Monday, 30 April 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-25

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-25
-
-
இறைவனின் மூச்சாக அறிவு வெளிவந்துள்ளது. எல்லாம் அவரிடமிருந்தே தோன்றியுள்ளன.எல்லா அறிவையும் மூச்சாக அவர் வெளியிட்டார்
-
உப்புத்துண்டை கடலில் போட்டால் திரும்ப நாம் பெற முடியாதபடி கரைந்துவிடுகிறது.அப்படியே இறைவனும் பிரபஞ்சப் பொருள் எல்லாவற்றுள்ளும் பிரிக்க முடியாதபடி கலந்துள்ளார்
-
இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனிடமிருந்தே தோன்றி அவரிடமே ஒடுங்குகின்றன.இதற்கு அப்பால் அறிவோ, மரணமோ இல்லை.பொறிகள் சிதறுவதைப்போல நாம் அவரிடமிருந்து தோன்றியுள்ளோம்
-
எல்லாமே ஆன்மாவாகிவிட்டால் யார் யாரைப் பார்ப்பது? யார் பேச்சை யார் கேட்பது? யாரை யார் வரவேற்பது? யாரை யார் அறிவது?
-
அவனுள்ளும் அவன் மூலமாகவும்தானே நாம் எல்லாவற்றையும் அறிகிறோம்.அவனை அறியும் கருவி எது? ஒன்றும் இல்லை.ஏனெனில் அவனே அந்த கருவி
-
எல்லா இன்பங்களும்-மிகத் தாழ்ந்தநிலை இன்பமானாலும் சரி-அது ஆன்மாவின் பிம்பம்தான்.நல்லவை அனைத்தும் அவரது பிரதிபிம்பமே.இந்தப் பிரதிபிம்பம் நிழலானால் அதைத் தீமை என்கிறோம்
-
மிகநல்லது என்று நமக்கு ஒருசமயத்தில் பட்ட பொருள்,இப்போது அவ்வளவு நல்லதாகப்படவில்லை. எனவே நல்லது கெட்டது என்பவை எல்லாம் வெறும் மூடநம்பிக்கை.உண்மையில் அவை இல்லை
-
உலகில் உள்ள எல்லாப் பொருட்களையும் ஆன்மாவாகத் தியானிப்பதே சிறந்தமுறை.இப்படி செய்தால்தான் எல்லாவற்றையும் நல்லவையாகப் பார்க்க முடியும்
-
இறைவன் கெட்டவரும் அல்ல,நல்லவரும் அல்ல.அவர் மிகச் சிறந்தவர்
-
நன்மை,தீமை இரண்டுமே வேறுபட்ட உருவங்கள்.நம் உள்ளத்திலிருந்து நன்மை மற்றும் தீமைகள் அகலும்போது இந்த உலகம் சொர்க்கம் ஆகிவிடும்
-
நாம் பிறரிடம் காட்டும் கடுமையான வெறுப்புக்கு காரணம், சிறுவயதிலிருந்தே நாம் பெற்றுவந்துள்ள இந்த நன்மை,தீமை என்னும் முட்டாள்தனமான கருத்துக்களே
-

No comments:

Post a Comment