Wednesday, 24 January 2018

போராட தயாராக இருங்கள்.நமது போராட்டம் என்பது

இந்தியா என்ற நாடு இன்று இருப்பதற்கு காரணம் இந்துமதம்தான்.இந்துமதம் இல்லையென்றால் மொழிவாரியாக நமது நாடு பல துண்டுகளாக சிதறிப்போயிருக்கும்.அத்துடன் பல மதங்கள் அழிந்துபோனதுபோல இந்துமதமும் அழிந்துபோயிருக்கும்.
-
ஒரு காலத்தில் மலேசியா இந்துநாடாக இருந்தது.இன்று முஸ்லீம் நாடாகிவிட்டது.இந்தோனேசியா இந்துநாடாக இருந்தது,இன்று முஸ்லீம் நாடாகிவிட்டது. கிழக்கு வங்காளம்(பங்ளாதேஷ்) இந்துநாடாக இருந்தது.இன்று இந்துக்கள் வாழமுடியாத சூழல் நிலவுகிறது. பாகிஸ்தான் நமது பண்டைய இந்துதேசமாக இருந்தது.இன்று பகைநாடாக இருக்கிறது.இந்துக்கள் எண்ணிக்கையில் ஒருவர் குறைந்தால்,எதிரிகளில் ஒருவர் அதிகரிக்கிறார் என்பதை புரிந்துகொள் என்று சுவாமி விவேகானந்தர் முன்பே கூறிவிட்டார்.இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்ததால்தான் பாகிஸ்தான்,பங்களாதேஷ் போன்றவை நமது எதிரிநாடாகிவிட்டது.இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்தால் எதிரிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதை புரிந்துகொள்ள நாம் தவறிவிட்டோம்
-
.தமிழ்நாட்டில் தற்போது தனிநாடுகேட்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.இந்துக்கள் என்ற போர்வையில் பல வேற்றுமதத்தினர் உலவிக்கொண்டிருக்கிறார்கள்.உண்மையில் இந்துக்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் கணிசமாக குறைந்துகொண்டுவருகிறது.இதை வெளியில் தெரியப்படுத்தாமல் பலர் மூடிமறைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழன் எப்போதுமே இந்தியனாக இருந்ததில்லை என்று பலர்
தற்போது கூறுகிறார்கள்.அதை நம்பும் கூட்டம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.ஒருவேளை தமிழ்நாடு தனிநாடானால் அங்கு இந்துமதம் இருக்காது.தமிழ்நாட்டின்மீது அக்கரை கொண்டவர்கள்போல் பேசும் மனிதர்களுக்கு பின்னால் வேற்றுமதத்தினர் மறைந்திருக்கிறார்கள் என்பதை நமது மக்கள் இன்னமும் உணரவில்லை.
-
ஆகவே வரப்போகும் ஆபத்தை உணர்ந்துகொள்ளுங்கள்.விழித்துக்கொள்ளுங்கள்.இந்தியநாட்டின் நன்மைக்காகவும்,இந்துமதத்தின் நன்மைக்காகவும் போராட தயாராக இருங்கள்.நமது போராட்டம் என்பது இந்துமதத்தை பரப்புவதுதான்.
-
பலர் இந்துமதத்திற்காக போராடுகிறார்கள்.ஆனால் இந்துமதத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியை செய்ய முன்வரவில்லை.காலம் காலமாக பாமர மக்கள் தாங்கள் நம்பிக்கொண்டிருப்பது தான் இந்துமதம் என நினைக்கிறார்கள். வேதாந்தத்தின் ஒளியை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டுசெல்ல இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பது முக்கியமாகும்.
-
இந்துமதத்தின் தத்துவத்தை கற்கவும்,சங்கம் அமைத்து செயல்படவும் விரும்பும் இளைஞர்கள் என்னை நேரில் சந்திக்கவும். மீண்டும் ஒரு இந்தியபோரில் பங்கேற்க தயாராக இருங்கள்.
-
சுவாமி வித்யானந்தர்....(20-1-2018
-

No comments:

Post a Comment