சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-26
-
-
இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் இன்பமானது. எல்லா உயிர்களும் இந்த உலகிற்கு இனிமை மயமானவை.இவை ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கின்றன
-
எல்லா இனிமையும் பிரபஞ்சத்தின் உட்பொருளாக இருப்பதான,ஒளிமிக்க,அழிவில்லாத ஆன்மாதான்.அவரை தவிர எந்த இனிமை இருக்க முடியும்?இந்த ஒரே இனிமைதான் பலவிதமாக வெளிப்படுகிறது
-
இந்த மனித உடலிலோ,புலன்களிலோ எங்கே இனிமை அல்லது அன்பு தோன்றினாலும்,அது அவரேஃஉடலின்பங்கள் அவரே,மன இன்பங்கள் அவரே.ஆன்மீக இன்பங்கள் அவரே.அவரின்றி வேறொன்று எப்படி இருக்க முடியும்?
-
மிகத் தாழ்ந்த உடலின்பம்கூட அவரே,மிகஉயர்ந்த ஆன்மீக இன்பமும் அவரே.அவரின்றி எந்த இனிமையும் இல்லை
-
எப்போது எல்லாவற்றையும் சமநோக்குடன் பார்க்கிறீர்களோ,அதாவது குடிகாரனின் குடிஇன்பத்திலும் ஆன்மாவின் இனிமையை என்று காண்கிறீர்களோ அன்றுதான் உண்மையை உணர்ந்தவர் ஆவீர்கள்
-
தன்னொளி உடையவரும் அழிவற்றவருமான அவரே உலகின் ஆனந்தம்.நம்மிலும் அந்த ஆனந்தமாக அவரே இருக்கிறார்.அவரே பிரம்மம்
-
பூமியை தியானியுங்கள் கூடவே பூமியில் இருப்பது எதுவோ அதுவே நம்முள்ளும் இருக்கிறது , இரண்டும் ஒன்றுதான் என்பதை உணருங்கள்
-
உடம்பை பூமியுடனும்,நம்ஆன்மாவை பரமாத்மாவுடனும் ஒன்றாகப் பாருங்கள்.இந்த ஒருமையை அறிவதே எல்லா தியானங்களுடையவும் நோக்கமும் குறிக்கோளும் ஆகும்
No comments:
Post a Comment