விதி என்றால் என்ன?
-
ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்செயல் உண்டு என்பது கர்மாதியரி.தற்கால விஞ்ஞானமும் இதைதான் சொல்கிறது(each action has an equal and opposite reaction). முன்பு ஒருவனுக்கு நன்மை செய்தால் எதிர்காலத்தில் அதற்கு சமமான நன்மை நடக்கும்.முன்பு தீமை செய்தால் அதற்கு சமமான தீமை பிற்காலத்தில் நடக்கும். இவ்வாறு பிற்காலத்தில் நடக்கும் நிகழ்வை விதி என்கிறோம். ஒருவன் வாழ்க்கையில் மிகவும் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தால் அது அவனது விதி என்கிறார்கள். அதேபோல் வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்ந்தால் அது அவனது விதி என்று சொல்வதில்லை.ஆனால் அதுவும் அவனது விதிதான். இந்த விதியை உருவாக்கியது யார்? நாம் தான். முற்காலத்தின் விதைத்ததை தற்போது அறுவடை செய்கிறோம்
-
இதிலிருந்து இனனொரு அற்புதமான கருத்தும் கிடைக்கிறது என்ன வென்றால், இன்று நாம் துன்பப்படுவதற்கு காரணம் நமது முந்தைய செயல்கள் என்றால், நாளை நாம் துன்பப்படாமல் இருக்க வேண்டுமானால்,இன்று நல்ல செயலை செய்ய வேண்டும் என்ற கருத்தும் வருகிறது. ஆகவே இப்போது நாம் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம்,நாளை எப்படி இருக்க வேண்டும் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.அது இன்றைய நமது செயல்களைப் பொறுத்து அமைகிறது. இன்று நல்ல செயல்களை செய்தால் நாளை நன்றாக இருப்போம்.ஆகவே நமது விதியை வேறு யாரோ உருவாக்கவில்லை. நாம் தான் உருவாக்குகிறோம்.
-
உங்கள் விதியை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்.
-
சுவாமி விவேகானந்தரின் கருத்தை ஒட்டிய கட்டுரை.... சுவாமி வித்யானந்தர் (16.1.2018)
No comments:
Post a Comment