Thursday, 18 January 2018

கேன உபநிடதம்- சாமவேதம்



கேன உபநிடதம்- சாமவேதம்
-
1. ஏவப்பட்ட மனம் யாருடைய விருப்பத்தினால் செல்கிறது? முக்கியப்பிராணனைச் செலுத்துவது யார்? யாருடைய கங்கல்பத்தால் வாக்கு பேசப்படுகிறது? கண்களையும் காதுகளையும் எந்த தேவன் செயல்படுத்துகிறான்?
-
2.காதின் காதின்,மனத்தின் மனமாக,வாக்கின் வாக்காக,பிராணனின் பிராணனாக,கண்ணின் கண்ணாக இருப்பது ஆன்மா. உணர்வு விழிக்கப்பெற்றவன் இந்த உண்மையை உணர்ந்து,புலன்களிலிருந்து விலகி மரணமற்ற நிலையை அடைகிறான்
-
3.அங்கே கண்கள் செல்வதில்லை. வாக்கும் மனமும் செல்வதில்லை. எனவே அது எத்தகையது என்பது எங்களுக்குத் தெரியாது. அதனை எப்படி பிறருக்குப் புரியவைப்பது என்பதும் எங்களுக்குத் தெரியாது.
-
4. அந்த ஆன்மா அறிந்தவற்றிலிருந்து வேறுபட்டது,அறியாதவற்றைவிட மேலானது. எங்களுக்கு அதைப்பற்றி விளக்கிய முன்னோர்களிடமிருந்து நாங்கள் இவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறோம்
-
5. எது வாக்கினால் விளக்கப்பட முடியாதோ,எதனால் வாக்கு விளக்கம் பெறுகிறதோ அதுவே ஆன்மா. இங்கே வழிபடப்படுகின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்துகொள்
-
6.எது மனத்தினால் அறியப்பட முடியாதோ,எதனால் மனம் அறியப்படுகிறதோ அதுவே ஆன்மா என்று சான்றோர்கள் கூறுகிறார்கள். இங்கே வழிபடப்படுகின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்துகொள்
-
7. எது கண்களால் பார்க்கப்படுவதில்லையோ, எதனால் கண்கள் பார்க்கப்படுகின்றவோ அதுவே ஆன்மா இங்கே வழிபடப்படுகினக்ற பொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்துகொள்
-
8.எது காதுகளால் கேட்கப்படுவதில்லையோ எதனால் காதுகள் கேட்கின்றனவோ அதுவே ஆன்மா இங்கே வழிபடப்படுகின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்துகொள்
-
9. எது மூச்சினால் முகரப்படுவதில்லையோ,எதனால் மூச்சு முகர்கின்றரோ அதுவே ஆன்மா.இங்கே வழிபடப்படுகின்ற பொருள் ஆன்மா அல்ல என்பதை அறிந்துகொள்
-
2.1.ஆன்மாவை நன்றாக தெரியும் என்று நீ நினைப்பாயானால்,நீ அறிந்தது நிச்சயமாக மிகக்கொஞ்சமே. எனவே
தெய்வங்களில் அதனை மேலும் அறியவேண்டும்.
-
2.2 ஆன்மாவை எனக்கு நன்றாகத் தெரியும் என்று கருதவில்லை,தெரியாது என்றும் நினைக்கவில்லை. ஏனெனில் என்னை எனக்குத்தெரியும்.ஆன்மாவைத் தெரியாது. அதே வேளையில்,தெரியாது என்று சொல்லவும் முடியாது என்று நம்மில் யார் நினைக்கிறாரோ அவனே ஆன்மாவை அறிந்தவன்
-
2.3 யாருக்குத் தெரியாதோ அவனுக்குத் தெரியும். யாருக்கு தெரியும் என நினைக்கிறானோ அவனுக்குத் தெரியாது. நன்றாக அறிந்ததாக நினைப்பவர்கள் அறியவில்லை. நன்றாக அறியாததாக நினைப்பவர்கள் அதை அறிகிறார்கள்
-
2.4. உணர்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆன்மாவை அறிபவனே உண்மையில் அறிகிறான் என்பது கருத்து. அப்படி அறிந்தவன் நிச்சயமாக மரணமில்லாப்பெருநிலையை அடைகிறான். ஆன்மாவிலிருந்து ஆற்றல் கிடைக்கிறது. ஞானத்தினால் மரணமில்லாப்பெருநிலை அடையப்படுகிறது
-
2.5 இங்கேயே ஆன்மாவை அறிந்தால் வாழ்க்கையில் உண்மையான நிறைவு ஏற்படுகிறது. இல்லாவிட்டால் மாபெரும் இழப்பாகும். விழிப்புணர்வு பெற்றவர்கள் எல்லா உயிர்களிலும் ஆன்மாவை உணர்கிறார்கள். அத்தகையோர் இந்த உலகத்திலிருந்து விடுபட்டு மரணமற்றவர்களாக ஆகிறார்கள்
-
4.4 கடவுளைப்பற்றிய விழளக்கம் இது. ஆகா! மின்னல் மின்னுவது அவரால்,இமைகபள் இமைப்பது அவரால், ஆகா! இது அவரது தெய்வீக சக்தி
-4.5 இனி ஆன்மா பற்றி பார்ப்போர். ஆன்மாவின் காரணமாகவே மனம் புறவுலகை நாடிச் செல்வதுபோல் உள்ளது. பொருட்களை நினைப்பதற்கும் கற்பனை செய்வதற்கும் ஆன்மாவே காரணம்
-
4.6 ஆன்மா எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறது. அவ்வாறே அறியப்படுகிறது. எல்லா உயிர்களிலும் நிறைந்ததாக அதனைத் தியானிக்க வேண்டும் ஆன்மா எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பதை யார் அறிகிறானோ அவனை எல்லா உயிர்களும் நேசிக்கின்றன
-
whats app group 9789 374 109

No comments:

Post a Comment