சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-29
-
-
புத்தகம் 11 லிருந்து
-
இந்தியாவில் பணக்காரர்களிடம் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. நம் நம்பிக்கைக்கு உறைவிடமான இளைஞர்களிடையே பொறுமையாக,உறுதியாக அமைதியாக வேலை செய்வதே சிறந்தது
-
ஆணவம்,அரசாணை இவற்றின் துணையுடன்.விடல்விட்டு எண்ணக்கூடிய சிலரிடம்(உயர்சாதியினரிடம்) எல்லா கல்வியும்,புத்திநுட்பமும் உடைமையாக்கப்பட்டதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்
-
நாம் மீண்டும் எழுர்ச்சி பெற வேண்டுமானால் சாதாரண மக்களிடையே (ஆன்மீக) கல்வியை பரப்ப வேண்டும்
-
எழுநூறு ஆண்டு முகமதிய ஆட்சியில் ஆறுகோடி முஸ்லீம்கள்,ஒரு நூற்றாண்டு கிறிஸ்தவ ஆட்சியல் இருபது லட்சம் கிறிஸ்தவர்கள்.இதற்கு காரணம் என்ன?சாதாரணமக்களுக்கு ஆன்மீக கல்வி மறுக்கப்பட்டதுதான் காரணம்
-
ஆன்மீகக் கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது. தன்னம்பிக்கையால் உள்ளிருக்கும் ஆன்மா விழித்தெழுகிறது.
-
எழுந்திரு.விழித்துக்கொள்,குறிக்கோளை அடையும்வரையில் நில்லாதே
-
நம் மாணவர்கள் பெறும் கல்வி எதிர்மறை கல்வியாக இருக்கிறது.அவர்களிடம் சிரத்தை இல்லை.சிரத்தை இல்லாதவன் சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பான்
-
முதலில் ஆன்மீகக் கல்வி வேண்டும். உலக பந்தத்திலிருந்து விடுவிக்கும் ஆன்மீக கல்வியால் ஒருவனது சாதாரண வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரமுடியாதா?முடியும். நிச்சயமாக முடியும்.
-
ஒருவன் சிறிதளவு ஆன்மீகக் கல்வி பெற்றிருந்தாலும் அது அவனை பெரும் பயத்திலிருந்து காப்பாற்றும்
-
கிறிஸ்தவம் போன்ற மதங்களின் அஸ்திவாரத்தையே நவீன விஞ்ஞானம் உலுக்கிவிட்டது.அதற்கு மேல் ஆடம்பரவாழ்க்கை அந்த மதத்தையே கொல்லும் நிலையில் உள்ளது
-
ஐரோப்பாவும்,அமரிக்காவும் ஆன்மீகத்திற்காக இந்தியாவை எதிர்பார்த்து நிற்கின்றன.எதிரிகளின் கோட்டையை பிடிப்பதற்கு தக்கநேரம் இதுவே
-
வேதாந்தத்தில் தேர்ச்சிபெற்ற திறமைமிக்க பெண்கள் வெளிநாடுகளில் சென்று பிரச்சாரம் செய்தால் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் பாரதநாட்டின் மதத்தை பின்பற்றுவார்கள்.
-
No comments:
Post a Comment