Monday, 30 April 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-20


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-20
-
பக்தன் எல்லைற்ற அன்புருவான இறைவனிடம் அன்புசெலுத்தி மற்ற சிற்றின்பங்களைத் துறக்கிறான்.
-
எது மனிதனுக்கு அதிகஇன்பம் தருகிறதோ அதுவே அவனுக்கு மிகவும் பலன் தருவதாகும்.ஆன்மீக இன்பமே மிக உயர்ந்த இன்பம்
-
அனைத்து விஞ்ஞானத் துறையின் நோக்கம் என்ன? சமுதாயத்திற்கு அதிக இன்பம் தேடித்தருவது.அதிக இன்பம் கிடைப்பதை எடுத்துக்கொண்டு,குறைந்த இன்பம் உள்ளதை மனிதன் விட்டுவிடுகிறான்
-
மிருகங்களுக்கும்,மிருக நிலையில் உள்ள மனிதர்களுக்கும் இன்பம் உடலளவில்தான் உள்ளது.சற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் எண்ணங்களில் இன்பம் காண்கிறார்கள்.ஞானி மிக உயர்ந்த இன்பத்தை சுவைக்கிறான்
-
எந்திரங்கள் போல் உழைத்து தேய்பவர்கள் யாரும் உண்மையில் எந்த இன்பத்தையும் அனுபவிப்பதில்லை.இவர்களின் உழைப்பால் இன்பத்தை அனுபவிப்பவன் அறிஞனே
-
முட்டாள்கள் எந்த இன்பத்தையும் அனுபவிப்பதில்லை.தன்னை அறியாமலே அவன் பிறரது இன்பத்திற்காக உழைக்கிறான்.
-
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் அந்த பொருளே, புலன்களின் மூலம் பார்க்கப்படும்போது உலகமாக காட்சியளிக்கிறது
-
மனிதனுக்குள் ஆன்மா உள்ளது என்று எண்ணிவிடக்கூடாது.ஆன்மாதான் புலன்கள் என்ற பிரதிபிம்மங்கள் மூலம் பார்க்கப்படும்போது உடல் என்ற பெயரை பெறுகிறது.எண்ணத்தின் மூலம் பார்த்தால் அதுவே மனமாகிறது
-
உண்மையில் இருப்பது ஒரே ஆன்மாதான்.அதுவே காட்சி வேறுபாடு காரணமாக சிலவேளைகளில் உடலாகவும்,சில வேளைகளில் மனமாகவும்,சிலவேளைகளில் ஆன்மாவாகவும் அழைக்கப்படுகிறது.
-
அஞ்ஞானியின் பார்வைக்கு ஆன்மா உலகமாக தெரிகிறது.அறிவு உயரும்போது ஆன்மா எண்ணவுலகமாக தெரிகிறது.ஞானம் பெறும்போது மாயை மறைந்து ஆன்மா மட்டும் தெரிகிறது
-
பிரபஞ்சத்தில் ஆன்மா,மனம்.உடல் என்று மூன்று இல்லை.இருப்பது ஒன்றுதான். மனமயக்கத்தால் கயிறு பாம்பாக தெரிகிறது.ஆன்மாவை பார்க்கும்போது உடல்,மனம் மறைந்துவிடும்.உடலை பார்க்கும்வரை ஆன்மா தெரியாது
-
நாம் நம்மை உடம்பு என்று காணும்போது உடம்பாகத்தான் தோன்றும்.பலர் அப்படித்தான் காண்கிறார்கள்.அவர்கள் நான் ஆன்மா என்று பேசுவது வெட்டிப்பேச்சு.
-
உண்மையைச் சொல்வதானால் யாரும் பிறப்பதும் இல்லை,இறப்பதும் இல்லை. சொர்க்கம்,நரகம்,இந்த உலகம் எதுவும் இல்லை.இவை உண்மையில் என்றும் இருந்ததே இல்லை
-
மனிதன் அறியாமையில் மூழ்கியிருக்கும்போது சொர்க்கத்திற்கும் அதுபோன்ற உலகங்களுக்கும் போக விரும்புகிறான்

No comments:

Post a Comment