உடல்தானம் பற்றி இந்துமதத்தின் கருத்து என்ன?
-
-
சில பிரிவினர் இறந்தவர்கள்உடலை எரிக்கிறார்கள்.சிலர் உடலை புதைக்கிறார்கள்.இறந்தபிறகு உடலைவிட்டு வெளியே வரும் உடலுக்கு சூட்சுமசரீரம் அல்லது லிங்க சரீரம் என்று பெயர். இறந்த பிறகு மனிதனின் சூட்சும சரீரம்,இறந்த உடல்மீது உள்ள பற்றின் காரணமாக அதை சுற்றியே சில நாட்கள் இருக்கும்.இறந்த உடலுக்குள் சென்று அதை எழுப்ப பலமுறை முயற்சி செய்யும்.முடியாதபோது சோகமாக அதைசுற்றியே வரும் என்பதால் சில பிரிவினர் உடலை உடனே எரித்துவிடுவார்கள். இவ்வாறு எரித்தால் அந்த ஜீவனுக்கு விரைவில் மறுபிறப்பை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.
-
சில பிரிவினர் இறந்தவர்கள் உடலை பத்திரமாக புதைக்கிறார்கள்.இவ்வாறு செய்வதன்மூலம்,சூட்சும சரீரம் அதை சுற்றி வாழும் என்று நம்புகிறார்கள்.வருடாவருடம் அந்த நினைவிடத்திற்கு சென்று வழிபாடு செய்வதன் மூலம் அந்த முன்னோரை வழிபடுகிறார்கள்.சிலர் வீட்டின் அருகிலேயே புதைக்கிறார்கள்.சிலர் இறந்தவர்கள் வீட்டிற்கு வரக்கூடாது என்பதால் தூரஇடத்தில் புதைக்கிறார்கள்.
-
இப்போது முக்கியமான கருத்திற்கு வருவோர். இறந்தவரின் உடல் உறுப்பை இன்னொருவருக்கு தானமாக கொடுப்பது என்பது ஒருவகையில் இறந்தவருக்கு நல்லதுதான்.எப்படியென்றால் இறந்தவருக்கு அதனால் புண்ணியம் வரும்.அந்த புண்ணிய பலன் காரணமாக அடுத்து நல்ல பிறவி வாய்க்கலாம். ஒருவர் இறந்த பிறகு அனைவருக்கும் சாப்பாடு போடுகிறார்கள். இறந்தவர் ஏதாவது பாவம் செய்திருந்தால் அங்கே சாப்பிடுபவர்கள் அந்த பாபத்தை பெறுகிறார்கள்.இறந்தவருக்கு அடுத்து நல்லபிறவி அமைய இது வழிவகுக்கிறது.அங்கே சென்று சாப்பிடுபவர்கள் பலர் தீயவர்களாக இருந்தால் ஒரு பயனும் இல்லை. நல்லவர்களுக்கு உணவு கொடுத்தால்தான் நல்லபிறவி கிடைக்கும் இ்ல்லாவிட்டால் பயன் இல்லை.
-
சரி உடல் மொத்தமாக தானம் செய்தால் என்ன நடக்கும்? இறந்தவர் அந்த உடலை சுற்றியே வருவதால்,உடலை தானமாக பெற்றவர்களுக்கு அது நல்லதல்ல.ஏதாவது ஒரு உறுப்பை மட்டும் தானமாக பெற்றால்,அதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கலாம்.
-
இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது. ஒரு மனிதனின் உடலில் ஒரு ஜீவன் மட்டும்தான் வாழ முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரே உடலுக்குள் பல ஜீவன்கள் வாழ முடியும். சில வேளைகளில் இறந்த முன்னோர்கள் சிலரின் உடலுக்குள் வாழ்வார்கள். சிலவேளைகளில் மட்டும் அவர்களது செயல்பாடுகள் வெளியில் தெரியும் மற்ற வேளைகளில் தெரியாது. உடல் உறுப்புகளை தானமாக பெறுபவரின் உடலில் இதேபோல் இறந்தவர்சென்று வாழ்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.அதனால் தானம் பெறுபவர் யாரிடமிருந்து பெற்றோம் என்பதை அறியாமலும் ,தானம் கொடுப்பவர் யாருக்கு கொடுக்கிறோம் என்பதையும் அறியாமலும் இருப்பது நல்லது
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர் (19.1.2018)
-
-
சில பிரிவினர் இறந்தவர்கள்உடலை எரிக்கிறார்கள்.சிலர் உடலை புதைக்கிறார்கள்.இறந்தபிறகு
-
சில பிரிவினர் இறந்தவர்கள் உடலை பத்திரமாக புதைக்கிறார்கள்.இவ்வாறு செய்வதன்மூலம்,சூட்சும சரீரம் அதை சுற்றி வாழும் என்று நம்புகிறார்கள்.வருடாவருடம்
-
இப்போது முக்கியமான கருத்திற்கு வருவோர். இறந்தவரின் உடல் உறுப்பை இன்னொருவருக்கு தானமாக கொடுப்பது என்பது ஒருவகையில் இறந்தவருக்கு நல்லதுதான்.எப்படியென்றால் இறந்தவருக்கு அதனால் புண்ணியம் வரும்.அந்த புண்ணிய பலன் காரணமாக அடுத்து நல்ல பிறவி வாய்க்கலாம். ஒருவர் இறந்த பிறகு அனைவருக்கும் சாப்பாடு போடுகிறார்கள். இறந்தவர் ஏதாவது பாவம் செய்திருந்தால் அங்கே சாப்பிடுபவர்கள் அந்த பாபத்தை பெறுகிறார்கள்.இறந்தவருக்கு
-
சரி உடல் மொத்தமாக தானம் செய்தால் என்ன நடக்கும்? இறந்தவர் அந்த உடலை சுற்றியே வருவதால்,உடலை தானமாக பெற்றவர்களுக்கு அது நல்லதல்ல.ஏதாவது ஒரு உறுப்பை மட்டும் தானமாக பெற்றால்,அதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கலாம்.
-
இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது. ஒரு மனிதனின் உடலில் ஒரு ஜீவன் மட்டும்தான் வாழ முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரே உடலுக்குள் பல ஜீவன்கள் வாழ முடியும். சில வேளைகளில் இறந்த முன்னோர்கள் சிலரின் உடலுக்குள் வாழ்வார்கள். சிலவேளைகளில் மட்டும் அவர்களது செயல்பாடுகள் வெளியில் தெரியும் மற்ற வேளைகளில் தெரியாது. உடல் உறுப்புகளை தானமாக பெறுபவரின் உடலில் இதேபோல் இறந்தவர்சென்று வாழ்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.அதனால் தானம் பெறுபவர் யாரிடமிருந்து பெற்றோம் என்பதை அறியாமலும் ,தானம் கொடுப்பவர் யாருக்கு கொடுக்கிறோம் என்பதையும் அறியாமலும் இருப்பது நல்லது
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர் (19.1.2018)
No comments:
Post a Comment