Monday, 30 April 2018

முக்தி பெறுவதற்கான வழிகள்

முக்தி பெறுவதற்கான வழிகள்
-
பிரம்மச்சாரிகளுக்கான வழி
-
1.உலகத்தைவிட்டு விலகி சாதுக்களுடன் சில ஆண்டுகள் வாழவேண்டும்
2.இறைவனிடம் பக்தியும்,ஞானமும் பெற்ற பின் மடங்களைவிட்டு விலகி தனிமையில் பிச்சையேற்று வாழவேண்டும்
3.மனித தொடர்புகளைவிட்டு விலகி உணவை குறைத்துக்கொண்டு,குகைகளில் அல்லது அதைப்போன்ற இடங்களில் வாழவேண்டும்.
4.பிரம்மஞானம்பெற்ற பிறகு 99 சதவீதம் பேர் மீண்டும் இந்த உலக வாழ்க்கைக்கு திரும்புவதில்லை.முக்தியடைந்துவிடுவார்கள். 1 சதவீதம் பேர் மீண்டும் இந்த உலகத்திற்கு வருகிறார்கள்.அவர்கள் குரு-என்ற தகுதியை பெறுகிறார்கள்
-
இல்லறத்தார்களுக்கான வழி
-
1.அவ்வப்போது இல்லறத்தைவிட்டு விலகி குருவை சந்திக்க வேண்டும் அல்லது உண்மையான சாதுக்களுடன் வாழவேண்டும்
2.இறைவனிடம் பக்தியும் ஞானமும் அதிகமாகும்போது கடமைகள் குறைந்துகொண்டே வந்து கடைசியில் குடும்ப கடமைகளிலிருந்து ஓய்வு ஏற்படும்
3.வீட்டின் ஒரு அறையிலோ அல்லது வீட்டிலிருந்து சற்று தூரத்திலோ தனிமையில் வாழவேண்டும்.
4.பிரம்மஞானம் பெற்ற பிறகு 99 சதவீதம் பேர் உடலைவிட்டு விட்டு முக்தியடைந்துவிடுவார்கள்.1 சதவீதம் பேர் மீண்டும் இந்த உலகத்திற்கு வருகிறார்கள்.அவர்கள் குரு-என்ற தகுதியை பெறுகிறார்கள்
-
இதில் நீங்கள் எந்த பிரிவு என்று என்னை கேட்டால். பல வருடங்கள் மடங்களில் தங்கியிருந்தாலும் குகைளில் சென்று தவம் புரியும் அளவுக்கு செல்லவில்லை,பல வருடங்கள் இல்லறத்தில் வாழ்ந்திருந்தாலும் திருமணம்செய்யவில்லை எந்த பெண்ணையும் தொட்டதில்லை.
-
சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment