சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-28
-
புத்தகம் 11 லிருந்து
-
இந்திய பெண்மணி ஒருவர் இந்தியஉடையில் நின்று இந்திய ரிஷிகளின் மதத்தைப் பிரச்சாரம் செய்தால் பேரலை ஒன்று எழுந்து,மேற்கு உலகம் முழுவதையும் மூழ்கடிக்கும்.இது எனது தீர்க்க தரிசனம்-விவேகானந்தர்
-
இங்கிலாந்து,ஐரோப்பா,அமெரிக்கா ஆகியவற்றை வெல்வது ஒன்றே இப்போது நமது உயர்ந்த மந்திரமாக அமைய வேண்டும்.இதில்தான் நமது நாட்டின் நன்மை அடங்கியுள்ளது
-
விரிவே வாழ்வின் அடையாளம்.நாம் நமது ஆன்மீக லட்சியங்களுடன் உலகமெங்கும் பரவவேண்டும்
-
எனது வேலையை செய்வதற்கான என்னைப் போன்ற ஒருவன் பிறப்பான்
-
இப்போபதுள்ள சூழ்நிலையில்(அதாவது 120 வருடங்களுக்கு முன்பு) மனிதன் செயல்திறன் பெற வேண்டுமானால் மாமிசம் உண்பதைத்தவிர வேறு வழியில்லை.
-
தாவர உணவை உண்டு மனைவி மற்றும் மகள்களின் மானத்தை காக்க சக்தியற்றிருப்பது பாவமா அல்லது கொள்ளையர்களிடமிருந்து இவர்களை காக்க மாமிசம் உண்பது பாவமா?எது பாவம்?
-
உடலுளைப்பால் வாழாத உயர் வகுப்பினர் மாமிசம் உண்ணவேண்டாம்.ஆனால் அல்லும் பகலும் உழைப்பதன் மூலம் மட்டுமே உணவைபெறும் ஒருவன் தாவர உணவை உண்ணும்படி கட்டாயப்படுத்தக்கூடாது.
-
அனைவரையும் தாவர உணவு உண்ணும்படி கட்டாயப்படுத்தியதுதான் நாம் சுதந்திரத்தை இழந்ததற்கான காரணங்களுள் ஒன்று.(புத்தமதம் பரவி காலத்தில் இது நிகழ்ந்தது)
-
No comments:
Post a Comment