சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-27
-
புத்தகம் 11 லிருந்து
-
சென்னை மக்கள் (தமிழர்கள்) கல்கத்தா மக்களைவிட (வங்காளிகளைவிட) மிகஆழ்ந்தபோக்கும் நேர்மையும் உடையவர்கள்.
-
பொறாமைபிடித்த கருணையற்றவர்களே இந்தநாட்டில்(இந்தியாவில்) நிறைந்துள்ளார்கள்.எனது பணியை சின்னாப்பின்ப்படுத்த என்னவேண்டுமானாலும் செய்வார்கள்
-
வீரர்களுக்கே முக்தி எளிதாகக் கிடைக்கிறது.பேடிகளுக்கு அல்ல.மகாமோகமாகிய எதிரிகள் உங்கள் முன் உள்ளார்கள்
-
பெருஞ்செயல்களுக்குத் தடைகள் பல என்பது உண்மைதான்,என்றாலும் இறுதிவரை விடாமல் முயலுங்கள்.
-
முன்னேறிச்செல்லுங்கள்.வீரர்களே! கட்டுண்டவர்களின் தளைகளை வெட்டி எறியவும்,எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும்,இருண்ட உள்ளங்களில் ஒளிபெறச்செய்யவும் முன்னேறிச் செல்லுங்கள்
-
இந்த வாழ்க்கைப்போராட்டத்தில்,புதிய கருத்தை கூறுபவனை ஆதரிக்கின்ற ஆண்களையே காண்பது அரிது.பெண்களைப்பற்றிய பேச்சிற்கே இடமில்லை
-
சாதிக்கப்படவேண்டியவை ஏராளம் உள்ளன.நம்மிடம் வேதாந்த நெறி உள்ளது.அதை செயல்படுத்தும் ஆற்றல் இல்லை.நமது நூல் சமரசம் பற்றி பேசுகிறது.நடைமுறையில் நாம் அதை பின்பற்றுவதில்லை
-
சுயநலமற்ற,ஆசையற்ற,உயர்ந்த செயல் பாரதத்தில்தான் போதிக்கப்பட்டது.செயல்முறையில் நாம் சிறிதும் கருணை இல்லாதவர்களாக இருக்கிறோம்.ஏற்றத்தாழ்வு பார்க்கிறோம்
-
எனது நம்பிக்கை இதுதான்.பிறரது காலடியில் மிதிபட்டுக்கொண்டிருக்கின்ற இந்த பாரத மக்களிடம் யாராவது இதயப்பூர்வமாக அன்பு வைத்தால் மீண்டும் பாரதம் விழித்தெழுந்துவிடும்
-
எப்போது நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் எல்லாவிதமான போகஆசைகளையும் உதறித் தள்ளிவிட்டு கோடிக்கணக்கான நம்நாட்டு மக்களின் நலனில் அக்கரை வைக்கிறார்களோ அப்போது பாரதம் விழித்தெழும்
-
நல்ல நோக்கம்,கபடமற்ற தன்மை,எல்லையற்ற அன்பு ஆகியவை உலகத்தையே வென்றுவிடக்கூடியவை என்பதை என் வாழ்நாளில் நேராக கண்டுள்ளேன்
-
நற்குணங்கள் நிறைந்த ஒருவனால் கோடிக்கணக்கான கபடர்கள்,மற்றும் அயோக்கியர்களின் தீய எண்ணத்தை நாசம் செய்துவிட முடியும்
-
No comments:
Post a Comment