மற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்?💥
-
1.நமது மதம் தத்துவங்களை ஆதாரமாக கொண்டது. எந்த மகானையோ மனிதர்களையோ ஆதாரமாக கொள்ளவில்லை .பிற மதங்கள் அந்த மதத்தை தோற்றுவித்த மனிதர்களை ஆதாரமாக கொண்டது
-💥
2. நமது மதத்தின் புனிதநூல் என்று குறிப்பிட்ட ஒன்றைமட்டும் சுட்டிக்காட்ட முடியாது. எண்ணற்ற நூல்கள் புனிதநூல்களாக உள்ளன
-💥
3.நமது மதம் எழுத்துக்கள் கண்டுபிடித்த காலத்திற்கு முன்பே உள்ளது.அதாவது முற்காலத்தில் மக்கள் கருத்துக்களை குருவிடமிருந்து காதுகொடுத்து கேட்டு தெரிந்துகொண்டார்கள்.அதனால்தான் அதற்கு ஸ்ருதி என்று பெயர்.வாய்மொழி மூலமாகவே பல ஆயிரம் ஆண்டுகள் கற்பிக்கப்பட்டன.மற்ற மதங்கள் இந்த அளவு தொன்மையானது அல்ல
-💥
4. வேதங்கள் கூறும் தத்துவங்கள் மிகவும் பண்பட்டவர்களால் மட்டுமே படித்து தெரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.அந்த தத்துவங்களை படித்து புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆகும்.
-💥
5. நமது மதம் வேதங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை. அவைகளின் மொழி சமஸ்கிருதம் இல்லை. அவை வேதமொழி. வேதங்கள் இதுவரை எழுதப்படவில்லை. இறைவனின் வார்த்தைகளே வேதம். ...
-💥
6. நமது மதம் , இதுவரை உலகில் தோற்றிய அனைத்து மதங்களையும், இனி தோற்றப்போகின்ற அனைத்து மதங்களையும் உள்வாங்கிக்கொள்ளும் மகாசமுத்திரம் போல உள்ளது. அதாவது இதில் இல்லாத எந்த புதிய கருத்துக்களையும் வேறு மதத்தில் நீங்கள் காணமுடியாது.
-💥
7. நமது மதத்தில் மட்டுமே மனிதன் இறைவனாக மாற முடியும் என்ற கருத்து உள்ளது. அவ்வாறு இறைவனுடன் ஒன்று கலக்கும் முக்தி நிலை பற்றி கருத்து இங்கு மட்டுமே உள்ளது.
-💥
8.உலகின் இதுவரை கண்டுபிடிக்கப்ட்ட மிக உயர்ந்த தத்துவமான அத்வைத தத்துவம் வேறு மதங்களில் இல்லை.
-💥
9. நமது மதத்தில் மட்டுமே எண்ணற்ற அவதாரங்கள் ஏற்கனவே வந்திருப்பதாகவும்,இனியும் வரப்போகிறார்கள் என்ற கருத்து உள்ளது. மற்ற மதங்களில் இனி புதிய தீர்க்கதரிசிகள் வரமுடியாது
-💥
10.நமது மதம், கடவுள் நன்மை,தீமை இரண்டையும் கடந்தவர் என்கிறது. மற்ற மதங்களில் கடவுள் நல்லவர் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. தீமையை அவரால் தடுக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை சாத்தான் என்பது கடவுளுக்கு கட்டுப்படாத தன்னிச்சை பெற்ற வேறு ஒரு சக்தி.
-💥
11.நமது மதத்தில், மறுபிறப்பு பற்றிய கருத்து உள்ளது. ஒரு உயிர் பரிணாமம் அடைந்து வேறு உயிர்களாக மாறுவதை ஏற்றுக்கொள்கிறது.இது விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்துவருகிறது. ஒரு உயிர் இன்னொரு உயிராக பரிமணமிப்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.
-💥
12. நமது மதத்தின் கடவுள், அனைத்து இனங்களின், அனைத்து உயிர்களின் கடவுள். மனிதர்களுக்கு மட்டுமல்ல விலக்குகளுக்கும் அவரே கடவுள்.அவர் மனிதர்களை மட்டும் நேசிப்பவரல்ல, இந்த உலகில் உள்ள அனைவரையும் நேசிப்பவர். அவர் நல்லவர்களை நேசிக்கிறார்,தீயவர்களை வெறுக்கிறார் என்று கருத்து நமது மதத்தில் இல்லை. அவர் அனைவரையும் சமமாக நேசிக்கிறார்.மற்றமதங்களில் அந்த இறைவன் தன்னை நேசிப்பவர்களை நேசிப்பார் மற்றவர்களை வெறுப்பார்.
-💥
13.நமது மதத்தில் கர்மா தியரி இருக்கிறது. அதாவது ஒரு செயல், அதற்கு சமமான எதிர் செயலை உருவாக்கும். ஒருவர் துன்படுவதற்கு காரணம், அவர் அதற்கு முன்பு செய்த தீய செயல். இனி ஒருவர் இன்பமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இனிமேல் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். இவ்வாறு மனிதனின் இன்பத்திற்கும்,துன்பத்திற்கும் மனிதனே காரணமாகிறான்.மற்ற மதங்களில் மனிதன் துன்பப்படுவதற்கு காரணம் இறைவன் என்று கூறுகிறார்கள். ஒருவன் ஏன் குருடனாக பிறந்தான் என்றால்,அது இறைவனின் விருப்பம் என்பார்கள்.
-💥
14. பிறமதங்களில் மனிதன் சூன்யத்திலிருந்து தோன்றினான் என்று சொல்கிறது. நமது மதம் மனிதன் இறைவனிலிருந்து தோன்றினான்,இறைவனில் வாழ்கிறான்,இறைவனில் ஒடுங்கி முடிவில் இறைவனாகிறான் என்கிறது.
-💥
15. எல்லையற்ற காலம் பற்றிய கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது. அதாவது இந்த பிரபஞ்சம் எல்லையற்ற காலம் வரை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். ஒருநாள் திடீரென தோன்றியது .ஒரு நாள் திடீரென அழிந்துவிடும் என்ற கருத்து இல்லை., நாம் காலத்தை கடந்து வாழ்ந்துகொண்டே இருப்போம்.
-💥
16. மனிதனின் உடல்தான் மரணிக்கிறதே தவிர.உண்மையின் மனிதனுக்கு மரணம் இல்லை என்பது இந்துமதத்தின் கருத்து. மற்ற மதங்களில் இந்த கருத்து இல்லை
-💥
17.ஆன்மாவுக்கு உருவம் இல்லை ,அதே போல் இறைவனுக்கும் உருவம் இல்லை என்ற கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது. மற்ற மதங்களின் கடவுள் ஏதோ ஒரு உருவத்தை உடையவராகவே இருக்கிறார். உருவங்களுக்கு அழிவு உண்டு என்று நமது மதமும்,விஞ்ஞானமும் கூறுகிறது.அதன் படி பார்த்தால் மற்ற மதங்களின் இறைவன் ஒரு நாள் அழிந்துவிடுவார்.
-💥
18. நமது மதத்தில் மனிதன் இந்த வாழ்க்கையிலேயே முக்தியடைய முடியும் என்று சொல்கிறது. மற்ற மதங்களில் மனிதன் இறந்த பிறகு கல்லறையில்,கடைசி நாள்வரும் வரை காத்திருக்க வேண்டும்.
-💥💥💥💥💥💥💥💥
நமது மதத்தின் முடிவுகள் இன்றைய விஞ்ஞானிகளின் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு ஒத்து இருக்கிறது.
-💥💥💥💥💥💥💥💥💥
1.சூன்யத்திலிருந்து எந்தபொருளையும் படைக்க முடியாது, சூன்யத்திலிருந்து பிரபஞ்சத்தை படைக்க முடியாது.
-💥
2. அனைத்தும் வட்டம்போல உள்ளது. முட்டையிலிருந்து குஞ்சு, குஞ்சுவிலிருந்து முட்டை இதே போல் சுழற்சி. பிரபஞ்சமும் தோற்றம்,ஒடுக்கம், தோற்றம் ஒடுக்கம் என்று தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது
-💥
3. ஒரு சக்தி தான் இன்னொரு சக்தியாக மாறுகிறதே தவிர சூன்யத்திலிருந்து புதிதாக சக்தியை உருவாக்க முடியாது.
-💥
4. ஒரு உயிர்தான் இன்னொரு உயிராக பரிணமிக்கிறது. ஓர் அறிவு,ஈர் அறிவு என்று அறிவு படிப்படியாக விரிந்து உயர்நிலையாக மனிதனாக பரிணமிக்கிறது.இந்த பரிணாமம் மேலிருந்து கீழாகவும்.கீழிலிருந்து மேலாகவும் மாறிமாறி வட்டம்போல் நடைபெறுகிறது. உதாரணமாக மனிதனிலிருந்து குரங்கு தோன்றலாம்.குரங்கிலிருந்து மனிதன் தோன்றலாம்.இரண்டும் சரி
-💥
5. இந்த உலகில் எப்போதும் சத்வம்(சமச்சீர் சக்தி),ரஜஸ்(விலக்கும் சக்தி),தமஸ்(கவரும் சக்தி) என்ற மூன்று சக்திகள் உள்ளன.உதாரணமாக சூரியன் பூமியை தன்னை நோக்கி இழுப்பது தமஸ், பூமி வேகமாக சுழன்று சூரியனிலிருந்து விலகிச்செல்வது ரஜஸ், சூரியனில் ஒன்றிவிடாமலும்,சூரியனிலிருந்து விலகிவிடாமலும் சமதூரத்தில் சமப்படுத்தி வைப்பது சத்வம்.ஒரு அணுவில் கூட இந்த மூன்று சக்திகளும் இருக்கும்
-💥
6. இந்த உலகிற்கு எது தேவையோ அதை இந்த உலகமே உருவாக்கிக்கொள்ளும் படைப்பாற்றல்.உதாரணமாக ஒரு இடத்தில் காற்று சூடாக இருந்தால்,வேறு இடத்திலிருந்து குளிர்ந்த காற்று அந்த இடத்தை நோக்கி பாய்ந்து வரும்.அதேபோல பல உதாரணங்கள் உள்ளன
-💥
7. தொடர்மாற்றம் பற்றிய கருத்து ,இன்று நமது உடலில் உள்ள அணுக்கள் நாளை இன்னொருவரின் உடலுக்குள் செல்கிறது, இவ்வாறு உடல் தொடர்ந்து மாறுகிறது. அதே போல் மனமும் மாறிக்கொண்டே இருக்கிறது.ஆனால் நாம் மாறுவதில்லை
-💥
8. உடலும்,மனமும் ஜடப்பொருள் ,உணர்வு இல்லாதது. ஆனால் இந்த இரண்டையும் இயக்குவது உணர்வுப்பொருள்.
-💥
9. அனைவரின் மனமும் பிரபஞ்ச மனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.அதனால் ஒருவர் நினைப்பதை இன்னொருவரால் கூறமுடியும்.
-💥
10.மனத்தின் மூலம் புதியபொருட்களை உருவாக்க முடியும். மனத்தின் மூலம் மனிதனைக்கூட உருவாக்க முடியும்.
-💥
11.மிருகத்தின் உடல் உறுப்புகளைகூட மனிதனின் உடலில் பொருத்தலாம். உதாரணமாக கணபதியின் தலையை எடுத்து அங்கே யானையின் தலையை பொருத்தியதுபோல
-💥
12.டெஸ்ட் டியூப் பேபி பற்றிய கருத்து மகாபாரதத்திலேயே உள்ளது.கௌரவர்கள் அவ்வாறு பிறந்தவர்கள்தான்.
-💥
13.உடலை இயக்கமற்ற நிலைக்கு கொண்டுசெல்வதன் மூலம் பல ஆண்டுகள் உணவின்றி வாழமுடியும். குளிர்பிரதேசத்தில் சில உயிர்கள் வாழ்வதுபோல
-💥
14. ஒரு மூல உடலிலிருந்து அதேபோல பல உடல்களை உருவாக்க முடியும் என்று பதஞ்சலி முனிவர்கூறுகிறார்
-💥
15. கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை இன்னும் விஞ்ஞானம் கற்றுக்கொள்ளவில்லை
-💥
16.தூல உடலை,ஒளி உடலாக மாற்றி ஆகாயத்தில் பறக்கலாம்,வேறு உலகங்களுக்கு விரைவாக செல்லலாம்
-💥
17. பிரம்மயோனி பற்றி ரிஷிகள் கூறியிருக்கிறார்கள்.இந்கிருந்துதான் பல பிரம்மாண்ட சூரியர்கள் ,சந்திரர்கள், கோள்கள் வெளிவருகின்றன.
-💥
18.பிரபஞ்சத்தின் கோடிக்கணக்கான ஆண்டு ஆயுள்பற்றிய கருத்து வேதங்களில் கூறப்பட்டுள்ளது
-💥
19. பிராணன்,ஆகாசம் என்ற இரண்டும் ஒன்று கலந்து இந்த பிரபஞ்சம் உருவாகியுள்ளது.அதேபோல் ஒரு காலத்தில் இந்த பிரபஞ்சம் மறுபடி பிராணனாகவும்,ஆகாசமாகவும் மாறிவிடும்
-💥
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். விஞ்ஞானம் நம்மிடமிருந்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளன.
-💥💥💥💥💥💥💥💥💥
கட்டுரை....சுவாமி வித்யானந்தர் (24-1-2018)
-💥💥💥💥💥💥💥💥💥
No comments:
Post a Comment