அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-19
-
-
-
ஒருநாள் சுதீரா ஒரு கனவு கண்டாள். அதில் குருதேவர் ஒரு சபை நடுவே வீற்றிருந்தார்.ஆண்களும் பெண்களுமாக அங்கே பலர் இருந்தனர். குருதேவர் சுதீராவை அழைத்து எனக்காக கொஞ்சம் வேலை செய்வாயா? என்று கேட்டார். சுதீரா சம்மதித்ததும் அவர் ” அப்படியானால் இதோ இந்த கதவை திறந்து உள்ளே செல் ” என்றார். சுதீரா கதவை திறந்ததும் இந்த உலகத்தைக் கண்டாளாம். சிலர் மனிதர்கள் படும் துன்பத்தை கண்டு இறங்கி வருகிறார்கள். அவர்களின் தியாகம் தான் எத்தனை மகத்தானது !. அவர்களிடம் ஏதோ கொஞ்சம் ஆசை இருந்தது. அதனால் தான் பிறக்க நேர்ந்தது.உயிர்கள் படுகின்ற துன்பத்திற்காக.இரக்கம் ஏற்பட்டால் அவர்களின் வினையை ஏற்க வேண்டியுள்ளது. அதனால் தான் பிறக்க நேர்கிறது. ஆனால் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கை என்பது ஆழம் காண முடியாத கடல் போன்றது.எத்தனையோ யானைகள் அதில் முழ்கி விட்டன. மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
-
குரு யார் மனிதனின் கடந்த காலம் இறந்த காலம் நிகழ்காலம் ஆகியவற்றை அறிபவர் . இந்த முறை குருதேவரின் திருவருளால் அவரது அருள் எல்லைக்குள் யாரெல்லாம் வந்துவிட்டார்களோ அவர்களுக்கு இதுவே கடைசி பிறவி . மண்கட்டியாலேயே மண்கட்டியை உடைப்பார் அவர் . பலமான மண்கட்டியால் எறிந்தால் மற்ற மண்கட்டிகள் உடைகின்றன . அதுபோல் பல்வேறு செயல்களில் நம்மை ஈடுபட வைத்து , பிறவிக்குக் காரணமான வினைப்பயனிலிருந்து நம்மை விடுவிப்பார் .ஸ்ரீராமகிருஷ்ணலோகத்தில் சென்று விட்டால் அங்கே ஓய்வெடுப்பதே தியானம் ஆகி விடுகிறது. சேவைகள் செய்வது , சாதனைகள் என்று தீவிரமாகப் பாடுபடுவதன் விலையை நீ அங்கே புரிந்து கொள்ளலாம்.
-
குருதேவரின் படம் ஒன்றை எப்போதும் அருகில் வைத்துக்கொள் . அவர் எப்போதும் உன் அருகில் இருக்கிறார். உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கருது. எந்த கேள்வி எழுந்தாலும்,அவரிடமே பிரார்த்தனை செய். அதற்கான விடையை உன் மனத்திலேயே அவர் தருவதைக் காண்பாய் . அவர் அகத்தில் அல்லவா இருக்கிறார்! மனம் எப்போதும் புறமுகமாக இருப்பதால் அது அகத்தை நாடுவதில்லை. அதனால் அவரை புறத்தில் நாடி திரிகிறது. நீ எதை பிராத்தித்தாலும் அது உண்மையாகவே உனக்குக் கட்டாயமாகத்தேவை என்றால் , அதற்கான பதில் உள்ளிருந்து சட்டென்று தானாக வருவதைக் காண்பாய் .உடல் மனம் சொல் ஆகிய மூன்றும் ஒன்றுபட்டு பிராத்தனை செய்தால் அவர் அதைக் கேட்கிறார் , வேண்டியதைச் செய்கிறார், நல்லவர்களிடம் ஒரு விஷயத்தை நுாறு முறை சொல்ல வேண்டுமா என்ன?.
-
மனிதன் தீயவற்றைச் செய்யும் போது இறைமொழிகள் ஏதாவது அவனது மனத்தில் இருக்குமா?. இந்த செயலுக்கு இது விளைவு என்று நியதி வகுக்கப்பட்டுள்ளது.அதற்கு ஏற்பவே இந்த உலகத்தை அவர் இயக்குகிறார்.மனிதன் தன் மனத்தை அறிய விரும்புவதில்லை, பிறர் குற்றங்களைக் காண்பதையே நாடுகிறான். தனது குற்றங்கள் அவன் கண்ணில் படுமானால் அவற்றை விலக்க முயற்சி செய்வானானால் பிறர் குற்றங்களைக் காண்கின்ற பண்பு அவனிடமிருந்து விலகிவிடும்.
-
எல்லோரும் குருதேவருடையவர்கள் என்ற எண்ணம் மனதில் இருந்தால் எல்லோரையும் நேசிக்கத்தோன்றும். நைவேத்தியத்தில் ஊர்கின்ற எறும்புகளைக்கூட விலக்க முடியாதநிலை எனக்கு ஏற்பட்டதுண்டு. அவற்றின் வாயிலாக குருதேவர் அல்லவா உண்கிறார் என்று எனக்கு தோன்றியது.! எல்லோரிடமும் குருதேவரைக் காண முடியாவிட்டால்தான் இப்படி பிறரை நிந்திப்பதும் பிறர் குற்றம் காண்பதும் மனத்திற்கு உகந்ததாக தோன்றும். சொந்த வளர்ச்சிக்கான முயற்சியில் ஈடுபடாதவன் பிறருடைய நல்லது கெட்டதை ஆராய்வதாகிய பயனற்ற முயற்சியில் மனத்தை ஈடுபடுத்தவே செய்வான்.
-
மன்னிப்பு இல்லாவிட்டால்நீ வாழ முடியுமா? எண்ணற்ற பிறவிகளில் ஏற்பட்ட வினைப் பயனை உன்னால் பார்க்க முடியுமா? அது மட்டும் முடிந்தால் நீ இப்படி பேசமாட்டாய். அர்ஜுனனாலேயே அவனது முற்பிறவிகளை அறிய முடியவில்லை. நியதியை வகுத்தவனால் அதை மாற்றவும் முடியும் . அது மட்டுமின்றி நற்செயல்கள் செய்வதற்கும் அவர் உன்னை துாண்டுகிறாரே! நற்செயல்கள் செய்யும் போது தீய செயல்கள் குறையத்தானே செய்யும்.
-
நல்லது தீயது இரண்டும் உன் முன்னால் உள்ளன. நீ தேர்ந்தெடுத்துக்கொள். இதில் தான் இந்த உலக விளையாட்டு நடைபெறுகிறது. ஒருவன் பாவம் மட்டுமே செய்துகொண்டிருந்தாலும் சரி, ஒருவன் புண்ணியம் மட்டுமே செய்து கொண்டிருந்தாலும் சரி உலக விளையாட்டு நடைபெறாது.

No comments:
Post a Comment