Thursday, 29 November 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-28

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-28
-
மனத்தின் பலவீனங்களைப் பற்றி  அன்னையிடம்  கூறியதற்கு அவா் பதிலளித்தார். மகனே! அமாவாசையும் பெளா்ணமியும் வருவது எப்படி இயற்கையின் நியதியோ  அது போலவே மனத்தின் பலவீனமும்.  சில வேளைகளில் அமைதியாகவும் சில வேளைகளில் தூய்மையற்று சஞ்சலமாகவும் இருப்பது மனத்தின்  இயற்கை நியதி. அம்மா! இந்த உலகில் உருப்படியாக எதையும் சாதிக்க முடியாது.மகனே! இந்த உலகம் ஒரு பெரிய சேற்றுக் குட்டை . அதில் விழுந்தால் கரையேறுவது மிகவும் கடினம். பிரம்மாவும் விஷ்ணுவும் அதில் விழுந்து மூச்சு வாங்குகிறார்கள். பாவம். மனிதனைப் பற்றி என்ன சொல்ல  இருக்கிறது. இறைவனின் திரு நாமத்தை சொல் ,  நாமஜபம் செய்ய ச்செய்ய அவரே உன்னை இந்த உவகியலிலிருந்து விடுவிப்பார். மகனே! அவரே விடுவிக்காவிட்டால்  யாராலாவது முக்தி பெற முடியுமா! அவரிடம் அசைக்க முடியாத  நம்பிக்கை கொள் . எப்படி குழந்தைகளுக்கு தந்தையும் தாயும் புகலிடமாக விளங்குகிறார்களோ , அப்படி குருதேவரை க்கருது. நம்பிக்கை பற்றிய பேச்சு வந்தது. மகனே! புத்தகங்களைப் படிப்பதால் அந்த நம்பிக்கை வரும்என்றா நினைக்கிறாய்.? அதிகம் படித்தால் குழப்பம் தான் அதிகமாகும்.உலகம் உண்மையற்றது. இறைவன் மட்டுமே உண்மை,  சாஸ்த்திரங்களை படித்து புரிந்து கொள்ள வேண்டியது இதை மட்டுமே என்பார் குருதேவர்,  இன்ன இன்ன சாமான்களை யெல்லாம்வாங்கி வா  என்று நான் உனக்கு ஒரு கடிதம் எழுதுவதாக வைத்து கொள்.  உனக்கு அந்த கடிதம் எதுவரை தேவை? அதில் என்ன இருக்கிறது என்பதை அறியும் வரை, அறிந்த பிறகு அந்த கடிதத்தால் என்ன பயன். கடிதத்தில் கண்ட பொருட்களை வாங்க வேண்டும்.கொண்டு வந்து என்னிடம் தர வேண்டும். அவ்வளவு தான், அதைச் செய்யாமல் இரவு பகலாக உட்கார்ந்து அந்த கடிதத்தைப் படித்து கொண்டிருப்பதில் என்ன பயன்? ஒரு நாள் பக்தர் ஒருவா் சற்று நொந்த மனத்துடன் அன்னையிடம் அம்மா உங்களிடம் இவ்வளவு வந்து போகிறேன். ஆனால் ஆன்மீகத்தில் எந்த முன்னேற்றத்தையும் நான் காணவில்லையே! எப்படி இருந்தேனோ அப்படியே இருக்கிறேன் என்று தான் எனக்கு த்தோன்றுகிறது என்று சொன்னார். அதற்கு அன்னை கூறினார்.   மகனே! நீ ஒரு கட்டிலில் தூங்கி கொண்டிருப்பதாகவைத்து க் கொள்வோம் ,  அப்போது ஒருவா் வந்து உன்னை க் கட்டிலுடன்  தூக்கி ச் சென்று வேறோர் இடத்தில்  வைத்த விடுகிறார். நீ வேறோர் இடத்திற்கு  வந்திருக்கிறாய்  என்பது விழித்தவுடனே  உனக்குத் தெரியுமா?  தெரியாது.தூக்கம் நன்றாக க் கலைந்து , சற்று கழிந்த பிறகு தான் அது உனக்குத் தெரியும். மகனே! நான் உங்களுக்கு எதைத்தர வேண்டுமோ, எதைச் செய்ய வேண்டுமோ அதைதீட்சை வேளையிலேயே செய்து விடுகிறேன் . உடனடியாக அதன் பலனை நீங்கள் அறிய வேண்டுமானால் , உடனடியாக அமைதி பெற வேண்டுமானால் தவத்திலும் சாதனைகளிலும்  தீவிரமாக ஈடுபட வேண்டும், இல்லாவிட்டால்  எல்லாம்  வாழ்வின் இறுதி வேளையில் தான் கிடைக்கும்.அம்மா! தம்மிடம் வருபவா்களுக்கு  இது தான் கடைசி பிறவி  என்று குருதேவா் கூறினார். உங்களிடம் வருபவா்களின் நிலை என்ன? வேறு என்ன? இங்கும் அது தான் நடக்கும். அம்மா! உங்களிடம் மந்திர தீட்சை பெற்றவா்கள்  எந்தச் சாதனைகளும் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?  என்ன நடக்குமப்பா! ஆ, மாம், நீ ஏன் இது பற்றியெல்லாம் இவ்வளவு கவலைப்பட வேண்டும்?  மனத்தில் எழும் ஆசைகளையெல்லாம் பூா்த்தி செய்து கொள், பிறகு ராமகிருஷ்ண லோகத்தில் சென்று நிலைத்த அமைதியை அனுபவிக்கலாம், குருதேவா் உங்களுக்காகப்புதியதோர் உலகத்தையே படைத்துள்ளார். ஒரு பக்தர் கை விரல்களால்  எண்ணி மந்திர ஜபம் செய்வதை மறந்துவிட்டிருந்தார். அதை விளக்குமாறு கேட்டு கடிதம் எழுதி அதை என்னிடம் தந்திருந்தார். அதைத் தெரிவித்த போது அன்னை கூறினார். இதிலெல்லாம் என்ன இருக்கிறது? எப்படியாவது ஒரு முறையை வைத்து கொண்டு ஜபம் செய்தால் போதும், முறைகளும் வழிகளும்  எல்லாம் மனத்தை வசப்படுத்துவதற்காக மட்டுமே. தீட்டு பற்றிய பேச்சு வந்தது. அன்னை  கூறினார். பாரப்பா! குருதேவர்  மிக மென்மையாக வயிறு படைத்தவா். நான் நகபத்தின் தங்கி அவருக்கான சமையலை ச் செய்து வந்த காலம் அது. விலக்கு நாட்களில் நான்  சமையல் செய்வதில்லை. அந்த நாட்களில்  அவா் காளி கோயில் பிரசாத  உணவை சாப்பிடுவார்.ஆனால் அது  அவரது  வயிற்றுக்குச் சிறிதும் ஒத்து வராது.வயிற்று வலியால் அவதிப்படுவார். ஒருமுறை என்னிடம் , “ இதோ பார் , விலக்கு நாட்களில் சமைக்கக் கூடாதென்று யார் சொன்னது ? நீ எனக்காக சமயலையைச் செய் . அதில் தவறில்லை . ஒரு விஷயம் இந்த விலக்கு , தீட்டு போன்றவையெல்லாம் மனத்தில்தான் உள்ளன . புறத்தில் அவை எதுவும் இல்லை ” என்றார் அதன்பிறகு  நான் எல்லா நாட்களிலும் சமைக்கத் தெடங்கினேன் .ஒரு முறை அன்னை  கோயல்பாராவில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.ஒரு சீடா் அவருக்காக சா்பத் தயாரித்துக் கொடுப்பது வழக்கம்.கொடுக்கு ம் முன் எல்லாம் சரியாக சோ்க்கப்பட்டுள்ளதா என்பதை ச் சோதிப்பதற்காக த் தாமே ருசி பார்த்து விட்டுத்தான் கொடுப்பார்.இது அன்னைக்குத் தெரியாது. ஓரிரு நாட்களுக்குப் பிறகு அன்னை தாமாக அவரிடம்  பாரப்பா அன்புக்கு உரியவர்களுக்கு ஏதாவது கொடுக்க நோ்ந்தால்  சற்று சுவைத்துப் பார்த்து விட்டு கொடுப்பது நல்லது, என்றார். அதற்கு அந்த சீடா் அம்மா நான் அப்படித்தான் உங்களுக்கு தந்துவருகிறேன், என்றார். உடனே அன்னை நல்லது செய்தாய் மகனே, நேசிப்பவா்களுக்கு அப்படித்தான் கொடுக்க வேண்டும்இடைச்சிறுவா்கள் தாங்கள் சுவைத்துப்பார்த்து  விட்டுத்தான்  கண்ணனுக்கு பழங்களை கொடுத்தார்கள். என்று நீ கேள்விப்பட்டதில்லையா ? என்றார். அம்மா சில வேளைகளில் ரோட்டில் போகும் போது  சிலரைப் பார்க்க  நோ்கிறது.  அவா்களை முதன்முறையாக ப் பார்த்தாலும் ஏதோ பல காலமாக  அவா்களைத் தெரிந்தது போல்  தோன்றுகிறது. பிறகு விசாரித்துப் பார்த்தால்  அவா்கள் குருதேவரின் பக்தா்களாகவோ உங்கள் பக்தா்களாகவோ இருப்பார்கள்..இது எப்படி? பச்சைப்பாசி பற்றி குருதேவா் கூறுவது உனக்கு நினைவில்லையா? அது பரவலாகப் படர்ந்திருக்கும். ஒரு நுனியை இழுத்தால்  மொத்தச்செடியும் சோ்ந்தே வரும். அவையெல்லாம் ஒன்றோடொன்று  இணைக்கப்பட்டவை

No comments:

Post a Comment