Friday, 12 January 2018

ஆரியர் யார்? திராவிடர் யார்?




ஆரியர் யார்? திராவிடர் யார்?
-
மஹாபாரதத்தில் அர்ஜுனனை பார்த்து,ஆர்யனே என்று கிருஷ்ணர் கூறுகிறார்.ஆர்யன் போரின்போது பின்வாங்கமாட்டான்.ஆர்யன் தீர்க்கமாக முடிவெடுப்பவன் போன்ற பொருளில் அவர் பயன்படுத்துகிறார்.இனத்தை குறிக்க பயன்படுத்தப்படவில்லை. அந்த காலத்தில் பல இனங்கள் இருந்தன விருஷ்ணி குலம்,யாதவகுலம் போன்ற பல பெயர்கள் மஹாபாரதத்தில் வருகின்றன.ஆனால் ஆரிய குலம் என்ற ஒன்று காணப்படவில்லை. பாரதபோரில்  பாண்டிய மன்னனும் கலந்துகொண்டுள்ளான்.அவன் ஆரியல் அல்லாதவன் என்று எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.பாண்டிய மன்னனை சிறந்தவீரன் என்றுதான்  குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பண்டைய காலத்தில் அச்வமேதயாகம் என்ற ஒன்று நடத்துவார்கள். பல அரசர்களில் சக்கரவர்த்தி யார் என்பதை நிர்ணயிப்பதற்கான நடத்தப்படும் யாகம்தான் அது.யாரை அனைவரும் சக்கரவர்த்தி என்று ஏற்றுக்கொள்கிறார்களோ அவரே அனைத்து தேசத்து அரசரைவிட உயர்ந்தவர்.அவ்வாறு சக்கரவர்த்தியால் ஆளப்படும் நாடு பாரதம் . மஹாபாரதம் என்பது பல்வேறு நாட்டு அரசர்களுக்கிடையே நடந்த போரைப்பற்றி கூறுகிறது.மகாபாரத்தில் பாண்டிய மன்னன் இடம்பெற்றிருக்கிறான் என்றால் அவன் பாரத நாட்டின் சொந்தக்காரன்தானே!. அவ்வாறு பாரதத்தின் ஒரு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னனை திராவிடன் என்று சொல்வது பாண்டினை அவமதிப்பதாகும்.
-
மகாபாரத காலத்தில் வடஇந்திய மக்கள் பேசிய மொழி என்பது சமஸ்கிருதத்திற்கு முன்பு இருந்த மொழியாகும்.
அது தற்போதுள்ள  தமிழுக்கு முன்பு இருந்த மொழி. அந்த பழைய காலத்து மொழி ஒரே மொழியாகத்தான் இருந்திருக்க வேண்டும். தற்காலத்தில் உள்ள வடஇந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து பிரிந்தவை.தென்னிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்தவை.ஆனால் மகாபாரத காலத்து மொழி என்பது ஒரேமொழிதான். தெற்கிலிருந்து சென்ற பாண்டி மன்னனால் மற்ற மன்னர்களுடன் கலந்து பழக முடிந்துள்ளது. அவர்களுக்கிடையில் மொழி பாகுபாடு இருந்ததாக மகாபாரதத்தில் குறிப்பிடப்படவில்லை.அதேபோல் ராவணன் பேசிய மொழியும் ராமர் பேசிய மொழியும் ஒன்றாகவே இருந்துள்ளது. ராவணனின் தம்பி விபீஷணன், ராமரிடம் அடைக்கலம் வந்த பிறகு அவர்களுக்கிடையில் பல உரையாடல்கள் நடக்கின்றன. அப்போது விபீஷணன் வேறு மொழி பேசியதாக ராமாணத்தில் சொல்லப்படவில்லை
-
சமஸ்கிருதம் சிறிதளவு படித்தவன் என்ற முறையில் தற்கால சமஸ்கிருதத்திற்கும் ,தற்கால தமிழுக்கும் இடையில் உள்ள இலக்கணம் பெரும்பாலும் ஒத்து காணப்படுகிறது. வெளிநாட்டு மொழியான சீன மொழியையும் தழிழையும் ஒப்பிடமுடியாது.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு தெரியும். அதேபோல் அரேபிய மொழியையும் தமிழையும் ஒப்பிட முடியாது. பக்கத்திலே வராது. ஆனால் சமஸ்கிருதத்தையும் தமிழையும் ஒப்பிட முடியும். அவைகளுக்கிடையில் ஒள்ள வேறுபாடு மிகக்குறைவுதான். தற்போதுள்ள சமஸ்கிருதம் தோன்றி 3000 ஆண்டுகள் ஆகிறது. தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சமஸ்கிருதத்திற்கு முந்தைய மொழியான வேதமொழியும்,தொல்காப்பிய காலத்து தமிழும் மிக நெருங்கிய மொழியாக இருந்திருக்கும். தொல்காப்பிய இலக்கணமும்.பண்டைய சமஸ்கிருத இலக்கணமும் பெருமளவு ஒத்து காணப்படுவதாக இரண்டையும் கற்றறிந்த அறிஞர்கள் கூறுகிறார்கள்.
-
ஆகவே மகாபாரத காலத்தில் பாரதம் முழுவதும் ஒரே மொழிதான் பேசப்பட்டன என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாக தெரிகிறது. அவர்களுக்கிடையே ஒரு பண்பாடு நிலவியதையும் காணலாம்.உதாரணமாக ராமர் சிவபெருமானின் பக்தர்.அதேபோல் ராவணனும் சிவபெருமானின் பக்தர். அர்ஜுனன் சிவபக்தர்,பாண்டிய மன்னன் சிவபக்தர். ஆகவே பழைய காலத்தில் வழிபாட்டு முறைகளில்கூட வேறுபாடு இல்லை. பண்டைய தமிழ் இலக்கியத்தில் இந்திரனை வழிபட்டது பற்றிய குறிப்பு உள்ளது. மகாபாரத்திலும் இந்திரவழிபாடு உள்ளது.
முற்கால பாரதம் என்பது தற்போதுள்ள இந்தியா, பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்,நேபாளம்,இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய பகுதியாகும்.
-
இந்த வேறுபாடுகள் எப்படி உருவாகின? சமஸ்கிருதம் தோன்றிய பிறகு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வேறுபாடுகள் தோன்றியிருக்கலாம். பண்டைய மொழியைவிட சிறப்பான மொழியை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் பாணிணி முனிவர் சமஸ்கிருதத்தை உருவாக்கினார்.அதன்பிறகு சமஸ்கிருதத்தில் பல இலக்கியங்கள் உருவாக ஆரம்பித்தன. பண்டைய நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. தென்னிந்தியாவிற்கும் வடஇந்தியாவிற்கும் மொழிரீதியாக வேறுபாடு தோன்றியது. தென் இந்திய இலக்கியங்கள் தமிழில் இயற்றப்பட்டன. வட இந்தியர்களால்,தென்இந்திய இலக்கியத்தை படிக்கமுடியவில்லை. தென் இந்தியவர்களால் வடஇந்திய இலக்கியத்தை படிக்க முடிக்கவில்லை. இவ்வாறு மொழி அடிப்படையில் இரண்டு இனங்கள் உருவாகின.சமஸ்கிருதம் அதன்பிறகு ஹிந்தி,பெங்காலி போன்ற பல மொழிகளாக பிரிந்துபோனது. தமிழ் மொழியும் தெலுங்கு,கன்னடம் என பல மொழிகளாக பிரிந்துபோனது.
-
கலாச்சாரரீதியாக ஒரே இனத்தவராக இருந்த இந்தியரை,  மொழிரீதியாக   தனித்தனியே பிரிப்பதற்கு வெள்ளைக்காரன் திராவிடன் என்ற பெயரை பிரபலப்படுத்தினான். அதன்பிறகு நமது பிரிவினைவாதிகள் அந்த பெயரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.
-
முடிவுரை
-
ஆரியன் என்பது ஒரு இனத்தை குறிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தை அல்ல என்பதை மகாபாரதம் படித்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.ராவணன்,பாண்டிய மன்னன் உட்பட தென் இந்தியாவில் வாழ்ந்த அனைவரும் பேசிய மொழி ஒரே மொழிதான்,இருவருக்குள் உள்ள கலாச்சாரம் ஒன்றேதான். பாரதம்,மஹாபாரதமாக உயரவேண்டுமானால் திராவிடம் என்ற போலி சித்தாந்தம் ஒழிய வேண்டும். பிரிவினைவாதிகளின் கருத்துக்களை மக்கள் ஒதுக்கவேண்டும்.
-
கட்டுரை
-
சுவாமி வித்யானந்தர் ( நாள் 13.1.2018)
-
இந்துமதம் வாட்ஸ் அப் குழு -9789 374 109

No comments:

Post a Comment