-
புத்தமதம்,சமணமதம் வளர்வதற்கு முன்பு இந்தியாவில் வேதமதம் வழக்கத்தில் இருந்தது.அந்த காலத்தில் உலகம் முழுவதும் தேவர்,தேவி வழிபாடுகள் நிறைந்திருந்தன.அவைகளை மகிழ்விப்பதற்காக மிருகபலிகளும்,பல நாடுகளில் மனித பலிகளும் கொடுக்கப்பட்டன.உபநிடங்கள் இவைகளைவிட மேலான ஞானமார்க்கத்தை(சாங்கியம்) போதித்தாலும்,அது மக்களிடையே பிரபலமாகவில்லை.காடுகளில் வாழ்ந்துவந்த ரிஷிகள்தான் அவைகளை பின்பற்றினார்கள்.பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறும் யோக மார்க்கத்தில் தேவர்,தேவி வழிபாடுகளும் சொர்க்கமும் அதை கடந்து முக்தி பற்றிய கருத்தும் உள்ளது.ஆனால் முக்தி பற்றிய கருத்து இல்லறத்தார்களிடம் பிரபலமாகவில்லை.அவர்களிடம் யாகங்கள்செய்து உயிர்பலி கொடுத்து தேவர்களை மகிழ்வித்து, சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற எணண்மே அதிகம் இருந்தது
-
2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தரின் கடின முயற்சியால் வேதங்களின் கர்மகாண்டம்(தேவர் வழிபாடு) பெரும் சரிவை சந்தித்தது.உலகம் முழுவதும் இப்படிப்பட்ட தேவர் வழிபாடுகளை வீழ்த்தி புத்தமதம் பரவியது. கிரேக்க தேவதேவியர்,ரோமர்களின் தேவ தேவியர்கள்,பாபிலோனியர்கள் வழிபாடுகள் போன்ற இடங்களில் எல்லாம் புத்தமதம் வெவ்வேறு பெயர்களில் பரவி அந்த வழிபாடுகளை நிறுத்தியது..
-
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நம்மிடமும் அப்படிப்பட்ட வழிபாடுகள் இருந்திருக்கின்றன.அதே வேளையில் சித்தர்கள் காட்டிய ஞானநெறி பாதையும் இருந்தது.வடஇந்திவை போலவே இங்கேயும் அது ஒருசிலரால் மட்டுமே பின்பற்றப்பட்டது
-
புத்தமதத்தின் கடவுள் மறுப்பு கொள்கை என்பது வேதத்திற்கு எதிரானது.புத்தமதம் உலகம் முழுவதும் படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தது.அதற்கு முக்கிய காரணம் புத்தமதம் துறவிகளுக்கான மதம். நிர்வாணம் என்ற நிலையை துறவிகளால் மட்டுமே அடைய முடியும் என அது கூறியதால்.தகுதி இல்லாத பலரும் புத்தமடத்தில் சேர்ந்து படிப்படியாக மடத்தின் புனிதத்தை கெடுத்து அதை விபச்சாரக்கூடமாக மாற்றிவிட்டார்கள். புத்தமத்தின் ஒரு பிரிவாக உருவானதுதான் கிறிஸ்தவமதம். புத்தமதத்தை எதிர்த்து உருவானதுதான் இஸ்லாம். அந்த காலத்தில் ஈரான்,ஈராக்,ஆப்கான்,.அதை சுற்றியுள்ள பல நாடுகளில் அந்த நாளில் மக்கள் பின்பற்றிய மதம் புத்தமதம்.அந்த புத்தமதத்தை வீழ்த்தி அந்த இடங்களில் முஸ்லீம்மதம் பரவியது
-
இந்தியாவில் புத்தமதத்தை வீழ்த்தியது ஆதிசங்கரர்.அப்போது மக்களுக்கு புதிதாக ஒரு மதம் தேவைப்பட்டது.ஆகவே சங்கரர் வேததத்தின் ஞான காண்டமாகிய உபநிடதங்களை,அதாவது ரிஷிகள் பின்பற்றிய மதத்தை மக்களிடம் பரப்ப முடிவுசெய்தார்.
-
அதற்கு முன்பு இருந்த தேவர்,தேவி வழிபாடுகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தார்.யாகங்கள்,உயிர் பலிகள் போன்றவற்றை நீக்கிவிட்டு, பிரம்மத்தை அதாவது உருவமற்ற கடவுளை உருவத்துடன் வழிபடும் முறையை கொண்டு வந்தார்.தென்னிந்தியாவில் ஏற்கனவே முருகன்,திருமால்(கிருஷ்ணன்),கொற்றவை(காளி) இந்திரன்,வருணன் என்ற வழிபாடுகள் இருந்தன.ஆனால் இவைகள் தத்துவத்தின் பார்வையில் கடவுள் வழிபாடு அல்லை. தேவன் தேவி வழிபாடுதான். சித்தர்கள் வழிபட்ட லிங்க வழிபாடு என்பது தத்துவத்தின் விளக்கமாக உள்ளது.அதாவது முக்தியடைந்த சித்தர்களின் சமாதியில் லிங்கத்தை வைத்து அதை வழிபாடுவார்கள்.அங்கே லிங்கம் என்பது முக்தியை குறிக்கிறது.சுதந்திரத்தை குறிக்கிறது.இதுதான் வீடுபேறு,உயர்நிலை,இறைநிலை என்பதற்கு கொடுக்கப்பட்ட ஒரு சின்னம்.
-
.லிங்கம் என்பது பரவலாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டது.பெரும்பாலான மான்களின் சமாதியில் இந்த லிங்கம் வைக்கப்பட்டது.பிற்காலத்தில் சாதாரணமக்களின் சமாதியில்கூட இந்த லிங்கம் வைக்கப்பபட்டது.
மேலே உள்ள ஐந்து வழிபாட்டிற்குள் இது வராததற்கு காரணம் இது முக்தியை குறிக்க கொடுக்கப்பட்ட ஒரு சின்னம் மட்டுமே.
-
ஆதி சங்கரர் நமது தென்நாட்டை சேர்ந்தவர்.தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டவராக இருக்கலாம்.சமஸ்கிருதத்தில் நல்ல புலமைபெற்றவர்.சிறுவயதிலேயே வீட்டை துறந்து வடநாடு நோக்கி சென்றதால் தமிழ்மொழியை அதிகம் படித்திருக்க வாய்ப்பில்லை. அப்போது மலையாளமொழி உருவாகவில்லை. அவர வாழ்ந்த காலத்தில் தென் இந்தியாவில் புத்தமதம் தன் ஆதிகக்த்தை செலுத்த துவங்கியிருந்தது.அதை வீழ்த்த அதன் பிறப்பிடமான வடஇந்தியாவிற் சென்று வாதத்தில் வென்று புத்தமதத்தை வீழ்த்தி,அவர்களை வேதமதத்திற்கு மீண்டும் திரும்பும்படி செய்தார்.
-
கடவுளை உருவத்தில் வழிபடும் ஆறு வழிபாடுகளை கொண்டு வந்தார்.அதேநேரத்தில் தேவர்,தேவி வழிபாட்டை முற்றிலும் நீக்காமல் பெயரளவிற்கு அதை இருக்கும்படி செய்தார். ஏற்கனவே தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த முருகன்,திருமால்,காளி, லிங்கம்,வடஇந்தியாவிலிருந்து ருத்திரன்(சிவன்) சூரியம்(ஜோதி),கணபதி போன்ற வழிபாடுகளை கடவுள் நிலைக்கு உயர்த்தினார்.இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் தேவர் நிலையில் இருந்த வழிபாடுகளை கடவுள் நிலைக்கு உயர்த்தினார்.அதாவது இந்த ஆறு மதத்தில் உள்ள கடவுளுக்கும் உருவம் கிடையாது.அதனால்தான் ஓம்முருகா,ஓம்கணபதி,ஓம்நமசிவா,ஓம் நமோ நாராயணாய.ஓம்காளி,ஓம் சூர்யா என்று அனைத்திற்கும் முன் ஓம் என்பது சேர்க்கப்பட்டுள்ளது. ஓம் என்பது உருமற்ற தன்மையை குறிக்கிறது. கடவுளுக்கு உருவம் இல்லை.ஆனால் பக்தர்கள் விரும்பினால் மேலே உள்ள ஆறு உருவங்களில் வழிபடலாம்.அதே நேரத்தில் அவர்களுக்கு உருவம் இல்லை என்பதை நன்றான மனத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும்
-
இந்த ஆறு வழிபாடுகளை பிரபலப்படுத்துவதற்காக அவற்றிற்கான மந்திரங்களும்,வழிபடும் முறைகளும், கோவில்களும் உருவாக்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.வட இந்தியாவில் உள்ள புத்தமத கோவில்களில் உள்ள புத்தர் சிலைகளை மாற்றி இந்த சிலைகளை நிறுவ ஏற்பாடுசெய்தார். தென்னிந்தியாவில் புதிய கோவில்களை உருவாக்க ஏற்பாடு செய்தார்
-
நாம் கோவில்களில் சென்று வழிபடும்போது இறைவா உனக்கு உருவம் இல்லை.நீ எங்கும் நிறைந்தவன்.ஆனால் உருவமில்லாத உன்னை என்னால் வழிபட முடியவில்லை.ஆகவே எனக்கு பிடித்த இந்த உருவத்தில் உன்னை வழிபடுகிறேன். எனது பிழையை மன்னித்தருளவேண்டும்.எனது வழிபாட்டை ஏற்றுக்கொண்டு எனக்கு முக்தி தரவேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.பிராமணர்கள் வழிபடும்போது இவ்வாறு கூறுவார்கள்.
-
குழந்தை வரம்,நல்ல வேலை,குடும்ப பிரச்சினை போன்ற உலகியல் விஷயங்களுக்காக இந்த கடவுளை பிரார்த்தனை செய்யக்கூடாது. அதை பிரார்த்திக்க நவகிரகங்கள்,தேவர் தேவி,சிறுதெய்வங்கள்,குல தெய்வங்கள்,ஊர்தெய்வங்கள் என்று தனியாக வழிபாடு உண்டு.அங்கு சென்று தான் இவைகளை பிரார்த்திக்க வேண்டும்.கடவுளிடம் முக்தி மட்டுமே பிரார்திக்க வேண்டும்.உலகியல் விஷயங்களை பிரார்த்திப்பது முற்றிலும் தவறு என தத்துவம் கூறுகிறது.
-
ஆதிசங்கரரின் காலத்திற்கு பிறகு சைவநெறியும்,வைணவ நெறியும்,தாந்திரிக நெறிகளும் உருவாகின.முருகர்.கணபதி,லிங்கம்,ருத்திரன் எல்லாம் சைவமத்திற்குள் கொண்டுவரப்பட்டு அதற்கான புராணங்கள்,வழிபாடுகள்.தத்துவங்கள் எல்லாம் உருவாகின.அதேபோல் கிருஷ்ணர்,ராமர் போன்ற அவதாரங்களை உள்ளடக்கி வைணவ மார்க்கம் உருவானது.அவர்களும் தனியாக தத்துவங்களை உருவாக்கினார்கள்.சாக்தமதமும் அதேபோல பல வழிபாடுகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கியது. இவைகள் ஆதிசங்கரர் தோற்றுவித்தவை அல்ல.அவர் அவரது கருத்து இறைவன் ஒருவன் வழிபாடுகள் பல.உருவங்கள் பல.
-
அ அத்வைதம் கூறும் பிரம்மம்ானத்தில் மூழ்கியிருப்பார் பக்கத்தில் பார்வதியுடன் கைலாயம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்.முருகன்.கணபதி என்ற இரண்டு ஞானகுழந்தைகள் இருப்பார்கள்.அவர்களை சுற்றி ரிஷிகளும்.சிவபக்தர்களும் இருப்பார்கள்.
-
இதேபோல் வைணவ மதம் என்ன சொல்கிறது? வைகுண்டம் என்ற சொர்க்கத்தில் திருமால் ஆழ்ந்த தியானத்தில் இருப்பார் பக்கத்தில் லட்சுமிதேவியுடன் வீற்றிருப்பார்.
-
இந்த பிரபஞ்சத்தில் இதேபோல் இன்னும் பல சொர்க்கங்கள் இருக்கும். அங்கெல்லாம் இதேபோல பலர் இருப்பார்கள்.அங்கேயும் சிலர் தியானத்தில் மூழ்கியிருப்பார்கள்.
-
சிவன் தியானத்தில் எதை தியானித்துக்கொண்டிருப்பாரோ, திருமால் தியானத்தில் எதை தியானித்துக்கொண்டிருப்பாரோ மற்ற உலகங்களில் உள்ளவர்கள் எதை தியானித்துக்கொண்டிருப்பார்களோ அதுதான் கடவுள்.அதற்கு உருவம் இல்லை.
-
அதுதான் அத்வைதம் கூறும் பிரம்மம்
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர்(29-4-2018)
-
No comments:
Post a Comment