அனைத்தும் இறைவனது செயல் என்கிறார்கள்.ஒரு இலை அசைந்தால்கூட அது இறைவனின் விருப்பபடிதான் அசைகிறது என்கிறார்கள்.இது எப்படி என்று புரிகிறதா?
-
நமது உண்மையான இயல்பு செயலற்றநிலை.நாம் ஆன்மா.நாம் பிறக்கவும் இல்லை.இறக்கவும் இல்லை.
-
தத்துவத்தின்படி இந்த உலகம் என்பது பிரகிருதியின் பரிணாமம்.இந்த பிரகிருதியை இயற்கை என்றும் மாயை என்றும் பல பெயர்களில் கூறலாம்.இந்த இயற்கை என்பது தனியாக இயங்க முடியாது.அதற்கு உயிர்கொடுப்பது ஆன்மா.ஆன்மாவின் முன்னிலையில் இந்த இயற்கை உயிர் பெற்றதுபோல காட்சியளிக்கிறது.
-
இன்னொரு கோணத்தில் பார்த்தால் இந்த பிரபஞ்சம் என்பது இறைவனின் இன்னொரு வெளிப்பாடு.அதனால் இந்த இயற்கையில் உள்ள அனைத்தும் இறைவன்தான் என்று கூறுகிறார்கள்.கல்,மண்,தாவரம்.விலங்கு.மனிதன் என்று காணக்கூடிய,காண முடியாத எல்லாமே இறைவன்தான்.ஈசாவாஸ்யம் இதம் சர்வம்
-
எங்கும் நிறைந்துள்ள இந்த இறைவனின் இயற்கை காலம்-இடம்-காரியகாரணம் என்ற நியதியின்படி இயங்குகிறது.ஒரு இலையை அசைப்பது யார்? காற்று வடிவில் உள்ள இறைவன். நிலநடுக்கத்தை உருவாக்குவது யார்? பூமியாக இருக்கும் இறைவன்.மழையை பெய்விப்பது யார்? நீராக இருக்கும் இறைவன்.இப்படி அனைத்தும் இறைவனாக இருந்து,அனைத்து சக்திகளும் இறைவனாக இருக்கும் போது.அனைத்தையும் இயக்குவது இறைவன்தான் என்று சொல்வதில் தவறு இல்லையே!
-
சுவாமி வித்யானந்தர்
-
No comments:
Post a Comment