Thursday, 5 July 2018

மூன்றாவது உலகப்போரை துவக்க இருக்கும் வடகொரியாவும்- அமெரிக்காவும்



மூன்றாவது உலகப்போரை துவக்க இருக்கும் வடகொரியாவும்- அமெரிக்காவும்
-
ஒரு நாடு ராணுவ வலிமை பெறும்போது அதன் பக்கத்து நாடுகள் அதன்மீது பயம்கொள்ளும். அதனால் தன் உதவிக்கு வேறு நாடுகளை சேர்த்துக்கொள்ளும்.இது இயல்பானது. -
-
வடகொரியாவும் தென்கொரியாவும் பரம எதிரிகள்.வடகொரியா ராணுவத்தில் கவனம் செலுத்துகிறது.தென்கொரியா வளர்ச்சித்திட்டத்தில் கவனம் செலுத்துகிறது.வடகொரியாவின் ஆயுத வளர்ச்சியால் வரும் முதல் ஆபத்து தென்கொரியாவிற்குத்தான். எனவே அந்த நாடு உதவிக்கு அமெரிக்காவை அழைத்துள்ளது.
-
அமெரிக்காவால் நெருக்கடிக்கு உள்ளானதால் வடகொரியா தன் உதவிக்கு சீனாவை அழைத்திருக்கிறது.உலகத்திலேயே ஏழைகள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று வடகொரியா.அந்த நாட்டிற்கு தேவையான உணவு போன்ற அடிப்படை உதவிகளை சீனா பல ஆண்டுகளாக செய்துவருகிறது.ஏன்? எல்லாம் அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியாவை பயன்படுத்துவதற்குத்தான்.
-
வடகொரியாவுக்கு தேவையான அணுஆயுத தொழில்நுட்பங்கள் முதல் அனைத்துவிதமான உதவிகளையும் மறைமுகமாக சீனாசெய்துவருகிறது. இது வடகொரியாவின் அண்டை நாடுகளான தென்கொரியா,ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.அதனால் அமெரிக்காவுக்கு சீனாவின்மீதும் கடுமையான கோபம் உள்ளது.
-
வடகொரிய மக்கள் வெளி உலகம் தெரியாதவர்களாக வளர்க்கப்பட்டுள்ளார்கள்.வெளி உலக செய்திகள் எதுவும் அவர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.இன்டர்நெட் கிடையாது.வெளிநாட்டு தொலைக்காட்சிகள் கிடையாது. வெளிநாடு செல்வதற்கும் அனுமதி கிடையாது.ஆகவே வடகொரிய அதிபர் செய்வது எல்லாம் நல்லதற்காகவே என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.தற்போதைய வடகொரிய அதிபர் இரக்கமற்றவர்.அந்த நாட்டு மக்கள் உணவின்றி தவித்துக்கொண்டிருக்கும்போது,அவர்களிடமிருந்து வரியை பெற்று ஆயுதங்களை ஏன் உற்பத்தி செய்ய வேண்டும்? பொறாமை.தென்கொரியாமீது உள்ள பொறாமை.தென்கொரியாவின் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துகொள்ள வேண்டும் என்ற பேராவல்
-
இதை அப்படியே விட்டுவிட்டால் வடகொரியா மேலும் மேலும் ஆயுதங்களை குவித்துக்கொண்டெ இருப்பார்கள்.இன்னும் பல தொழில்நுட்பங்களை சீனா உதவியால் பெற்று அமெரிக்காவிற்கு எதிராக பெரிய ராணுவநாடாக மாறிவிடுவார்கள்.ஆகவே அந்த அளவு வளர்வதற்கு முன் வடகொரியாவை அழிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் எண்ணம்.
-
வடகொரியாவை தாக்குவதாக இருந்தால் அது ஒருசில நாட்களில் முடிந்துவிடும் போராகவே இருக்கும். எதிரிகளுக்கு கால அவகாசம் கொடுத்தால் தன்னிடமுள்ள அணுஆயுதங்களை பயன்படுத்தி தென்கொரியா.ஜப்பான் போன்ற நாடுகள் மீது வீச துவங்கிவிடுவார்கள்.இதனால் பாதிப்பு மிக அதிகமாகும். எனவே ஒருசில நாட்களில் அனைத்தையும் அழிக்கக்கூடிய மிகப்பெரிய அணுஆயுதங்களையே அமெரிக்க பயன்படுத்தும். ஓரிரு நாளில் மொத்த வடகொரிய ராணுவ இலக்குகளும் அணுஆயுதங்கள் கொண்டு அழிக்கப்பட்டுவிடும்.தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி இரக்கமற்றவர் என்பது உலகம் அறிந்த விசயம்.
-
அப்படி ஒருவேளை வடகொரியாவின் முக்கிய இலக்குகளை அணுஆயுதங்கள் கொண்டு அமெரிக்கா தாக்கி அழித்தால்.உடனடியாக வடகொரியாவில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு பசியாலும் பட்டினியாலும் பல கோடிபேர் இறந்துபோவார்கள்.கதிர்வீச்சு காரணமாக அணுஆயுதத்தில் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு உதவிசெய்ய தொண்டு நிறுவனங்கள்கூட செல்ல தயங்குவார்கள்.
-
வடகொரியாவை வீழ்த்தியதை அமெரிக்கா கொண்டாடினாலும்,அவர்களுக்கான உண்மையான அச்சுறுத்தல் அதன்பிறகு தான் வரும்.
-
கட்டுரை----சுவாமி வித்யானந்தர்(5-7-2018)

No comments:

Post a Comment