பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா அமைக்கும் சாலை-இந்தியாவிற்கு எமன்.உடனே அதை தடுத்து நிறுத்தவேண்டும்.
-
காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு மாநிலம். காஷ்மீர் மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதியை இந்தியா தன் நேரடி ஆட்சியின் கீழ் வைத்துள்ளது. இருப்பினும் ஆசாத் கஷ்மீர், கில்ஜித்-பல்திஸ்தான் போன்ற காஷ்மீரின் சில பகுதிகளை ஆசாத் காஷ்மீர் என்ற பெயரில் பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மற்றொரு அண்டை நாடான சீனா கஷ்மீரின் கிழக்குப் பகுதியில் சில இடங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த பகுதி அக்சய் ச்சின் என்று அழைக்கப்படுகிறது.
-
காஷ்மீர் மாநிலத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பாக 1947, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு நாடுகளுக்கு இடையே மூன்று முறை போர்கள் நிகழ்ந்துள்ளன. இந்த போர்கள் தவிர்த்து அவ்வப்போது ராணுவ மோதல்களும் நிகழ்ந்துள்ளன.
-
சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு சாலை அமைத்துக்கொண்டிருக்கிறது.இந்த சாலை அமைக்கப்பட்டால் அதன்பிறகு இந்தியா என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும்
-
1.சீனாவின் பெரிய ஆயுத தளவாடங்கள் எளிதில் பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியும்.பாகிஸ்தான் வீரர்களுக்கு எளிதில் ராணுவ பயிற்சி அளிக்க முடியும்.
2.பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து எளிதில் இந்தியாவை சுற்றி வளைக்க முடியும்
3.பாகிஸ்தான் இளைஞர்களில் லட்சக்கணக்கில் தற்கொலைபடை தீவிரவாதிகள் உள்ளார்கள்.இந்தியாவில் எந்த பகுதியிலும் அவர்களால் எளிதில் ஊடுருவி பெரிய தாக்குதல்களை நடத்த முடியும்
4.சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்படும் இந்த சாலை மூலம் எளிதாக சீனாவால் அரபிக்கடலில் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியும்.இந்தியாவால் அதை தடுக்க முடியாது.தற்போது பல ஆயிரம் மைல் சுற்றி வரவேண்டியுள்ளது இடையில் அந்தமான் நிகோபர் தீவுகளில் இந்திய ராணுவம் பலமாகஇருப்பதால் சீன போர்க்கப்பல்கள் இந்தியா வருவதற்கு முன்பே அதை தடுக்க முடியும்.
5.இந்த சாலை அமைக்கப்பட்டால் தற்போதுள்ள கில்ஜித்-பல்திஸ்தான் முழுவதும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்.ஏற்கனவே காஷ்மீரின் ஒருபகுதியை அது தன் வசம் வைத்துள்ளது.
-
வர்த்தகத்தை பலப்படுத்தவே இந்த சாலையை அமைப்பதாக சீனா சொன்னாலும்,இது வர்த்தக சாலை அல்ல.இந்தியாவை சுற்றி வளைக்க ஏற்படுத்தப்படும் சாலை.
-
பாகிஸ்தானின் ஒரே நோக்கம் இந்தியாவை அழிப்பதுதான்.நமது நோக்கம் அதுவல்ல.சீனாவின் ஒரே நோக்கம் இந்தியாவை பாகிஸ்தானைக்கொண்டு மறைமுகமாக தாக்குவது. பாகிஸ்தான் ராணுவரீதியாக பலப்படுவதற்கு முன்பே அதை பலவீனப்படுத்துவதுதான் அறிவுடைய செயல்.கில்ஜித்-பல்திஸ்தான் காஷ்மீர்மீது இந்தியாவிற்கு முழுஉரிமை உண்டு.ஆகவே அதை மீட்டெடுப்பதற்கு இந்தியா போர்புரியுமானால் அது சட்டப்படி,தார்மீகப்படி தவறில்லை.இரண்டு எதிரிகள் ஒன்று சேர்வதை முன்கூட்டியே தடுப்பது தவறில்லை
-
சீனா சாலை அமைப்பதில் மிகவேகமானவர்கள்.ஆகவே இந்தியா போர்புரிந்து கில்ஜித்-பல்திஸ்தான் காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும்.அது நமது உரிமை மட்டுமல்ல.இந்தியாவின் முழு பாதுகாப்பே அதை அடிப்படையாக கொண்டுதான் இருக்கிறது.அவ்வாறு அந்த பகுதி நமது கைக்கு வருமானால் சீனாவும் பாகிஸ்தானும் நேரடியாக சந்தித்துக்கொள்ள முடியாது.அதன்பின் நமது பாதுகாப்பு குறித்து சற்று நிம்மதியடையலாம்
-
சுவாமி வித்யானந்தர்(1-7-2018)
No comments:
Post a Comment