சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-17
-
நான் ஆண்,நான் பெண்,எனக்கு சிந்தனை உண்டு,மனம் உண்டு என்பவையெல்லாம் வெறும் மனமயக்கங்கள்.நீ சிந்திப்பதே இல்லை. உனக்கு உடல் என்ற ஒன்று இல்லவே இல்லை
-
சூரியர்கள்,சந்திரர்கள்,நட்சத்திரங்கள்,பூமிகள் எல்லாவற்றிற்கும் கடவுள் நீயே.சூரியன் ஒளி வீசுவது உன்னால் நட்சத்திரங்கள் மின்னுவது உன்னால்
-
எல்லோருக்குள்ளும் நீயே இருக்கிறாய்.எல்லாம் நீயே.யாரை ஒதுக்குவதுஃயாரை ஏற்றுக்கொள்வது? எல்லாற்றிலுமுள்ள எல்லாமும் நீயேதான்
-
பிரபஞ்ச தோற்றம் என்ற மாயை ஒருநாள் மறைந்துவிடும்.பிரபஞ்சம் முழுவதுமே மறைந்துவிடும்,கரைந்துவிடும்.இதுவே அனுபூதி
-
தத்துவம் என்பது வெறும் கேலிப்பேச்சோ வெட்டிப்பேச்சோ அல்ல,அது அனுபூதியில் அறியப்பட வேண்டிய ஒன்று
-
எந்த பற்றும் இல்லாமல் இந்த உலகில் வாழக்கூடியவனே ஜீவன்முக்தன்.அவன் தண்ணீரில் உள்ள தாமரை இலைபோன்றவன். நீரிலேயே இருந்தாலும் அது நீரில் நனைவதில்லை
-
ஜீவன்முக்தர்கள் தானும் பரம்பொருளும் ஒன்றே என்பதை அனுபூதியில் உணர்ந்துவிட்டார்கள்.அவர்கள் மனிதர்களைவிட உயிர்கள் அனைத்தையும்விட உயர்ந்தவர்கள்
-
இறைவனுக்கும் உனக்கும் சிறிது வேற்றுமை உண்டு என்ற எண்ணம்கூட உன்னை அச்சத்தில் ஆழ்ந்திவிடும்.நீயே அவன் உனக்கும் இறைவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை
-
எங்கே யாரும் யாரையும் காண்பதில்லையோ,யாரும் யாரிடமும் பேசுவதில்லையோ,அதுவே மிக உயர்ந்தது.சிறந்தது.அதுவே பிரம்மம்
-
பிரம்மமாக இருக்கம் நீ என்றும் அதுவாகவே இருக்கிறாய்.அந்த நிலையில் உலகம் என்னவாகும்?உலகிற்கு நாம் என்ன நன்மைசெய்யமுடியும்?இந்த கேள்விகளுக்கு அங்கு இடமே இல்லை
-
உண்மையில் நாம் ஆன்மாவை உள்ளது உள்ளபடி அறிந்திருந்தால்.ஆன்மாவைத்தவிர இரண்டாவது இல்லை என்பதை அறிந்திருந்தால்,மற்றவை எல்லாம் கனவே என்ற உண்மை நமக்கு புலப்பட்டிருக்கும்
-
பிரபங்சம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்றால் பிறகு யாருக்காக.எதற்காக நாம் கவலைப்பட வேண்டும்?எனவே துணிந்து சுதந்திரமாக இருங்கள்.
-
அறிவு உருவங்கள்,புலன் உருவங்கள்,நாம-ரூபங்கள் என்று அனைத்தையும் உடைத்தெறியும் துணிவு உள்ளவர்களாலேயே ஞானயோகியாக முடியும்
-
நான் உடல் அல்ல எனக்கு தலைவலி யோகவேண்டும் என்கிறான் ஒருவன்.நீ உடல் அல்ல என்றால் தலைவலி எங்கிருந்து வந்தது?உனக்கு பிறப்பு இல்லை .உனக்கு உடலே இல்லை
-
எனக்கு தாய் தந்தை என்று யாருமே இல்லை.நண்பர் பகைவர் என்று யாரும் இல்லை.ஏனென்றால் அவர்கள் எல்லோரும் நானே
-
No comments:
Post a Comment