நமது வாழ்க்கை நமது கையில்தான் உள்ளது.நேற்று நாம் செய்த செயலின் பலனால் இன்று துன்பப்படுகிறோம் அது விதி.இந்தவிதியை உருவாக்கியது யார்.நாமே. இன்று நல்ல செயலை செய்தால் நாளை நல்ல பலன் கிடைக்கும்.எனவே எதிர்காலத்தை நல்லவிதத்தில் உருவாக்கிக்கொள்வோம்..நமது விதியை நாமே உருவாக்குகிறோம். இந்த பிறவி நமது முந்தைய பிறவியின் பலன் என்றால்,அடுத்த பிறவி எப்படி அமைய வேண்டும் என்பது நமது இந்த பிறவியின் செயல்களை பொறுத்து அமைகிறது...நம் வாழ்க்கைக்கு வேறு யாரும் பொறுப்பு அல்ல.நாம்தான் பொறுப்பு..
-
அனைத்தும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அதற்குள் பயணம் செய்பவன் மாறுபடுகிறான். உதாரணமாக 1-வது வகுப்பில் ஒரு பாடம் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.இரண்டாவது வகுப்பில் வேறு பாடம் சொல்கிக்கொடுக்கப்படுகிறது.இப்படியே 10 வது வகுப்புவரை நடக்கிறது. வகுப்பு மாறுவதில்லை.ஆனால் அதில் படிக்கும் மாணவர்கள் மாறுகிறார்கள்.அதேபோல இந்த உலகத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.ஆனால் அதற்குள் பயணம் செய்யும் ஆன்மாக்கள் மாறுபடுகின்றன.
-
பாம்பு ஏணி விளையாட்டில் சில கட்டத்தில் சென்றால் ஏணியில் ஏறலாம் சில கட்டத்தில் சென்றால் பாம்பு கொத்துகிறது.இது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.ஆனால் அதற்குள் பயணம் செய்பவன் மாறிக்கொண்டெ இருக்கிறான்.சிலர் முக்தி அடைகிறார்கள் புதியவர்கள் வருகிறார்கள்.ஆனால் யார் வந்தாலும் அனைவருக்கும் நியதி ஒன்றுதான்.அதேபோல இந்த உலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்கனவே முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.ஆனால் பயணம் செய்யும் ஆன்மா மாறுகிறது.
-
இந்த கல்பத்தில் என்ன நடக்கிறதோ அதே விஷயங்கள் முன்பு ஏதோ கல்பத்தில் நடந்தவைதான்.இன்னும் வேறு ஏதாவது கல்பத்தில்கூட இதேபோல நடக்கும்.
-
நிறைநிலை பெற்றவர்கள் நான் உடல் அல்ல மனம் அல்ல பிரம்மம் என்பதை உணர்கிறார்கள்.அதனால் இந்த உலகத்தில் நடக்கும் எதற்கும் தனக்கு பொறுப்பு இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.அதனால் உடலையும் மனத்தையும் இறைவன்விட்ட வழி என்று ஒப்படைத்து தான் பிரம்மம் செயலற்றவன் என்ற உணர்வில் இருக்கிறார்கள்
-
இனி நடக்க இருப்பதை தடுக்க முடியும்.அதற்குதான் பரிகாரம் என்று பெயர்.ஒரு செயல் ஏன் நடக்கிறது என்பதை ஆராய்ந்து அதன் காரணத்தை கண்டுபிடித்துவிட்டால் அது உரிய பலன் தருவதற்கு முன்பே மாற்றி அமைத்துவிடலாம்.அதுவும் பிரபஞ்ச நியதிதான்.அதனால்தான் பரிகாரம் என்பது முக்கியமாகிறது
-
ஆன்மா பயணிப்பதில்லை.ஆன்மாவின் முன்னால் இயற்கை பயணிக்கிறது.உதாரணமாக பூமியை சூரியன் சுற்றுவதாக காண்கிறோம்.உண்மையில் சூரியன் நிலையாக உள்ளது.பூமி சுற்றுகிறது.மனமயக்கத்தின் காரணமாக நாம் பயணிப்பது போலவும் இயற்கை நிலையாக இருப்பதுபோலவும் காண்கிறோம். ஆன்மா பயணிப்பதில்லை.ஆன்மா நிலையாக இருக்கிறது.இயற்கைதான் பயணிக்கிறது.இயற்கையில் நடக்கும் நிகழ்வுகளில் பற்றுகொண்டு ஆன்மா தான் பயணிப்பதாக தவறாக நினைக்கிறது
-
..வாழ வேண்டுமா வேண்டாமா என்பதுதான் கடைசி நிலை. வாழ்க்கை முடியும்போது முக்தி கிடைக்கிறது.முக்தி கிடைக்கும்போது வாழ்க்கை முடிகிறது. ஞானம் பூரணமாகும்போது வாழ்க்கை முடிந்துவிடுகிறது.அதன்பிறகு உடல் நிலைக்காது...உடல் வேண்டுமா வேண்டாமா என்பதுதான் கேள்வி...உடல் வேண்டும் என்றால் அதை இறைப்பணிக்காகஇறைவனிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது...அவர்கள் உலகமகா ஆச்சார்யர்களாகிறார்கள்
-
சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment