சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-16
-
ஆன்மா உருவம் இல்லாதது.உருவம் இல்லாத ஒன்றை இங்கோ,அங்கோ,எங்கோ ஓர் இடத்தில் இருப்பதாக சொல்லமுடியாது.அது எங்கும் நிறைந்ததாகவே இருக்கும்
-
பிரபஞ்சத்திற்கு அப்பால் நின்று பிரபஞ்சத்தை இயக்கும் மூலஅறிவு சக்தியையே வேதாந்திகள் இறைவன் என்கிறார்கள்.
-
பிரபஞ்சம் இறைவனிலிருந்து வேறானது அல்ல.அவரே பிரபஞ்சமாக ஆகியிருக்கிறார்
-
இறைவன் பிரபஞ்சம் ஏற்பட காரணம் மட்டுமல்ல,பிரபஞ்சப் பொருளும் அவரே,இருப்பதெல்லாம் அவரே
-
ஒரு நெருப்புப்பிழம்பிலிருந்து கோடிக்கணக்கான தீப்பொறிகள் சிதறி செல்வதுபோல் அந்தப் பரம்பொருளிலிருந்து இந்த ஆன்மாக்கள் எல்லாம் வந்துள்ளன
-
ஒரு சூரியன் பலகோடி நீர்த்துளிகளில் பட்டு பலகோடி சூரியன்களாக தெரிகிறது.இவை தோற்றம்தான்.அதேபோல் பல்வேறு உயிர்களாக தெரியும் இறைவன் வெறும் தோற்றம் மட்டுமே
-
பிரபஞ்சத்திலுள்ள எல்லையற்ற ஒரே ஒருவர் இறைவன் மட்டுமே.அவரே நான் நீ என்றெல்லாம் தோன்றுகிறார்.இந்த வேறுபாடுகள் எல்லாம் வெறும் மனமயக்கம்
-
காலம்,இடம்,காரண காரியம் என்ற வலையின் வழியாக பார்ப்பதால் இறைவன் பிரபஞ்சமாக தெரிகிறார்
-
நீங்கள் உங்கள் முகத்தை கண்ணாடி என்ற பிரதி பிம்பத்தின் மூலம் காண்பதுபோல இறைவனும் பிரதிபிம்பத்தின் மூலமாக அன்றி அவர் தன்னைக் காணவோ அறியவோ முடியாது.
-
ஆன்மா தன்னைத்தானே காணமுடியாது.நிறைமனிதன்தான் ஆன்மாவின் மிகச்சிறந்த பிரதிபலிப்பு.
-
நிறை மனிதர்களே என்றுமுள்ள பரம்பொருளின் மிகமேலான வெளிப்பாடு.இவர்களையே அவதாரபுருஷர்கள் என்று மக்கள் வழிபடுகிறார்கள்.
-
நீதான் பிரபஞ்சத்தைப் படைத்தவன் என்றால், நீ வேண்டுவதெல்லாம் கிடைக்கும்.ஏனெனில் உனக்கு வேண்டியதை நீயே படைத்துக்கொள்ள முடியுமே
-
இந்த பிறவியிலும் மறுபிறவியிலும் சரி சுகபோகங்களுக்கு முதலிடம் கொடுக்காதீர்கள்.வாழ்வு என்பதையே மறுத்துவிடுங்கள்.ஏனெனில் வாழ்வு என்பது சாவின் மறுபெயர்
-
மனத்தை வெளித் தூண்டுதல் காரணமாகவோ.உள் தூண்டுதல் காரணமாகவோ கிளர்ந்து எழாமல்,அலைகளாக மாறாமல் அமைதிப்படுத்த வேண்டும்
-
நான் ஆன்மா.பிரபஞ்சத்தைப்பற்றி எனக்கென்ன கவலை.இன்ப-துன்பம்,நன்மை-தீமை.வெப்பம்-குளிர் எதுவும் எனக்கு ஒரு பொருட்டல்ல என்று கூறுபவர்கள் ஞானயோகிகள்
-
பிரபஞ்சம் முழுவதும் மறையட்டும்,தனியே நில்லுங்கள்.நான் குறைவற்ற உண்மை,குறைவற்ற அறிவு,குறைவற்ற இன்பம்.நானே அவன்! நானே அவன்!
-
No comments:
Post a Comment