அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-21
-
-
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்(உபதேசங்கள்)-பாகம்-21
-
அன்னை ஒரு துறவியைப்பார்த்து
கூறினார் இல்லற வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து உன்னை விடுவித்து தமது பாத கமலங்ககளில் குருதேவர் வைத்துள்ளார்.இது என்ன சாதாரண பாக்கியமா? ஜப தியானம் செய்கிறேன், அல்லது செய்யாமல் போகிறேன். குடும்பத்தின் பிக்கல் பிடுங்கலிலிருந்து விடுபட்டுள்ளேனே என்பான் யோகேன். என்னைப் பாரேன் !ராதுவின் காரணமாக இந்த மாயையில் என்ன அவதிப்படுகிறேன்.எத்தனையோ பிறவிகளின் வினைப்பயன் பாக்கி இருந்தது. இப்போது அவற்றைஅனுபவிக்க வேண்டியிருக்கிறது. எல்லா அலைகளும் ஓய்ந்து விட்டால் இந்த பிறவியிலேயே முக்தி கிடைத்து விடும். குருதேவர்கூட வினைப்பயனை அனுபவிக்க வேண்டியிருந்தது அல்லவா?.
-
மந்திரத்தை தந்தவர் தான் குரு. அந்த மந்திரத்திலிருந்துதான் படிப்படியாக தியாகம் , வைராக்கியம் , சன்னியாசம் எல்லாம் கிடைக்கிறது. மந்திரம் தந்த குருவையே தியானம் செய்.. அப்பா! நீ என் வேலையைச் செய்கிறாய் .குருதேவரின் வேலையைச் செய்கிறாய், இது என்ன தவத்தை விட குறைந்த விஷயமா?.
-
ஒரு சீடர் கூறினார்-அம்மா சில வேளைகளில் எங்கே முழ்கிவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது.அந்த அளவிற்கு மனம் சஞ்சலப்படுகிறது.
அன்னை கூறினார்- அது எப்படியப்பா?நீ எப்படி மூழ்குவாய் ? குருதேவரின் குழந்தைகளான நீங்கள் மூழ்கமுடியுமா? ஒரு போதும் இல்லை . குருதேவர் உங்களைக் காப்பார். சாதனையும் தவமும் ஒருவன் எவ்வளவு பழகுகிறானோ அவ்வளவு விரைவில் இறைகாட்சி பெறுவான். சிறிது சிறிதாகப் பழகினாலும் அவரது திருக்காட்சி கிடைக்கவே செய்யும். ஆனால் அது இறுதி வேளையிலாக இருக்கும்.எதுவும் செய்யாமல் வெறுமனே ஆரவாரம் செய்பவர்களுக்குத் தாமதமாகவே நடக்கும். ஆன்மீக சாதனைகள் செய்வதற்காகவே நீ துறவியாகி இருக்கிறாய்.எப்போதும் சாதனையில் ஈடுபட உன்னால் முடியவில்லை. அதனால் வேலைகளை குருதேவரின் திருப்பணியாக எண்ணிச் செய்.இறைவனின் திரு நாமத்தில் ஈடுபடுவதற்காக நீ உலகைத் துறந்தாய்.ஆனால் இங்கோ பணிகள் என்ற பெயரில் இன்னோர் உலகை உருவாக்கி அதில் முழ்கி கிடக்கிறாய்.
-
குடும்பத்தையும் சொந்த பந்தங்களையெல்லாம் விட்டு விட்டு மடத்தில் துறவிகளாக சேர்க்கிறார்கள். ஆனால் மடத்தைப்பற்றி பிடித்துக்கொண்டு அதை விட்டு விலக மறுக்கிறார்கள். ஆன்மீக சாதனைகள் செய்வதற்காகவே நீ துறவியாகி இருக்கிறாய்..எப்போதும் சாதனையில் ஈடுபட உன்னால் முடியவில்லை. அதனால் வேலைகளை குருதேவரின் திருப்பணியாக எண்ணி வேலை செய்.
-
அன்னை சாரதாதேவி-ஸ்ரீராமகிருஷ்ணர்
வாட்ஸ்அப் குழு 9003767303
No comments:
Post a Comment