Thursday, 18 January 2018

இந்துக்களில் பெரும்பாலானவர்கள் பகவத்கீதை நூலை பார்த்ததுகூட இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களில் பெரும்பாலானவர்கள் பகவத்கீதை நூலை பார்த்ததுகூட இல்லை.அதில் கூறப்பட்டுள் கருத்துக்களை கேள்விப்பட்டதில்லை.இந்த நிலை மாறவேண்டும்.ஒவ்வொரு இல்லத்திலும் பகவத்கீதை நூல் இருக்க வேண்டும்.அத்துடன் பகவத்கீதைக்கு சுவாமி விவேகானந்தர் அளித்த கர்மயோகம் சொற்பொழிவு புத்தகமும் இருக்கவேண்டும்.
-
இதற்கு தேவையான பணம் நமக்கு கிடைத்துவிடும்.ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதற்கான சுயநலமற்ற,கீழ்படிதல் உள்ள இளைஞர்கள் தேவை.அவர்கள் இந்துமதத்தின் தத்துவங்களை பற்றி ஓரளவு தெரிந்துவைத்திருக்க வேண்டும். அவர்கள் ஒரு சங்கமாக செயல்படவேண்டும்.
-
இந்துமதத்தை பற்றி தெரிந்துகொள்ளவும்,சங்கம் அமைத்து செயல்பட விரும்பும் இளைஞர்கள் என்னை நேரில் தொடர்புகொள்ளலாம். கூகுள்மேப் மூலம் எனது இருப்பிடத்தை அறிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment