Wednesday, 7 November 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-15


அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-15
-
நான் குருதேவரிடம் , “ பகவானே , எல்லோருக்கும் நன்மை செய்யுங்கள் . பலரும் பல இடங்களில் இருக்கிறார்கள் , என்னால் எல்லோரையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை ” என்று பிரார்த்திக்கிறேன் . அவரே அனைத்தையும் செய்கிறார் . இல்லாவிட்டால் இவ்வளவு பேர் வருவார்களா ? 
-
தொடர்ந்து பிரார்த்தனை செய் . மெள்ள மெள்ள எல்லாம் நடைபெறும் . முனிவர்களும் ரிஷிகளும் யுகயுகங்களாகத் தவம் செய்தும் பெறவில்லை . இந்த பிறவியில் இல்லாவிட்டாலும் அடுத்த பிறவியில் , அடுத்த பிறவியில் இல்லாவிட்டால் அதற்கடுத்த பிறவியில் கிடைக்கும் . இறையனுபூதி என்பது அவ்வளவு சுலபமா என்ன ? ஆனால் இந்த முறை குருதேவர் சுலபமான வழியைக் காட்டியிருக்கிறார் , அவ்வளவுதான் . 
-
பெண்களுக்கு சன்னியாசம் கூடாது என்பது நியதி .ஆனால் கெளாி வெறும் ஒரு பெண்ணா ? அவள் ஆணையும் மிஞ்சியவள். ஒரு பெண் சன்னியாசியாகி விட்டால் அதன் பிறகு அவளைப் பெண்ணாக கருதக்கூடாது என்பாா் குருதேவா். 
-
ராஞ்சியிலுள்ள பக்தா் ஒருவா் குருதேவரை கனவில் கண்டாராம். குருதேவா் காவியுடுத்து காலில் மரச்செருப்பு அணிந்து கையில் இடுக்கியுமாக காட்சியளித்தாராம். அது என்ன கோலம் அம்மா?அது துறவிக்கோலம். தாம் ஒரு பெளல் துறவியாக மீண்டும் வரப்போவதாக கூறியிருந்தாா் அல்லவா?
-
குருதேவா் காசிப்புாில் நோயுற்றிருந்தாா். இளைஞா்கள் அவரைக் கவனித்துவந்தாா்கள். கோபாலும் இருந்தாா். ஒரு நாள் சேவையை விட்டு விட்டு அவா் தியானம் செய்யச்சென்று விட்டாா். நீண்ட நேரம் தியானத்தில் அமா்ந்திருந்தாா். இதைகேள்விப்பட்ட கிாிஷ் பாபு கண்களை மூடிக்கொண்டு கோபால் யாா் மீது தியானம் செய்கிறாரோ அவா் படுக்கையில் துன்பப்படுகிறாா். கோபால் என்ன தியானம் செய்கிறாரோ என்னவோ? என்றாா். பிறகு கோபாலை அழைத்து வரச்செய்தாா். குருதேவா் அவாிடம் தமது கால்களைப் பிடித்துவிடுமாறு கூறினாா்.கால்கள் வலிப்பதாலா பிடித்துவிட ச் சொல்கிறேன் ?இல்லை.உனக்கு இன்னும் நான் தரவேண்டியது பாக்கியுள்ளது அதனால்தான் என்றார்
-
உணவைப் பொறுத்த வரையில் குருதேவா் ஒரு விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருந்தாா். ஆத்ய சிராத்த உணவு கூடாது என்று அவா் பக்தா்களைத் தடுத்தாா். அது பக்திக்கு இடையூறு செய்யும் என்பாா் அவா். இதைத் தவிர எதை வேண்டுமானாலும் அவரை நினைத்துக்கொண்டு சாப்பிடு. பயம் வேண்டும் மகனே! குருதேவா் பாா்த்துக்கொள்வாா். இகத்திலும் பரத்திலும் அவா் உங்களைக் காப்பாற்றுவாா். எல்லா விதத்திலும் காப்பாா்.
-
குருதேவா் பிறந்ததிலிருந்து சத்தியயுகம் பிறந்து விட்டது. 
-
இந்த ஆசாரப்பைத்தியங்களின் மனம் ஒரு போதும் துாய்மை பெறுவதில்லை. அசுத்த மனம் அவ்வளவு எளிதில் துாய்மை அடையாது. வளா்க்க வளா்க்க ஆசாரபித்து வளா்ந்து கொண்டே போகும். 
-
இறையனுபூதி பெறுவதால் என்ன நடக்கிறது. இரண்டு கொம்புகளா முளைக்கின்றன? இல்லை. மனம் துாய்மை பெறுகிறது .
-
தூய மனம் இருந்தால் ஏன் தியானம் தாரணை எல்லாம் கை கூடாது. ? ஜபம் செய்ய அமா்ந்தால் போதும் , உள்ளிருந்து மந்திரம் தானாக பொங்கி வெளிவரும்- முயற்சி செய்து அல்ல தானாக வரும் . 
-
உங்கள் ஆசிரமத்தில் நான் குருதேவரைப் பிரதிஷ்டை செய்திருக்கிறேன். அவா் சாதமும் மீனும் உண்பாா். ஆகையால் நான் சொல்கிறேன். அவருக்கு சாதம் படைக்க வேண்டும். செவ்வாய் சனிக்கிழமைகளில் மீனும் படைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை வேண்டாம்.
-
ஒரு துறவி என்ற முறையில் அந்த இளைஞன் நல்லவனாக இருக்கலாம். ஆனால் செயல் வீரா்களே எனக்குத் தேவை. மரத்தடியில் வாழும் துறவியால் என் வேலைகளை செய்ய முடியாது. சிலா் கணநேர எழுச்சியால் பல அாிய பொிய காாியங்களைச் செய்துவிடுவாா்கள். ஆனால் சாதாரண வேலைகளையும் ஒருவன் எவ்வளவு கவனமாகச் செய்கிறான் என்பது தான் அவனது உண்மைத் தகுதியைத் தொியப் படுத்துகிறது. 
-
அன்னை சாரதாதேவியின் உபதேசங்களை தினமும் பெற வாட்ஸ்அப் 9003767303
-

No comments:

Post a Comment