Monday, 30 April 2018

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-18


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-18
-
புத்தகம்-3 லிருந்து எடுக்கப்பட்டது
-
இந்த பிரபஞ்சத்தில் உள்ள உடல்கள் எல்லாம் என்னுடையதே.ஆயிரம் உடல்களில் நான் துன்பத்தில் உழன்றாலும்,ஆயிரமாயிரம் உடல்களில் நான் இன்பத்தில் திளைக்கிறேன்.
-
யார் யாரை குற்றம் சொல்வது? யார் யாரை புகழ்வது?யாரை விலக்குவது?யாரை தேடுவது? நான் யாரையும் விலக்குவதும் இல்லை. நான் யாரையும் தேடுவதும் இல்லை. நானே அல்லவா முழுப் பிரபஞ்சமும்
-
பிரபஞ்சமே இடிந்து விழட்டும்.அது இருந்தால் அல்லவா இடிந்துவிழ என்று புன்சிரிப்புடன் ஞானி கூறுவான்.பிரபஞ்சம் என்ற ஒன்று இருந்தால்தானே அது இடிந்துவிழ.அவையெல்லாம் வெறும் தோற்றம்
-
மனிதன் ஆராய்ந்து பார்த்தால் இருப்பது ஒன்றேதான் மற்றவை எல்லாம் வெறும் தோற்றங்களே என்ற முடிவுக்குத்தான் வரமுடியும்
-
இந்த மனமயக்கம் எப்படி வந்தது?பதிலும் கேள்வியைப்போலவே நுட்பமானதே.விடையற்ற கேள்விக்கு விடையை எதிர்பார்க்க கூடாது என்பதே அதற்கான விடை
-
காரண காரிய நியதிகளுக்கு அப்பாற்பட்ட கடவுள் எப்படி காரண காரியநியதிகளுக்கு கட்டுப்பபட்டார் என்று கேட்பதே தவறானது.அப்பாற்பட்டவர் ,கட்டுப்பட்டால் பிறகு எப்படி அப்பாற்பட்டவராக இருக்க முடியும்?
-
மனத்தை கடந்து இருக்கும் கடவுளைப் பற்றி தெரிந்து கொள்ள மனத்தால் எப்படி முடியும்? கடவுளை காண்பதற்கு முன் மனமே இருக்காதே.மனத்தில் கடவுளைபற்றிய பதிவு இல்லாதபோது அவரை எப்படி விளக்க முடியும்?
-
ஒரு நோய்தான் இன்னொரு நோய்க்கு காரணமே தவிர. நல்ல ஆரோக்கியமான உடல் நோய்க்கு காரணமல்ல.அதேபோல் மாயைதான் இன்னொரு மாயைக்கு காரணம்.இறைவன் மாயைக்கு காரணம் அல்ல
-
வாழ்க்கையில் பல்லாயிரம் கனவு காண்கிறீர்கள்.அவைகள் வரும் போகும்.அதுபோல் இந்த வாழ்க்கை என்பதும் வரும்போகும் ஆனால் நீங்கள் மாறாமல் அப்படியே இருக்கிறீர்கள்
-

No comments:

Post a Comment