கடவுளுக்கு உருவம் உண்டா?
-
வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை என்று மிகத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.கடவுளுக்கு உருவம் இல்லை.அவர் ஆண்,பெண் அல்ல,அவருக்கு கண்,காது போன்ற எதுவும் இல்லை.அவர் எங்கும் இருப்பவர்.மாற்றமில்லாதவர்.பிறப்பற்றவர்.இறப்பற்றவர்.பிரம்மம் என்ற பெயரில் வேதம் கூறுகிறது.
-
உருவமுள்ள எதுவும் காலம்(சிலகாலம் இருக்கம் பிறகு இருக்காது) ,இடம்(ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும்).,காரணம் (ஏதோ ஒரு காரணத்தை திறைவேற்ற அங்கு இருக்கும்).ஆகவே அந்த உருவம் இந்த மூற்றிற்கும் கட்டுப்பட்டிருக்கும்.அந்த உருவம் சொர்க்கத்தில் இருந்தாலும் சரி எங்கே இருந்தாலும் சரி இந்த மூன்றிற்கும் கட்டுப்பட்டிருக்கும்.ஆகவே கட்டுப்பட்ட அது கடவுள் இல்லை
-
கிறிஸ்தவ மதத்தில் உள்ள ஏசுகிறிஸ்து சொர்க்கத்தில் தேவனாக(ஒளிஉடல்) இருப்பதாக கூறுகிறார்கள்.
முஸ்லீம்கள் அதேபோல் அல்லா சொர்க்கத்தில் மனிதனை ஒத்து உருவத்துடன் ஆனால் மனிதனைவிட மிகப்பெரியவராக இருப்பதாக கூறுகிறார்கள்.இந்து மதத்திலும் இதேபோல் பல தேவர்களும் தேவதைகளும் உண்டு.
-
வேதம் இப்படி உருவத்துடன் இருப்பவர்களை கடவுள் இல்லை என்கிறது.வேதத்தின் பார்வையில் ஏசுவும்,அல்லாவும் கடவுள் அல்ல.அவர்கள் அவர்களது இனத்திற்கான காவல் தேவர்கள்(ஒளியுடலில் வாழ்பவர்கள்) மட்டுமே. சில காலம் இருப்பார்கள் பிறகு அழிந்துவிடுவார்கள்
-
No comments:
Post a Comment