Thursday, 29 November 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-22

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-22
-


இந்த உடம்பின் முலம்  என்னென்ன செய்ய வேண்டும் என்று குருதேவர் திருவுளம் கொண்டிருந்தாரோ  அதெல்லாம் நிறைவுற்று  விட்டதென்று தான் தோன்றுகிறது. இப்போது மனம் எப்போதும் அவரையே நாடுகிறது. வேறெதுவும் பிடிக்கவில்லை.ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய் ! உங்களையெல்லாம்  அவரது திருப்பாதங்களில் அல்லவா சமர்ப்பித்திருக்கிறேன். நீ ங்கள் அந்த வட்டத்திற்குள் தான் சுழன்றாக வேண்டும் .வேறெங்கும் போக முடியாது,உங்களை அவர் எப்போதும் காத்துகொண்டிருக்கிறார்.
தாய்க்கு பணிவிடை செய்வது என்பது  ஒவ்வொருவருடைய கடமை . அதிலும் மனித குலத்திற்கே சேவை செய்வதற்காக இங்கே வந்துள்ள நீங்கள் கட்டாயம் தாயை போற்றியாக வேண்டும். உன் தந்தை பணம் வைத்து விட்டு தான் சென்றுள்ளார்.இல்லாவிட்டால் நீ வேலை தேடி சம்பாதித்து உன் தாயை ப் பராமரிக்குமாறு சொல்லியிருப்பேன்.நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்மது மிகமிக கடினம். பணம் மனத்தை மாசுபடுத்துகிறது.இயன்ற அளவு விரைவில் பண விவகாரங்களை முடித்து விடுமாறு அதனால் தான் உனக்கு சொல்கிறேன்.சற்று நீண்ட காலம் பண விவகாரங்களை க்கையாண்டால் போதும்  தானாக அதில் ஒரு ஈர்ப்பு வந்து விடும்.பணம் அத்தகைய பொருள் எனக்கு அப்படியொன்றும்  பணத்தில் பற்று இல்லை. ஒரு முறை விட்டது விட்டது தான்.
-
நினைக்கும் போது அதிலிருந்து என்னால் விலகமுடியும் , என்று நீ நினைக்கலாம். இல்லை மகனே ஒரு போதும் அப்படி எண்ணாதே. அது நீ அறியாமலே உன் கழுத்தை ப் பற்றி நெரிக்கும்.குருதேவரால் பணத்தை தொடக்கூட முடியாது. அவரது திருநாமத்தை ஏற்றுக்கொண்டு நீ வெளியே வந்துள்ளாய். எனவே அவரது வார்த்தைகளை எப்போதும் மனத்தில் வை. உலகின் தீமைகள் அனைத்திற்கும் மூலகாரணம் பணம்! உனக்கு சிறு வயது.கை யில் பணம் இருந்தால் மனம் கட்டாயம் அதில் பற்று வைக்கும்!. கவனமாக இரு.ஒரு நாள் அன்னையின் புகைப்படம் (15-12) ஒன்று கொண்டு வரப்பட்டது. அது எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக அன்னையிடம் கொடுக்கப்பட்டது.அன்னை இரண்டு கைகளையும் நீட்டி அதை வாங்கி கொண்டு . பய பக்தியுடன் தம் தலை மீது வைத்தார்.  இதைக் கண்டு எல்லோரும் சிரித்தார்கள். படத்தை திருப்பி வாங்கிய பிறகு அவரிடம் ஒரு பக்தை கேட்டார்.அது யாருடைய படம் அம்மா? ஏன் என்னுடையது தான். இந்த பதிலைக்கேட்டதும் அந்த பக்தை வாய் விட்டு சிரித்தார். ஏன் சிரிக்கிறாய் ? உங்கள் படமானால் ஏன் தலையில் வைத்தீர்கள்.இதை கேட்டதும் அன்னையும் சிரித்து விட்டு ஏன் இதனுள்ளும் குருதேவர் தானே இருக்கிறார் என்றார்.
-
குருதேவரின் பூஜையை முடித்து விட்டு அன்னை தமக்குள் மூழ்கியவராய் அமர்ந்திருந்தார்.அருகில் புதிய பிரம்மசாரி ஒருவர் இருந்தார். அவரிடம் அன்னை பேச ஆரம்பித்தார். நீ குருதேவரை சியாம்புகூரில் பார்த்திருக்கிறாய் அல்லவா ?.ஆம் அப்போது எனக்கு வயது ஐந்து . பக்கத்து வீட்டு பெண்களெல்லாம் குருதேவரை தரிசிக்க சென்றனர் . என் தாயும் என்னை இடுப்பில் எடுத்துக் கொண்டு சென்றார். ஆமாம் இது உங்களுக்கு எப்படி தெரியும்? உறியிலிருந்து லட்டு எடுத்து உங்களுக்கு த் தருமாறு குருதேவர் சைகை காட்டினாரே ! அப்போது உனக்கு லட்டு தந்தது யார், நினைவிருக்கிறதா? ஆம் ஒரு பெண்மணி கொண்டு வந்து தந்தார். அந்த பெண்மணி நான் தான். நீங்களா? பிரம்மசாரி திகைத்து போனார்.
-
மற்றொரு முறை யும் நீ அவரை தரிசித்திருக்கிறாய். அப்படித்தானே? ஆம் அது குருதேவரின் மகாசமாதிக்கு நீண்ட நாட்கள் பிறகு புரி கோயிலில். நீ கைகளை நீட்டி அவரை அழைத்தாய். அவர் அழைத்தார் நானும்  அழைத்தேன். பை யனுக்கு தெய்வ தரிசனம்  கிடைத்து விட்டது. என்று கோயிலில் ஒரே அமர்களமாகி விட்டது. இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும். அங்கேயும் நான் இருந்தேன்.
-
பிரம்மச்சாரி பேச்சு மூச்சற்றவனாக அன்னையின் திருபாதங்களில் விழ இருந்தார். அன்னை அவரை அமைதிப் படுத்தி மந்திர தீட்சை அளித்தார் .முக வாயைத் தொட்டு ஆசீர்வதித்தார்.சைதன்ய லீலை என்ற நாடகத்தை க் காண அன்னை சென்றிருந்தார்.அது பற்றி மறுநாள் கூறினார்.அந்த பெண் எவ்வளவு இயல்பாக நடித்தாள்.நல்ல பக்தையாக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் இப்படி நடிக்க முடியாது. அப்படியே அவள் சைதன்யராக மாறிவிட்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு பெண் ஆண் வேடத்தில் நடிப்பதாக யாராவது சொல்ல முடியுமா.? பிறகு அந்த நாடகத்தில் நடித்த ஜகாய் ,மதாய் பற்றி கூறினார். அவர்களைப் போல் பக்தர் யார்? ராவணனைப் போல பக்தன் யார்?ஹிரண்யகசிபுவைப்போல் பக்தன் யார்?கிரீஷ் பாபு குருதேவரை எவ்வளவு திட்டுவார்.இருந்தாலும் அவரை போன்ற பக்தர் யார்?.அவர்கள் பக்தர்களாகவே பிறந்தவர்கள்.பக்தனாக இருப்பது சாதாரண விஷயமா என்ன?பக்தி சும்மா வந்து விடுமா? (லட்சுமியின் பக்கம் திரும்பி) ஆமாம் லட்சுமி , அது ஒரு பாடல் – நான் முக்தி தந்தாலும் தருவேன்.? லட்சுமி அந்த ப் பாடலை ராகத்துடன் பாடினார்.

No comments:

Post a Comment