாட்டிற்கு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் அவரை வாட்டியது.பிச்சை ஏற்று வாழும் தம்மால் இந்தியாவிற்கு எவ்வாறு உதவ முடியும் என்று எண்ணினார்,அவரது கண்களில் 2 கி.மீ தொலைவில் உள்ள பாறை தென்பட்டது.அங்கு சென்று தவம்புரிய எண்ணினார்,படகில் செல்வதற்காக அங்கிருந்த மீனவர்களிடம் உதவிகேட்டார்,ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்,வேறு வழியின்றி நீந்தியே அங்கு சென்றார்.அவர் கடலில் நீந்தி செல்வதை சிலர் கண்டார்கள்,அவர்களில் சதாசிவம் பிள்ளை என்பவரும் ஒருவர்.
--
சுவாமிஜி அங்குள்ள பாறையில் அமர்ந்தார்,சுற்றிலும் பரந்த கடல்,அரபிக்கடல்,வங்காளவிரிகுடா,இந்துமகா சமுத்திரம் மூன்றும் இங்கே சங்கமிக்கின்றன.அவருக்கு முன்னார் இந்தியா தெரிந்தது.
சுவாமிஜி ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார்.மூன்று நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்தார்.அவர் தியானித்தது இந்தியாவை,இந்தியாவின் எதிர்காலத்தை.இந்தியாவில் பண்டைய சிறப்புகளும்,தற்போதைய நிலையும் அவர்மனக்கண் முன் வந்தது.முடிவில் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவரது மனத்தில் ஒரு தீர்வு ஏற்பட்டது.
தியானம் முடிவுற்றது.
--
அவரை பற்றி கேள்விப்பட்டு மக்கள் பலர் கூடினார்கள்.சுவாமிஜி பாறையில் நீங்கள் என்ன கண்டீர்கள்,எதை குறித்து தியானம் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
சுவாமிஜி கூறினார்,அகத்தளவிலும் புறத்தளவிலும் தான் எதைத்தேடி இத்தனை ஆண்டுகாலம் அலைந்தேனோ அது இந்த இடத்தில் எனக்கு கிடைத்தது என்றார்.
--
சிகாகோவில் 1893 ஜுலையில் உலகக்கண்காட்சியின் ஓர் அங்கமாக சர்வமதமகாசபை ஒன்று நடைபெறப்போகிறது என்ற செய்தி 1892 நடுவில் இந்து நாளிதழில் வெளியாகியது.சபை பற்றிய விபரங்களை தெரிவித்து இந்து மதத்தின் பிரதிநிதி ஒருவர் செல்ல வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
--
ஆனால் வெளிநாடு செல்ல யாரும் தயாராக இல்லை.இது குறித்த அந்த இதழின் ஆசிரியர் எழுதிய தலையங்க கட்டுரையில் இவ்வாறு இருந்தது.இந்து மதம் இன்றைய சமுதாயத்தின் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாக இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.இந்து மதத்தை புனரமைப்பது சாத்தியமே இல்லை.அது உயிரிழந்துவிட்டது.அதன் காலம் முடிந்துவிட்டது.அதன் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டுவிட்டது என்றே படித்த மக்கள் கருதினார்கள்.
--
அந்த காலத்தில் இந்துக்கள் கடல் கடந்துசெல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
--
சிகாகோ சர்வமதசபை பற்றிய அந்த மகாசபை அமைப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பரோஸ் சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியராக இருந்த டாக்டர் வில்லியம் மில்லர் என்பவருக்கு கடிதம் எழுதினார்.இந்து மதம் சார்பில் ஒருவரை அனுப்பி வைக்கும் படி அதில் குறிப்பிடபட்டிருந்தது.இது குறித்த செய்தி செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்பட்டன.
--
26 வயதில் தனது அறிவால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இணைக்கப்ட்டிருந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார் அளசிங்க பெருமாள்.சிகாகோ மாநாடு குறித்து அவரும் அவரது நண்பர்களும் விவாதித்துகொண்டிருந்தார்கள்.அப்போது சுவாமி விவேகானந்தர் சென்னையில் தான் தங்கியிருந்தார்.ஆங்கிலம் பேசும் துறவி ஒருவர் இருப்பதாக அளசிங்கருக்கு தகவல் கிடைத்தது.இளைஞர்கள் பலர் அவரை காண சென்றார்கள்.அவரை காண அளசிங்கர் சென்றார்.அவரது பேச்சுக்கள் அவரை கவர்ந்தன.தாமதிக்காமல் அவரிடம் இந்த கேள்வியை கேட்டார்.”சுவாமிஜி சிகாகோவில் நடைபெறும் சர்வமதமகா சபையில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளக்கூடாது?”சுவாமிஜி உடனடியாக எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை,என்னை யாராவது அனுப்பினால் நான் செல்கிறேன் என்றார்.
--
சென்னை திருவல்லிக்கேணி இலக்கிய சந்கத்தின் மூலம் சொற்பொழிகளுக்கு ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.இங்கே தான் சுவாமிஜி சிகாகோ செல்வதற்கு முன்பு பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.அவரை பற்றிய குறிப்புகள் அப்போது உள்ள பத்தரிக்கைகளில் வெளியாயின.
சுவாமிஜியின் பேச்சை கேடபதற்காக பல தமிழ் இளைஞர்கள் ஒன்று கூடினார்கள்.அவரை எப்படியும் சிகாகோ சர்வ மத மகாசபைக்கு அனுப்பிவைப்பது என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.அதற்கான பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து நன்கொடை வசூலிக்க ஆரம்பித்தார்கள்.ஓரளவு பணம் திரண்டது,சுவாமிஜியிடம் அதை கொடுக்க முன்வந்தபோது சுவாமிஜியின் மனம் பின்வாங்கியது. சிகாகோ செல்வது இறைவனின் திருவுள்ளமா அல்லது தனது மன இச்சையா என பரிதவித்தார்.அந்த பணத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

---
தொடரும்...
--
சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய-9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்