சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-21
-
நீங்கள் எங்கும் நிறைந்தவர்கள்.வானம் நகர்வதில்லை.ஆனால் மேகங்கள் மேற்பரப்பில் நகர்கின்றன.வானம்தான் நகர்கிறது என்று நாம் ஒருவேளை நினைக்கலாம்
-
நாம் கனவு காணும்போது அந்த நிகழ்சிசிகள் நன்றாக தொடர்புடையவை போல்தான் தோன்றுகின்றன.அந்த செயல்கள் நடைபெற முடியாது என்று கனவு காணும்போது நமக்கு தோன்றுவதில்லை.விழித்தபிறகே புரிகிறது
-
உலகம் என்ற இந்த கனவிலிருந்து விழிப்படைந்து அதை உண்மையுடன் ஒப்பிடும்போது,அது தொடர்பற்றதாக முன்னுக்குபின் முரணாக இருப்பது நமக்கு தெரியும்
-
உங்களிலிருந்து வேறான இறைவன் இல்லை.உங்களைவிட உயர்ந்த.உங்களைவிட உண்மையான இறைவனும் இல்லை.உங்கள்முன் தேவதைகள் சாதாரணமானவர்களே
-
இறைவன் மனிதனை தன் பிரதிபிம்பமாக படைத்தார் என்பது சரியல்ல. மனிதனே இறைவனைத் தன் பிரதிபிம்பமாக படைத்தான் என்பதுதான் சரி
-
பிரபஞ்சம் எங்குமே தெய்வங்களை நம் பிரதிபிம்பமாக நாமே உருவாக்கியிருக்கிறோம்.நாமே ஒரு தெய்வத்தை உருவாக்கி பிறகு அதன் காலில் விழுந்து வணங்குகிறோம்.
-
இந்த பிரபங்சத்தின் அழியாத ஜீவன்நாம்.என்றாலும் நம்மை ஆண்களாக,பெண்களாக கற்பனை செய்துகொண்டு, ஒருவனது கோபச் சொல்லுக்கு அஞ்சுகிறோம்.எவ்வளவு பயங்கரமான அடிமைத்தனம்
-
இந்த பிரபஞ்சம் யாருடைய பிரதிபிம்பமோ,இந்த சூரியனும்,சந்திரனும் யாருடைய அம்சங்களோ அந்த நான்,பயங்கர அடிமையாக பிறர் காலடியில் நசுங்கிக்கிடக்கிறேன்.
-
இந்த பிரபஞ்சமே நமக்குரியது,ஆனால் நம்மிடம் அன்பாக பேசினால் மகிழ்கிறோம்,கோபப்பட்டால் துன்புறுகிறோம்.நம் நிலைமையை எண்ணிப்பாருங்கள்.உடலுக்கு அடிமை.மனத்திற்கு அடிமை
-
அன்புக்கு அடிமை,கோபத்திற்கு அடிமை,ஆசைக்கு அடிமை,இன்பத்திற்கு அடிமை,வாழ்விற்கு அடிமை,சாவிற்கு அடிமை எல்லாவற்றிறிகும் அடிமை.இந்த அடிமைத்தளையை உடைத்து எறியுங்கள்
-
இந்த ஆன்மாவைப்பற்றி முதலில் கேட்க வேண்டும். பிறகு சிந்திக்க வேண்டும். பிறகு தியானிக்க வேண்டும்
-
No comments:
Post a Comment