சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-19
-
பிரபஞ்சத்தை பொறுத்தவரை அதை ஆட்சி செய்வது சட்டதிட்டங்களே.மாயைக்கு அப்பால் சட்டதிட்டங்கள் எதவும் இல்லை
-
காலம்,இடம்,காரணகாரியம் என்ற நியதிகளுக்குள் நீ கட்டுப்பட்டிருக்கும்வரை நான் சுதந்திரன் என்று சொல்லிக்கொள்வது பொருளற்ற பேச்சு.இந்த மாயைக்கு உட்பட்டவை எல்லாம் சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டவை
-
உனது ஒவ்வோர் எண்ணத்திற்கும், உணர்ச்சி எழுச்சிக்கும் காரணம் உண்டு.சுதந்திர சங்கல்பம் என்றுசொல்வது பொருளற்றது.மாயைக்குள் சுதந்திரம் என்பது இல்லவே இல்லை
-
நீ கனவில் இருக்கும்போது அரக்கன் உன்னை துரத்துவதாக வைத்துக்கொள்வோம்.அப்போது அது கனவு என்று உனக்கு தெரியாது.அது உண்மை என்றே பயந்து ஓடுகிறாய்
-
உருவமுள்ள இறைவன்,விலங்கு,மக்கள் என்ற எண்ணம் எல்லாம் மாயைக்கு உட்பட்டவை. எனவே இவை வெறும் கற்பனைகள்,பொய்த்தோற்றங்கள்.வெறும் கனவுகள்
-
இந்த பிரபஞ்சம் உண்மை,உருவமுள்ள இறைவன் என்பது கற்பனை என்று சிறர் கூறுகிறார்கள்.ஒன்று உண்மையானால் இன்னொன்றும் உண்மைதான்.ஒன்று கற்பனையானால் இன்னொன்றும் கற்பனைதான்.
-
இந்த உலகமும் கற்பனை, மறுஉலகமும் கற்பனை என்று என்று சொல்பவனே உண்மையான நாத்திகனாக இருக்க முடியும்.
-
பேச்சு.சிந்தனை,அறிவு,புத்தி இவற்றின் எல்லைக்கு உட்பட்டவை எல்லாமே மாயைக்கு உட்பட்டது.இவற்றிற்கு அப்பாற்பட்டு நிற்பது மெய்பொருள்
-
ஒரு மாயையை அழித்து வெல்ல இன்னொரு மாயையை பயன்படுத்த வேண்டும். ஒரு முள்ளை எடுக்க இன்னொரு முள்ளை பயன்படுத்த வேண்டும்.
-
நாம் சுதந்திரம் பெறப்போவதில்லை.நாம் என்றுமே சுதந்திரர்கள்தான் என்பதை எப்போதும் மறக்கக்கூடாது
-
நாம் இன்பமாக இருக்கிறோம்,துன்பத்தை அனுபவிக்கிறோம் என்பது மிகப்பெரிய மனமயக்கங்கள்
-
முக்திபெறுவதற்காக பாடுபட வேண்டும்,வழிபட வேண்டும் என்பது மனமயக்கம்.நாம் ஏற்கனவே முக்தி நிலையில்தான் இருக்கிறோம்
-
No comments:
Post a Comment