சுவாமி விவேகானந்தர் கூறும் இந்துமதம் என்பது எது?
-
சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் கிறிஸ்தவமதம் தன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது.கிறிஸ்தவர்கள் சென்ற நாடுகளில் எல்லாம் அங்குள்ள மக்களை கிறிஸ்தவர்களாக மதம்மாற்றுவது அவர்களது முக்கிய பணி. கிறிஸ்தவர்கள் குடியேறிய பெரும்பாலான நாடுகளில் நாகரீகம் இல்லாத மக்கள்தான் வாழ்ந்து வந்தார்கள்.ஆகவே அவர்களை மதம்மாற்றுவது எளிதாக இருந்தது.அவர்களை எதிர்த்தவர்களை மொத்தமாக கொன்றுகுவித்த வரலாறுகளும் உண்டு.ஆனால் இந்தியாவில் கிறிஸ்தவர்களைவிட பலமடங்கு மேன்மைபெற்ற நாகரீகம் பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வந்தது.
-
இந்தியாவில் உள்ள மக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் வெளிநாடுகளில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன.அவற்றுள் ஒன்றுதான் இந்துமதம் என்பது ஒரு கற்பனை மதம்,முன்னோர்களின் கற்பனையில் உதித்தது,உண்மையில்லாதது,மேல்சாதியினர் கீழ்சாதியினரை அடக்க உருவாக்கப்ட்டது போன்ற கருத்துக்களை இந்தியார்கள் மனத்தில் விதைக்கவேண்டும் வேண்டும் என்பது. பல கோடி டாலர் நிதி அதற்காக செலவிடப்பட்டது. அப்போது துவக்கப்பட்ட இந்திய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், என் முன்னோர் முட்டாள்,என் முன்னோர் உருவாக்கியமதம் போலி,கற்பனை என்று அவர்கள் படிக்கும்படி பாடதிட்டங்கள் உருவாக்கப்ட்டன. அவர்கள் உருவாக்கிய கல்லூரிகளில் படித்து வெற்றி பெற்றவர்களுக்குதான் பதவி தரப்பட்டது. இதில் படித்து வெற்றி பெற்ற பலர் ஆங்கில அடிவருடிகளாகவும்,இந்துமத எதிர்ப்பு எண்ணம் கொண்ட அடிமைகளாகவும் உருவானார்கள்.இந்த திட்டம் வெற்றிபெற்றுக்கொண்டிருப்பதை கண்ட கிறிஸ்தவர்கள் இந்தியா முழுவதும் இதை நடைமுறைப்படுத்த முயன்றார்கள். பாதிரிகள் தலைமையில் கல்லூரிகள் நடைபெற்றன.கிறிஸ்தவர்களாக மதம்மாறுபவர்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்கப்பட்டது. பணத்திற்காக படித்த இளைஞர்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். பலர் இந்துமத எதிர்ப்பாளர்களானார்கள். நம் கண்ணைக்கொண்டே நம்மை குத்துவது என்பது இதுதான்.நமக்குள்ளேயே எதிரிவை உருவாக்கி நம்மை அழிக்கவேண்டும் என்பதுதான் அவர்கள் திட்டம்
-
அந்த காலத்தில் கல்கத்தாவில் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதரித்தார். கடவுளைக் காணவேண்டும் என்ற தீவிர ஏக்கத்தால் உந்தப்பட்டு இரவும் பகலும் இறைநினைவாகவே வாழ்ந்தார். தேவி கோவில் பூஜாரியாக இருந்ததால்,தேவியின் காட்சியை பெறுவதற்காக தீவிரமாக முயன்றார். முடிவில் காளியின் காட்சி கிடைத்தது.அதன் பிறகு காளிதேவி அவரிடம் பேசிளாள்.அவருக்கு இந்துமதத்தின் அற்புதமான கருத்துக்கள் பலவற்றை உபதேசித்தாள்.மனித குருக்கள் பலரை அவரிடம் அனுப்பி அவர்கள் மூலம் பல்வேறு நெறிகளை அறிந்துகொள்ளும் படி செய்தாள். அவருக்கு சிவபெருமானின் காட்சி கிடைத்தது. கிருஷ்ணரின் காட்சி,ராதை ராமர்,சீதை, உட்பட இந்து தெய்வங்கள் அனைவின் காட்சியும் கிடைத்தது. மனிதர்கள் எப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்களோ அதேபோல் அவர் அந்த தெய்வங்களிடம் பேசினார் பழகினார். அவர்கள் மூலம் பல்வேறு அறிவரைகளை பெற்றார். இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது.எப்படி மறைகிறது உட்பட பிரபஞ்ச ரகசியம் அனைத்தும் அவருக்கு காட்சிகளாக கிடைத்தது.
இரண்டு மனிதர்கள் எப்படி பேசிக்கொண்டே நடந்துசெல்வார்களோ அதேபோல் ராமகிருஷ்ணர்,காளி தேவியுடன் கைகோர்த்தபடி நடந்து செல்வார். அப்போது காளிதேவி பல்வேறு காட்சிகளை அவருக்கு காட்டி,அவைகள் மூலம் பல விஷயங்களை புரியவைப்பாள்.
-
இதன் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணரின் பல்வேறு அனுபவங்களை அவரிடமிருந்து சுவாமி விவேகானந்தர் கேட்டு அறிந்துகொண்டார். இந்தியாவையும்,இந்துமதத்தையும் காக்க வேண்டுமானால் இவைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்
-
அந்த நாட்களில் சைவம்,வைணவம்,சாக்தம்,அத்வைதம் என்று இந்தியமதங்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.ஸ்ரீராமகிருஷ்ணர் இவைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றி முடிவில் ஒரு சமரசத்தை எட்டினார். அது இதுதான் இறைவன் ஒருவன்தான்,பாதைகள்தான் பல. சைவர்கள் அடையும் இடமும்,வைணவர்கள் அடையும் இடமும்,சாக்தர்கள்,அத்வைதிகள் அடையும் இடமும் ஒன்றுதான் பாதைகள் வேறு. ஒரு தாய் தன் பல குழந்தைகளுக்கு அவர்களின் ஜீரணசக்திக்கு ஏற்ப பல வகைளில் சமைப்பதுபோல.மக்களின் மனப்பக்குவத்திற்கு ஏற்ப பல மதங்கள் இருக்கின்றன.எந்த மதத்தை ஒருவன் தீவிரமாக பின்பற்றினாலும்,அந்த மதத்தின் மூலம் முக்தி அடைய முடியும்,இறைக்காட்சி பெற முடியும்.அனைத்து மதங்களின் கடைசி எல்லை ஒன்றுதான் என்று போதித்தார்.
-
இந்தியாவில் இந்த கருத்து மிகவும் தேவையான ஒன்றாகும்.புதியஇந்தியாவை உருவாக் இந்த கருத்து அவசியம்.பல மதங்கள் தேவை ஆனால் அவைகளுக்குள் சண்டை தேவையில்லை.இவர்களுக்குள் ஒன்றுமையையும் ஒருமித்த கருத்தையும் உருவாக்குவது எப்படி? மக்களிடம் எதைபோதித்து ஒற்றுமையை உருவாக்க முடியும் என்று சுவாமி விவேகானந்தர் யோசித்தார்.அனைத்து மதங்களும் சிலமுக்கிய விஷயங்களில் பொதுவான கருத்தை கொண்டிருக்கின்றன அதை அவர் நம்முன் வைக்கிறார்.
-
1. எல்லாமதங்களும் இந்த உலகத்தை படைத்ததாக ஒரு இறைவனை நம்புகின்றன
-
2.எல்லா மதங்களும் எப்போதும் நிலையாக இருக்கும் வேதத்தை நம்புகின்றன
-
3. ஓம்- என்ற பிரணவமந்திரத்தை எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்கின்றன
-
4.முக்தி என்ற வீடுபேற்றை எல்லா மதங்களும் ஏற்கின்றன
-
5.மறுபிறப்பை எல்லா மதங்களும் ஏற்கின்றன
-
6. கர்மாதியரி(விதி) அதாவது தீமை செய்தால் தீமை நடக்கும்.நமது பாவங்களுக்கு நம்முன்வினையே காரணம் என்பதை ஏற்கின்றன
-
7.இறைவனே ஆதிகுரு என்ற கருத்தும் எல்லா மதங்களிலும் உள்ளது
-
8.இந்த பிரபஞ்சம் எப்போதும் இருக்கும் என்ற கருத்தையும் ஏற்கின்றன
-
9.பஞ்சபூத தத்துவமும் பொதுவானதுதான்
-
10.இறைவனே அனைத்து உயிர்களாகவும் ஆகியிருக்கிறார்.இந்த உயிர்களை ஆள்வதும் அதே இறைவன்தான் என்ற கருத்தும் பொதுவானது
-
11. இறைவன் இந்த உயிர்களுக்கு உள்ளும் இருக்கிறார்,வெளியிலும்,பிரபஞ்சத்திற்கு அப்பாலும் இருக்கிறார்
-
இன்னும் பல....
---
அப்படியானால் வேறுபாடு எங்கு உள்ளது? சிவன்தான் உலனை படைத்தார் என்று சைவர்களும், விஷ்ணுதான் உலகை படைத்தார் என்று வைஷ்ணவர்களும்,தேவிதான்உலகை படைத்தாள் என்று சாக்தர்களும் கூறுகிறார்கள்.இதை விளக்குவதற்கு அவர்கள் பல தத்துவங்களை கூறுகிறார்கள்.அவைகளை படித்து பார்த்தால் மேலே கூறப்பட்ட பொதுவான கருத்துக்கள்தான் அதில் இருக்கும்.
-
சுவாமி விவேகானந்தர் வேதத்தின் ஞானகாண்டத்தை(உபநிடதங்களை) நன்கு கற்றார்.அவைகளில் உள்ள துவைதம்(நான் வேறு கடவுள் வேறு) ,விசிஷ்டாத்வைதம்(நான் கடவுளின் ஒரு பகுதி),அத்வைதம் (நானும் கடவுளும் வேறுவேறு அல்ல) என்ற மூன்று தத்துவங்களை அடிப்படையாக கொண்டே அனைத்து மதங்களும் உருவாகியிருப்பதை கண்டார். ஆகவே மதங்களின் அடிப்டையாக உள்ள இந்த தத்துவங்களை மக்களிடம் போதித்தார்.
-
சுவாமி விவேகானந்தர் புதிய மதத்தை உருவாக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் பெயரில் புதிய பிரிவையும் உருவாக்கவில்லை. ஏற்கனவே இருக்கும் மதங்களுக்கிடையில் ஒரு சமரசத்தை உருவாக்கினார்.வேதாந்தத்தை தெரிந்துகொண்டால் யாரும்.யாருடனும் சண்டையிடத்தேவையில்லை,ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்,மற்றவர்கள் மதத்தை பற்றியும் தெரிந்துகொள்ளலாம் என்பதை தெளிவுபடுத்தினார்
-
வெளிநாட்டில் வேதாந்த கருத்துக்களை பிரச்சாரம் செய்ய தொடங்கியபோது,வெளிநாட்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் சுவாமி விவேகானந்தரின் பின்னால் சென்றார்கள்.அவரது கருத்துக்களால் ஈர்க்கப்படார்கள். பழமைவாத கிறிஸ்தவர்கள்,பாதிரிகள் அதை கடுமையாக எதிர்த்தார்கள்,அவரைபற்றி பல அவதூறுகளை பரப்பினார்கள்,,இந்தியாவில் இருந்தபோது அவரை கைதுசெய்யவும், சிறையில் அடைக்கவும் முயன்றார்கள்.பிரிஷ்டிக்காரர்கள் அதை செய்ய தயங்கியதற்கு காரணம் இருந்தது,அன்றைய காலத்தில் இந்தியாவின் எழுர்ச்சி நாயகனாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர். அவர் மேல் கைவைத்தால் ஒட்டுமொத்த இந்தியாவே எழுந்துநின்று பிரிட்ஷ்காரர்களை சட்டினி ஆக்கிவிடுவார்கள் என்பதை தெரிந்து வைத்திருந்தார்கள்.அதனால் கொஞ்சம் தள்ளியே நின்றார்கள்.
-
வெளிநாடுகளில் பல கிறிஸ்தவ அறிஞர்கள் சுவாமி விவேகானர்நதின் கருத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு சீடராக இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். முடிவில் கிறிஸ்தவர்களின் சதி முறியடிக்கப்ட்டது. வெளிநாட்டு பத்திரிக்கைகள் உலகில் சிறந்த தத்துவம் வேதாந்தம்தான் என்று எழுதின. வெளிநாட்டு பேராசிரியர்கள் வேதாந்தம்தான் எதிர்கால உலகை உருவாக்கப்போகிறது.இந்தியாவிற்கு கிறிஸ்தவ பாதிரிகளை அனுப்புவதற்கு பதிலாக அந்த பாதிரிகளை வேதாந்தம் கற்க சொல்லவேண்டும் என்று பேசினார்கள்.
-
சுவாமி விவேகானந்தரின் பணியின் காரணமாக இந்தியாவில் மட்டுல்ல ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்தவமதம் சரிவை சந்தித்தது.
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர்(19.1.2018)
-
வாட்ஸ் அப் நம்பர் 9789 374 109
No comments:
Post a Comment