சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-24
-
வயதானபின் ஒவ்வொருவரும் உலகைத் துறந்துவிட வேண்டும் என்று இந்திய சாஸ்திரங்கள் வற்புறுத்துகின்றன
-
இந்த உலகம் முழுவதையும்நிரம்பும் அளவுக்கு எனக்கு செல்வம் இருந்தாலும்,அதனால் மரணமிலாப் பெருநிலை கிடைக்குமா?
-
மனைவி கணவனிடம் அன்பு செலுத்துவது கணவனுக்காக அல்ல,ஆன்மாவிற்காகவே.அவன் தன் ஆன்மாவிடம் அன்பு செலுத்துகிறாள்.அதேபோல் தான் கணவனும் ஆன்மாவிற்காகவே மனைவியை நேசிக்கிறான்
-
இந்த ஆன்மாவைப்பற்றி நன்றாகக் கேட்ட பிறகு,ஆன்மாவைக் கண்டபிறகு,அனுபூதியில் உணர்ந்த பிறகு.எல்லாம் தெளிவாக விளங்கிவிடுகிறது
-
அன்பு செலுத்த வேண்டுமானால்,அது ஆன்மாவிலும் ஆன்மாவின் மூலமாகவும்தான் முடியும்.எங்கும் நிறைந்த இந்த ஆன்மாவை உணர்ந்தாக வேண்டும்
-
ஆன்மாவின் உண்மை தன்மையை அறியாமல் அதனிடம் அன்பு செலுத்துவது தன்னலம்.ஆன்ம என்பதன் உண்மையை அறிந்து அன்பு செலுத்தினால் அது அன்பு.அது சுதந்திரமானது
-
ஆன்மாவில் அ்ல்லாமல் வெளியே தெய்வம் இருப்பதாக நினைப்பவனை தெய்வம் விலக்கிவிடுகிறது
-
இந்த உலகம்,இந்தத் தெய்வங்கள் என்று இருப்பவை எல்லாமே ஆன்மாவின் உள்ளேயே இருக்கின்றன
-
ஒவ்வொரு முறையும் நாம் ஒரு பொருளை குறிப்பிட்டுப் பேசும்போது அதை ஆன்மாவிலிருந்து பிரித்துவிடுகிறோம்
-
நீங்கள் ஒரு பெண்ணை நேசிக்க முயலும்போது அவள் ஆன்மாவிலிருந்து விலக்கப்படுகிறாள்.அவளிடம் செலுத்தும் அன்பு எல்லைக்கு உட்பட்டதாக மாறிவிடுகிறது.
-
ஒரு பெண்ணை ஆன்மாவாக நினைத்து நேசிக்கும்போது அந்த கணமே அன்பு பூரணமாகிவிடுகிறது.அது ஒருபோதும் துன்பத்தைத் தராது.பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே இப்படித்தான்
-
ஆன்மாவைத் தவிர,நாம் எதனை நேசித்தாலும் விளைவு துன்பமும் துயரமும்தான்.எதையும் ஆன்மாவிற்குள் ஆன்மாவாக அறிந்து அனுபவிப்போமானால் துக்கம்,பிரதிசெயல் எதற்கும் இடமில்லை
-
No comments:
Post a Comment