ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்-அமுதமொழிகள் புத்தகம்-2-பாகம்-5
-
இறைவனே இப்படியெல்லாமாகவும் ஆகியிருக்கிறார் . இதைச்சொல்பலரும் அவரே இப்படி ஒரு கருத்து உள்ளது . மாயை, உயிர்கள் ,உலகம் எல்லாம் இறைவனே. காமினீ-காஞ்சனம்தான் யோகத்திற்கு தடை.
-
மனம் துாய்மையானால் யோகநிலை கைகூடுகிறது.மனத்தின் இருப்பிடம் கபாலம். அதாவது புருவமத்தி. ஆனால் நம் மனத்தின் பாா்வை எல்லாம் குறி,குறம்,தொப்புள் இவைகளில் அதாவது காமத்திலும்-பணத்தின்மீதும்தான் உள்ளது . சாதனைகள் செய்தால் அதே மனம் மேல் நோக்கிய பார்வை பெறுகிறது.
-
எந்த சாதனைகளைச் செய்தால் மேல் நோக்கு பார்வை மனதிற்கு கிடைக்கும்? எப்போதும் சாதுக்களின் தொடர்பு இருக்குமானால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளலாம். ரிஷிகள் எப்போதும் தனிமையில் வாழ்ந்தனர் அல்லது சாதுக்களுடன் தங்கினர். அதனால்தான் அவர்களால் எளிதில் காமத்தையும்-உலகியல் பற்றையும் துறந்து இறைவனிடம் மனத்தை வைக்க முடிந்தது. அவர்களிடம் நிபந்தனையோ அச்சமோ இல்லை.
-
துறக்க வேண்டுமானால் மனவலிமை வேண்டும். அந்த வலிமையைத் தருமாறு இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் . எதை உண்மையற்றது என்று உணர்கிறோமோ அதை அந்தக்கணமே துறந்துலிட வேண்டும் . ரிஷிகளிடம் இத்தகைய மனவலிமை இருந்தது . இந்த வலிமையின் காரணமாக அவர்கள் புலன்களை வென்றவர்களாக இருந்தனர்
-
ஆமை தன் அவயவங்களை ஓட்டிற்குள் இழுத்துக் கொண்டப்பின் அதைத் துண்டுதுண்டாக வெட்டினாலும் அவற்றை வெளியே நீட்டாது. உலகியல் மனிதன் கபடனாக இருக்கிறான், எளிய மனத்தினனாக இருப்பதில்லை. இறைவனை நேசிப்பதாக வாயால் சொல்வான், ஆனால் உலகப் பொருட்களில் அவன் வைத்திருக்கும் பற்றில் காமத்திலும்,பணத்தையும் நேசிப்பதில் வைக்கும் பற்றில் ஒருசிறு பகுதிகூட இறைவனில் வைக்கமாட்டான் . அவன் இறைவனை நேசிப்பதெல்லாம் வெறும் பேச்சளவில்தான்
-
கபடத்தை விட்டுவிடுங்கள். மனிதர்களிடம் கபடம் காட்டக் கூடாது, இறைவனிடமும் கூடாது. மொத்தத்தில் கபடத்தனமே கூடாது.
-
மனைவியிடம் நேசம் ஏற்படுவது இயல்புதானே. இதுதான் பராசக்தியின் உலகை மயக்கும் மாயை. “இவளைப்போல் எனக்கு வேண்டியவள் வேறு யாரும் இருக்க முடியாது; வாழ்விலும் சாவிலும், இந்த உலகிலும் மறு உலகிலும் எனக்கு மிகவும் நெருங்கியவள் இவளே என்ற எண்ணம் உண்டாகிறது. 'இந்த மனைவியின் காரணமாக மனிதன் எந்த வேதனையைத்தான் அனுபவிக்கவில்லை ! இருந்தாலும் அவளைப் போல் தனக்குநெருக்கமானவள் வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறான் . என்ன பரிதாபம் !.
-
வித்யை வடிவினளான மனைவி உண்மையான வாழ்க்கை துணைவிதான். அவள் கணவன் இறை றியில் முன்னேற மிகுந்த உதவி செய்கிறாள். ஓரிரு குழந்தைகளை பெற்றபின் இருவரும் உடன்பிறப்பைபோல் வாழ்கின்றனர் .
இருவருமே இறைவனின் பக்தர்கள்-சேவகன் ,சேவகி . அவர்களுடைய இல்லறம் வித்யையின் இல்லறம் .
-
உலகியல் மனிதர்கள் கடவுளை நேசிப்பது கண நேரத்திற்கு மட்டுமே. பழுக்கக் காய்ச்சிய இரும்புச்சட்டியில் தண்ணீர் துளி விழுந்தால் சொய் என்று பொங்கும் .உடனே மறைந்துவிடும் அதுபோல் உலகியல் மனிதர்களின் மனம் உலக இன்பத்தையே நாடி நிற்கிறது . அதனால்தான் இறைவனிடம் எந்த நேசமும் அந்த மன
ஏக்கமும் உண்டாவதில்லை .
-
மனிதர்கள் சாதனைகள் தவம் என்றெல்லாம் செய்கிறார்கள். ஆனால் மனமோ காமத்தையும்,போகத்தையும் நாடுவதால் தான் சாதனைகள் பலன் தருவதில்லை
-
ஆரம்பநிலையில் அதிகம் சுற்ற வேண்டியிருக்கிறது.மிகுந்த கஷ்டப்படவேண்டியிருக்கிறது. ராக பக்தி தோன்றி விட்டால் வழி எளிதாகிவிடுகிறது. அறுவடை முடிந்த பிறகு வயலின் குறுக்கே நடந்து எளிதாகக் கடந்து விடுவதைப் போன்றது இது. அறுவடைக்கு முன்போ வரப்பு வழியாக சுற்றிச் செல்ல வெண்டும்.
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் வாட்ஸ் அப் குழு 9003767303
No comments:
Post a Comment