அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-20
-
-
தீய செயல்களுக்கான
பரிகாரங்கள் சாஸ்திரங்களில் எவ்வளவோ சொல்லப்பட்டுள்ளன. சாந்தி ஸ்வஸ்த்யனம் ,யாகம்
,தானம், தவம் போன்ற பரிகாரங்களையும் ஏற்படுத்தியது அவர்தானே!.செயல்கள் ஒவ்வொன்றும்
பலனளிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வேண்டும். மாமரத்தில் பூ வருகிறது. மறுநாளே மாம்பழம் கிடைத்துவிடுமா? நல்லதோ, கெட்டதோ குறிப்பிட்ட கால
அவகாசம் வேண்டும்.நல்லது கெட்டது என்று எல்லா செயல்களின் பிடியிலிருந்து விடுபட விரும்புவாயானால் பகவானின் திருநாமத்தை ஜபம் செய்.பூஜை செய்.பாராயணம்
செய். நல்ல கர்மங்களால் தீய கர்மங்களை அடக்கி
வைக்கலாம். ஆனால் அழிக்க முடியாது. பகவானின்
திருநாமம் மட்டுமே நல்ல தீயகர்மங்கள் அனைத்தையும்
அழித்து மனத்தைத் துாய்மைப் படுத்துகிறது. மனம் தூய்மை பெறும் போது உள்ளிருக்கும் சத்தியப்பொருளை
அறியலாம்.
-
சுற்றிலும் போகப்பொருட்களின்
நடுவில் வாழ்ந்தால் அவற்றை அனுபவிப்பதற்கான வழிகளும் வந்து சேரவே செய்யும் . மகனே ஒரு
பெண் பொம்மையைக்கூட பார்க்காதே, அது இருக்கின்ற பக்கமாகப் போகாதே. அவர் செய்விக்கிறார்
என்பது உண்மை தான். ஆனால் அந்த எண்ணம் எப்போதும்
இருக்க வேண்டுமே! ஆவணம் தலைக்கேறி எல்லாம் நான் செய்கிறேன். நான் யாரையும் நம்பியிருக்க
வேண்டாம் .என்று ஆர்ப்பரிக்கிறான். மனிதன் யார் கடவுளையே நம்பி வாழ்கிறார்களோ அவர்களை அவர் எல்லா ஆபத்துக்களிலிருந்தும்
காக்கிறார்.
-
துறவியின் பார்வை
பெண்கள் பக்கம் திரும்பவே கூடாது. அவன் நடக்கும் போது பார்வையை கால் பெருவிரலில் பதித்தபடி
நடக்க வேண்டும். கழுத்தில் பட்டை கட்டிய நாயை
யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.ஏனெனில் அதற்கு ஒரு சொந்தகாரன் இருக்கிறான் என்று அந்த பட்டையின் முலம் தெரிந்து கொள்ளலாம்.அது
போல் காவிஉடை ஒரு துறவியை காக்கிறது.மனம் எப்போதும்
தீயவற்றையே நாடுகிறது. ஒரு நல்ல விஷயத்தை ச் செய்ய எண்ணினால் மனம் ஒத்துழைக்காது. நகபத்தில்
நான் வாழ்ந்த நாட்களில் இரவு வேளையில்
வெளியில் அமர்வேன். சலனமற்ற கங்கையின் தெள்ளிய நீரில் வானத்து நிலவின் பிம்பம் தெரியும். இறைவா! இந்த
நிலவில் கூட கலங்கம் உள்ளது. என் மனத்தில் எந்த
களங்கமும் இல்லாமல் இருக்க அருள் புரிவாய் என்று அழுதபடியே பிராத்திப்பேன். நான் அங்கே தங்கிய போது ராம்லாலைக் கூட என்னிடம்
வரக்கூடாது என்று தடுப்பார் குருதேவர். இவ்வளவுக்கும் ராம்லால் எனக்கு மகன் முறை!ஓர்
இடத்தில் இருக்கும் போதே மனம் அமைதியாக இருக்குமானால் தீர்த்ததலங்களில் ஏன் சுற்ற வேண்டும்?.தியானம் செய்யச்செய்ய
மனம் ஒருமைப்பட்டு நிலைபெறுகிறது. அந்த நிலைக்குப் பிறகு தியானத்தை கைவிட மனம் விரும்பாது.
தியானத்தில் மனம் ஈடுபடாத நாட்களில் மனத்தைக்
கட்டாயப் படுத்த தேவையில்லை. அன்று இஷ்ட தெய்வத்தை வணங்கி எழுந்து விடு. தகுந்த மன
நிலை இருக்கும் போது தியானம் தானாக நிகழும்.
-
தியானம் கை கூடாவிட்டால்
ஜபம் செய்.ஜபாத் ஸித்தி அதாவது ஜபத்தினோலேயே நிறைநிலை வாய்க்கிறது. தியானம் நிகழுமானால் நல்லது தான். நிகழாவிட்டால் வற்புறுத்தி
மனத்தை அதில் ஈருபடுத்தத் தேவையில்லை.குருதேவர் உனது துறவு விரதத்தைக் காப்பார். அவர்
உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பயம் எதற்கு? அவரது வேலையைச் செய், சாதனைகள் செய். கொஞ்சமாவது
வேலைகளில் ஈடுபட்டால் மனத்தில் தேவையற்ற சிந்தனைகள் எழாது் சோம்பலாக உட்கார்ந்து இருந்தால் எல்லாவிதமான எண்ணங்களும் வரக்கூடும். இறைநாமத்தை
ஜபம் செய்ய ச்செய்ய எல்லாம் நடக்கும். மனம் வசப்படாவிட்டால்கூட ஓரிடத்தில் அமர்ந்து
லட்ச லட்சமாக ஜபம் செய்யலாமே. குண்டலினி விழித்தெழும்முன் அனாஹத த்வனி கேட்கும். ஆதிபராசக்தி
தேவியின் அருள் இல்லாமல் எதுவும் நடக்காது.அவர்
தான் எல்லா உயிரினங்களாகவும் ஆகியிருக்கிறார் என்பது உண்மை தான் .ஆனால் ஒவ்வொருவரும்
தத்தம் சம்ஸ்காரம் மற்றும் செயல்களுக்கு ஏற்ப வினைப்பயனை அனுபவிக்கிறார்கள். சூரியன் ஒன்று தான்
ஆனால் அதன் ஒளியின் பிரதிபலிப்பு இடம் மற்றும் பொருளின் தன்மைக்கு ஏற்ப வேறுபடுகிறது.மகனே
குருதேவர் உன்னைக் காப்பார். உனக்கு விழிப்புணர்வு உண்டாகட்டும்.(வேறு ஒரு துறவியிடம்)
நீங்களெல்லாம் துறவிகள்.நீங்கள் இல்லறத்தாருடன் தொடர்புவைப்பது மிகவும் தவறு. உலகியல்
மனிதர்களின் காற்று படுவதே தவறு தான். .
No comments:
Post a Comment