Monday, 30 April 2018

விவேகானந்தரின் அகண்ட பாரதம்


சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் இந்தியா என்பது பரந்த பெரிய நாடாக இருந்தது.இந்தியாவெங்கும் சுவாமிஜி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்று நாம் படிக்கிறோம்.அது இந்த பரந்த பாரதத்தை குறிக்கும். 
-
பல காரணங்களால் நாம் நமது நாட்டின் பல பகுதிகளை இழந்துவிட்டோம். மீண்டும் இழந்த பகுதிகளை பெறவேண்டும் என்று விரும்புவதில் தவறு எதுவும் இல்லையே...

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?


சுவாமி விவேகானந்தருக்கு நோய் வந்தது எதனால்? அவர் சிறுவயதில் இறந்தது ஏன்?
-
ராஜயோகம் பயில்பவர்கள் தனிமையில்,அமைதியான வாழ்க்கையை நாடி சென்றுவிடுவார்கள்.ஆகவே அவர்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.உடல் நலன் பாதிக்கப்பட்டால் அதை சரி செய்யவும் அவர்களால் முடியும்.
-
பக்தியோகத்தில் செல்லும் ஒருவருக்கு உடல் நலன் பாதிக்ப்பட்டால் அது இறைவன் தந்த பரிசு என்று நினைத்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள்.அதை நீக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டார்கள்
-
ஞான யோகத்தில் செல்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படால் அதைக்குறித்து கவலைப்பட மாட்டார்கள்.உடல் என்பது பொய்த்தோற்றம் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று நினைப்பார்கள்.
-
கர்மயோகத்தில் செல்லும் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால். தன்னுடைய முன்வினை பயன்களால்தான் இவ்வாறு நடக்கிறது அவைகளை அனுபவிப்பதன் மூலம் பாவங்கள் போகும் என்று நினைப்பார்கள்.ஆகவே அதற்காக வருத்தப்பட மாட்டார்கள்.
-
சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் பிச்சையேற்று வாழும் நாட்களில், சரியான உணவு கிடைக்கவில்லை. அந்த காலத்தில் பட்டினியால் பல லட்சம் பேர் உயிரிழப்பது சர்வ சாதாரணமாக இந்தியாவில் நிகழ்ந்தது. எனவே பிச்சைக்காரர்களுக்கு உணவு கிடைப்பது கடினம்.அவ்வாறு உணவு கிடைத்தாலும் கெட்டுப்போன,மற்றவர்கள் உண்ண முடியாத உணவுகளே கிடைத்தன.சுவாமி விவேகானந்தர் பல நாட்கள் உணவு இல்லாமல் பட்டினியில் வாடினார்.இதனால் பல முறை அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது.சில சமயங்களில் மரணத்தில் விழிம்புவரை சென்று வந்துள்ளார்.
-
பின்பு அவர் வெளிநாடுகளில் இந்துமதத்தை பிரச்சாரம் செய்யும்போது,தேவையான உணவு கிடைத்தது.ஆனால் பெரும்பாலும் மாமிச உணவுகளே கிடைத்தன. சுவாமி விவேகானந்தர் போன்ற உயர்ந்த ஞானநிலையில் இருப்பவர்களுக்கு மாமிச உணவு என்பது விஷம்போன்றது.ஆனால் அமெரிக்காவில் தற்போது கிடைப்பதுபோல காய்கறி உணவு அந்த நாட்களில் கிடைக்கவில்லை.அந்த காலத்தில் அனைவருமே மாமிசம் உண்பவர்களாகவே இருந்தார்கள்.சுவாமிஜி பெரும்பாலும் அவர்களின் வீட்டில் விருந்தாளியாகவே இருந்தார்.அவர்கள் கொடுக்கும் உணவையே உண்டு வந்தார்
-
இவ்வாறு தொடர்ந்து உணவு கட்டுப்பாடு இல்லாததால் ரத்தத்தில் கொழுப்பு அதிகம் சேர்ந்தது.அது மட்டுமல்ல ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தது.அந்த காலத்தில் சர்க்கரை வியாதி என்பது தீர்க்க முடியாத வியாதியாக கருதப்பட்டது. ரத்த அழுத்தம்,ஆஸ்துமா போன்ற நோய்களும்,சிறுநீர் கோளாறுகளும் தொடர்ந்து வந்தது.இவை அனைத்திற்கும் காரணம் உணவுதான் என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார்.
-
இதைவிட இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.சுவாமி விவேகானந்தர் சிறந்த கர்மயோகி. முற்பிறவியில் அவர் ஒரு ரிஷியாக இருந்தார். மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காக மனிதனாக பிறந்தார். ஒரு மனிதனை ஆன்மீகத்தை நோக்கி திருப்ப வேண்டுமானால் தன்னுடைய சக்தியை அவன்மீது செலுத்தவேண்டும்.அதாவது தன்னிடம் உள்ள புண்ணியத்தின் பலனை அவனுக்கு கொடுத்து, அவனிடம் உள்ள பாவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் குரு சீடனுக்கு இடையே உள்ள கொடுக்கல் வாங்கல்.
-
சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தும்போது அவரிடமிருந்து அளவுக்கு அதிகமான ஆன்மீக சக்தி வெள்ளம்போல் பாய்ந்தது.அவரது பேச்சை கேட்பவர்கள் மெய்மறந்து அதிலேயே ஒன்றி போனார்கள்.அவர்களது மனத்தை மிக உயர்ந்த நிலைக்கு சுவாமிஜி அழைத்து சென்றார். இதன் காரணமாக பலரது பாவம் அவருக்கு வந்தது. சாதாரண குருவால் இவ்வாறு செய்ய முடியாது.அவர்களால் ஒரு சிலரது மனத்தை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்ல முடியும்,ஆயிரக்கணக்கானவர்களை ஒரே நேரத்தில் உயர்ந்த ஆன்மீக தளத்திற்கு அழைத்து செல்ல முடியாது.
-
அமெரிக்காவில் வாழ்ந்த காலத்தில் சுவாமிஜி பெரும் சக்தியை அங்கு செலவிட்டார். அதன்பிறகு இந்தியாவில் அவர் சொற்பொழிவாற்றும் போதும் பெரும் சக்தியை செலவிட்டார்.இவ்வாறு 12 ஆண்டுகள் கடினமான உழைப்பிற்கு பிறகு அவரது உடல்நிலை சீர்செய்ய முடியாத அளவுக்கு கெட்டுவிட்டது.
-
சுவாமி விவேகானந்தர் வெளிநாட்டில் வாழ்ந்த நாட்களில் அன்னை காளியின் காட்சி அவ்வப்போது கிடைத்துவந்தது. பின்பு காளியின் காட்சி கிடைக்கவில்லை. தன்னுடைய உடல் மூலமாகஅன்னை காளி செய்ய வேண்டி பணிகளை செய்து முடித்துவிட்டாள் அதனால்தான் தற்போது அவள் வரவில்லை என்பதை அவர் உணர்ந்தார்.இனி இந்த உலகத்தில் தனக்கென்று எந்த பணியும் இல்லை. தேவைப்பட்டால் மீண்டும் பிறந்து வருவேன் முடிக்க வேண்டிய பணிகளை முடிப்பேன் அதன்பிறகு எங்கிருந்து வந்தேனோ அங்கேயே அதாவது சப்தரிஷி மண்டலத்திற்கே சென்றுவிடுவேன் என்று கூறினார்
-
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் வாழ்ந்த நாட்களில்,அவருக்கு எதிராக சிலர் பல பிரச்சாரங்கள் செய்தார்கள்.
அதாவது யோகிக்கு உடல்நலம் பாதிக்காது.அவர்களுக்கு நோயே வராது.அவர்களது நோயை அவர்களாலேயே நீக்க முடியும்.
இவர் உண்மையான யோகி அல்ல என்று கூறினார்கள்.
-
இது உண்மைதானா? ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம்
-
ஸ்ரீராமகிருஷ்ணர் புற்றுநோயால் அவதிப்பட்டுகொண்டிருக்கும்போது பலர் அவரிடம் வருவதை நிறுத்திக்கொண்டார்கள்.இவரது நோயையே இவரால் நீக்க முடியவில்லையே இவர் என்ன பெரிய யோகியா? என்று மக்கள் அப்போது நினைத்தார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னை காளியிடம் இதுபற்றி கேட்டார்.
பிறரது பாவங்களை நீ ஏற்றுக்கொண்டதால் உனக்கு நோய் வந்திருக்கிறது என்று காளி கூறினாள்.
-
சிலர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இவ்வாறு கூறினர்-
சுவாமி யோகிகளால் நோயை நீக்க முடியும்.நீங்கள் இந்த நோய் குணமடையட்டும் என்று நினைத்து உங்கள் மனத்தை உடல்மீது செலுத்தினால் நோய் குணமடைந்துவிடும் என்று கூறினார்கள்.
-
பிறரது பாவத்தை ஏற்றுள்ளதால் நோய் வந்திருக்கிறது ,இப்போது அந்த நோயை குணப்படுத்தினால் ,மீண்டும் பாவங்கள் அந்த மக்களிடமே சென்றுவிடும் என்பதால் ஸ்ரீராமகிருஷ்ணர் அதை செய்ய மறுத்துவிட்டார். எனது மனம் இறைவனிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது,இந்த உடல் இறைவனின் கருவி,அவர் விரும்பியதால் நோய் வந்திருக்கிறது, இறைவனிடம் கொடுக்கப்பட்ட இந்த கருவியை.அவரிடமிருந்து எடுத்துக்கொள்வதா? அது நடக்காது என்று கூறினார்.
-
சுவாமி விவேகானந்தர் மக்களின் பாவத்தை ஏற்றுக்கொண்டார்.அதனால் நீராத நோய்க்கு ஆளானார்.
-
மற்றவர்களின் பாவத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் வெறும்உபதேசங்களை மட்டும் கொடுக்கும் யோகிகளுக்கு நோய்வருவதில்லை.
-
சுவாமி விவேகானந்தரின் பணி முடிந்துவிட்டது என்று அவர் உணர்ந்ததால் உலகத்தை விட்டுசெல்ல ஒரு நல்ல நாளை அவரே முடிவு செய்தார்
-
கிழக்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த விரஜேந்திரர் என்ற இளைஞர் அப்போது சுவாமிஜிக்கு பணிவிடைகள் செய்து வந்தார்.
-
அவரிடம் சுவாமிஜி கூறினார்,” இன்று என் உடம்பு லேசாகவும் நன்றாகவும் இருக்கிறது. நான் நன்றாக இருக்கிறேன் ”என்றார்.தமது அறையில் வடமேற்கு நோக்கி ஜெபமாலையுடன் ஜெபம் செய்ய தொடங்கினார்.அறையின் வெளியே விரஜேந்திரரை அமர்ந்திருக்குமாறு கூறினார்.
-
சுமார் 6.30 மணியளவில் சீடரை கூப்பிட்டு,உஷ்ணமாக இருக்கிறது,அதை ஜன்னல் கதவுகளை திறந்து வை என்றார். பிறகு தமது தலையில் விசிறிமூலம் சிறிது வீசுமாறு கூறினார், சிறிது நேரம் சென்ற பிறகு போதும் இனி என் கால்களை பிடித்துவிடு என்றார். அப்போது அவர் கையில் ஜெபமாலையுடன் ஜெபம் செய்துகொண்டிருந்தார்.
-
சுவாமிஜி இடது பக்கமாக லேசாக படுத்திருந்தார், சிறிது நேரத்திற்கு பிறகு ஒரே ஒருமுறை லேசாக வலது பக்கமாக திரும்பி படுத்தார்.
-
திடீரென அவரது கைள் நடுங்கின. கனவு கண்ட குழந்தை அழுவதுபோல சுவாமிஜியிடமிருந்து ஒரு சத்தம் எழுந்தது. சிறிது நேரத்தில் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்தார். அவரது தலை தலையணையில் சாய்ந்தது. மீண்டும் ஒருமுறை அதேபோல் ஆழ்ந்த மூச்சை இழுத்தார். பிறகு எல்லாம் நிசப்பதம்.
-
அப்போது சுவாமிஜிக்கு வயது 39வருடம் , 5மாதம் 24 நாள் ஆகியிருந்தது. அவர் 40வது வயதை பார்க்கவில்லை
-
அப்போது அவர் ஒரு கௌபீனம் மட்டுமே உடுத்தியிருந்தார். அவரது கண்கள் மேல் நோக்கியவாறு இருந்தது.
-
சுவாமிஜி மகாசமாதி அடைந்த அந்த நேரத்தில் அவருக்கு பிரியமான சென்னையில் இருந்த சகோதர துறவி ராமகிருஷ்ணானந்தருக்கு(சசி) ஒரு குரல் தெளிவாக கேட்டது.-சசி!நான் உடம்பை உதறிவிட்டேன்!
-
”கிழிந்த ஆடையை வீசி எறிவதுபோல் என் உடம்பை களைந்துவிடுவது நல்லதென்று ஒருநாள் தோன்றலாம்,ஆனாலும் நான் வேலை செய்வதை நிறுத்தமாட்டேன். உலகம் முழுவதும் உள்ள மனிதர்களை தூண்டிக்கொண்டே இருப்பேன்.அவர்கள் அத்தனை பேரும் தாங்கள் இறைவனுடன் ஒன்றுபட்டிப்பதை உணரும்வரை நான் உழைத்துக்கொண்டே இருப்பேன்”
என்று அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது
-
கட்டுரை....சுவாமி வித்யானந்தர் (24-1-2018)

கடவுளுக்கு உருவம் உண்டா?


கடவுளுக்கு உருவம் உண்டா?
-
வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை என்று மிகத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.கடவுளுக்கு உருவம் இல்லை.அவர் ஆண்,பெண் அல்ல,அவருக்கு கண்,காது போன்ற எதுவும் இல்லை.அவர் எங்கும் இருப்பவர்.மாற்றமில்லாதவர்.பிறப்பற்றவர்.இறப்பற்றவர்.பிரம்மம் என்ற பெயரில் வேதம் கூறுகிறது.
-
உருவமுள்ள எதுவும் காலம்(சிலகாலம் இருக்கம் பிறகு இருக்காது) ,இடம்(ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும்).,காரணம் (ஏதோ ஒரு காரணத்தை திறைவேற்ற அங்கு இருக்கும்).ஆகவே அந்த உருவம் இந்த மூற்றிற்கும் கட்டுப்பட்டிருக்கும்.அந்த உருவம் சொர்க்கத்தில் இருந்தாலும் சரி எங்கே இருந்தாலும் சரி இந்த மூன்றிற்கும் கட்டுப்பட்டிருக்கும்.ஆகவே கட்டுப்பட்ட அது கடவுள் இல்லை
-
கிறிஸ்தவ மதத்தில் உள்ள ஏசுகிறிஸ்து சொர்க்கத்தில் தேவனாக(ஒளிஉடல்) இருப்பதாக கூறுகிறார்கள்.
முஸ்லீம்கள் அதேபோல் அல்லா சொர்க்கத்தில் மனிதனை ஒத்து உருவத்துடன் ஆனால் மனிதனைவிட மிகப்பெரியவராக இருப்பதாக கூறுகிறார்கள்.இந்து மதத்திலும் இதேபோல் பல தேவர்களும் தேவதைகளும் உண்டு.
-
வேதம் இப்படி உருவத்துடன் இருப்பவர்களை கடவுள் இல்லை என்கிறது.வேதத்தின் பார்வையில் ஏசுவும்,அல்லாவும் கடவுள் அல்ல.அவர்கள் அவர்களது இனத்திற்கான காவல் தேவர்கள்(ஒளியுடலில் வாழ்பவர்கள்) மட்டுமே. சில காலம் இருப்பார்கள் பிறகு அழிந்துவிடுவார்கள்
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள்-பகுதி-30


-சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள்---பகுதி-30
-
முக்திநெறியை முதலில் மக்களுக்கு போதித்தவை வேதங்களே.புத்தரும்,ஏசுவும் வேதத்திலிருந்து எடுத்தே போதித்தார்கள்-8-215
-
தென்னிந்திய பூர்வகுடிகளை, ஆரியர்கள் வென்ற கதைதான் ராமாயணமாம்.ராமாயணத்தை படி அயோத்தியைவிட இலங்கை நாகரீகம்பெற்ற நாடு-8-291
-
இந்தியாவின் உயர்ஜாதியினரே! நீங்கள் பத்தாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட வெறும் பிணங்கள். நீங்கள் நடைபிணங்கள். .8-334
-
மொகலாயர் ஆட்சிகாலத்திலும்,அதற்கு முற்பட்ட சிறிது காலமும் இந்துமதத்தை அழியாமல் காப்பாற்றி வைத்தது தென்நாடுதான்-8-338
-
வேதங்களில் சிந்து நதி,“சிந்து”,“இந்து” என்று இரண்டுவிதமாக குறிப்பிடப்படுகிறது. பாரசீகர்கள் ஹிந்து என்றார்கள்-8-371
-
ஏசு பிறக்காமல் இருந்திருந்தால் மனிதகுலம் காக்கப்பட்டிருக்காது என்று கூறுவது அபச்சாரம்-.2-457
-
ஏசுநாதர் பூரணநிலையை அடைந்தவர் அல்ல.தனது சொந்த லட்சியத்தையே அவரால் முழுமையாக வாழமுடியவில்லை-2-456
-
பெரிய இன்பம் கிடைக்குமானால் அதற்காக சிறிய இன்பத்தை துறப்பார்கள். இறையின்பம் தேவையானால் புலனின்பத்தை துறக்க வேண்டும்
-
கடவுள் சொர்க்கத்தில் இருக்கிறார் என்றெல்லாம் சொல்வது முட்டாள்தனம் என்பது இந்துமதத்தின் கருத்து- book4/387
-
எந்த சர்ச்சும் இதுவரை யாரையும் கரையேற்றியதில்லை.அது பாலர் பள்ளி.அதைவிட்டு வெளியேறி நேராக இறைவனிடம் செல்லுங்கள்--4/73
-
கிறிஸ்தவர்களே! எந்த சர்ச்சுக்கும் போகாதீர்கள்.அதைவிட்டு வெளியேறி உங்களை தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள்- book4/89
-
எது வேதம்? எல்லா அறிவும் வேதமே. இறைவனைப்போலவே வேதமும் எல்லையற்றது.வேதத்தை யாரும் உருவாக்கியதில்லை-4/92
-
சதா சர்வகாலமும் இறைவன் நமது உடம்பென்னும் கோவிலில் இருக்கிறார்.ஆனால் நாம் வெளியில் உள்ள உருவத்தில் அவரை தேடுகிறோம்-
-
எதிர்காலம் நிச்சயிக்கப்படவில்லை என்றால் எதிர்காலத்தைப்பற்றி ஒருவரால் எப்படி சொல்ல முடிகிறது?
-
முற்பிறவி நினைவு இல்லாவிட்டால் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ள கூடாதா?குழந்தை பருவத்தில் நடந்தது நியாபகத்தில் இருக்கிறதா?
-
கண்மூடித்தனமாக நம்புவது மனிதனை கீழ்நிலைக்கே கொண்டு செல்லும்.கேள்வி கேட்காமல் எதையும் நம்பாதீர்கள்.-
-
சடங்குகளையும் புராணங்களையும் பற்றி கேவலமாக பேசவேண்டாம். விரும்புபவர்கள் அதை கடைபிடிக்கட்டும்-.book4-347
-
கிறிஸ்தவர்கள் சிவபெருமானின் உப்பை தின்றுவிட்டு,அவருக்கே துரோகம் செய்வார்கள்.ஏசுவின் புகழ்பாடுவார்கள்.கேவலம்!-book8/208
-
ஏசு வரப்போவதாக சிலர் டமாரமடித்து வருகிறார்கள்.ஏசு வரப்போவதில்லை.அவர் வீட்டை காப்பாற்றவே அவருக்கு நேரம் இல்லை-book8/207
-
முகம்மதுநபியின் காலத்திற்கு முன்பு காபா கோயிலை நிர்வாணமாக சுற்றிவரும் வழக்கம் பழக்கத்தில் இருந்தது.-.book8-359
-
இலங்கை தமிழ் தூயதமிழ்.இலங்கை மதம் தூயதமிழ்மதம்.அவர்களை இந்து என்று சொல்வதற்கு பதில் தமிழ் என்று சொல்லவேண்டும்-8/348
-
அல்லாஹு அக்பர் என்ற கோஷத்தை கேட்டு நடுநடுங்கி வடஇந்தியர் காடுகளுக்கு ஓடினார்கள். தென்னிந்தியாதான் அதை நிறுத்தியது-8/339
-
தென்னிந்தியாவில் வாழும் தமிழர்களின் நாகரீகம் மிகமிகப் பழமையானது.இந்த தமிழர்களின் ஒரு பிரிவே சுமேரியர்கள்-.book8-339
-
கோவிலுக்கு செல்லும் ஓர் இந்து கடவுளை வணங்கும்போது கண்களை மூடிக்கொண்டு அவர் தனக்குள் இருப்பதாக தியானிக்கிறான்.-
-
நான் நாளையே இறந்துபோனாலும்,எனது பணியை செய்ய சாதாரண மக்களிடமிருந்தே ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டு வருவார்கள்..book5-258
-
இந்தியா உலகை வென்றாக வேண்டும்.அதைவிடக் குறைவானது எதுவும் நம் லட்சியமல்ல.இதை செய்தேயாக வேண்டும்-.book5-252
-
நமது தலைவர்கள் நிச்சயம் ஆன்மீகவாதிகளாகவே இருக்க வேண்டும்.அவர்களை சுற்றியே நாம் ஒன்றுசேர வேண்டும்-.book5-251
-
ஏசுவை வழிபடுவது மனிதனைக் காப்பாற்றாது.ஏசுவாகவும் புத்தராகவும் அவதரித்த கடவுளை அடையவேண்டும். -book1-301
-
ஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்ய முடியும் என்று நினைத்தால் அது தவறு.கடவுளால் மட்டுமே முக்தி தரமுடியும்-.book1-302
-
கடவுள் ஒருவர்,முகம்மது அவரின் தீர்க்கதரிசி.இதை நம்பாத அனைவரும் கொல்லப்படவேண்டும். இதுதான் முகம்மதிய மதம்-.book7-335
-
ஒரு கையில் குரான் மறு கையில் வாள்.குரானை ஏற்றுக்கொள் இல்லாவிட்டால் ஒழிந்துபோ.இதுதான் முஸ்லீம்களின் வழி-.book4-384
-
முகம்மதுநபியின் தவறான உபதேசத்தால் லட்சக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டார்கள். மதவெறியால் பல தேசங்கள் அழிந்தன-book2-75
-
இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்தால் இந்தியாவும்,இந்துமதமும் அழிந்துவிடும். எனவே விழித்துக்கொள்ளுங்கள்-
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-29


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-29
-
-
புத்தகம் 11 லிருந்து
-
இந்தியாவில் பணக்காரர்களிடம் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. நம் நம்பிக்கைக்கு உறைவிடமான இளைஞர்களிடையே பொறுமையாக,உறுதியாக அமைதியாக வேலை செய்வதே சிறந்தது
-
ஆணவம்,அரசாணை இவற்றின் துணையுடன்.விடல்விட்டு எண்ணக்கூடிய சிலரிடம்(உயர்சாதியினரிடம்) எல்லா கல்வியும்,புத்திநுட்பமும் உடைமையாக்கப்பட்டதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்
-
நாம் மீண்டும் எழுர்ச்சி பெற வேண்டுமானால் சாதாரண மக்களிடையே (ஆன்மீக) கல்வியை பரப்ப வேண்டும்
-
எழுநூறு ஆண்டு முகமதிய ஆட்சியில் ஆறுகோடி முஸ்லீம்கள்,ஒரு நூற்றாண்டு கிறிஸ்தவ ஆட்சியல் இருபது லட்சம் கிறிஸ்தவர்கள்.இதற்கு காரணம் என்ன?சாதாரணமக்களுக்கு ஆன்மீக கல்வி மறுக்கப்பட்டதுதான் காரணம்
-
ஆன்மீகக் கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது. தன்னம்பிக்கையால் உள்ளிருக்கும் ஆன்மா விழித்தெழுகிறது.
-
எழுந்திரு.விழித்துக்கொள்,குறிக்கோளை அடையும்வரையில் நில்லாதே
-
நம் மாணவர்கள் பெறும் கல்வி எதிர்மறை கல்வியாக இருக்கிறது.அவர்களிடம் சிரத்தை இல்லை.சிரத்தை இல்லாதவன் சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பான்
-
முதலில் ஆன்மீகக் கல்வி வேண்டும். உலக பந்தத்திலிருந்து விடுவிக்கும் ஆன்மீக கல்வியால் ஒருவனது சாதாரண வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரமுடியாதா?முடியும். நிச்சயமாக முடியும்.
-
ஒருவன் சிறிதளவு ஆன்மீகக் கல்வி பெற்றிருந்தாலும் அது அவனை பெரும் பயத்திலிருந்து காப்பாற்றும்
-
கிறிஸ்தவம் போன்ற மதங்களின் அஸ்திவாரத்தையே நவீன விஞ்ஞானம் உலுக்கிவிட்டது.அதற்கு மேல் ஆடம்பரவாழ்க்கை அந்த மதத்தையே கொல்லும் நிலையில் உள்ளது
-
ஐரோப்பாவும்,அமரிக்காவும் ஆன்மீகத்திற்காக இந்தியாவை எதிர்பார்த்து நிற்கின்றன.எதிரிகளின் கோட்டையை பிடிப்பதற்கு தக்கநேரம் இதுவே
-
வேதாந்தத்தில் தேர்ச்சிபெற்ற திறமைமிக்க பெண்கள் வெளிநாடுகளில் சென்று பிரச்சாரம் செய்தால் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் பாரதநாட்டின் மதத்தை பின்பற்றுவார்கள்.
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-28


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-28
-
புத்தகம் 11 லிருந்து
-
இந்திய பெண்மணி ஒருவர் இந்தியஉடையில் நின்று இந்திய ரிஷிகளின் மதத்தைப் பிரச்சாரம் செய்தால் பேரலை ஒன்று எழுந்து,மேற்கு உலகம் முழுவதையும் மூழ்கடிக்கும்.இது எனது தீர்க்க தரிசனம்-விவேகானந்தர்
-
இங்கிலாந்து,ஐரோப்பா,அமெரிக்கா ஆகியவற்றை வெல்வது ஒன்றே இப்போது நமது உயர்ந்த மந்திரமாக அமைய வேண்டும்.இதில்தான் நமது நாட்டின் நன்மை அடங்கியுள்ளது
-
விரிவே வாழ்வின் அடையாளம்.நாம் நமது ஆன்மீக லட்சியங்களுடன் உலகமெங்கும் பரவவேண்டும்
-
எனது வேலையை செய்வதற்கான என்னைப் போன்ற ஒருவன் பிறப்பான்
-
இப்போபதுள்ள சூழ்நிலையில்(அதாவது 120 வருடங்களுக்கு முன்பு) மனிதன் செயல்திறன் பெற வேண்டுமானால் மாமிசம் உண்பதைத்தவிர வேறு வழியில்லை.
-
தாவர உணவை உண்டு மனைவி மற்றும் மகள்களின் மானத்தை காக்க சக்தியற்றிருப்பது பாவமா அல்லது கொள்ளையர்களிடமிருந்து இவர்களை காக்க மாமிசம் உண்பது பாவமா?எது பாவம்?
-
உடலுளைப்பால் வாழாத உயர் வகுப்பினர் மாமிசம் உண்ணவேண்டாம்.ஆனால் அல்லும் பகலும் உழைப்பதன் மூலம் மட்டுமே உணவைபெறும் ஒருவன் தாவர உணவை உண்ணும்படி கட்டாயப்படுத்தக்கூடாது.
-
அனைவரையும் தாவர உணவு உண்ணும்படி கட்டாயப்படுத்தியதுதான் நாம் சுதந்திரத்தை இழந்ததற்கான காரணங்களுள் ஒன்று.(புத்தமதம் பரவி காலத்தில் இது நிகழ்ந்தது)
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-27


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-27
-
புத்தகம் 11 லிருந்து
-
சென்னை மக்கள் (தமிழர்கள்) கல்கத்தா மக்களைவிட (வங்காளிகளைவிட) மிகஆழ்ந்தபோக்கும் நேர்மையும் உடையவர்கள்.
-
பொறாமைபிடித்த கருணையற்றவர்களே இந்தநாட்டில்(இந்தியாவில்) நிறைந்துள்ளார்கள்.எனது பணியை சின்னாப்பின்ப்படுத்த என்னவேண்டுமானாலும் செய்வார்கள்
-
வீரர்களுக்கே முக்தி எளிதாகக் கிடைக்கிறது.பேடிகளுக்கு அல்ல.மகாமோகமாகிய எதிரிகள் உங்கள் முன் உள்ளார்கள்
-
பெருஞ்செயல்களுக்குத் தடைகள் பல என்பது உண்மைதான்,என்றாலும் இறுதிவரை விடாமல் முயலுங்கள்.
-
முன்னேறிச்செல்லுங்கள்.வீரர்களே! கட்டுண்டவர்களின் தளைகளை வெட்டி எறியவும்,எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும்,இருண்ட உள்ளங்களில் ஒளிபெறச்செய்யவும் முன்னேறிச் செல்லுங்கள்
-
இந்த வாழ்க்கைப்போராட்டத்தில்,புதிய கருத்தை கூறுபவனை ஆதரிக்கின்ற ஆண்களையே காண்பது அரிது.பெண்களைப்பற்றிய பேச்சிற்கே இடமில்லை
-
சாதிக்கப்படவேண்டியவை ஏராளம் உள்ளன.நம்மிடம் வேதாந்த நெறி உள்ளது.அதை செயல்படுத்தும் ஆற்றல் இல்லை.நமது நூல் சமரசம் பற்றி பேசுகிறது.நடைமுறையில் நாம் அதை பின்பற்றுவதில்லை
-
சுயநலமற்ற,ஆசையற்ற,உயர்ந்த செயல் பாரதத்தில்தான் போதிக்கப்பட்டது.செயல்முறையில் நாம் சிறிதும் கருணை இல்லாதவர்களாக இருக்கிறோம்.ஏற்றத்தாழ்வு பார்க்கிறோம்
-
எனது நம்பிக்கை இதுதான்.பிறரது காலடியில் மிதிபட்டுக்கொண்டிருக்கின்ற இந்த பாரத மக்களிடம் யாராவது இதயப்பூர்வமாக அன்பு வைத்தால் மீண்டும் பாரதம் விழித்தெழுந்துவிடும்
-
எப்போது நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் எல்லாவிதமான போகஆசைகளையும் உதறித் தள்ளிவிட்டு கோடிக்கணக்கான நம்நாட்டு மக்களின் நலனில் அக்கரை வைக்கிறார்களோ அப்போது பாரதம் விழித்தெழும்
-
நல்ல நோக்கம்,கபடமற்ற தன்மை,எல்லையற்ற அன்பு ஆகியவை உலகத்தையே வென்றுவிடக்கூடியவை என்பதை என் வாழ்நாளில் நேராக கண்டுள்ளேன்
-
நற்குணங்கள் நிறைந்த ஒருவனால் கோடிக்கணக்கான கபடர்கள்,மற்றும் அயோக்கியர்களின் தீய எண்ணத்தை நாசம் செய்துவிட முடியும்
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-26


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-26
-
-
இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் இன்பமானது. எல்லா உயிர்களும் இந்த உலகிற்கு இனிமை மயமானவை.இவை ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கின்றன
-
எல்லா இனிமையும் பிரபஞ்சத்தின் உட்பொருளாக இருப்பதான,ஒளிமிக்க,அழிவில்லாத ஆன்மாதான்.அவரை தவிர எந்த இனிமை இருக்க முடியும்?இந்த ஒரே இனிமைதான் பலவிதமாக வெளிப்படுகிறது
-
இந்த மனித உடலிலோ,புலன்களிலோ எங்கே இனிமை அல்லது அன்பு தோன்றினாலும்,அது அவரேஃஉடலின்பங்கள் அவரே,மன இன்பங்கள் அவரே.ஆன்மீக இன்பங்கள் அவரே.அவரின்றி வேறொன்று எப்படி இருக்க முடியும்?
-
மிகத் தாழ்ந்த உடலின்பம்கூட அவரே,மிகஉயர்ந்த ஆன்மீக இன்பமும் அவரே.அவரின்றி எந்த இனிமையும் இல்லை
-
எப்போது எல்லாவற்றையும் சமநோக்குடன் பார்க்கிறீர்களோ,அதாவது குடிகாரனின் குடிஇன்பத்திலும் ஆன்மாவின் இனிமையை என்று காண்கிறீர்களோ அன்றுதான் உண்மையை உணர்ந்தவர் ஆவீர்கள்
-
தன்னொளி உடையவரும் அழிவற்றவருமான அவரே உலகின் ஆனந்தம்.நம்மிலும் அந்த ஆனந்தமாக அவரே இருக்கிறார்.அவரே பிரம்மம்
-
பூமியை தியானியுங்கள் கூடவே பூமியில் இருப்பது எதுவோ அதுவே நம்முள்ளும் இருக்கிறது , இரண்டும் ஒன்றுதான் என்பதை உணருங்கள்
-
உடம்பை பூமியுடனும்,நம்ஆன்மாவை பரமாத்மாவுடனும் ஒன்றாகப் பாருங்கள்.இந்த ஒருமையை அறிவதே எல்லா தியானங்களுடையவும் நோக்கமும் குறிக்கோளும் ஆகும்

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-25

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-25
-
-
இறைவனின் மூச்சாக அறிவு வெளிவந்துள்ளது. எல்லாம் அவரிடமிருந்தே தோன்றியுள்ளன.எல்லா அறிவையும் மூச்சாக அவர் வெளியிட்டார்
-
உப்புத்துண்டை கடலில் போட்டால் திரும்ப நாம் பெற முடியாதபடி கரைந்துவிடுகிறது.அப்படியே இறைவனும் பிரபஞ்சப் பொருள் எல்லாவற்றுள்ளும் பிரிக்க முடியாதபடி கலந்துள்ளார்
-
இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனிடமிருந்தே தோன்றி அவரிடமே ஒடுங்குகின்றன.இதற்கு அப்பால் அறிவோ, மரணமோ இல்லை.பொறிகள் சிதறுவதைப்போல நாம் அவரிடமிருந்து தோன்றியுள்ளோம்
-
எல்லாமே ஆன்மாவாகிவிட்டால் யார் யாரைப் பார்ப்பது? யார் பேச்சை யார் கேட்பது? யாரை யார் வரவேற்பது? யாரை யார் அறிவது?
-
அவனுள்ளும் அவன் மூலமாகவும்தானே நாம் எல்லாவற்றையும் அறிகிறோம்.அவனை அறியும் கருவி எது? ஒன்றும் இல்லை.ஏனெனில் அவனே அந்த கருவி
-
எல்லா இன்பங்களும்-மிகத் தாழ்ந்தநிலை இன்பமானாலும் சரி-அது ஆன்மாவின் பிம்பம்தான்.நல்லவை அனைத்தும் அவரது பிரதிபிம்பமே.இந்தப் பிரதிபிம்பம் நிழலானால் அதைத் தீமை என்கிறோம்
-
மிகநல்லது என்று நமக்கு ஒருசமயத்தில் பட்ட பொருள்,இப்போது அவ்வளவு நல்லதாகப்படவில்லை. எனவே நல்லது கெட்டது என்பவை எல்லாம் வெறும் மூடநம்பிக்கை.உண்மையில் அவை இல்லை
-
உலகில் உள்ள எல்லாப் பொருட்களையும் ஆன்மாவாகத் தியானிப்பதே சிறந்தமுறை.இப்படி செய்தால்தான் எல்லாவற்றையும் நல்லவையாகப் பார்க்க முடியும்
-
இறைவன் கெட்டவரும் அல்ல,நல்லவரும் அல்ல.அவர் மிகச் சிறந்தவர்
-
நன்மை,தீமை இரண்டுமே வேறுபட்ட உருவங்கள்.நம் உள்ளத்திலிருந்து நன்மை மற்றும் தீமைகள் அகலும்போது இந்த உலகம் சொர்க்கம் ஆகிவிடும்
-
நாம் பிறரிடம் காட்டும் கடுமையான வெறுப்புக்கு காரணம், சிறுவயதிலிருந்தே நாம் பெற்றுவந்துள்ள இந்த நன்மை,தீமை என்னும் முட்டாள்தனமான கருத்துக்களே
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-24


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-24
-
வயதானபின் ஒவ்வொருவரும் உலகைத் துறந்துவிட வேண்டும் என்று இந்திய சாஸ்திரங்கள் வற்புறுத்துகின்றன
-
இந்த உலகம் முழுவதையும்நிரம்பும் அளவுக்கு எனக்கு செல்வம் இருந்தாலும்,அதனால் மரணமிலாப் பெருநிலை கிடைக்குமா?
-
மனைவி கணவனிடம் அன்பு செலுத்துவது கணவனுக்காக அல்ல,ஆன்மாவிற்காகவே.அவன் தன் ஆன்மாவிடம் அன்பு செலுத்துகிறாள்.அதேபோல் தான் கணவனும் ஆன்மாவிற்காகவே மனைவியை நேசிக்கிறான்
-
இந்த ஆன்மாவைப்பற்றி நன்றாகக் கேட்ட பிறகு,ஆன்மாவைக் கண்டபிறகு,அனுபூதியில் உணர்ந்த பிறகு.எல்லாம் தெளிவாக விளங்கிவிடுகிறது
-
அன்பு செலுத்த வேண்டுமானால்,அது ஆன்மாவிலும் ஆன்மாவின் மூலமாகவும்தான் முடியும்.எங்கும் நிறைந்த இந்த ஆன்மாவை உணர்ந்தாக வேண்டும்
-
ஆன்மாவின் உண்மை தன்மையை அறியாமல் அதனிடம் அன்பு செலுத்துவது தன்னலம்.ஆன்ம என்பதன் உண்மையை அறிந்து அன்பு செலுத்தினால் அது அன்பு.அது சுதந்திரமானது
-
ஆன்மாவில் அ்ல்லாமல் வெளியே தெய்வம் இருப்பதாக நினைப்பவனை தெய்வம் விலக்கிவிடுகிறது
-
இந்த உலகம்,இந்தத் தெய்வங்கள் என்று இருப்பவை எல்லாமே ஆன்மாவின் உள்ளேயே இருக்கின்றன
-
ஒவ்வொரு முறையும் நாம் ஒரு பொருளை குறிப்பிட்டுப் பேசும்போது அதை ஆன்மாவிலிருந்து பிரித்துவிடுகிறோம்
-
நீங்கள் ஒரு பெண்ணை நேசிக்க முயலும்போது அவள் ஆன்மாவிலிருந்து விலக்கப்படுகிறாள்.அவளிடம் செலுத்தும் அன்பு எல்லைக்கு உட்பட்டதாக மாறிவிடுகிறது.
-
ஒரு பெண்ணை ஆன்மாவாக நினைத்து நேசிக்கும்போது அந்த கணமே அன்பு பூரணமாகிவிடுகிறது.அது ஒருபோதும் துன்பத்தைத் தராது.பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே இப்படித்தான்
-
ஆன்மாவைத் தவிர,நாம் எதனை நேசித்தாலும் விளைவு துன்பமும் துயரமும்தான்.எதையும் ஆன்மாவிற்குள் ஆன்மாவாக அறிந்து அனுபவிப்போமானால் துக்கம்,பிரதிசெயல் எதற்கும் இடமில்லை
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-23


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-23
-
-
பக்தன் நாமரூபங்கள் மற்றும் அது போன்றவற்றால் இறைவனை தியானிக்கிறான்.இதுதான் இயற்கை வழி.ஆனால் மெதுவான வழி.
-
யோகி தன் உடலில் உள்ள சில மையங்களை தியானித்து,தன் மன ஆற்றவை வளர்க்கிறான்.ஞானியோ உடலும் இல்லை.மனமும் இல்லை என்கிறான்.
-
ஞானியின் தியானம் மிகவும் கடினம்.இது எதிர்மறை தியானம்.அவன் எல்லாவற்றையும் மறுக்கிறான் எஞ்சி நிற்பது ஆன்மாவே.இது மிகவும் நுட்பமான ஆராய்ச்சிப்பாதை
-
உண்மையான ஞானியாவது மிகவும் கடினம்.இந்த வழி மிக நீளமானது.வாளின் கூரிய முளையின்மீது நடப்பதுபோல் கடினமானது.என்றாலும் மனம் தளராதீர்கள்.
-
எழுந்திருங்கள்.விழித்துக்கொள்ளுங்கள்.லட்சியம் கைகூடும் வரையில் நிற்காதீர்கள் என்கின்றன வேதங்கள்
-
ஞானியின் தியானம் என்ன? உடல் மனம் போன்ற ஒவ்வொன்றிற்கும் அப்பால் போக அவன் விரும்புகிறான்.தான் உடல் என்ன எணண்த்தை விரட்ட பாடுபடுகிறான்.
-
நான் என்ன செய்ய வேண்டும்? என் மனத்திற்கு அடிகொடுத்து நான் உடல் அற்ற என்பதை தெளிவுபடுத்த வேண்டும். எனக்கு மரணம் எவ்வளவு பயங்கரமான முறையில் வந்தாலும் அதனால் எனக்கு என்ன நான் உடல் அல்ல
-
ஒருவன் நிறைநிலையை அடைந்துவிட்டால் எல்லோரிடமும் நிறைவைக் காண்கிறான்.அவன் பிறரிடம் குறையை கண்டால்,தன் குறையை அவர்கள்மீது கற்பிப்பதே அதற்கு காரணம்
-
குறையை பற்றியோ.நிறையை பற்றியோ ஞானிக்கு கவலை இல்லை.யார் குறையை காண்பார்கள்?.யாரிடம் குறை இருக்கிறதோ அவர்களே அதை காண்பார்கள்
-
உடம்பை யார் காண்பார்கள்?யார் தான் உடம்பு என்று நினைக்கிறானோ அவனே உடம்பை காண்பான்.
-
நான் உடம்பு என்ற எண்ணம் உங்களிடமிருந்து விடுபடும்போது நீங்கள் உலகத்தையே பார்க்க மாட்டீர்கள்.அது என்றென்றைக்குமாக போய்விட்டது.

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-22


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-22
-
நான் பிரம்மம் என்றே எப்போதும்நினையுங்கள்.மற்ற எண்ணமெல்லாம் பலவீனத்தை தரும் என்று கருதி விலக்கிவிடுங்கள்.நீங்கள் ஒரு ஆண்,பெண் என்ற எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள்
-
நானே பேசுபவன்.நானே அதை கேட்பவன்.நானே ஆசிரியன்,நானே மாணவன்.நானே ஆக்குபவன்,நானே ஆக்கப்படும் பொருள்.இந்த நிலை வரும்போது பயம் நம்மை விட்டு அகலுகிறது
-
நானே பிரம்மம்.இந்த உண்மையை மீண்டும் மீண்டும் சிந்தியுங்கள்.இந்த உண்மையை கேட்டுக்கேட்டு உங்கள் உள்ளம் நிறையட்டும்.ஒவ்வொரு துளி ரத்தத்திலும் இந்த உண்மை நிறையட்டும்
-
நானே அவன்.நானே அவன் என்று எப்போதும் சொல்லுங்கள்.மரணத்தின் வாயில் இருக்கும்போதும்கூட நானே அவன் என்று சொல்லுங்கள்
-
மரணத்தின் வாயிலில் இருக்கம்போதும்.பேராபத்தை எதிர்கொள்ளும்போதும்,கடுமையான போர் முனையிலும்,அடர்ந்த காட்டின் நடுவிலும் நானே அவன் நானே அவன் என்று முழங்குங்கள்
-
பலவீனர்களால் ஒருபோதும் ஆன்மாவை அடையமுடியாது.இறைவா நான் இழிந்த பாவி என்று சொல்லவே சொல்லாதீர்கள்.உங்களுக்கு யார் உதவுவார்கள்.நீங்களே அல்லவா பிரபஞ்சத்திற்கே உதவுபவர்கள்
-
உங்களுக்கு உதவக்கூடிய மனிதனோ,தேவனோ,அசுரனோ எங்கிருக்கிறான்?உங்களை மீறும் சக்தி எங்கிருக்கிறது?நீங்களே பிரபஞ்சத்தின் தலைவர்.நீங்கள் யாரிடமிருந்து உதவியை நாட முடியும்?
-
உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறியபோது வெளியில் உள்ள ஏதோ ஒரு சக்தி அவற்றை நிறைவேற்றியது என்று அறியாமை காரணமாக எண்ணினீர்கள்.ஆனால் வெளியே இருந்து உங்களுக்கு உதபுபவர் யாருமே இல்லை
-
பிரபஞ்சத்தைப் படைத்தவர் நீங்களே.பட்டுப்பூச்சியை போன்று நீங்களே உங்களைச்சுற்றி ஒரு கூட்டை உருவாக்கிக்கொண்டு அதில்சிறைபட்டு கிடக்கிறீர்கள்.உங்களை யார் காப்பார்கள்?
-
நானே அவன் என்று எப்போதும் சொல்லுங்கள்.இது உங்கள் நெஞ்சில் உள்ள குப்பைகள் எல்லாவற்றையும் அழித்துவிடும்.உங்களுக்குள் உள்ள பேராற்றலை இவை எழுப்பிவிடும்
-
பலவீனம் என்ற எணண்ம் இருக்கின்ற இடத்தை நெருங்கவே நெருங்காதீர்கள்.ஞானியாக வேண்டுமானால் எல்லா பலவீனங்களையும் விட்டுவிடுங்கள்.
-
சாதனையை தொடங்கும்முன் உங்கள் மனத்தில் எந்தவித ஐயமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தர்க்க வாதங்களை கேட்காதீர்கள்.நீங்களும் வாதத்தில் இறங்காதீர்கள்.வாயை இறுக மூடிக்கொள்ளுங்கள்
-
ஆரம்பத்தில் நீங்களும் ஆராய்சி செய்தீர்கள்.வாதம்புரிந்தீர்கள்.இப்போது உங்களுக்கு எல்லாம் தெளிவாகிவிட்டது.இன்னும் என்ன வேண்டும்?இனி இந்த உண்மையை எப்போதும் தியானம் செய்யுங்கள்.

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-21


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-21
-
நீங்கள் எங்கும் நிறைந்தவர்கள்.வானம் நகர்வதில்லை.ஆனால் மேகங்கள் மேற்பரப்பில் நகர்கின்றன.வானம்தான் நகர்கிறது என்று நாம் ஒருவேளை நினைக்கலாம்
-
நாம் கனவு காணும்போது அந்த நிகழ்சிசிகள் நன்றாக தொடர்புடையவை போல்தான் தோன்றுகின்றன.அந்த செயல்கள் நடைபெற முடியாது என்று கனவு காணும்போது நமக்கு தோன்றுவதில்லை.விழித்தபிறகே புரிகிறது
-
உலகம் என்ற இந்த கனவிலிருந்து விழிப்படைந்து அதை உண்மையுடன் ஒப்பிடும்போது,அது தொடர்பற்றதாக முன்னுக்குபின் முரணாக இருப்பது நமக்கு தெரியும்
-
உங்களிலிருந்து வேறான இறைவன் இல்லை.உங்களைவிட உயர்ந்த.உங்களைவிட உண்மையான இறைவனும் இல்லை.உங்கள்முன் தேவதைகள் சாதாரணமானவர்களே
-
இறைவன் மனிதனை தன் பிரதிபிம்பமாக படைத்தார் என்பது சரியல்ல. மனிதனே இறைவனைத் தன் பிரதிபிம்பமாக படைத்தான் என்பதுதான் சரி
-
பிரபஞ்சம் எங்குமே தெய்வங்களை நம் பிரதிபிம்பமாக நாமே உருவாக்கியிருக்கிறோம்.நாமே ஒரு தெய்வத்தை உருவாக்கி பிறகு அதன் காலில் விழுந்து வணங்குகிறோம்.
-
இந்த பிரபங்சத்தின் அழியாத ஜீவன்நாம்.என்றாலும் நம்மை ஆண்களாக,பெண்களாக கற்பனை செய்துகொண்டு, ஒருவனது கோபச் சொல்லுக்கு அஞ்சுகிறோம்.எவ்வளவு பயங்கரமான அடிமைத்தனம்
-
இந்த பிரபஞ்சம் யாருடைய பிரதிபிம்பமோ,இந்த சூரியனும்,சந்திரனும் யாருடைய அம்சங்களோ அந்த நான்,பயங்கர அடிமையாக பிறர் காலடியில் நசுங்கிக்கிடக்கிறேன்.
-
இந்த பிரபஞ்சமே நமக்குரியது,ஆனால் நம்மிடம் அன்பாக பேசினால் மகிழ்கிறோம்,கோபப்பட்டால் துன்புறுகிறோம்.நம் நிலைமையை எண்ணிப்பாருங்கள்.உடலுக்கு அடிமை.மனத்திற்கு அடிமை
-
அன்புக்கு அடிமை,கோபத்திற்கு அடிமை,ஆசைக்கு அடிமை,இன்பத்திற்கு அடிமை,வாழ்விற்கு அடிமை,சாவிற்கு அடிமை எல்லாவற்றிறிகும் அடிமை.இந்த அடிமைத்தளையை உடைத்து எறியுங்கள்
-
இந்த ஆன்மாவைப்பற்றி முதலில் கேட்க வேண்டும். பிறகு சிந்திக்க வேண்டும். பிறகு தியானிக்க வேண்டும்
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-20


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-20
-
பக்தன் எல்லைற்ற அன்புருவான இறைவனிடம் அன்புசெலுத்தி மற்ற சிற்றின்பங்களைத் துறக்கிறான்.
-
எது மனிதனுக்கு அதிகஇன்பம் தருகிறதோ அதுவே அவனுக்கு மிகவும் பலன் தருவதாகும்.ஆன்மீக இன்பமே மிக உயர்ந்த இன்பம்
-
அனைத்து விஞ்ஞானத் துறையின் நோக்கம் என்ன? சமுதாயத்திற்கு அதிக இன்பம் தேடித்தருவது.அதிக இன்பம் கிடைப்பதை எடுத்துக்கொண்டு,குறைந்த இன்பம் உள்ளதை மனிதன் விட்டுவிடுகிறான்
-
மிருகங்களுக்கும்,மிருக நிலையில் உள்ள மனிதர்களுக்கும் இன்பம் உடலளவில்தான் உள்ளது.சற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் எண்ணங்களில் இன்பம் காண்கிறார்கள்.ஞானி மிக உயர்ந்த இன்பத்தை சுவைக்கிறான்
-
எந்திரங்கள் போல் உழைத்து தேய்பவர்கள் யாரும் உண்மையில் எந்த இன்பத்தையும் அனுபவிப்பதில்லை.இவர்களின் உழைப்பால் இன்பத்தை அனுபவிப்பவன் அறிஞனே
-
முட்டாள்கள் எந்த இன்பத்தையும் அனுபவிப்பதில்லை.தன்னை அறியாமலே அவன் பிறரது இன்பத்திற்காக உழைக்கிறான்.
-
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் அந்த பொருளே, புலன்களின் மூலம் பார்க்கப்படும்போது உலகமாக காட்சியளிக்கிறது
-
மனிதனுக்குள் ஆன்மா உள்ளது என்று எண்ணிவிடக்கூடாது.ஆன்மாதான் புலன்கள் என்ற பிரதிபிம்மங்கள் மூலம் பார்க்கப்படும்போது உடல் என்ற பெயரை பெறுகிறது.எண்ணத்தின் மூலம் பார்த்தால் அதுவே மனமாகிறது
-
உண்மையில் இருப்பது ஒரே ஆன்மாதான்.அதுவே காட்சி வேறுபாடு காரணமாக சிலவேளைகளில் உடலாகவும்,சில வேளைகளில் மனமாகவும்,சிலவேளைகளில் ஆன்மாவாகவும் அழைக்கப்படுகிறது.
-
அஞ்ஞானியின் பார்வைக்கு ஆன்மா உலகமாக தெரிகிறது.அறிவு உயரும்போது ஆன்மா எண்ணவுலகமாக தெரிகிறது.ஞானம் பெறும்போது மாயை மறைந்து ஆன்மா மட்டும் தெரிகிறது
-
பிரபஞ்சத்தில் ஆன்மா,மனம்.உடல் என்று மூன்று இல்லை.இருப்பது ஒன்றுதான். மனமயக்கத்தால் கயிறு பாம்பாக தெரிகிறது.ஆன்மாவை பார்க்கும்போது உடல்,மனம் மறைந்துவிடும்.உடலை பார்க்கும்வரை ஆன்மா தெரியாது
-
நாம் நம்மை உடம்பு என்று காணும்போது உடம்பாகத்தான் தோன்றும்.பலர் அப்படித்தான் காண்கிறார்கள்.அவர்கள் நான் ஆன்மா என்று பேசுவது வெட்டிப்பேச்சு.
-
உண்மையைச் சொல்வதானால் யாரும் பிறப்பதும் இல்லை,இறப்பதும் இல்லை. சொர்க்கம்,நரகம்,இந்த உலகம் எதுவும் இல்லை.இவை உண்மையில் என்றும் இருந்ததே இல்லை
-
மனிதன் அறியாமையில் மூழ்கியிருக்கும்போது சொர்க்கத்திற்கும் அதுபோன்ற உலகங்களுக்கும் போக விரும்புகிறான்

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-19


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-19
-
பிரபஞ்சத்தை பொறுத்தவரை அதை ஆட்சி செய்வது சட்டதிட்டங்களே.மாயைக்கு அப்பால் சட்டதிட்டங்கள் எதவும் இல்லை
-
காலம்,இடம்,காரணகாரியம் என்ற நியதிகளுக்குள் நீ கட்டுப்பட்டிருக்கும்வரை நான் சுதந்திரன் என்று சொல்லிக்கொள்வது பொருளற்ற பேச்சு.இந்த மாயைக்கு உட்பட்டவை எல்லாம் சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டவை
-
உனது ஒவ்வோர் எண்ணத்திற்கும், உணர்ச்சி எழுச்சிக்கும் காரணம் உண்டு.சுதந்திர சங்கல்பம் என்றுசொல்வது பொருளற்றது.மாயைக்குள் சுதந்திரம் என்பது இல்லவே இல்லை
-
நீ கனவில் இருக்கும்போது அரக்கன் உன்னை துரத்துவதாக வைத்துக்கொள்வோம்.அப்போது அது கனவு என்று உனக்கு தெரியாது.அது உண்மை என்றே பயந்து ஓடுகிறாய்
-
உருவமுள்ள இறைவன்,விலங்கு,மக்கள் என்ற எண்ணம் எல்லாம் மாயைக்கு உட்பட்டவை. எனவே இவை வெறும் கற்பனைகள்,பொய்த்தோற்றங்கள்.வெறும் கனவுகள்
-
இந்த பிரபஞ்சம் உண்மை,உருவமுள்ள இறைவன் என்பது கற்பனை என்று சிறர் கூறுகிறார்கள்.ஒன்று உண்மையானால் இன்னொன்றும் உண்மைதான்.ஒன்று கற்பனையானால் இன்னொன்றும் கற்பனைதான்.
-
இந்த உலகமும் கற்பனை, மறுஉலகமும் கற்பனை என்று என்று சொல்பவனே உண்மையான நாத்திகனாக இருக்க முடியும்.
-
பேச்சு.சிந்தனை,அறிவு,புத்தி இவற்றின் எல்லைக்கு உட்பட்டவை எல்லாமே மாயைக்கு உட்பட்டது.இவற்றிற்கு அப்பாற்பட்டு நிற்பது மெய்பொருள்
-
ஒரு மாயையை அழித்து வெல்ல இன்னொரு மாயையை பயன்படுத்த வேண்டும். ஒரு முள்ளை எடுக்க இன்னொரு முள்ளை பயன்படுத்த வேண்டும்.
-
நாம் சுதந்திரம் பெறப்போவதில்லை.நாம் என்றுமே சுதந்திரர்கள்தான் என்பதை எப்போதும் மறக்கக்கூடாது
-
நாம் இன்பமாக இருக்கிறோம்,துன்பத்தை அனுபவிக்கிறோம் என்பது மிகப்பெரிய மனமயக்கங்கள்
-
முக்திபெறுவதற்காக பாடுபட வேண்டும்,வழிபட வேண்டும் என்பது மனமயக்கம்.நாம் ஏற்கனவே முக்தி நிலையில்தான் இருக்கிறோம்
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-18


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-18
-
புத்தகம்-3 லிருந்து எடுக்கப்பட்டது
-
இந்த பிரபஞ்சத்தில் உள்ள உடல்கள் எல்லாம் என்னுடையதே.ஆயிரம் உடல்களில் நான் துன்பத்தில் உழன்றாலும்,ஆயிரமாயிரம் உடல்களில் நான் இன்பத்தில் திளைக்கிறேன்.
-
யார் யாரை குற்றம் சொல்வது? யார் யாரை புகழ்வது?யாரை விலக்குவது?யாரை தேடுவது? நான் யாரையும் விலக்குவதும் இல்லை. நான் யாரையும் தேடுவதும் இல்லை. நானே அல்லவா முழுப் பிரபஞ்சமும்
-
பிரபஞ்சமே இடிந்து விழட்டும்.அது இருந்தால் அல்லவா இடிந்துவிழ என்று புன்சிரிப்புடன் ஞானி கூறுவான்.பிரபஞ்சம் என்ற ஒன்று இருந்தால்தானே அது இடிந்துவிழ.அவையெல்லாம் வெறும் தோற்றம்
-
மனிதன் ஆராய்ந்து பார்த்தால் இருப்பது ஒன்றேதான் மற்றவை எல்லாம் வெறும் தோற்றங்களே என்ற முடிவுக்குத்தான் வரமுடியும்
-
இந்த மனமயக்கம் எப்படி வந்தது?பதிலும் கேள்வியைப்போலவே நுட்பமானதே.விடையற்ற கேள்விக்கு விடையை எதிர்பார்க்க கூடாது என்பதே அதற்கான விடை
-
காரண காரிய நியதிகளுக்கு அப்பாற்பட்ட கடவுள் எப்படி காரண காரியநியதிகளுக்கு கட்டுப்பபட்டார் என்று கேட்பதே தவறானது.அப்பாற்பட்டவர் ,கட்டுப்பட்டால் பிறகு எப்படி அப்பாற்பட்டவராக இருக்க முடியும்?
-
மனத்தை கடந்து இருக்கும் கடவுளைப் பற்றி தெரிந்து கொள்ள மனத்தால் எப்படி முடியும்? கடவுளை காண்பதற்கு முன் மனமே இருக்காதே.மனத்தில் கடவுளைபற்றிய பதிவு இல்லாதபோது அவரை எப்படி விளக்க முடியும்?
-
ஒரு நோய்தான் இன்னொரு நோய்க்கு காரணமே தவிர. நல்ல ஆரோக்கியமான உடல் நோய்க்கு காரணமல்ல.அதேபோல் மாயைதான் இன்னொரு மாயைக்கு காரணம்.இறைவன் மாயைக்கு காரணம் அல்ல
-
வாழ்க்கையில் பல்லாயிரம் கனவு காண்கிறீர்கள்.அவைகள் வரும் போகும்.அதுபோல் இந்த வாழ்க்கை என்பதும் வரும்போகும் ஆனால் நீங்கள் மாறாமல் அப்படியே இருக்கிறீர்கள்
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-17


சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-17
-
நான் ஆண்,நான் பெண்,எனக்கு சிந்தனை உண்டு,மனம் உண்டு என்பவையெல்லாம் வெறும் மனமயக்கங்கள்.நீ சிந்திப்பதே இல்லை. உனக்கு உடல் என்ற ஒன்று இல்லவே இல்லை
-
சூரியர்கள்,சந்திரர்கள்,நட்சத்திரங்கள்,பூமிகள் எல்லாவற்றிற்கும் கடவுள் நீயே.சூரியன் ஒளி வீசுவது உன்னால் நட்சத்திரங்கள் மின்னுவது உன்னால்
-
எல்லோருக்குள்ளும் நீயே இருக்கிறாய்.எல்லாம் நீயே.யாரை ஒதுக்குவதுஃயாரை ஏற்றுக்கொள்வது? எல்லாற்றிலுமுள்ள எல்லாமும் நீயேதான்
-
பிரபஞ்ச தோற்றம் என்ற மாயை ஒருநாள் மறைந்துவிடும்.பிரபஞ்சம் முழுவதுமே மறைந்துவிடும்,கரைந்துவிடும்.இதுவே அனுபூதி
-
தத்துவம் என்பது வெறும் கேலிப்பேச்சோ வெட்டிப்பேச்சோ அல்ல,அது அனுபூதியில் அறியப்பட வேண்டிய ஒன்று
-
எந்த பற்றும் இல்லாமல் இந்த உலகில் வாழக்கூடியவனே ஜீவன்முக்தன்.அவன் தண்ணீரில் உள்ள தாமரை இலைபோன்றவன். நீரிலேயே இருந்தாலும் அது நீரில் நனைவதில்லை
-
ஜீவன்முக்தர்கள் தானும் பரம்பொருளும் ஒன்றே என்பதை அனுபூதியில் உணர்ந்துவிட்டார்கள்.அவர்கள் மனிதர்களைவிட உயிர்கள் அனைத்தையும்விட உயர்ந்தவர்கள்
-
இறைவனுக்கும் உனக்கும் சிறிது வேற்றுமை உண்டு என்ற எண்ணம்கூட உன்னை அச்சத்தில் ஆழ்ந்திவிடும்.நீயே அவன் உனக்கும் இறைவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை
-
எங்கே யாரும் யாரையும் காண்பதில்லையோ,யாரும் யாரிடமும் பேசுவதில்லையோ,அதுவே மிக உயர்ந்தது.சிறந்தது.அதுவே பிரம்மம்
-
பிரம்மமாக இருக்கம் நீ என்றும் அதுவாகவே இருக்கிறாய்.அந்த நிலையில் உலகம் என்னவாகும்?உலகிற்கு நாம் என்ன நன்மைசெய்யமுடியும்?இந்த கேள்விகளுக்கு அங்கு இடமே இல்லை
-
உண்மையில் நாம் ஆன்மாவை உள்ளது உள்ளபடி அறிந்திருந்தால்.ஆன்மாவைத்தவிர இரண்டாவது இல்லை என்பதை அறிந்திருந்தால்,மற்றவை எல்லாம் கனவே என்ற உண்மை நமக்கு புலப்பட்டிருக்கும்
-
பிரபங்சம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்றால் பிறகு யாருக்காக.எதற்காக நாம் கவலைப்பட வேண்டும்?எனவே துணிந்து சுதந்திரமாக இருங்கள்.
-
அறிவு உருவங்கள்,புலன் உருவங்கள்,நாம-ரூபங்கள் என்று அனைத்தையும் உடைத்தெறியும் துணிவு உள்ளவர்களாலேயே ஞானயோகியாக முடியும்
-
நான் உடல் அல்ல எனக்கு தலைவலி யோகவேண்டும் என்கிறான் ஒருவன்.நீ உடல் அல்ல என்றால் தலைவலி எங்கிருந்து வந்தது?உனக்கு பிறப்பு இல்லை .உனக்கு உடலே இல்லை
-
எனக்கு தாய் தந்தை என்று யாருமே இல்லை.நண்பர் பகைவர் என்று யாரும் இல்லை.ஏனென்றால் அவர்கள் எல்லோரும் நானே
-

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-16



சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-பாகம்-16
-
ஆன்மா உருவம் இல்லாதது.உருவம் இல்லாத ஒன்றை இங்கோ,அங்கோ,எங்கோ ஓர் இடத்தில் இருப்பதாக சொல்லமுடியாது.அது எங்கும் நிறைந்ததாகவே இருக்கும்
-
பிரபஞ்சத்திற்கு அப்பால் நின்று பிரபஞ்சத்தை இயக்கும் மூலஅறிவு சக்தியையே வேதாந்திகள் இறைவன் என்கிறார்கள்.
-
பிரபஞ்சம் இறைவனிலிருந்து வேறானது அல்ல.அவரே பிரபஞ்சமாக ஆகியிருக்கிறார்
-
இறைவன் பிரபஞ்சம் ஏற்பட காரணம் மட்டுமல்ல,பிரபஞ்சப் பொருளும் அவரே,இருப்பதெல்லாம் அவரே
-
ஒரு நெருப்புப்பிழம்பிலிருந்து கோடிக்கணக்கான தீப்பொறிகள் சிதறி செல்வதுபோல் அந்தப் பரம்பொருளிலிருந்து இந்த ஆன்மாக்கள் எல்லாம் வந்துள்ளன
-
ஒரு சூரியன் பலகோடி நீர்த்துளிகளில் பட்டு பலகோடி சூரியன்களாக தெரிகிறது.இவை தோற்றம்தான்.அதேபோல் பல்வேறு உயிர்களாக தெரியும் இறைவன் வெறும் தோற்றம் மட்டுமே
-
பிரபஞ்சத்திலுள்ள எல்லையற்ற ஒரே ஒருவர் இறைவன் மட்டுமே.அவரே நான் நீ என்றெல்லாம் தோன்றுகிறார்.இந்த வேறுபாடுகள் எல்லாம் வெறும் மனமயக்கம்
-
காலம்,இடம்,காரண காரியம் என்ற வலையின் வழியாக பார்ப்பதால் இறைவன் பிரபஞ்சமாக தெரிகிறார்
-
நீங்கள் உங்கள் முகத்தை கண்ணாடி என்ற பிரதி பிம்பத்தின் மூலம் காண்பதுபோல இறைவனும் பிரதிபிம்பத்தின் மூலமாக அன்றி அவர் தன்னைக் காணவோ அறியவோ முடியாது.
-
ஆன்மா தன்னைத்தானே காணமுடியாது.நிறைமனிதன்தான் ஆன்மாவின் மிகச்சிறந்த பிரதிபலிப்பு.
-
நிறை மனிதர்களே என்றுமுள்ள பரம்பொருளின் மிகமேலான வெளிப்பாடு.இவர்களையே அவதாரபுருஷர்கள் என்று மக்கள் வழிபடுகிறார்கள்.
-
நீதான் பிரபஞ்சத்தைப் படைத்தவன் என்றால், நீ வேண்டுவதெல்லாம் கிடைக்கும்.ஏனெனில் உனக்கு வேண்டியதை நீயே படைத்துக்கொள்ள முடியுமே
-
இந்த பிறவியிலும் மறுபிறவியிலும் சரி சுகபோகங்களுக்கு முதலிடம் கொடுக்காதீர்கள்.வாழ்வு என்பதையே மறுத்துவிடுங்கள்.ஏனெனில் வாழ்வு என்பது சாவின் மறுபெயர்
-
மனத்தை வெளித் தூண்டுதல் காரணமாகவோ.உள் தூண்டுதல் காரணமாகவோ கிளர்ந்து எழாமல்,அலைகளாக மாறாமல் அமைதிப்படுத்த வேண்டும்
-
நான் ஆன்மா.பிரபஞ்சத்தைப்பற்றி எனக்கென்ன கவலை.இன்ப-துன்பம்,நன்மை-தீமை.வெப்பம்-குளிர் எதுவும் எனக்கு ஒரு பொருட்டல்ல என்று கூறுபவர்கள் ஞானயோகிகள்
-
பிரபஞ்சம் முழுவதும் மறையட்டும்,தனியே நில்லுங்கள்.நான் குறைவற்ற உண்மை,குறைவற்ற அறிவு,குறைவற்ற இன்பம்.நானே அவன்! நானே அவன்!
-

முக்தி பெறுவதற்கான வழிகள்

முக்தி பெறுவதற்கான வழிகள்
-
பிரம்மச்சாரிகளுக்கான வழி
-
1.உலகத்தைவிட்டு விலகி சாதுக்களுடன் சில ஆண்டுகள் வாழவேண்டும்
2.இறைவனிடம் பக்தியும்,ஞானமும் பெற்ற பின் மடங்களைவிட்டு விலகி தனிமையில் பிச்சையேற்று வாழவேண்டும்
3.மனித தொடர்புகளைவிட்டு விலகி உணவை குறைத்துக்கொண்டு,குகைகளில் அல்லது அதைப்போன்ற இடங்களில் வாழவேண்டும்.
4.பிரம்மஞானம்பெற்ற பிறகு 99 சதவீதம் பேர் மீண்டும் இந்த உலக வாழ்க்கைக்கு திரும்புவதில்லை.முக்தியடைந்துவிடுவார்கள். 1 சதவீதம் பேர் மீண்டும் இந்த உலகத்திற்கு வருகிறார்கள்.அவர்கள் குரு-என்ற தகுதியை பெறுகிறார்கள்
-
இல்லறத்தார்களுக்கான வழி
-
1.அவ்வப்போது இல்லறத்தைவிட்டு விலகி குருவை சந்திக்க வேண்டும் அல்லது உண்மையான சாதுக்களுடன் வாழவேண்டும்
2.இறைவனிடம் பக்தியும் ஞானமும் அதிகமாகும்போது கடமைகள் குறைந்துகொண்டே வந்து கடைசியில் குடும்ப கடமைகளிலிருந்து ஓய்வு ஏற்படும்
3.வீட்டின் ஒரு அறையிலோ அல்லது வீட்டிலிருந்து சற்று தூரத்திலோ தனிமையில் வாழவேண்டும்.
4.பிரம்மஞானம் பெற்ற பிறகு 99 சதவீதம் பேர் உடலைவிட்டு விட்டு முக்தியடைந்துவிடுவார்கள்.1 சதவீதம் பேர் மீண்டும் இந்த உலகத்திற்கு வருகிறார்கள்.அவர்கள் குரு-என்ற தகுதியை பெறுகிறார்கள்
-
இதில் நீங்கள் எந்த பிரிவு என்று என்னை கேட்டால். பல வருடங்கள் மடங்களில் தங்கியிருந்தாலும் குகைளில் சென்று தவம் புரியும் அளவுக்கு செல்லவில்லை,பல வருடங்கள் இல்லறத்தில் வாழ்ந்திருந்தாலும் திருமணம்செய்யவில்லை எந்த பெண்ணையும் தொட்டதில்லை.
-
சுவாமி வித்யானந்தர்

புரோகிதன் பிராம்மணன் அல்ல

புரோகிதன் பிராம்மணன் அல்ல
-----
நான்கு ஜாதிகள் என்பது மனிதனின் வளர்சியில் நிகழும் நான்கு படிகளை பற்றி குறிப்பிடுகிறது. முதலில் வேலைக்காரனாக(சூத்திரன்) ஒரு மனிதன் தன் பயணத்தை தொடங்குகிறான்.பின்பு சுயதொழில் மூலம் (வைசியன்) முன்னேறுகிறான்.நன்றாக பணம் சம்பாதித்த பிறகு மக்களுக்கு உதவுவதற்காக அரசியலில் ஈடுபடுகிறான்(சத்திரியன்). மக்களை சிறப்பாக வழிநடத்தியபிறகு அனைத்தையும் விட்டுவிட்டு பிரம்மத்தை குறித்து தியானம் செய்கிறான்(பிராம்மணன்). இந்த நான்கு ஜாதிகளை பற்றிதான் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இவைகள் ஒவ்வொன்றையும் கடந்து மனிதன் கடைசியில் பிராம்மணனாக வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறக்க வேண்டும்.இதனால்தான் வேதங்கள் பிராம்மணன் உயர்ந்தவன் என்று கூறுகிறது.பிறப்பான் வருபவன் பிராமணன் அல்ல அவன் புரோகிதன்.அது மற்ற தொழில்களைபோல ஒரு தொழில்.புரோகிதன் ஒருவேளை சூத்திரனாக இருக்கலாம் அல்லது வைசியனாக இருக்கலாம்.பிராம்மணனாக இருக்க முடியாது.பிறப்பால் வரும் ஜாதி வேதத்திற்கு எதிரானது என்பதை வேதங்களே கூறுகின்றன.ஆகவே வேதத்தை பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்
-
சுவாமி வித்யானந்தர் (16.4.2018)

Saturday, 28 April 2018

இந்துமதம் வளர்ந்த வரலாறு


இந்துமதம் வளர்ந்த வரலாறு
-
புத்தமதம்,சமணமதம் வளர்வதற்கு முன்பு இந்தியாவில் வேதமதம் வழக்கத்தில் இருந்தது.அந்த காலத்தில் உலகம் முழுவதும் தேவர்,தேவி வழிபாடுகள் நிறைந்திருந்தன.அவைகளை மகிழ்விப்பதற்காக மிருகபலிகளும்,பல நாடுகளில் மனித பலிகளும் கொடுக்கப்பட்டன.உபநிடங்கள் இவைகளைவிட மேலான ஞானமார்க்கத்தை(சாங்கியம்) போதித்தாலும்,அது மக்களிடையே பிரபலமாகவில்லை.காடுகளில் வாழ்ந்துவந்த ரிஷிகள்தான் அவைகளை பின்பற்றினார்கள்.பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறும் யோக மார்க்கத்தில் தேவர்,தேவி வழிபாடுகளும் சொர்க்கமும் அதை கடந்து முக்தி பற்றிய கருத்தும் உள்ளது.ஆனால் முக்தி பற்றிய கருத்து இல்லறத்தார்களிடம் பிரபலமாகவில்லை.அவர்களிடம் யாகங்கள்செய்து உயிர்பலி கொடுத்து தேவர்களை மகிழ்வித்து, சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற எணண்மே அதிகம் இருந்தது
-
2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தரின் கடின முயற்சியால் வேதங்களின் கர்மகாண்டம்(தேவர் வழிபாடு) பெரும் சரிவை சந்தித்தது.உலகம் முழுவதும் இப்படிப்பட்ட தேவர் வழிபாடுகளை வீழ்த்தி புத்தமதம் பரவியது. கிரேக்க தேவதேவியர்,ரோமர்களின் தேவ தேவியர்கள்,பாபிலோனியர்கள் வழிபாடுகள் போன்ற இடங்களில் எல்லாம் புத்தமதம் வெவ்வேறு பெயர்களில் பரவி அந்த வழிபாடுகளை நிறுத்தியது..
-
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நம்மிடமும் அப்படிப்பட்ட வழிபாடுகள் இருந்திருக்கின்றன.அதே வேளையில் சித்தர்கள் காட்டிய ஞானநெறி பாதையும் இருந்தது.வடஇந்திவை போலவே இங்கேயும் அது ஒருசிலரால் மட்டுமே பின்பற்றப்பட்டது
-
புத்தமதத்தின் கடவுள் மறுப்பு கொள்கை என்பது வேதத்திற்கு எதிரானது.புத்தமதம் உலகம் முழுவதும் படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தது.அதற்கு முக்கிய காரணம் புத்தமதம் துறவிகளுக்கான மதம். நிர்வாணம் என்ற நிலையை துறவிகளால் மட்டுமே அடைய முடியும் என அது கூறியதால்.தகுதி இல்லாத பலரும் புத்தமடத்தில் சேர்ந்து படிப்படியாக மடத்தின் புனிதத்தை கெடுத்து அதை விபச்சாரக்கூடமாக மாற்றிவிட்டார்கள். புத்தமத்தின் ஒரு பிரிவாக உருவானதுதான் கிறிஸ்தவமதம். புத்தமதத்தை எதிர்த்து உருவானதுதான் இஸ்லாம். அந்த காலத்தில் ஈரான்,ஈராக்,ஆப்கான்,.அதை சுற்றியுள்ள பல நாடுகளில் அந்த நாளில் மக்கள் பின்பற்றிய மதம் புத்தமதம்.அந்த புத்தமதத்தை வீழ்த்தி அந்த இடங்களில் முஸ்லீம்மதம் பரவியது
-
இந்தியாவில் புத்தமதத்தை வீழ்த்தியது ஆதிசங்கரர்.அப்போது மக்களுக்கு புதிதாக ஒரு மதம் தேவைப்பட்டது.ஆகவே சங்கரர் வேததத்தின் ஞான காண்டமாகிய உபநிடதங்களை,அதாவது ரிஷிகள் பின்பற்றிய மதத்தை மக்களிடம் பரப்ப முடிவுசெய்தார்.
-
அதற்கு முன்பு இருந்த தேவர்,தேவி வழிபாடுகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்தார்.யாகங்கள்,உயிர் பலிகள் போன்றவற்றை நீக்கிவிட்டு, பிரம்மத்தை அதாவது உருவமற்ற கடவுளை உருவத்துடன் வழிபடும் முறையை கொண்டு வந்தார்.தென்னிந்தியாவில் ஏற்கனவே முருகன்,திருமால்(கிருஷ்ணன்),கொற்றவை(காளி) இந்திரன்,வருணன் என்ற வழிபாடுகள் இருந்தன.ஆனால் இவைகள் தத்துவத்தின் பார்வையில் கடவுள் வழிபாடு அல்லை. தேவன் தேவி வழிபாடுதான். சித்தர்கள் வழிபட்ட லிங்க வழிபாடு என்பது தத்துவத்தின் விளக்கமாக உள்ளது.அதாவது முக்தியடைந்த சித்தர்களின் சமாதியில் லிங்கத்தை வைத்து அதை வழிபாடுவார்கள்.அங்கே லிங்கம் என்பது முக்தியை குறிக்கிறது.சுதந்திரத்தை குறிக்கிறது.இதுதான் வீடுபேறு,உயர்நிலை,இறைநிலை என்பதற்கு கொடுக்கப்பட்ட ஒரு சின்னம்.
-
.லிங்கம் என்பது பரவலாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டது.பெரும்பாலான மான்களின் சமாதியில் இந்த லிங்கம் வைக்கப்பட்டது.பிற்காலத்தில் சாதாரணமக்களின் சமாதியில்கூட இந்த லிங்கம் வைக்கப்பபட்டது.
மேலே உள்ள ஐந்து வழிபாட்டிற்குள் இது வராததற்கு காரணம் இது முக்தியை குறிக்க கொடுக்கப்பட்ட ஒரு சின்னம் மட்டுமே.
-
ஆதி சங்கரர் நமது தென்நாட்டை சேர்ந்தவர்.தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டவராக இருக்கலாம்.சமஸ்கிருதத்தில் நல்ல புலமைபெற்றவர்.சிறுவயதிலேயே வீட்டை துறந்து வடநாடு நோக்கி சென்றதால் தமிழ்மொழியை அதிகம் படித்திருக்க வாய்ப்பில்லை. அப்போது மலையாளமொழி உருவாகவில்லை. அவர வாழ்ந்த காலத்தில் தென் இந்தியாவில் புத்தமதம் தன் ஆதிகக்த்தை செலுத்த துவங்கியிருந்தது.அதை வீழ்த்த அதன் பிறப்பிடமான வடஇந்தியாவிற் சென்று வாதத்தில் வென்று புத்தமதத்தை வீழ்த்தி,அவர்களை வேதமதத்திற்கு மீண்டும் திரும்பும்படி செய்தார்.
-
கடவுளை உருவத்தில் வழிபடும் ஆறு வழிபாடுகளை கொண்டு வந்தார்.அதேநேரத்தில் தேவர்,தேவி வழிபாட்டை முற்றிலும் நீக்காமல் பெயரளவிற்கு அதை இருக்கும்படி செய்தார். ஏற்கனவே தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த முருகன்,திருமால்,காளி, லிங்கம்,வடஇந்தியாவிலிருந்து ருத்திரன்(சிவன்) சூரியம்(ஜோதி),கணபதி போன்ற வழிபாடுகளை கடவுள் நிலைக்கு உயர்த்தினார்.இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் தேவர் நிலையில் இருந்த வழிபாடுகளை கடவுள் நிலைக்கு உயர்த்தினார்.அதாவது இந்த ஆறு மதத்தில் உள்ள கடவுளுக்கும் உருவம் கிடையாது.அதனால்தான் ஓம்முருகா,ஓம்கணபதி,ஓம்நமசிவா,ஓம் நமோ நாராயணாய.ஓம்காளி,ஓம் சூர்யா என்று அனைத்திற்கும் முன் ஓம் என்பது சேர்க்கப்பட்டுள்ளது. ஓம் என்பது உருமற்ற தன்மையை குறிக்கிறது. கடவுளுக்கு உருவம் இல்லை.ஆனால் பக்தர்கள் விரும்பினால் மேலே உள்ள ஆறு உருவங்களில் வழிபடலாம்.அதே நேரத்தில் அவர்களுக்கு உருவம் இல்லை என்பதை நன்றான மனத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும்
-
இந்த ஆறு வழிபாடுகளை பிரபலப்படுத்துவதற்காக அவற்றிற்கான மந்திரங்களும்,வழிபடும் முறைகளும், கோவில்களும் உருவாக்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.வட இந்தியாவில் உள்ள புத்தமத கோவில்களில் உள்ள புத்தர் சிலைகளை மாற்றி இந்த சிலைகளை நிறுவ ஏற்பாடுசெய்தார். தென்னிந்தியாவில் புதிய கோவில்களை உருவாக்க ஏற்பாடு செய்தார்
-
நாம் கோவில்களில் சென்று வழிபடும்போது இறைவா உனக்கு உருவம் இல்லை.நீ எங்கும் நிறைந்தவன்.ஆனால் உருவமில்லாத உன்னை என்னால் வழிபட முடியவில்லை.ஆகவே எனக்கு பிடித்த இந்த உருவத்தில் உன்னை வழிபடுகிறேன். எனது பிழையை மன்னித்தருளவேண்டும்.எனது வழிபாட்டை ஏற்றுக்கொண்டு எனக்கு முக்தி தரவேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.பிராமணர்கள் வழிபடும்போது இவ்வாறு கூறுவார்கள்.
-
குழந்தை வரம்,நல்ல வேலை,குடும்ப பிரச்சினை போன்ற உலகியல் விஷயங்களுக்காக இந்த கடவுளை பிரார்த்தனை செய்யக்கூடாது. அதை பிரார்த்திக்க நவகிரகங்கள்,தேவர் தேவி,சிறுதெய்வங்கள்,குல தெய்வங்கள்,ஊர்தெய்வங்கள் என்று தனியாக வழிபாடு உண்டு.அங்கு சென்று தான் இவைகளை பிரார்த்திக்க வேண்டும்.கடவுளிடம் முக்தி மட்டுமே பிரார்திக்க வேண்டும்.உலகியல் விஷயங்களை பிரார்த்திப்பது முற்றிலும் தவறு என தத்துவம் கூறுகிறது.
-
ஆதிசங்கரரின் காலத்திற்கு பிறகு சைவநெறியும்,வைணவ நெறியும்,தாந்திரிக நெறிகளும் உருவாகின.முருகர்.கணபதி,லிங்கம்,ருத்திரன் எல்லாம் சைவமத்திற்குள் கொண்டுவரப்பட்டு அதற்கான புராணங்கள்,வழிபாடுகள்.தத்துவங்கள் எல்லாம் உருவாகின.அதேபோல் கிருஷ்ணர்,ராமர் போன்ற அவதாரங்களை உள்ளடக்கி வைணவ மார்க்கம் உருவானது.அவர்களும் தனியாக தத்துவங்களை உருவாக்கினார்கள்.சாக்தமதமும் அதேபோல பல வழிபாடுகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கியது. இவைகள் ஆதிசங்கரர் தோற்றுவித்தவை அல்ல.அவர் அவரது கருத்து இறைவன் ஒருவன் வழிபாடுகள் பல.உருவங்கள் பல.
-
அ அத்வைதம் கூறும் பிரம்மம்ானத்தில் மூழ்கியிருப்பார் பக்கத்தில் பார்வதியுடன் கைலாயம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்.முருகன்.கணபதி என்ற இரண்டு ஞானகுழந்தைகள் இருப்பார்கள்.அவர்களை சுற்றி ரிஷிகளும்.சிவபக்தர்களும் இருப்பார்கள்.
-
இதேபோல் வைணவ மதம் என்ன சொல்கிறது? வைகுண்டம் என்ற சொர்க்கத்தில் திருமால் ஆழ்ந்த தியானத்தில் இருப்பார் பக்கத்தில் லட்சுமிதேவியுடன் வீற்றிருப்பார்.
-
இந்த பிரபஞ்சத்தில் இதேபோல் இன்னும் பல சொர்க்கங்கள் இருக்கும். அங்கெல்லாம் இதேபோல பலர் இருப்பார்கள்.அங்கேயும் சிலர் தியானத்தில் மூழ்கியிருப்பார்கள்.
-
சிவன் தியானத்தில் எதை தியானித்துக்கொண்டிருப்பாரோ, திருமால் தியானத்தில் எதை தியானித்துக்கொண்டிருப்பாரோ மற்ற உலகங்களில் உள்ளவர்கள் எதை தியானித்துக்கொண்டிருப்பார்களோ அதுதான் கடவுள்.அதற்கு உருவம் இல்லை.
-
அதுதான் அத்வைதம் கூறும் பிரம்மம்
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர்(29-4-2018)
-

நாஸ்டர்டாமஸ் கணிப்புபடி


1.அந்த மனிதர் தென்னிந்தியாவை சேர்ந்தவராக இருப்பார்.அதிலும் மூன்று கடலும் சங்கமிக்கும் இடத்தை சேர்ந்தவராக இருப்பார்
-

2.தென்னிந்தியாவிலிருந்து தோன்றப்போகும் மகான் வியாழன் அதாவது குரு வழிபாடு உடையவராக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
-

3.அவர் ஒரு துறவியாக இருப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.மேலும் தலையில் தலைப்பாகை அணிந்திருப்பாராம்.
சுவாமிவிவேகானந்தர் தலைப்பாகை அணிந்தவர்
..
4.அவர் இந்தியாவை உலக அரங்கில் முன்னிலையில் கொண்டு வருவார்
-
5.அவர் கிறிஸ்தவத்திற்கு எதிராக இருப்பார்-
இஸ்லாம் மதத்திற்கு எதிராக செயல்படுவார்
-

-