எல்லாம் முன்கூட்டியே நிர்ணயிகக்ப்பட்டுள்ளதா? நமது முயற்சிகள் எல்லாம் வீணானதா?பேசாமல் சும்மா இருப்பது நல்லதா?
-
இந்தியாவில் கடந்த 1000ஆண்டுகளாக மக்கள் கூறிவரும் கருத்து இதுதான்.எல்லாம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எல்லாம்தலைவிதி.பிறக்கும்போதே தலையில் எழுதப்பட்டுவிட்டது.நாம் எதை செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் செய்கிறோம்.இந்த கருத்தினால் இந்தியா பின்னோக்கி சென்று கடைசியில் கண்டவனின் காலடியில் மிதிபட்டு அடிமைப்பட்டதுதான் மிச்சம்.
-
அப்படியானால் அது உண்மை இல்லையா?கொஞ்சம் உண்மை உள்ளது.கொஞ்சம் உண்மை இல்லை.
-
கன்னியாகுமரியிலிருந்து டில்லிக்கு காரில் பயணிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.வழி என்பது ஏற்கனவே உள்ளதுதான்.அதன் இடையில் வரும் இடங்கள் பல்வேறு குண்டு,குழிகள்,தடைகள்,செக்போஸ்ட்,ரெயில்வே கிராசிங்,பாலங்கள் எல்லாம் உள்ளன.
-
மணிக்கு 50 கி.மீ வேகத்தின் சென்றால் 4 நாட்கள் ஆகும் என்று வைத்துக்கொள்வோம்.100கி்மீ வேகத்தின் சென்றால் 2 நாட்கள் ஆகும்.நம்மிடம் 200 கி.மீ வேகத்தில் செல்லும் காரும்,அதை ஓட்டும் திறமையும் இருந்தால் ஒரே நாளில் சென்று சேர்ந்துவிடலாம்.அனுபவிக்கும் அனுபவங்கள் ஒன்றுதான் காலம்தான் விரைவாகிறது.இதுதான் தத்துவம்.
-
அதாவது இந்த உலகத்தில் உள்ள எல்லாமே ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவைதான்.ஆனால் அதில் பயணிக்கும் நாம் வேகமாக செல்ல வேண்டுமா,மெதுவாக செல்ல வேண்டுமா என்பது நம் கையில்தான் உள்ளது.இந்த இயற்கையின் அனுபவங்களை வேகமாக அனுபவித்தால் இந்த பிறவியிலேயே எல்லா அனுபவங்களையும் பெற்று முக்தி அடைந்துவிடலாம்.மெதுவாக பயணித்தால் பல பிறவிகள் ஆகும்.அவ்வளவுதாங்க விசயம்.
-
சாதாரண மக்கள் கொஞ்சம் இன்பம் கொஞ்சம் துன்பம் என்று மெதுவாக பயணிக்கிறார்கள்.ஞானிகள் அதிக இன்பம் அதிக துன்பம் என்று வேகமாக பயணிக்கிறார்கள்....
-
ஞானிகள் மிகவேகமாக எல்லா அனுபவத்தையும் பெற்றுவிடுகிறார்கள்.சாதாரண மக்களுக்கு பல பிறவிகள் தேவை.
-
ஒரு நாட்டிற்கும் இது பொருந்தும்
-
சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment