Monday, 30 April 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-22


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-22
-
நான் பிரம்மம் என்றே எப்போதும்நினையுங்கள்.மற்ற எண்ணமெல்லாம் பலவீனத்தை தரும் என்று கருதி விலக்கிவிடுங்கள்.நீங்கள் ஒரு ஆண்,பெண் என்ற எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள்
-
நானே பேசுபவன்.நானே அதை கேட்பவன்.நானே ஆசிரியன்,நானே மாணவன்.நானே ஆக்குபவன்,நானே ஆக்கப்படும் பொருள்.இந்த நிலை வரும்போது பயம் நம்மை விட்டு அகலுகிறது
-
நானே பிரம்மம்.இந்த உண்மையை மீண்டும் மீண்டும் சிந்தியுங்கள்.இந்த உண்மையை கேட்டுக்கேட்டு உங்கள் உள்ளம் நிறையட்டும்.ஒவ்வொரு துளி ரத்தத்திலும் இந்த உண்மை நிறையட்டும்
-
நானே அவன்.நானே அவன் என்று எப்போதும் சொல்லுங்கள்.மரணத்தின் வாயில் இருக்கும்போதும்கூட நானே அவன் என்று சொல்லுங்கள்
-
மரணத்தின் வாயிலில் இருக்கம்போதும்.பேராபத்தை எதிர்கொள்ளும்போதும்,கடுமையான போர் முனையிலும்,அடர்ந்த காட்டின் நடுவிலும் நானே அவன் நானே அவன் என்று முழங்குங்கள்
-
பலவீனர்களால் ஒருபோதும் ஆன்மாவை அடையமுடியாது.இறைவா நான் இழிந்த பாவி என்று சொல்லவே சொல்லாதீர்கள்.உங்களுக்கு யார் உதவுவார்கள்.நீங்களே அல்லவா பிரபஞ்சத்திற்கே உதவுபவர்கள்
-
உங்களுக்கு உதவக்கூடிய மனிதனோ,தேவனோ,அசுரனோ எங்கிருக்கிறான்?உங்களை மீறும் சக்தி எங்கிருக்கிறது?நீங்களே பிரபஞ்சத்தின் தலைவர்.நீங்கள் யாரிடமிருந்து உதவியை நாட முடியும்?
-
உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறியபோது வெளியில் உள்ள ஏதோ ஒரு சக்தி அவற்றை நிறைவேற்றியது என்று அறியாமை காரணமாக எண்ணினீர்கள்.ஆனால் வெளியே இருந்து உங்களுக்கு உதபுபவர் யாருமே இல்லை
-
பிரபஞ்சத்தைப் படைத்தவர் நீங்களே.பட்டுப்பூச்சியை போன்று நீங்களே உங்களைச்சுற்றி ஒரு கூட்டை உருவாக்கிக்கொண்டு அதில்சிறைபட்டு கிடக்கிறீர்கள்.உங்களை யார் காப்பார்கள்?
-
நானே அவன் என்று எப்போதும் சொல்லுங்கள்.இது உங்கள் நெஞ்சில் உள்ள குப்பைகள் எல்லாவற்றையும் அழித்துவிடும்.உங்களுக்குள் உள்ள பேராற்றலை இவை எழுப்பிவிடும்
-
பலவீனம் என்ற எணண்ம் இருக்கின்ற இடத்தை நெருங்கவே நெருங்காதீர்கள்.ஞானியாக வேண்டுமானால் எல்லா பலவீனங்களையும் விட்டுவிடுங்கள்.
-
சாதனையை தொடங்கும்முன் உங்கள் மனத்தில் எந்தவித ஐயமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தர்க்க வாதங்களை கேட்காதீர்கள்.நீங்களும் வாதத்தில் இறங்காதீர்கள்.வாயை இறுக மூடிக்கொள்ளுங்கள்
-
ஆரம்பத்தில் நீங்களும் ஆராய்சி செய்தீர்கள்.வாதம்புரிந்தீர்கள்.இப்போது உங்களுக்கு எல்லாம் தெளிவாகிவிட்டது.இன்னும் என்ன வேண்டும்?இனி இந்த உண்மையை எப்போதும் தியானம் செய்யுங்கள்.

No comments:

Post a Comment