Monday, 30 April 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-23


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-23
-
-
பக்தன் நாமரூபங்கள் மற்றும் அது போன்றவற்றால் இறைவனை தியானிக்கிறான்.இதுதான் இயற்கை வழி.ஆனால் மெதுவான வழி.
-
யோகி தன் உடலில் உள்ள சில மையங்களை தியானித்து,தன் மன ஆற்றவை வளர்க்கிறான்.ஞானியோ உடலும் இல்லை.மனமும் இல்லை என்கிறான்.
-
ஞானியின் தியானம் மிகவும் கடினம்.இது எதிர்மறை தியானம்.அவன் எல்லாவற்றையும் மறுக்கிறான் எஞ்சி நிற்பது ஆன்மாவே.இது மிகவும் நுட்பமான ஆராய்ச்சிப்பாதை
-
உண்மையான ஞானியாவது மிகவும் கடினம்.இந்த வழி மிக நீளமானது.வாளின் கூரிய முளையின்மீது நடப்பதுபோல் கடினமானது.என்றாலும் மனம் தளராதீர்கள்.
-
எழுந்திருங்கள்.விழித்துக்கொள்ளுங்கள்.லட்சியம் கைகூடும் வரையில் நிற்காதீர்கள் என்கின்றன வேதங்கள்
-
ஞானியின் தியானம் என்ன? உடல் மனம் போன்ற ஒவ்வொன்றிற்கும் அப்பால் போக அவன் விரும்புகிறான்.தான் உடல் என்ன எணண்த்தை விரட்ட பாடுபடுகிறான்.
-
நான் என்ன செய்ய வேண்டும்? என் மனத்திற்கு அடிகொடுத்து நான் உடல் அற்ற என்பதை தெளிவுபடுத்த வேண்டும். எனக்கு மரணம் எவ்வளவு பயங்கரமான முறையில் வந்தாலும் அதனால் எனக்கு என்ன நான் உடல் அல்ல
-
ஒருவன் நிறைநிலையை அடைந்துவிட்டால் எல்லோரிடமும் நிறைவைக் காண்கிறான்.அவன் பிறரிடம் குறையை கண்டால்,தன் குறையை அவர்கள்மீது கற்பிப்பதே அதற்கு காரணம்
-
குறையை பற்றியோ.நிறையை பற்றியோ ஞானிக்கு கவலை இல்லை.யார் குறையை காண்பார்கள்?.யாரிடம் குறை இருக்கிறதோ அவர்களே அதை காண்பார்கள்
-
உடம்பை யார் காண்பார்கள்?யார் தான் உடம்பு என்று நினைக்கிறானோ அவனே உடம்பை காண்பான்.
-
நான் உடம்பு என்ற எண்ணம் உங்களிடமிருந்து விடுபடும்போது நீங்கள் உலகத்தையே பார்க்க மாட்டீர்கள்.அது என்றென்றைக்குமாக போய்விட்டது.

No comments:

Post a Comment